அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2)

A migrant Rohingya woman from Myanmar breaks down while holding her son at Kuala Langsa in Aceh province
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள்: மே.28, 2012 அன்று மூன்று முஸ்லிம்கள் ஒரு பௌத்த பெண்மணியைக் கற்பழித்தனர். இதனால், பௌத்தர்கள் முஸ்லிம்களைத் தாக்கியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மனித உரிமைகளைக் கண்காணிக்கும் குழு, இது முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டும் முயற்சி என்று குற்றஞ்சாட்டியது[1]. சுமார் 75,000 முஸ்லிம்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர்[2]. இவ்விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது, எதற்காக கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது நோக்கத்தக்கது. ஏற்கெனவே, தாக்கப்படும் நிலையில் இருக்கும் போது, இத்தகைய பிரச்சினைகளில், சமூக குற்றங்களில் முஸ்லிம்கள் ஏன் ஈடுபட வேண்டும்? மேலும் ரோஹிங்கிய முஜாஹித்தீனின் தாக்குதல்களும் இருப்பதால், பரிமீய பௌத்தர்கள் அவர்களை “வங்காள தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர்.
மியன்மார் தனது நிலையைத் தெளிவாக கூறியுள்ளது: கப்பல்களில் காணப்படும் முஸ்ம்களைப் பற்றி பங்களாதேசம், மியன்மார், மலேசியா, தாய்லாந்து முதலிய நாடுகள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. இந்த எல்லா நாட்களும் அவர்கள் தங்கள் பிரஜைகள் அல்ல என்று மட்டும் அறிவிப்பதோடு, “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்களை தங்களது நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த வியாழக்கிழமை 21-05-2015 அன்று முறைகேடான பாதுகாப்பு இல்லாத படகில் பயணம் செய்த 200-க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அகதிகளை ஐநா குழுவினர் பார்வையிட்டு மருத்துவ உதவிகளை அளித்தனர். மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை சமூக விரோதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு கடத்தி செல்ல இருந்ததாக மியான்மர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரோஹிங்கிய சிறுபான்மையின மக்களை தங்களது நாட்டு மக்களாக மியான்மர் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்த நிலையில், ரோஹிங்கிய மக்கள் பிரச்சினையில் மியான்மர் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் தெரிவித்துள்ளார். மேலும், “அகதிகளான மக்களுக்கு ஏற்படும் பிரசின்னைகளுக்கு ஊகத்தின் அடிப்படையில் மியான்மரை காரணம் காட்டக் கூடாது. அவரகள் எங்கள் நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள கூறுவது தவறானது” என்றார்[3].
தாய்லாந்தில் இத்தகைய முஸ்லிம்கள் வந்ததால் விசாரணை[4]: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான சட்டவிரோதக் குடியேறிகளிடம் அவர்கள் ஆட்கடத்தல் நட வடிக்கைகளால் குடியேறியவர்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்[5]. தாய்லாந்து எல்லைக்குள் ஆட்கடத்தல் முகாம்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறியும் முயற்சியில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மியன்மார், பங்ளாதேஷ் நாட்டவருடையதாக இருக்கலாம் என நம்பப்படும் சுமார் 33 உடல்கள் சொங்க்லா மாவட்டத்தில் ஒரு பள்ளத்தாக்கில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது; ஆட்கடத்தல் முகாம்கள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து சட்டவிரோத ஆட்கடத்தலை முறியடிக்க அதிகாரிகளுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்திருந்தார் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சனோச்சா. மலேசியா, மியன்மார் நாடுகளுடன் முத்தரப்பு கூட்டம் ஒன்றை இதன் தொடர்பில் நேற்று முன் தினம் நடத்தினார் திரு பிரயுத். தற்போது விசாரிக்கப்படும் 199 பேரில் 74 பேர் மியன்மாரைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்லிம்கள்; 58 பேர் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டவர்கள் தாய்லாந்தின் சமுதாய மேம்பாடு, மனிதப் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்படுவர். தாமாக விரும்பி தாய்லாந்துக்குள் நுழைந்தவர்கள் குடிநுழைவுப் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர், என்று அரசு அறிவித்துள்ளது.
