அப்பாவி அமர்நாத் யாத்திரிகர்களை சுட்டுக் கொன்ற லஸ்கர்-இஸ்லாமிய தீவிரவாதிகள் (1)
10-07-2017 திங்கட்கிழமை அன்று குஜராத்திலிருந்து வந்த யாத்திரிகர்கள் மீது தீவிரவாத தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்து வருகிறார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும் இப்பயணத்திற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த 2017 ஆண்டின் யாத்திரை ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில நாள்களாகத் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்திருப்பதாலும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் 10-07-2017 அன்று ஜிஹாதி-இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு பேரூந்தை மடக்கி சுட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர், சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூட்டில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் படுகொலை, 21 பேர் படுகாயம்: அமர்நாத் யாத்திரை முடிந்து, வைஷ்ணவ தேவி வழிபாடு செய்து திரும்பும் போது, பஇக்கில் வந்த நான்கு பேர் வழிமறித்தனர். டிரைவர் முதலி நிறுத்த யத்தனித்த போது, சுட ஆரம்பித்ததால், வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். பிறகு போலீஸ் க்ஷ்செக்போஸ்டில் வந்து நிறுத்தினார். ஸ்ரீநகரில் காஷ்மீர் பகுதியின் காவல்துறை தலைமையதிகாரி முனீர்கானின் கருத்துப்படி, அனந்த்நாகில் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா என்றாலும், இதற்கு சூத்திரதாரி, பாகிஸ்தான் தீவிரவாதி அபு இஸ்மாயில்[1]. யாத்திரிகர்களை சுட்ட தீவிரவாதிகள் நான்கு பேர், அதில் இருவர் பாகிஸ்தானியர் மற்ற இருவர் உள்ளூர் தீவிரவாதிக்கள் என்று உளவுத்துறை கூறுகிறது. அபு இஸ்மாயில்,, லஸ்கர்-இ-தொய்பாவின் தளபதி ஆவான்[2]. மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டுவிட்டு சென்றதால், அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்[3].இதில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி இஸ்மாயில் என தெரியவந்து இருக்கிறது[4].
பொறுப்பேற்ற லஷ்கர்–இ–தொய்பா தளபதி அபு இஸ்மாயில்[5]: அபு இஸ்மாயில் வேலை செய்து வருவதை உள்ளூர்வாசிகள் அறிவர். [6]. இருப்பினும், உள்ளூர்வாசிகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து, மறைத்து வருவதால், உடனடியாக கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இதையடுத்து, அபு இஸ்மாயிலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தெற்கு காஷ்மீரில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது[7]. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அபு இஸ்மாயில் ஓராண்டுக்கு முன்பே தெற்கு காஷ்மீரில் தனது தளத்தை உருவாக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முசபராபாதில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாலும், உள்ளூர்வாசிகள் ஆதாரவாலும், அப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாலும், அவர்களைப் பிடிக்க கடினமாக இருக்கிறது. இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்களுக்குள் வரும் போதுதான், மோதல் ஏற்படும் போது, அவர்கள் கொல்லப்படுகின்றனர். அதுவரை அவர்கள் தீவிரவாத செயல்களை செய்து கொண்டே இருக்கிறார்கள்[8].
கொல்லப்பட்ட யாத்திரிகர்களின் பரிதாபகரமான நிலை, உறவினர்கள் கொடுத்த தகவல்கள்: தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஓட்டுனர் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர். மாவட்ட மருத்துவமனை, காயமடைந்த யாத்ரீகர்களால் நிறைந்திருந்தது. சுமார் 16 பேர் இருந்தார்கள். சிலர் துப்பாக்கிக்குண்டு காயத்துடன் இருந்தார்கள். சிலருக்கு வெட்டு மற்றும் சிராய்ப்புக் காயங்கள். அவர்களில், பஸ் உரிமையாளர் ஹர்ஷும் ஒருவர். “5-6 துப்பாக்கிதாரிகள் எங்கள் பஸ் முன் வந்து கண்மூடித்தனமாகச் சுட்டார்கள். “சரமாரியாக கற்களையும் வீசினார்கள். பஸ்ஸை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டுமாறு டிரைவரிடம் சொன்னேன்”[9]. ஹர்ஷும், பெரும்பலான யாத்ரீகர்களும், குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஹிமாலய மலையில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலுக்கு 08-07-2017 அன்று சென்றுவிட்டு, ஜம்மு அருகே உள்ள வைஷ்ணவதேவி கோயிலுக்கு போய் கொண்டிருந்தார்கள். ஷ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை 10-07-2017 இரவு 8 மணிக்குப் பிறகு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக மூதாட்டி ஒருவர் தெரிவித்தார். அவரது இரு சகோதரிகளும் அவருடன் பயணித்தார்கள். “எனக்கு அருகில் அமர்ந்திருத்த என் சகோதரி, இருக்கையிலேயே இறந்துவிட்டார். எனக்குப் பின்னால் இருந்தவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். நான் மட்டும் தப்பிவிட்டேன்”.
அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்கள்; மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், கால்களில் லேசாக காயமடைந்திருந்தார். “எனக்கு காயம் சிறிதுதான். ஆனால் என் சோகம் பெரியது. இந்தத் தாக்குதலில் எனது உறவினரை இழந்துவிட்டேன்”. மருத்துவமனை ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தபோதே, போலீசார் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். அவர்களது ஆடை, போர்வைகளில் ரத்தக்கறையாக இருந்தது. போலீஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸுகள் எடுத்துச் சென்று கொண்டிருந்தன. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தார்கள். அனந்த்நாக் நகர் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானதைப் போல் இருந்தது. அப்பாவி மக்கள் இவ்வாறு கொலைசெய்யப் படுவதை, இஸ்லாமியர், தமது ஜிஹாத்துவம் பெயரில் நியாயப்படுத்துகிறார்கள். இன்றுவரையில், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், நேரிடையாக கண்டிக்காமல், தாக்குதல் “காஷ்மீரியத்திற்கு” எதிரானது என்று தான் சொல்வதை கவனிக்க வேண்டும்.
“காஷ்மீரியத்” ஏன் இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளது?: “காஷ்மீயத்” என்கின்ற காஷ்மீரத் தன்மை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு என்றால், இந்துக்களுக்கு எதிராக ஏன், எப்படி, எவ்வாறு இஸ்லாம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்று ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், பதில் சொல்லாமல் மழுப்பி வருகிறார்கள். எல்லோருமே ம்,அதம் மாற வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்ற சித்தாந்தத்தைத் தான், மறைமுகமாக சொல்லி வருகிறார்கள். “ஆஜாத் காஷ்மீர்” போர்வையில் இந்த மனிதத்தன்மையற்ற கொலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்துக்களின் மக்கட்தொகை அடியோடு குறைந்து விட்டது. 1980களிலிருந்து வளர்ந்து வரும் தீவிரவாதத்தினால் லட்சக்கணக்கான இந்துக்கள் வெளியேறி விட்டனர், அவர்கள் தில்லியில் கூடாரங்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதைப்பற்றியெல்லாம், மிகச்சிலரே எடுத்துக் காட்டிப் பேசி வருகின்றனர்.
© வேதபிரகாஷ்
12-07-2017
[1] http://www.bbc.com/tamil/40571715
[2] Times of India, Two Pakistanis among 4 terrorists involved in attack on Amarnath pilgrims: Government, PTI | Updated: Jul 12, 2017, 11:36 PM IST.
[3] http://timesofindia.indiatimes.com/india/two-pakistanis-among-4-terrorists-involved-in-terror-attack-on-amarnath-pilgrims-government/articleshow/59565360.cms
[4] தினத்தந்தி, அமர்நாத் தாக்குதலுக்கு காரணமான அபு இஸ்மாயிலை தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை, ஜூலை 12, 2017, 12:40 PM
[5] On Tuesday morning the Inspector General of Police also identified the main perpetrator of the attack as Abu Ismail. “Attack on Amaranth yatra pilgrims was carried out by LeT, masterminded by Pak terrorist Ismail. He was also supported by local militants,” said Muneer Khan, the IGP. Meanwhile LeT issued a statement early morning on Tuesday, condemning the attacks and calling it “reprehensible and unIslamic.” “Islam does not allow violence against any faith. We strongly condemn such acts,” the outfit’s spokesperson Abdullah Ghaznavi said in a statement. While LeT still remains primary suspects in the case, the outfit’s denial in Monday’s attacks is the first of its kind. The outfit, which previously has also attacked Amarnath pilgrims, has never earlier issued a denial.
[6] http://www.dailythanthi.com/News/India/2017/07/12124001/Amarnath-terror-strike-Hunt-on-for-LeT-commander-Abu.vpf
[7] தினமலர், யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக்., பயங்கரவாதி, பதிவு செய்த நாள்: ஜூலை.11, 2017.15:17
http://www.dinamalar.com/news_detail.asp?id=1809899
[8] On Tuesday morning the Inspector General of Police also identified the main perpetrator of the attack as Abu Ismail. “Attack on Amaranth yatra pilgrims was carried out by LeT, masterminded by Pak terrorist Ismail. He was also supported by local militants,” said Muneer Khan, the IGP.
அண்மைய பின்னூட்டங்கள்