Posted tagged ‘வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி’

வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல்சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளன?

செப்ரெம்பர் 17, 2022

வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளன?

பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் தில்லி மாடலா, திராவிட மாடலா?: வக்பு விவகாரங்களில் இந்தியாவில் மாநிலங்களில் பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. சம்பந்தப் பட்ட முஸ்லிம்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களும் அதில் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்விவகாரங்களில், பெரும்பாலாக, கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்று வருகின்றன. துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்ளும் அந்நிய-அரேபிய வகையறாக்கள் தாங்கள் குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்ற புத்தகங்கள், சட்டநெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம் என்று சொல்லிக் கொண்டாலும், அது நாட்டிற்கு நாடு, பிரிவிக்குப் பிரிவு மாறித்தான் உள்ளது. இவையெல்லாம் அவர்களின், அதாவது, துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் என்று வரும் போது, அரசு, ஆட்சி, அதிகாரம், மோசடிகள், ஊழல்கள் முதலியவற்றில், புதிய பரிமாணங்கள் வருகின்றன. அதனால் வக்பு வாரிய மோசடிகள், ஊழல்கள் முதலியவையும் அவ்வாறே உள்ளன. தில்லி மாடல், திராவிட மாடல்………என்றெல்லாம் கூறிக் கொண்டாலும், நடப்பவை இவ்வாறுத் தான் உள்ளன.

2016லிருந்து தில்லி மாடல் வக்பு ஊழல் நடைபெறுகிறதா?: சமீபத்தில் வக்பு வாரிய அடாவடித் தனம், ஹிந்துக்களின், கோவில்களின் நிலம் அபகரிப்பு மற்றும் கோவிலே தமது நிலத்தில் உள்ளது போன்ற விவகாரங்களில் வெளிப்பட்டன. மேலும், துலுக்கரின் உள்-விவகார ஊழல்களும் வெளிவந்தன. அந்நிலையில் தில்லி வக்பு ஊழல் விவகாரமும் சேர்கிறது. பிப்ரவரி 8ஆம் தேதி 020 வக்ஃபு வாரிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ஏஏபி எம்எல்ஏ, வக்ஃபு வாரியத் தலைவர் அமனத்துல்லா கான் ( AAP MLA Amanatullah Khan) ஆகியோரை ஊழல் தடுப்புக்கிளை (Anti-Corruption Branch (ACB)  ஏசிபி) புதன்கிழமை 08-02-2020 அன்று வழக்குப்பதிவு செய்தது[1]. பின்னர், வக்ஃபு வாரிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், ‘ஒழுங்கற்ற ஆள்சேர்ப்பு’ செய்ததாகவும் ஏ.சி.பி. தலைவர் அரவிந்த் தீப் தெரிவித்தார்[2]. இது குறித்து அமனத்துல்லா ​​கானிடம் கேட்டபோது, “நான் முதலில் புகாரை முழுமையாகப் படித்துப் பார்க்கிறேன், அதன் பிறகு அதைப் பற்றி பேசுகிறேன்,” என்றார். கடந்தாண்டு வக்ஃபு வாரியத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டது குறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது[3]. இரண்டு ஆண்டுகளாகப் படித்துக் கொண்டே இருந்தார் போலும். அதற்குள் ஊழல் தடுப்புத் துறைக்குத் தெரிந்து விட்டது போலும்.

