‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள். உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.
மேற்குவங்காளம்தடை – உச்சநீதிமன்றத்தில்வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.
பத்துநாட்களில் 100 கோடிகளைத்தாண்டியவசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].
குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6]. வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.
தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.
19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?
[9] தமிழ்.வெப்.துனியா, நாங்கதடைபண்ணல.. படத்தையாரும்பாக்கவேஇல்ல! – The Kerala Story வழக்கில்தமிழகஅரசுபதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).
[15] தினமணி, திகேரளாஸ்டோரிதிரையிடல்நிறுத்தப்பட்டதுஏன்? தமிழகஅரசுபதில், By DIN | Published On : 16th May 2023 02:50 PM | Last Updated : 16th May 2023 02:50 PM
கம்யூனிஸ்டு, காங்கிரஸ்உள்ளிட்டகட்சிகள்கடும்கண்டனம்எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
05-05-2023 – தமிழகநீதிமன்றத்தில்வழக்கு, தள்ளுபடி, திரைப்படம்வெளியீடு, ஆர்பாட்டம்: தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2]. இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3]. ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.
06-05-2023 – பாதுகாப்புகாரணங்களுக்காகதென்தமிழகத்தில்இந்தபடம்திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
07-05-2023 சென்னையில்சீமான்ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.
சீமான்எதிர்ப்பு– போலீஸார்கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12]. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.
தமிழகஅரசுதடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர்எதிர்ப்புகள்… தமிழ்நாடுமுழுவதும் ‘திகேரளாஸ்டோரி‘ படத்தின்காட்சிகள்ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)
கேரளாவில்லவ்ஜிஹாத்தெரிந்தவிசயம்தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.
டிரைலருக்குப்பிறகுஅமைதியானவர்கள், மறுபதியும்எதிர்ப்பில்ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].
மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில்எச்சரிக்கை, திரையரங்களுக்குபாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி, தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது. திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும் சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].
திரைப்படத்தைப்பற்றியவிமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].
[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படிஇருக்கு ‘திகேரளாஸ்டோரி’ திரைப்படம்? ட்விட்டர்விமர்சனம்இதோ!, HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், திகேரளாஸ்டோரிபடத்தைதிரையிட்டவணிகவளாகம்முற்றுகை… போலீஸார் – எஸ்டிபிஐகட்சியினர்இடையேதள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..
[13] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story Twitter Review: வெறுப்புபிரச்சாரமா? உண்மைசம்பவமா? திகேரளாஸ்டோரிபடத்தின்ட்விட்டர்விமர்சனம்இதோ! , By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST) , Published at : 05 May 2023 01:08 PM (IST)
சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!
துருக்கி–சிரியாநாடுகளில்பூகம்பம்ஏற்பட்டாலும்சிரியாவுக்குச்செல்லஆசைப்படும்பெங்களூருசாப்ட்வேர்ஆரிப்: துருக்கி-சிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டு விட்டனர், இடிபாடுகளில் இன்னும் மக்கள் சிக்கியுள்ளர், லட்சக்கணக்கில் மக்கள் அவதிபடுகின்றனர் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், ஐசிஸ், அல்-குவைதா போன்ற இஸ்லாமிக் தீவிரவாதிகள் தங்களது நாசகார வேலைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அவ்வாறான இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, வேலைக்கு ஆள் சேர்த்து, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்வது என்பது சகஜமாகி விட்டது. சாப்ட்வேர், மெகானிகல் இஞ்சினியரிங் போன்றவர்களுக்கு அங்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது. இஸ்லாமிக் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத போரில் பங்கேற்க மாத சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், நிறைய இளைஞர்கள் அதற்கு தயாராகி செல்கின்றனர். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
சாப்ட்வேர்இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேசபயங்கரவாதஅமைப்புகளுடன்தொடர்பு: உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்தவர் முகமது ஆரிப், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக 2021-2023 பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, தனிசந்திரா மஞ்சுநாத் நகரில், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்[1]. இங்கு, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆண்டு 2022ல் பணியில் இருந்து விலகினார்[2]. பின், சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் ஒன்றை துவக்கி, வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். அதாவது அந்த அளவுக்கு அறிவை வளர்த்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் என்ற பெயரில் வலம் வந்த இவர், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி மறைமுகமாக செயல்பட்டு வந்தார். இதுதான் புதிராக உள்ளது. நன்றாக படித்து, புத்திக்கூர்மையுடன் சம்பாதித்து வரும் பொழுது, ஒழுங்காக மனைவி-மக்கள் என்று சந்தோசத்துடன் வாழ்க்கை வாழ்வதை விட்டு, ஏன் தீவிரவாத சம்பந்தங்கள் ஐத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.
பெங்களூருவில்தாக்குதல்நடத்தபயங்கரவாதிகள்திட்டம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக, அல் குவைதா, ஐ.எஸ்., அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம், ‘டெலிகிராம், டார்க்வெப்’ போன்ற சமூக வலைதள குழுக்களில் இணைந்து, அவற்றின் வாயிலாக பேசி வந்தார். இவரது நடவடிக்கைகள் பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள்[3]. இந்திய பொருளாதாரத்தை சீர்ழிக்க வேண்டும் என்றால், பலர் இவ்வாறு இறங்கி வேலை செய்வதை கவனிக்க வேண்டும். பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல்களும் வருகின்றன. அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெங்களூருவில் எப்போதும் போலீசார் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள்கண்காணிப்பு: கடந்த சில மாதங்களாக முகமது ஆரிபின் நடவடிக்கைகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்[4]. நிச்சயமாக, இப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்கள், லட்சக்கணக்கில் சித்தாந்த தாக்குதல்களை ஊடகங்கள், சித்தாந்திகள், செக்யூலரிஸம், சமதர்மம், சமத்துவம், திராவிட மாடல், கம்யூனிஸம் என்றெல்லாம் பலவித கொள்கைகளில் வெளிப்படையாக இந்தியாவை, இந்தியநாட்டிற்கு பாதகமாக விமர்சனம் செய்து, செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் நடந்து வரும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் மேற்காசிய நாடான சிரியா சென்று, அங்கு அல்- குவைதா பயங்கரவாத அமைப்பில் இணைய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்[5]. இது பற்றிய தகவல் அறிந்ததும், 11-02-2023 அன்று அதிகாலை 4:00 மணியளவில் அவரது வீட்டில், உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்[6].
