‘தி கேரளா ஸ்டோரி‘ – திரைப்படத்திற்கு எதிர்ப்பு–தடை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள். உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.

மேற்கு வங்காளம் தடை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.

பத்து நாட்களில் 100 கோடிகளைத் தாண்டிய வசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].

குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6]. வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.

தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.

19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?
© வேதபிரகாஷ்
17-05-2023

[1] மாலைமலர், ‘தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படத்துக்கு வரவேற்பு இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில், By Nagalekshmi 16 மே 2023 12:21 PM.
[2] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-case-update-609713?infinitescroll=1
[3] சினிமா.பேட்டை, 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட், By Anamika, Published on May 14, 2023
[4] https://www.cinemapettai.com/the-collection-record-of-the-kerala-story-in-10-days
[5] தமிழ்.இந்து, ரூ.100 கோடி வசூலைக் கடந்தது ‘தி கேரளா ஸ்டோரி’ – நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.19 கோடி, செய்திப்பிரிவு, Published : 14 May 2023 03:33 PM, Last Updated : 14 May 2023 03:33 PM.
[6] https://www.hindutamil.in/news/cinema/bollywood/989990-the-kerala-story-enters-rs-100-crore-club.html
[7] மாலைமலர், ரூ.100 கோடி வசூல் செய்த ‘தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படம்,By Maalaimalar, 15 மே 2023 2:30 PM
[8] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-collected-rs100-crores-609380
[9] தமிழ்.வெப்.துனியா, நாங்க தடை பண்ணல.. படத்தை யாரும் பாக்கவே இல்ல! – The Kerala Story வழக்கில் தமிழக அரசு பதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).
[10] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilnadu-govt-said-they-not-ban-kerala-story-in-tamilnadu-123051600041_1.html
[11] தினமலர், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், மாற்றம் செய்த நாள்: மே 16,2023 12:23
[12] தமிழ்.ஒன்.இந்தியா, படம் பார்க்க நாங்களா ஆட்களை கூட்டி வர முடியும்.. தி கேரளா ஸ்டோரி வழக்கில் தமிழக அரசு பதில், By Vigneshkumar Updated: Tuesday, May 16, 2023, 17:38 [IST]
[13] https://tamil.oneindia.com/news/delhi/what-tamilnadu-govt-says-about-the-kerala-story-not-being-screened-in-tamilnadu-512056.html
[14] https://m.dinamalar.com/detail.php?id=3322142
[15] தினமணி, தி கேரளா ஸ்டோரி திரையிடல் நிறுத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதில், By DIN | Published On : 16th May 2023 02:50 PM | Last Updated : 16th May 2023 02:50 PM
[16] https://www.dinamani.com/india/2023/may/16/why-the-screening-of-the-kerala-story-has-been-stopped-4006736.html
அண்மைய பின்னூட்டங்கள்