மத்திய-மாநில அரசுகளின் மோதல்கள், அரசியல் குழப்பங்கள்: டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது[4]. அங்குச் சமீபத்தில் தான் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடுகளில் ரெய்டு நடத்தி இருந்தனர்[5]. இதுபோன்ற ரெய்டுகள் இப்போதைக்கு அங்கு முடிவதாகத் தெரியவில்லை. இப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் ஊழல் புகார் ஒன்றில் செய்யப்பட்டு உள்ளார்.  பிஜேபி-அல்லாத மேற்கு வங்காளம், பஞ்சாப், தில்லி, கேரளம் முதலிய மாநிலங்கள் – மாநில அரசாளும்  ஆட்சியாளர்கள், ஆளும் மத்திய அரசுடன் எப்பொழுதும் பிரச்சினை செய்து கொண்டு வந்தது தெரிந்த விசயமே. ஆளுநர் விவகாரம் என்று வைத்துக் கொண்டு அவ்வாறு கலாட்டா செய்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், திராவிட மாடல், என்றெல்லாம் கூவிக் கொண்டு, முழுமையாக மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடித்து வருகிறது. இதற்கு, திராவிடத்துவ சித்தாந்திகள் திராவிடியன் ஸ்டாக், ஒன்றிய அரசு, மாநில சுயயாட்சி போன்ற குப்பையில் வீசப் பட்ட சித்தாந்தங்களையும் துடைத்து கையில் எடுத்துள்ளனர்.

விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது என்றால் அதை இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர்?: இஸ்லாமிய மத மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்பு பத்திரம் மூலம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் சொத்துக்கள், நிலங்களை பராமரிக்க, நிர்வகிக்க பொது மற்றும் தனியார் வக்பு வாரியங்கள் உள்ளன. நம்பிக்கையாளர்கள் அல்லாவுக்கு பயந்து, பய-பக்தியுடன் செயல் படவேண்டும், செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றில் எப்படி ஊழல் வந்தது என்பதனை அல்லாவிடாம் தான் கேட்க வேண்டும் போலிருக்கிறது. இதனிடையே, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான். இவர் 2016-ல் ஆண்டு டெல்லி வக்பு வாரிய தலைவராக செயல்பட்டார். தலைவராக இருந்த காலத்தில், விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது[6], பணமோசடியில் ஈடுபட்டதாக அமனத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது[7]. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியின் வீட்டில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 24 லட்ச ரூபாய், உரிமம் இல்லாத 2 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றினர்.

வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில்  முறைகேடு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கு: அப்படியென்றால், இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர், மற்ற வக்பு போர்ட் உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்? போன்ற கேள்விகள் எழுகின்றன. வக்பு வாரிய ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை லஞ்ச ஒழிப்புத்துறை (ஏசிபி) போலீசார் 16-09-2022 அன்று கைது செய்தனர்[8]. டெல்லி வக்பு வாரியத்தின் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமனதுல்லா கான் இருந்து வருகிறார்[9]. இவர், வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.12 லட்சம் ரொக்கம், உரிமம் பெறாத துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, 1609-2022 அன்று நண்பகலில் விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரான அவரை, போலீசார் திடீரென கைது செய்தனர்.

வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார்: தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது[10]. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹர்னாம் சிங், பர்வேஷ் ஆலம், அலி மெஹந்தி, பர்வேஷ் முகமது, அன்ஸார் -அல்-ஹக், ஜாவேத் செளத்ரி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிக் குழு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை 15-09-2022 வியாழக்கிழமை அன்று சந்தித்து மனு அளித்தது[11]. அதில், தில்லி வக்ஃபு வாரியத்தில் அமைச்சர் அமானதுல்லா கான் அவரது உறவினர்களை முறைகேடாக நியமித்துள்ளார். இதுபோன்று முறைகேடாக 33 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஹர்னாம் சிங் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என துணைநிலை ஆளுநர் உறுதியளித்துள்ளார்’ என்றார். பர்வேஷ் ஆலம் கூறுகையில், “தில்லி வக்ஃபு வாரிய நியமன முறைகேடுகள் தொடர்பாக அதன் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும்’ என்றார். ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை. இது காங்கிரஸ் மாடல் போலும்.