அல்குவைதாஅமைப்பில்இணையஇருந்தது: அவர் சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் பேசி, அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது, அவரது வீட்டில் கிடைத்த ஆதாரங்களில் இருந்து உறுதியானது[7]. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்[8]. அதாவது கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு போலீசாரும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் (என்.ஐ.ஏ.) இணைந்து அவரை கைது செய்திருந்தார்கள்[9]. வீட்டில் இருந்து லேப்டாப், இரண்டு ‘ஹார்டு டிஸ்க்’குகள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. தற்போது முகமது ஆரிப் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் அடுத்த மாதம் (மார்ச்) பெங்களூருவில் இருந்து ஈரானுக்கு சென்று, அங்கிருந்து சிரியாவுக்கு செல்லவும் ஆரிப் திட்டமிட்டு இருந்தார்[11]. இதற்கான விமான டிக்கெட்டுகளையும் அவர் முன்பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[12]. இதற்கு முன்பு ஒரு முறையும் ஈரானில் இருந்து சிரியாவுக்கு செல்ல ஆரிப் முயற்சி செய்திருந்தார்[13]. அந்த சந்தர்ப்பத்தில் அவரால் சிரியாவுக்கு செல்ல முடியாமல் போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது[14].
பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது: அவர் சிரியா செல்ல இருந்ததால், மனைவி, குழந்தைகளை உத்தர பிரதேசத்தில் விட்டு செல்லவும், பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி உரிமையாளரிடம் பேசியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன[15]. அதே நேரத்தில் ஆரிப்பின் மனைவியிடமும் 12-02-2023 அன்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்[16]. அதாவது ஆரிப் எங்கெல்லாம் சென்று வந்தார்?. அவரை சந்திக்க யாரெல்லாம் வருவார்கள்? பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு? உள்ளிட்டவை குறித்து ஆரிப்பின் மனைவியிடமும் போலீசார் விசாரித்து சில தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் தற்போது அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்யவும் முடிவு செய்திருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர். மனைவி, பெற்றோர், உற்ரோர் முதலியோரும், இவருக்கு அறிவுரைக் கூறியதாகத் தெரியவில்லை. பெங்களூரில் நல்லவேலை, சம்பளம் இருக்கும் பொழுது, ஏன் இவன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும், அதிலும் சிரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கவில்லை.
பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது
முகமதுஆரிப்கைதுபற்றிகர்நாடகாஉள்துறைஅமைச்சர்அரகஞானேந்திராகூறியதாவது: “உத்தரபிரதேசத்தைச்சேர்ந்தஒருஇளைஞர், பெங்களூரில்தங்கிசர்வதேசபயங்கரவாதஅமைப்புகளுடன்தொடர்புவைத்திருந்தார். புலனாய்வுஅமைப்புகளுக்குகிடைத்தரகசியதகவலின்அடிப்படையில்அவர்கைதுசெய்யப்பட்டுவிசாரிக்கப்பட்டுவருகிறார். நம்நாட்டில்மதஉணர்வுகளைதுாண்டிவிட்டு, அமைதியைசீர்குலைக்கதிட்டமிடும்சர்வதேசபயங்கரவாதகுழுக்களுடன்தொடர்புவைத்திருக்கும்எந்தநபரும்ஒடுக்கப்படுவர்,” இவ்வாறு அவர் கூறினார். உடனே, இவர் பிஜேபிகாரர், இப்படித்தான் பேசுவார், “இஸ்லாமிக்போபியா,” என்றெல்லாம் கூட விளக்கம் கொடுப்பார்கள். அத்தகைய வாத-விவாதங்களும் ஊடகங்களில் நடந்து கொன்டுதான் இருக்கின்றன. ஆனால், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களில் ஏன் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று யாரும் பதில் சொல்வதாக இல்லை.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Al Qaeda: பெங்களூரில்சாப்ட்வேர்எஞ்சினியர்கைது – அல்–கொய்தாவுடன்தொடர்பு?, SG Balan, First Published Feb 11, 2023, 10:58 AM IST, Last Updated Feb 11, 2023, 12:19 PM IST.
[7] தினமணி, பெங்களூருவில்அல்–கொய்தாபயங்கரவாதிகைது: என்ஐஏஅதிரடி!, By DIN | Published On : 11th February 2023 04:20 PM | Last Updated : 11th February 2023 06:10 PM
இந்தியில் பத்ருதீன் அஜ்மல் சொன்னது என்ன?: பொதுவாக இந்தியில் ஒருவர் பேசியதை, சொன்னதை, ஆங்கிலத்தில் ஒழிபெயர்த்து செய்தி வெளியிடும் பொழுது சிறிது மாறுதல் ஏற்படும். பிறகு, ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழிபெயர்த்தால் மேலும் மாறுதல் ஏற்படும். ஆகவே இந்தியில் என்னவுள்ளது என்ரூ பார்ப்போம். ஆஜ்தக் என்ற இந்தி இனையத்தில்[1], “बदरुद्दीन अजमल ने कहा कि, “मुस्लिम मर्द 20-22 साल में शादी कर लेते हैं, जबकि मुस्लिम लड़कियों की शादी 18 साल में होती है जो कि कानून द्वारा तय की गई उम्र सीमा है. जबकि दूसरी ओर हिन्दू 40 साल से पहले 1…2…3 अवैध बीवियां रखते हैं. बच्चे होने नहीं देते हैं, खर्चा बचाते हैं, मजा उड़ाते हैं. 40 साल के बाद माता-पिता के दबाव में, या फिर कहीं फंस गए तो एक शादी कर लेते हैं. उन्होंने कहा कि 40 साल के बाद बच्चा पैदा करने की सलाहियत कहां रहती है. इसलिए हिंदुओं को हमारी तरह ही फॉर्म्यूले को अपनाते हुए अपने बच्चों की शादी कम उम्र में ही कर देनी चाहिए।फिर बच्चे कहां से पैदा होंगे. लड़कियों की शादी 18-20 साल में करानी चाहिए. इसके [2]देखिए आपके यहां भी कितने बच्चे पैदा होंगे. लेकिन गलत काम नहीं करना चाहिए. आप भी चार-पांच ‘लव जिहाद’ करिए और हमारी मुस्लिम लड़कियों को ले जाइए. हम इसका स्वागत करेंगे और लड़ाई भी नहीं करेंगे.”……………………, என உள்ளது.
தாரகேஷ்வரி பிரசாத் என்ற பிஜேபி தலைவர் பதில் அளித்தது: “நவபாரத் டைம்ஸ்”ல் வெளியாகியுள்ளது[3], ‘सनातनधर्ममेंसदैवप्रेमकीपूजाहोतीरहीहै।इसीकाप्रतीकहैकिकृष्णकी 16,000 प्रेमिकाऔरपत्नियांथीं।हमारेपूर्वजराजासागरकेसाठहजारपुत्रथे।हमेंबदरुद्दीनसेज्ञानकीजरूरतनहींहै।पूर्वकेंद्रीयमंत्रीसैयदशाहनवाजहुसैननेभीबदरुद्दीनअजमलकेबयानकीनिंदाकीहै।उन्होंनेकहाकिबदरुद्दीनकाबयानहिंदुओंकीभावनाओंकोभड़कानेवालाहै।उन्होंनेकहाकिइसकेलिएबदरुद्दीनकोसारेदेशसेमाफीमांगनीचाहिए।“. அதாவது கிருஷ்ணரைப் போல பல மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் மற்றும் சகரனை போல பல பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம், தாரகேஷ்வரி பிரசாத் [तारकिशोर प्रसाद] பிரசாத் பதில் கொடுத்துள்ளார்[4].
“சனாதன தர்மத்தில் அன்பு, காதல் எப்போதும் போற்றி வழிபடப்படுகிறது. அதன்படியாக, கிருஷ்ணருக்கு 16,000 தோழிகள் மற்றும் மனைவிகள் இருந்ததை இது உணர்த்துகிறது. நம் மூதாதையரான சாகர் மன்னன் அறுபதினாயிரம் மகன்கள். பத்ருதீனிடம் இருந்து நமக்கு ஞானம் பெற தேவையில்லை. பதுருதின் அஜ்மலின் கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சையத் ஷாநவாஸ் ஹுசைனும் கண்டனம் தெரிவித்துள்ளார். பதுருதீனின் கருத்து இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் உள்ளது என்றார். இதற்காக நாடு முழுவதும் பதுருதீன் மன்னிப்பு கேட்க வேண்டும்,: என்றார். இதற்காக போலீசிடம் புகார் கொடுக்கப் பட்டு, வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
அப்தாப்கொலையாளி–லவ்ஜிஹாத்–மக்கட்தொகைபெருக்கம்: இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள்தொகை, அடுத்த ஆண்டு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் முதலிடம் பிடிக்கும் என்றும் அண்மையில் ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் ஒருபக்கம் மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனப் பலர் கூறிவர, மறுபக்கம் சில தலைவர்கள் மக்கள்தொகை அதிகரிப்புக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்றும் கூறுகின்றனர். தில்லி குரூரக் கொலைக்குப் பிறகு மறுபடியும் “லவ் ஜிஹாத்” போன்றவற்றைப் பற்றி வாதவிவாதங்கள் எழுந்துள்ளன. ஆங்கில மற்ற ஊடகங்களில் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதைப் பற்றி அவ்வளவாக கண்டுகொள்ளாமல், இப்பொழுது, பத்ருதீன் அஜ்மல், என்ற அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் கூறியதற்கு தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. “தமிழ்.இந்து” முதலில் அரைகுறையாக வெளியிட்டு, பிறகு பத்ருதீன் அஜ்மல் சொன்னதை போட்டிருக்கிறது.
இந்துக்களும்முஸ்லிம்கள்போல்தங்கள்பிள்ளைகளுக்குஇளம்வயதிலேயேதிருமணம்செய்துவைக்கவேண்டும்: “இந்துக்களும்முஸ்லிம்கள்போல்தங்கள்பிள்ளைகளுக்குஇளம்வயதிலேயேதிருமணம்செய்துவைக்கவேண்டும்,” என்று அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ரூதீன் அஜ்மல் யோசனை தெரிவித்துள்ளார்[5]. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியாவில்லவ்ஜிகாத்துக்குஎதிராகசட்டம்கொண்டுவரவேண்டும். இந்தியாவுக்குபொதுசிவில்சட்டம்தேவை. இந்துக்களின்மக்கள்தொகைகுறைந்துவருகிறது. முஸ்லிம்களின்எண்ணிக்கைஅதிகரிக்கிறது,” என்று கூறியிருந்தார்[6]. இது பொதுவாக எல்லா நிகழ்வுகளையும் வைத்து பேசியது என்று தெரிகிறது. ஏனெனில், “பொதுசிவில்சட்டம்” பற்றியும் பேச்சுகள், விமர்சனங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பத்ருதீன் அஜ்மல் விமர்சிப்பது, உயர்வு நவிற்சியாக இருந்தாலும், சட்டவிரோதமான, அநாகரிகமான மற்றும் இன்றைய சூழ்நிலைகளில் வெறுப்புப் பேச்சாக அமைந்துள்ளது.
இந்துக்களும்முஸ்லிம்களின்நடைமுறையைப்பின்பற்றிதங்கள்பிள்ளைகளுக்குதிருமணம்செய்துவைக்கவேண்டும்: இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பத்ருதீன் அஜ்மல், “முஸ்லிம்ஆண்கள் 20 முதல் 22 வயதில்திருமணம்செய்துவிடுகின்றனர். முஸ்லிம்பெண்கள் 18 வயதில்திருமணம்செய்துகொள்கின்றனர்[7]. ஆனால்இந்துக்கள்திருமணத்துக்குமுன்னரேஇரண்டு, மூன்றுபெண்களுடன்வாழ்கின்றனர்[8]. குழந்தைபெற்றுக்கொள்வதில்லை. சுகங்களைப்பெற்றுக்கொண்டுபணத்தைசேமிக்கின்றனர்[9]. 40 வயதுக்குமேல்தான்அவர்கள்திருமணம்செய்துகொள்கின்றனர்[10]. 40 வயதுக்குமேல்எப்படிகுழந்தைபெற்றுக்கொள்வதுஎளிதாகும். நல்லவளமானமண்ணில்விதைக்கப்படும்விதைகளேபலன்தரும்பயிறாகும். அதனால்இந்துக்களும்முஸ்லிம்களின்நடைமுறையைப்பின்பற்றிதங்கள்பிள்ளைகளுக்குஆண்களாகஇருந்தால் 20 முதல் 22 வயதிலும்பெண்களாகஇருந்தால் 18 முதல் 20 வயதிலும்திருமணம்செய்துவைக்கவேண்டும். அப்புறம்எத்தனைகுழந்தைகள்பிறக்கின்றனஎன்றுபாருங்கள்,” என்று கூறினார். [இது ஏதோ நல்லெண்ணத்தில் சொல்லியது இல்லை, ஏனெனில், இந்துமதத்தில் பலதாரமுறை அனுமதி இல்லை. “திருமணத்துக்குமுன்னரேஇரண்டு, மூன்றுபெண்களுடன்வாழ்கின்றனர்,” என்பதெல்லாம் விசமத்தனமானது..]