எழும் இக்கேள்விகளுக்கு, பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்குமா?:

  1. தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது.
  • அதாவது, தில்லி வக்ஃபு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதை ஒப்புக் கொண்டு தில்லி வக்ஃபு வாரியத்தின் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
  • ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை.
  • இது காங்கிரஸ் மாடல் போலும், தில்லி மாடல் அவ்வாறு இருக்கும் பொழுது, திராவிட, வங்காள மாடல்களும் அப்படியே உள்ளன!
  • பஞ்சாப, சிந்து, குஜராத, மராடா, திராவிட, உத்கல, வங்கா – கூட பொறுந்துகிறது. ஆனால், இந்த கூட்டணி பார்முலா செல்லுமா என்று பார்க்க வேண்டும்.
  • வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளது?
  • குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்றவற்றை எப்படி அந்த முகமதியர்-முஸ்லிம்கள் மீற முடியும், ஊழல் செய்யக் கூடும், அல்லா அனுமதி அளித்தாரா?
  • மோமின்கள் எப்படி காபிர் அதிலும் நாத்திக, கம்யூனிஸ காபிர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? யார் அனுமதித்தது?
  • மோமின்–காபிர் கூட்டு, சகவாசம், கூட்டணி ஹராமா-ஹலாலா, இதனால் கிடைப்பது சொர்க்கமா-எரியும் நரகமா, அல்-கிதாபியா என்ன சொல்கிறது?
  1. தமிழகம் போல, தில்லியிலும் இந்துக்கள், கோவில் நிலங்களை முகமதியினர் ஆக்கிரமித்து உள்ளார்களா? வக்பிடம் சான்றிதழ் கொடுக்க ஆணை போட்டுள்ளார்களா?

© வேதபிரகாஷ்

17-09-2022


[1] இ.டிவி.பாரத், வக்ஃபு வாரிய நிதி முறைகேடு: தலைவர் அமனத்துல்லா கான் கருத்து, Published on: January 30, 2020, 4.33 PM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/bharat-news/delhi-acb-books-aap-mla-amanatullah-khan-for-alleged-misuse-of-waqf-board-funds/tamil-nadu20200130163314221

[3] A case against Khan was filed in 2016, following a complaint from the sub-divisional magistrate (headquarters), revenue department, alleging that appointments to various “existing and non-existing posts” in the Waqf Board were “arbitrary and illegal”. The ACB registered an FIR in January 2020, under Section 7 (public servant taking gratification) of the Prevention of Corruption Act, and Section 120-B (criminal conspiracy) of the IPC.

https://indianexpress.com/article/cities/delhi/aaps-amanatullah-khan-raided-acb-finds-pistol-and-cash-8155646/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, ஊழல் புகார்.. ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் கைது! இரு துப்பாக்கிகளும் பறிமுதல்! டெல்லியில் பரபர, By Vigneshkumar Published: Saturday, September 17, 2022, 0:00 [IST].

[5] https://tamil.oneindia.com/news/delhi/after-raids-aap-mla-amanatullah-khan-arrested-in-2-year-old-allegation-476093.html

[6] தினத்தந்தி, வக்பு வாரிய முறைகேடு: ஆம் ஆத்மி எம்.எல்.. கைதுலட்ச கணக்கில் பணம், துப்பாக்கி பறிமுதல், தினத்தந்தி Sep 17, 2:08 am

[7] https://www.dailythanthi.com/News/India/aaps-amanatullah-khan-arrested-after-raids-794221

[8] தினகரன், வக்பு வாரியத்தில் ஊழல் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி, 2022-09-17@ 02:26:04

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=799774

[10] தினமணி, தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு விவகாரம்: துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்,  By DIN  |   Published On : 12th July 2019 07:20 AM  |   Last Updated : 12th July 2019 07:20 AM.

[11] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/jul/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3190553.html

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [1]

ஓகஸ்ட் 29, 2020

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [1]

 

வக்ஃப் போர்ட், உறுப்பினர் நியமனம் முதலியன: முஸ்லிம் மக்கள், அவர்களின் சொத்துகளை வக்ஃப் பத்திரம் மூலம் பொதுக் காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு இந்தியாவில் மட்டும் தானமளிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். இப்படி தானமளிக்கப்படும் வக்ஃப் சொத்துக்களைப் பராமரிக்க, பொது மற்றும் தனியார் வக்ஃப் அமைப்புகள் உள்ளன. இவற்றைக் கண்காணித்து, நடுநிலைமையோடு வழிநடத்தி, நிதியை நிர்வகித்து, வக்ஃப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பது போன்ற பணிகளைச் செய்ய வக்ஃப் வாரியம் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலில் இருக்கிறது. இந்த வக்ஃப் வாரியத்தில் – 11 / 12 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி 2017ல் தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினராயினர். பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், இரு மூத்த வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 