[3] नवभारतटाइम्स, हिंदू 40 कीउम्रतकदो–तीनबीवियांरखतेहैं, बदरुद्दीनअजमलकाविवादितबयान, Curated by राघवेंद्र सिंह | नवभारतटाइम्स.कॉम | Updated: 3 Dec 2022, 2:45 pm.
[7] விகடன், “இந்தவிஷயத்தில்இந்துக்கள்முஸ்லிம்களின்ஃபார்முலாவைப்பின்பற்றவேண்டும்” – பத்ருதீன்அஜ்மல்எம்.பிசி. அர்ச்சுணன், Published:03 Dec 2022 11 AMUpdated:03 Dec 2022 11 AM
[9] ஜீ.டிவி, இப்படிஇருந்தால்இந்துக்களால்எப்படிகுழந்தைபெறமுடியும்? – இஸ்லாமியதலைவரின்சர்ச்சைகருத்து, Written by – Sudharsan G | Last Updated : Dec 3, 2022, 06:57 AM IST.
இதில், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது[1].
ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த ஆவணங்கள் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[2].
மேலும் இவர்கள், ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடா்பாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், இரு வழக்குகள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஆதாரங்கள்பகுப்பாய்வுக்குஉட்பட்டவைஆகின்றன: கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தடயவியல் துறையிடம் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. நிச்சயமாக போலீசாரோ, என்.ஐ.ஏவோ எல்லா விவரங்களையும் சொல்லி விடமுடியாது. அதிலும் இத்தகைய ஜிஹாதி-தீவிரவாதம், ஐஎஸ்-தொடர்பு பயங்கரவாதம் போன்றவை பின்னியிருக்கும் பொழுது, அதிலும் தமிழகம் போன்ற “திராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லிக் கொண்டு, பிரிவினைவாதம், மாநில சுயயாட்சி, தினமும் மத்திய அரசுடன் எதிர்ப்பு கொள்கை கொண்ட போக்கு-செயல்பாடுகள் எல்லாம் மேற்கொண்டு வரும்பொழுது, திராவிடத்துவத்தில் ஊறிய தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்றே சொல்லிக் கொள்ளும் தமிழர்கள், நிச்சயமாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொல்வார்கள். மறுஅடியும் பெரியாரிஸம், நீதிகட்சி, அண்ணாயிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பிக்கும் போது, அத்தகைய எண்ணம் தான் தோன்றும். மேலும், இப்பொழுதைய நிலையிலும் அவ்வாறே பேசி வருவது தான் பிரச்சினை, சந்தேகம் மற்றும் தீவிரத் தனமாகிறது.
ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம்சென்னைபோலீசார்சோதனை… பின்னணிஎன்ன?: நியூஸ்18தமிழ், இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்பினாலும், தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும், அதில் பதிலை சொல்லவில்லை. [3] இருப்பினும், ஒரு நிருபர் அவ்வாறு யோசித்திருப்பது தெரிகிறது[4]. முன்னரே எதற்கு நான்கு நாட்கள் தாமதம் என்ற கேள்வி கவர்னரால் எழுப்பப் பட்டு, ஆளும் கட்சியினரால் விவாதப் பொருள் ஆக்கப் பட்டுள்ளது. தேவையில்லாமல், ஊடகங்களில் வேறு விவாதிக்கப் பட்டுள்ளது. திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” (அநாகரிக பேச்சைத் தடுக்க நெறியாளர் மைக்கை மூடலாம், அது மூட் எனப்படும்) கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது. மறுபடியும், இந்த ரெயிடுகளில் தாமதம் உள்ளதா, தொய்வு ஏற்படுகிறதா, என்.ஐ.ஏ செல்லும் பொழுது, போலீசார் துணை / பாதுகாப்புத் தேவைப் படுகிறதா போன்ற கேள்விகளும் சாதாரண செய்தி படிப்போர்களுக்கு எழத்தான் செய்யும், இருப்பினும், என்.ஐ.ஏ போன்றோருக்கு எதற்கு துணை / பாதுகாப்புத் தேவை, அவர்களுக்கு அதெல்லாம் தெரியாதா அல்லது கருவிகள் இல்லையா என்றெல்லாம் கூட யோசிக்கக் கூடும்.
என்.ஐ.ஏசோதனைகளுக்குமுஸ்லிம்அமைப்பினர்வெளிப்படையாகஎதிர்ப்புத்தெரிவிப்பது ஏன், எப்படி?: முன்பு, என்.ஐ.ஏ சோதனைகள் நடத்தியபோது, முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர், ஆர்பாட்டம் செய்தனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது, போலீசார் எப்படி அனுமதித்தார்கள், பார்த்துக் கொண்டிருந்தார்கள் போன்ற கேள்விகளும் எழத்தான் செய்தன. இருப்பினும், போலீசார் பார்த்துக் கொண்டிருந்தது போலத் தான் ஊடகங்களில் வெளியிடப் பட்ட புகைப் படங்கள் காட்டின. அதனால், “முஸ்லிம்” என்றாலே, மிருதுவாக செயல்படுகிறார்கள், ஓட்டுவங்கி போய்விடும் போன்ற காரணங்களுக்காக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. அதே நேரத்தில், “தீவிரவாதத்திற்கு மதம் இல்லை,” என்று செக்யூலரிஸத் தனமாகவும் மிக நம்பிக்கையுடன் பேசப் பட்டு வருகிறது. என்.ஐ.ஏ சோதனை தேவையில்லை, தமிழகத்திற்கே என்.ஐ.ஏ தேவையில்லை போன்ற வாதங்களும் வைக்கப் பட்டன. இவையெல்லாம் மத்திய-மாநில அரசு மோதல்களா, ஒன்றிய-திராவிட மாடல் சித்தாந்த ஊடல்களா, ஆரிய-திராவிட போராட்டங்களா என்ரு தெரியவில்லை. இருபினும், இதிலுள்ள முக்கியத் தன்மை, பாதுகாப்பு-தேவை, தீவிரத் தன்மை முதலியவற்றை தேசிய-பாதுகாப்பு, ஜாக்கிரதை, கவனிப்பு கோணங்களில் மிக-அத்தியாவசமாகிறது.
28-09-2022லிருந்துபாப்புலர்ஃப்ரண்ட்ஆப்இந்தியாஅலுவலகங்களுக்குச்சீல்வைப்பதுமுதலியன: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்துக்குச்சீல் வைக்க தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டிற்கு வந்தனர். அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டின் முதல் தளத்தில் போலீசார் விசாரணை 26-10-2022 அன்று நடத்தியபோது, ஏற்கெனவே அலுவலகம் நடத்தியவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காலி செய்துவிட்டுச்சென்றது தெரியவந்தது[5]. அந்த வீட்டில் வேறுகுடும்பத்தினர் வாடகைக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், அந்த வீட்டில் வாடகைக்கு வரும்பொழுது போடப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் வீட்டைக்காலி செய்யும் பொழுது எழுதிக்கொடுத்த ஒப்பந்த பத்திரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்[6]. இவையெல்லாம் தற்செயலாக நடந்தவையா அல்லது திட்டமிட்டு நடந்த நிகழ்வுகளா என்று அவர்கள் தான் புலனாய்வு செய்யவேண்டும். ஆனால், இங்கு 27-09-2022 முதல் 26-10-2022 வரை ஏன் தாமதம் என்ற கேள்வி தான் எழுகிறது.
10-11-2022 –வியாக்கிழமை – ஆவணங்கள்பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்டஐ.எஸ்.ஐ.எஸ்இயக்கஆதரவாளர்கள்லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.
15-11-2022 – நான்குநபர்களிடம்விசாரணை–சோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.
முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.
இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.
15-11-2022 அன்றுஊடகங்களின்செய்தி – விசாரணைக்குப்பிறகுவிவரங்கள்வெளியிடப்படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல்மண்ணடியில்உள்ளஒருவீட்டில்துணைஆணையர்ஆல்பர்ட்ஜான்தலைமையில்சோதனைநடைபெற்றுவருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதஇயக்கத்தினருடன்தொடர்பில்இருப்பதாகஎழுந்தசந்தேகத்தின்அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில்மாநகரபோலீஸாருடன்இணைந்துஎன்ஐஏஅதிகாரிகள்திடீர்சோதனையில்ஈடுபட்டனர்,………………….சென்னையில்சிலர்ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதிகளின்தொடர்பில்இருப்பதாகசந்தேகித்துமாநிலஉளவுப்பிரிவுபோலீஸாருக்குமத்தியஉளவுத்துறைசமீபத்தில்ஒருபட்டியல்அனுப்பியது. அதன்அடிப்படையிலேயேதற்போதுசோதனைநடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].
15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.
[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதஇயக்கத்துடன்தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில்என்ஐஏ, போலீஸார்தீவிரசோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.
28-09-2022 அன்று [Popular Front of India (PFI)] தடைசெய்யப்பட்டது[1]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்பது இந்தியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய அரசியல் அமைப்பாகும், இது முஸ்லீம் சிறுபான்மை அரசியலின் தீவிர மற்றும் தனித்துவ பாணியில் ஈடுபடுகிறது. இந்துத்துவா குழுக்களை எதிர்க்க உருவாக்கப்பட்டது, என்று விகிபீடியா வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் 28 செப்டம்பர் 2022 [28-09-2022] புதன்கிழமை அன்று ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது[2]. UAPA வின் பிரிவு 2(1)(p) ஆனது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A அல்லது 153B பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்ட எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கை அல்லது குற்றத்தையும் அதன் பொருளுக்குக் கொண்ட ஒரு அங்கமாக “சட்டவிரோத சங்கம்” என்று வரையறுக்கிறது – அதாவது வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கிறது. மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள், வலியுறுத்தல்களை உருவாக்குதல். ஒரு சட்டவிரோத சங்கம் என்பது “எந்தவொரு சட்டவிரோத செயலை மேற்கொள்ள நபர்களை ஊக்குவிக்கும் அல்லது உதவுவது, அல்லது உறுப்பினர்கள் அத்தகைய செயலை மேற்கொள்வது முதலியவை அடங்கும்”.
கைதுகளும், அலுவலகங்களுக்குசீல்வைத்தலும்: 27-09-2022 தடை அறிவித்தாலும், 13-10-2022 வரை அலுவலகங்களுக்கு சீல் வைப்பது தாமகம் ஆகியது. அப்பொழுதே கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு-ஆர்பாட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் தலைமை அலுவலகம் உள்ளது[3]. 01-10-2022 அன்று இதற்கு சீல் வைக்கப் பட்டது[4].தமிழகத்தில் PFIன் அலுவலகங்கள் சீல் வைப்பது கூட தாமதமாகச் செய்யப் பட்டன. ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது[5]. 13-10-2022 அன்று இந்நிலையில், கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு இன்று வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்[6]. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 27-09-2022 முதல் 13-10-2022 வரையில், தாராளமாக பல ஆவணங்கள், ஆதாரங்களை மறைக்கப் பட்டிருக்கலாம். அத்தகைய காலதாமதம் ஏன் என்று தெரியவில்லை. அப்படி காலதாமதம் செய்தும், சீல் வைத்தபோது, போலீஸ் பாதுகாப்பு ஏன், பதட்டம் ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தியா முழுவதும் நடைபெறுவது, தமிழகத்திலும் நடைபெறுகிறது, இதில் ஒன்றும் வித்தியாசமோ, மாறுபாடோ இருக்க முடியாது.