  1.  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக (elected) இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
  2. இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்,
  3. இரண்டு முத்தவல்லிகள் (மசூதி மேற்பார்வைத் தலைவர்)
  4. இரண்டு முஸ்லிம் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும்
  5. அரசால் நியமிக்கப்பட்ட (nominated) உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

எந்தவொரு சமயத்திலும், நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று வக்ஃப் வாரிய சட்டம் சொல்கிறது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வக்ஃப் வாரிய தலைவராக இருந்த அன்வர் ராஜா போட்டியிடாததால், அவர் உறுப்பினரல்லாது போனார். உறுப்பினர் இடங்கள் பல காலியாக இருந்ததால், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களாகப் புதியவர்களைத் தேர்வுசெய்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமலே சிறப்பு அதிகாரியை ஆளுநர் நியமித்திருக்கிறார்.

வக்ஃப் போர்ட் கலைக்கப் படவில்லை, அரசு கட்டுப்பாட்டில் போய் விடுமோ என்ற அச்சத்தில் பிரச்சினை: வக்ஃப் போர்ட் கலைக்கப் படவில்லை, இப்பொழுதைய ஆளும் அரசு, உறுப்பினரை நொயமித்துள்ளது. அதனை மற்றவர் எதிர்க்கின்றனர். மேலும், வக்ஃப் வாரிய வழக்கு பற்றி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன் பேசுகையில்[1], “இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், வக்ஃப் வாரியத்தைத் தொடர்ந்து செயல்படவைக்க வேண்டும். வக்ஃப் வாரியத்தை கலைக்கக்கூடாது அனைத்து வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் சார்பிலும் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு,18.09.2019 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தற்போதையை நிலையே (status quo) தொடர வேண்டும், வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி நியமனம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். வழக்கு நிலுவையில் இருந்து, நீதிமன்றத்தின் நேரடி உத்தரவு இருந்தும் வாரியத்தைக் கலைத்திருப்பதால், ஆளுநர் ஆணையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக் கூடும்,” என்றார்[2].

அதிமுக-திமுக அதிகார போட்டியாக மாறிவிட்ட பிரச்சினை: இதுகுறித்துப் பேசிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், “தமிழக அரசு, சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஜனநாயக முறையில் மக்களதிகாரத்தில் இருக்கும் ஒரு வாரியத்தை முறையின்றிக் கலைத்து, பல கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிக்கும் அனைத்து அதிகாரத்தையும் ஒரு அதிகாரியிடம் ஒப்படைப்பது, அரசுக்கு முஸ்லிம் மக்கள்மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது. பல கோடி ரூபாய் முஸ்லிம் மக்களின் நன்கொடையை நிர்வகிக்கும் அமைப்பைக் கலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாரியம் உறுப்பினர்களோடு செயல்படும்போது மட்டுமே, ஊழலற்ற நியாயமான தீர்வுகளை எட்ட முடியும். தமிழக அரசின் இந்த முடிவு, அவர்களின் விருப்பத்துக்கு உகந்தவர்களை வாரியத் தலைவர்களாக நியமிக்க முடியாத காரணத்தினால் நடக்கிறது. எதிர்க்கட்சியினராக இருந்தாலும், ராஜ்யசபாவுக்கு அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது ஜான் எம்.பி, வாரியத் தலைவராக இருந்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடரட்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஆனால், அரசு எதற்குமே செவிசாய்க்காமல், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஒரு தனி நபரை வாரியத்தின் அதிகாரியாக நியமித்திருப்பது நிச்சயம் ஜனநாயகத்திற்கு, சிறுபான்மையினருக்கு எதிரானதே,” என்றார்.