27-10-2022 முதல்என்.ஐ.ஏவிசாரணை, சோதனைகள்ஆரம்பம்: 23-10-2022 அன்று கோவை ஜமேஷா முபின்[7] நடத்திய குண்டு வெடிப்பு எதிரொலியாக பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சென்னையில் மீண்டும் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்[8]. 27-10-2022 அன்று என்.ஐ.ஏவுக்கு இவ்வழக்கு ஒப்படைத்தப் பிறகு, கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. 28-10-2022 அன்று NIA முதல் தகவல் அறிக்கை FIR போட்டது[10]. இருப்பினும், சிறப்பு காவல்துரையும் சோதனை எய்தனர் என்ற செய்திகளும் வந்து கொன்டிருந்தன. குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி [10-11-2022, வியாழக்கிழமை] சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[11]. இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை ஆகியவை வழங்கி ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பியது[12]. அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேர் வீடுகளில் சென்னை போலீஸார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
10-11-2022 அன்றுமேற்கொன்டசோதனை: இதனை தொடர்ந்து 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் சென்னை போலீஸார் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆக, இவ்வாறு தேதிகளில்-நாட்களில் இடைவெளி இருக்கும்பொழுது,
23-10-2022 முதல் 27-10-2022 வரை,
27-10-2022 முதல் 10-11-2022 வரை
10-11-2022 முதல் 15-11-2022 வரை
சம்பந்தப் பட்டவர்கள், தங்களைப் பற்றிய, மாட்டிக் கொள்ளும் வகையில் உள்ள ஆவணங்களை, சான்றுகளை அப்படியே வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இருப்பினும், சோதனைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.. தமிழக ஆளுனர் முன்பு இத்தகைய கேள்வியை எழுப்பினார் என்றும் கவனிக்கத் தக்கது. துப்பறியும் நிபுணத்துவ ஊடக வல்லுனர்கள் இதைப் பற்றியெல்லாம் மூச்சுக் கூட விடாமல் இருப்பதை கவனிக்கலாம். வெள்ளம் வரும் பொழுது, தடுக்காமல், தடுக்க நடவடிக்கை எடுக்காமல், பிறகு வந்து பார்த்துக் கொள்கிறேன் என்றால், என்னாகும்? அந்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. 1998ல் நடந்து விட்டது, 2022லும் அரங்கேறிவிட்டது, ஆனால், தப்பித்தாகி விட்டது.
15-11-2022 அன்று43 இடங்களில்சோதனை: இந்த வழக்கு தொடா்பாக என்ஐஏ தமிழகத்தில் 42 இடங்களில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருவள்ளூா், திருப்பூா், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது[13]. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஓரிடத்தில் சோதனை நடைபெற்றது. அதேநேரத்தில், கோவையில் மட்டும் 33 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது[14]. சென்னையில் புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் வசிக்கும் பழைய காா்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் மு.நிஜாமுதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை சோதனை செய்தனா். சுமார் 2 மணி நேர சோதனைக்குப் பின்னா், நிஜாமுதீனை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். கோவையில் வெடித்த பழைய கார் சுமார் 10 வியாபாரிகளிடம் கைமாறியிருப்பதும், அதில் நிஜாமுதீனும் அந்த காரை வாங்கி விற்றிருப்பதும் தெரியவந்ததால், அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல என்ஐஏ அதிகாரிகள் வழங்கிய பெயா்ப் பட்டியலின் அடிப்படையில் 4 இடங்களில் சென்னை போலீஸார் சோதனை நடத்தினா்.
[1] Popular Front of India (PFI) is an Islamic political organisation in India,[5][6] that engages in a radical and exclusivist style of Muslim minority politics. Formed to counter Hindutva groups, it was banned by the Indian Ministry of Home Affairs under Unlawful Activities (Prevention) Act (UAPA) on 28 September 2022 for a period of five years.
[2] Section 2(1)(p) of the UAPA defines an “unlawful association” as an association which has for its object any unlawful activity or offence defined under Sections 153A or 153B of the Indian Penal Code — that is, promoting enmity between different groups and making imputations, assertions that are prejudicial to national integration. An unlawful association is also one that “encourages or aids persons to undertake any unlawful activity, or of which the members undertake such activity”.
[3] மாலைமலர், பாப்புலர்பிரண்ட்சென்னைஅலுவலகத்துக்குசீல்– தமிழகஅரசுஅதிரடிநடவடிக்கை, By Maalaimalar, 1 அக்டோபர் 2022 11:45 AM.
[7] Jameesha Mubin, who was questioned by the NIA in 2019 for alleged terror links, was charred to death in suspicious circumstances after an LPG cylinder inside a vehicle he was driving exploded near Kottai Eswaran temple in Ukkadam around 4am on October 23, a day before Diwali. The incident took place around 200 metres from a police patrol.
[8] தினத்தந்தி, #Breaking|| சென்னையில் ISIS அமைப்புடன்தொடர்புடையதாகசந்தேகிக்கப்படும்நபர்களின்வீடுகளில்சோதனை, By தந்தி டிவி 15 நவம்பர் 2022 8:06 AM.
[10] In the FIR filed on October 28, the NIA said 109 articles, including Potassium Nitrate, Black Powder, match box, cracker fuse length of about 2 meters, nitroglycerine, PET powder, aluminium powder, and 9-volt battery, were recovered from Mubin’s residence.
[11] காமதேனு, பயங்கரவாதஇயக்கங்களுடன்தொடர்பு: சென்னையில் 4 இடங்களில்என்ஐஏஅதிரடிசோதனை, Updated on: 15 Nov, 2022, 10:16 am.