கடந்த ஆறு மாத காலமாக வக்பு வாரியம் செயல்படவில்லை.: கடந்த 2019 செப். 18 அன்று வக்பு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை விட நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக்கூறி வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டது[3]. மேலும் தமிழக நிதித்துறை செலவின செயலரான சித்திக்கை வக்பு வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது[4]. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பசலூர் ரஹ்மான் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வக்பு வாரியத்தில் முத்தவல்லிகள் பிரிவில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரும் இடையீட்டு மனுதாரர்களாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். அரசுத் தரப்பில் ஆஜராகிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், நீதிமன்றத்தில் நான் சொன்னதுதான் எங்கள் தரப்பு கருத்து எனக்கூறி, அதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “கடந்த ஆறு மாத காலமாக வக்பு வாரியம் செயல்படவில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இடைக்காலத்துக்கு மட்டும் சிறப்பு அதிகாரி  நியமிக்கப்பட்டுள்ளார், வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றார். மேலும், 23.09.2019 நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறப்பு அதிகாரியாக சித்திக் தற்போதைக்கு பதவி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் பட்ட பிரச்சினை: அதில், ”பார் கவுன்சில் உறுப்பினர்களில் இஸ்லாமியர்கள் எனும் பட்சத்தில் வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட இஸ்லாமியர்களாக உள்ள 2 மூத்த வழக்கறிஞர்களையும் வக்பு வாரிய சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவே கருத வேண்டும். அவர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் வக்பு வாரியத்தை கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்து வக்பு வாரியத்திடமே அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டுமென கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரரான பசுலூர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் எச்.ஆறுமுகம், மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகமூத் பராச்சர், இ.அப்ரார் முகமது அப்துல்லா, எச்.முகமது கவுஸ் ஆகியோரும், வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

தேர்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள், பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம்: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வக்பு வாரியத்தில் முறைப்படி தேர்தல் மூலமாக கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அவர்களின் சட்டப்படியான உரிமை நிலைநாட்டப்படுகிறது. எனவே அவர்கள் பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் தமிழக அரசின் உத்தரவு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற உறுப்பினர்களின் பதவியை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பளித்துள்ளனர். வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் 3 பேரும், அதிமுகவைச் சோ்ந்த ஒருவரும் தோ்வு செய்யப்பட உள்ளனா்[5]. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. மேலும், எம்.எல்.ஏ.,க்களில் திமுகவைச் சோ்ந்த முகமது அபுபக்கா், கே.எஸ்.மஸ்தான் ஆகியோரும் மனு அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறக் கூடிய தலா இரண்டு இடங்களுக்கு இரண்டு போ் மட்டுமே போட்டியிடுவதால் அவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது[6]. வக்ஃபு வாரியத்தில் எம்.பி.,க்கள் இரண்டு பேரும், எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேரும் உறுப்பினா்களாக தோ்வு செய்யப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதபிரகாஷ்

29-08-2020


[1] விகடன், `ஒரு லட்சம் கோடி சொத்துக்களை நிர்வகிக்க ஒற்றை அதிகாரி!’- வக்ஃப் வாரிய விவகாரத்தில் என்ன நடக்கிறது, ஜெனிஃபர்.ம.ஆ; செ.சல்மான் பாரிஸ், Published:26 Sep 2019 7 PMUpdated:26 Sep 2019 7 PM

[2] https://www.vikatan.com/news/judiciary/only-one-person-to-manage-one-lakh-crore-worth-assets-whats-happening-in-waqf-board

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசு உத்தரவு ரத்து.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு, By Sivam | Published: Monday, August 17, 2020, 21:25 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/dissolving-the-tamil-nadu-tamil-nadu-wakf-board-as-it-is-illegal-high-court-394804.html

[5] தினமணி, வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தல்: திமுக 3, அதிமுகவில் ஒருவருக்கு வாய்ப்பு, By DIN | Published on : 01st August 2020 06:18 AM

[6] https://www.dinamani.com/tamilnadu/2020/aug/01/waqf-board-member-dotal-opportunity-for-one-in-dmk-3-aiadmk-3444028.html