[13] தினமணி, தமிழகத்தில் 42 இடங்களில்என்ஏஐசோதனை: கோவைகாா்வெடிப்புவழக்கில்முக்கியஆவணங்கள்பறிமுதல், By DIN | Published On : 11th November 2022 01:04 AM | Last Updated : 11th November 2022 05:34 AM
கோவையில் திடீரென்று ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? உளவியல் ஆலோசனை தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அடங்குமா? (3)
பயங்கரவாதம், தீவிரவாதம்மற்றும்அழிப்புவாதம்எவ்வாறுவளர்க்கப்படுகின்றன?: அத்தகைய போதனைகள், சின்னங்கள் மற்றும் வேறுபாடுகள் மூலம், சாதாரண தினசரி வாழ்க்கையினையே நடத்த முடியாமல் செய்து, மக்களை அஞ்சி நடுங்க வைத்து கட்டுப் படுத்தி வைக்கும் நிலையாகும். இறுதியாக யதேச்சதிகார, சர்வாதிகார. பாசிஸ, நாசிஸ அடக்குமுறைகள் மூலம் அரசாளும் நிலைக்குக் கொண்டு செல்ல போடும் திட்டமாகும். இதற்கு, பெரும்பாலும், மதம், மதநூல்கள், அவற்றில் குறிப்பிட்டுள்ள வாசகங்களை ஆணைகளாக ஏற்றுக் கொண்டு நடந்து கொள்வதும் தீவிரவாதம் ஆகிறது. அவற்றின் மூலம், எதிர்ப்பவர்களை மிகக் கொடுமையான மத தண்டனைகள் மூலம் சித்திரவதை, குரூரமாக கொல்லுதல், அவற்றை படங்கள், வீடியோக்களாக எடுத்துப் பரப்புதல், பார்ப்பவர்களுக்கு, “எங்களை எதிர்த்தால், உங்களுக்கும் இதே நிலை ஏற்படும்,” என்று பயமுருத்தல் முதலியனவும் அடங்கும். அவர்கள் குறிப்பிட்ட சொற்கள், சின்னங்கள், குறியீடுகளை அடையாளங்களாக பயன்படுத்துவதால், அந்தந்த சித்தாந்தம், மதநம்பிக்கை மற்றும் தீவிரவாத சார்பு, ஆதரவு, பரிவு, உணர்வு, கொண்ட மக்களும் உதவுவது உண்டு. இதனால், அவர்களுக்கு பலவழிகளில் உதவிகளும் கிடைத்து வருகின்றன.
பயங்கரவாதஎதிர்ப்பு, தீவிரவாதஅழிப்புமுறைகள்யாவை?: பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதங்கள் செயல்படும் போது, அதற்கு எதிராக மக்களை பாதுகாக்க வழிமுறைகளையும் கையாள வேண்டியுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு (தீவிரவாத எதிர்ப்பு என்றும் முதலியன), இது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அல்லது ஒழிக்க அரசாங்கங்கள், சட்ட அமலாக்கம், வணிகம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் நடைமுறைகள், இராணுவ தந்திரங்கள், நுட்பங்கள் மற்றும் உத்திகளை உள்ளடக்கியது. பயங்கரவாத எதிர்ப்பு என்பது பயங்கரவாதிகளை ஒழுங்குபடுத்தி, மனங்களில் பதிந்துள்ள தீவிரவாதங்களை நீக்கி, நடுநிலையாக்குவதற்கும் முடிவாக கைப்பற்றுவதற்கும் எடுக்கப் படும் முயற்சிக்கள் ஆகும். தேசிய சக்தியின் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உந்துதல், அவர்கள் வைத்திருக்கும் இந்த அமைப்புக்கள் மற்றும் இந்த நெட்வொர்க்குகள் அவர்களை அட்டுப்படுப்படுத்டும் பயத்தை ஏற்படுத்துவதற்கும், அரசாங்கத்தை அல்லது குடிமக்களை அவ்வாறே தீவிரவாதிகளுக்குத் துணை போகாமல் இருக்க வற்புறுத்துவதற்கும் ஏற்கொள்ளும் வழிமுறைகள் ஆகும்.
முன்னரேஅறிந்துநிகழாமல்தடுக்கசெயல்படவேண்டும்: இந்த பயங்கரவாதிகளின் இலக்குகளுக்கு ஏற்ப, அவற்றை முன்னரே அறிந்து நிகழாமல் தடுக்க செயல்பட வேண்டும். அத்தகைய அடிப்படைவாத எண்ணங்களிடன் பேசி, எழுதி வரும், கூட்டங்கள் சேர்க்கும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும். தடை செய்யப் பட்ட இயக்கங்கள், அவற்றின் உறுப்பினர்கள் கூட தொடர்பு வைத்திருப்பது என்பது சாதாரண விசயம். தகவல் கொடுப்போர், இத்தகைய ஆட்களைப் பற்றி ரகசியமாக விவரங்கள் தரும் நபர்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். விவரஙளையும் சரிபார்த்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தின் வரையறைகள் பரந்த கிளர்ச்சி, கலவரம், அழிவை உண்டாக்கும் போக்கின் ஒரு பகுதியாக இருந்தால், பயங்கரவாத எதிர்ப்பு கிளர்ச்சிக்கு எதிரான துரிதமாக தகுந்த நடவடிக்கைகளைப் பயன்படுத்தலாம். ஆயுதப் படைகள் வெளிநாட்டு உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற வார்த்தையை கிளர்ச்சி, சட்டமின்மை அல்லது நாசத்தை அடக்குவதற்கு அல்லது தேசிய பாதுகாப்புக்கு இந்த அச்சுறுத்தல்கள் உருவாகக்கூடிய நிலைமைகளைக் குறைக்கும் முயற்சிகளில் மற்ற நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றன..
பயங்கரவாதஎதிர்ப்புநடவடிக்கை, செயல்முறைஆரம்பம்: அயர்லாந்து தனிநாடாக இருக்க வேண்டு என்று, ஐரிஸ் ரிபளிக் பார்ட்டி என்ற அமைப்பு போராடி வருகிறது. அது, இதுவரை உருவாக்கப்பட்ட முதல் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு பெருநகர காவல்துறையின் சிறப்பு ஐரிஷ் கிளை ஆகும், பின்னர் அது ஃபெனியன் பயங்கரவாதத்தின்[1] மீதான அதன் நோக்கத்தைத் தாண்டி அதன் நோக்கத்தை விரிவுபடுத்திய பின்னர் சிறப்புப் பிரிவு என்று மறுபெயரிடப்பட்டது. சட்ட அமலாக்க முகவர் இங்கிலாந்திலும் பிற இடங்களிலும் இதே போன்ற பிரிவுகளை நிறுவினர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் விரிவடைந்தன. குறிப்பாக, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, மேற்கத்திய அரசாங்கங்கள் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தன, இதில் அதிக வெளிநாட்டு ஒத்துழைப்பு, சிவப்பு அணிகளை உள்ளடக்கிய மாற்றும் தந்திரங்கள், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். வளர்ந்த நாடுகளில் பரபரப்பான தாக்குதல்கள் ஊடக கவனத்தைப் பெற்றாலும், பெரும்பாலான பயங்கரவாதம் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் நிகழ்கிறது. பயங்கரவாதத்திற்கு அரசாங்கத்தின் பதில்கள், சில சந்தர்ப்பங்களில், கணிசமான எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்
வேதபிரகாஷ்
07-11-2022
[1] The word Fenian served as an umbrella term for the Irish Republican Brotherhood (IRB) and their affiliate in the United States, the Fenian Brotherhood, secret political organisations in the late 19th and early 20th centuries dedicated to the establishment of an independent Irish Republic.
29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)
14-02-2022 அன்றுகாணாமல்போனசிறுமிசாவு: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார்[1]. 16 வயது என்கிறது தமிழ்.இந்து. அதன் பிறகு அவர் மாயமானார்[2]. 14-02-2022 அன்று காணாமல் போனாள் என்று மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் 15-02-2022 அன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். 16/17 வயது சிறுமி 12 வயது வித்தியாசம் கொண்ட ஒரு வாலிபனுடன் சென்றாளா அல்லது அவன் ஏமாற்றி, வலுக்கட்டாயமாக அல்லது வெறேதாவது காரணத்திற்காகக் கடத்திச் சென்றானா என்று புரிந்து கொள்ள முடியாதா? அதாவது, ஒரு முஸ்லிம், இந்து சிறுமியை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல், உடலுறவு கொண்டுள்ளான், கற்பழித்துள்ளான். ஆகையால், இது “லவ் ஜிஹாத்” வகையில் கூட வரும், என்றாகிறது.
14-02-202 அன்று காணாமல் போன சிறுமியை 03-03-2022 அன்று ஹனிபாவின் தாய் ஒப்படைத்தது, 06-03-2022 அன்று மரணமடைந்தது: இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் 03-03-2022 அன்று ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 06-03-2022 அன்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று நாட்களில் போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. மருத்துவ மனையிலும், மருத்துவர்கள் சிறுமி விசம் குடித்ததைக் கண்டு பிடித்து, போலீஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவில்லை.
05-03-2022 அன்றுகைதானநாகூர்ஹனீபாசொன்னது – எலிமருந்துசாப்பிடவைத்தேன்: இதற்கிடையே நேற்று முன்தினம் 05-03-2022 அன்று நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன[3]. இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு[4]: “நானும், அந்தசிறுமியும்காதலித்துவந்தோம். சம்பவத்தன்றுகாதலியைபிப்., 14ல்திருப்பரங்குன்றத்தில்நண்பர்பெருமாள்கிருஷ்ணன், 25, வீட்டிற்குநண்பர்களுடன்அழைத்துச்சென்றேன்[5]. பின்னர்அங்கிருந்து 15-02-2022 அன்று ஈரோடுமாவட்டம்பள்ளிபாளையத்தில்உள்ளஎனதுசித்தப்பாஇப்ராகிம்வீட்டிற்குகூட்டிச்சென்றேன்[6]. இதற்குஎன்னுடையநண்பர்கள்உதவினர். அங்குசிறுமியைதங்கவைத்திருந்தேன். இந்தநிலையில்எனதுதாயார்என்னிடம்தொடர்புகொண்டு, சிறுமியைநான்அழைத்துசென்றதாகஊருக்குள்பேசிக்கொள்கின்றனர். இதுபிரச்சினையாகிவிடும்என்றுகூறினார். இதைவைத்துஅந்தசிறுமியைபயமுறுத்துவதுபோல்பேசினேன்[7]. பின்னர்இருவரும்தற்கொலைசெய்துகொள்ளலாம்எனவும்தெரிவித்தேன். இதற்காகஎலிமருந்துவாங்கிவந்திருந்தேன். அதைசிறுமியைசாப்பிடவைத்தேன்[8]. ஆனால்நான்அதைசாப்பிடவில்லை[9]. அதன்பின்னர்சிறுமியின்உடல்நிலைசரியில்லாமல்போனதால்மதுரைக்குஅழைத்துவந்துஎனதுதாயாரிடம்ஒப்படைத்துவிட்டுசென்றுவிட்டேன். பின்னர்எனதுதாயார்அவரைஅவரதுவீட்டில்ஒப்படைத்தார்,” இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற காதலன் காதலியை ஏன் ஏமாற்ற வேண்டும்?: நாகூர் ஹனிபா சிறுமிக்கு மட்டும் எலிமருந்து கொடுத்து சாப்பிட வைத்து, இவன் துப்பி விட்டான் என்றால், நாடகம் ஆடியிருக்கிறான் என்று தெரிகிறது. மேலும் அந்த அப்பாவி சிறுமியை கொலைசெய்ய தீர்மானித்திருக்கிறான். அப்படியென்றால் அவளை கொலைசெய்ய வேண்டிய அவ்சியம் என்ன? அவளை ஒரே அடியாக ஒழித்துவிட வேண்டிய கட்டாயம் என்ன? அதாவது, அவள் ஏதோ ஒரு உண்மையினை சொல்லலாம், அவ்வாறு சொன்னால், இவன் மாட்டிக் கொள்வான் என்ற நிலை இருந்திருக்கிறது. அத்தகைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்களில், “கூட்டு பலாத்காரம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவனே திருமணம் செய்து கொள்ளாமல் 14-02-2022 முதல் 02-03-2022 வரை கற்பழித்திருக்கிறான். மற்ற விவகாரங்கள் தெரியவில்லை.
8 பேர்கைதுபோலீஸ்சூப்பிரண்டுபேட்டி: இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது: “மேலூர்சிறுமியைகாதலன்நாகூர்ஹனிபாகடத்திஈரோடுசென்றுஅங்குஅவரதுசித்தப்பாவீட்டில்கணவன், மனைவியாகவாழ்ந்துள்ளார்[10]. இந்தசம்பவம்தொடர்பாகபோலீசார்போக்சோசட்டம், சிறுமியைகடத்தியதுஉள்பட 4 பிரிவுகளின்வழக்குப்பதிவுசெய்துசெய்துவிசாரணைநடத்திவருகின்றனர்[11]. இதில் 8 பேர்கைதுசெய்யப்பட்டுள்ளனர். தற்போதுஅந்தசிறுமிஇறந்துவிட்டதால்அதுகொலைவழக்காகமாற்றப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.
[7] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.
அண்மைய பின்னூட்டங்கள்