முரண்பட்ட செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாய்லாந்தில் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் 29-05-2015 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்து. இதில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தை தங்களது நாட்டு மக்களுக்கான பிரச்சினையாக எடுத்தக் கொள்ள வலியுறுத்த உள்ளதாக ஐ. நா. குறிப்பிட்டது[6]. மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்தர்கள் தொடுக்கும் தாக்குதல்கள் காரணமாக, பெருமளவிலான முஸ்லிம் மக்கள் மியன்மாரை விட்டு கப்பல்களில் பிற நாடுகளுக்கு தப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, கப்பல்களில் அடைக்கலம் தேடி வரும் மியன்மார் முஸ்லிம் மக்களை ஏற்க பல நாடுகள் மறுப்பதால், உண்ண உணவின்றி கப்பலிலேயே அவர்கள் பரிதாபமாக இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள், மியன்மார் இனத்தவர்கள் அல்ல என 1956 இல் இருந்தே ஒரு கருத்து அந்த நாட்டில் நிலவி வருகிறது, அந்த காலகட்டத்தில் இருந்து ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் அரங்கேறின. இன்று ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் பலவந்தமாக மியன்மாரை விட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். படகுகளில் ஏற்றி அவர்களை வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கும் செயலை அங்குள்ள பௌத்த இனவாதிகள் செய்து வருகிறார்கள்[7]. அண்மையில் இவ்வாறு படகில் தத்தளித்தவர்களுக்கு மலேசியா அடைக்கலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் ஊடகங்கள் ஒரு குழப்பத்துடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன[8]. மேலும் பங்களாதேசத்திலிருந்து வரும் அகதிகளும் இவர்களுள் சேர்ந்துள்ளது மர்மமாக உள்ளது.
“நாடற்றவர்கள்”, “கள்ளக்குடியேறிகள்”, என்றெல்லாம் சொல்லப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள்: அமெரிக்க, இந்தோனேசிய, மலேசிய அதிகாரிகள் மியன்மார் சென்றுள்ளனர். அண்மை நாட்களாக மோசமாகிவரும் கள்ளக்குடியேறிகளின் சர்ச்சை குறித்து மியன்மார் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது அந்தப் பயணத்தின் நோக்கம்[9]. இந்தோனேசியா, தாய்லந்து, மலேசியா ஆகிய மூன்றும், வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் குடிபெயர முயற்சி செய்வோர் வரும் படகுகளை அனுமதிக்கப்போவதாகக் கூறியிருந்தன. அதனைத் தொடர்ந்து மூன்று நாடுகளும் அவற்றின் அதிகாரிகளை மியன்மாருக்கு அனுப்பிவைத்துள்ளன. வாரக் கணக்காக அந்தப் படகுகள், கடலில் அங்குமிங்கும் தத்தளித்ததைத் தொடர்ந்து, கரைக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடலில் அகப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கானோருக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள மியன்மார் நெருக்கப்பட்டு வருகிறது[10]. இருப்பினும், மியன்மார் அம்மக்களின் அடையாளங்களை வைத்துதான் தீர்மானம் செய்யப்படும் என்றால், அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. பங்களாதேசம் ஒரு குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றி வருவதால், மற்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கும், அத்தகைய முறைப்பற்றி சந்தேகம் எழத்தான் செய்கிறது. இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடியில் எந்த நாடும் அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், “நாடற்றவர்கள்” என்ற நிலையில் முஸ்லிம்களை, இதனால் தான் முஸ்லிம் நாடுகளே ஏற்க தயங்குகின்றன மற்றும் மறுக்கவும் செய்கின்றன.
புதைக்குழி பற்றிய விவாதங்கள்: 25-05-2015 அன்று மலேசியாவில் கண்டெடுக்கப் பட்ட புதைக்குழிகள் பல்வேறு விசயங்களை எடுத்துக் காட்டுகிறது[11]. அது இம்மாத ஆரம்பத்தில் தாய்லாந்தில் கண்டு பிடித்தது பொன்றேயுள்ளது. ஆட்கடத்தல், சமூக விரோத செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படல், கள்ளக்கடத்தல், போட்டிக் கூட்டங்களில் நடந்த சண்டை என்று பலவாறு விவாதிக்கப்படுகின்றன[12]. பங்களதேசம் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகளை ஆல்-கடத்தல் கும்பல்கள் பலவிதங்களில் சதாய்த்து வருகின்றன[13]. தாய்லாந்து மற்றும் மலேசிய எல்லையில், இவ்வாறான புதைக்குழியில் பிணங்கள் கண்டுபிடிக்கப் பட்டது, பல்வேறுபட்ட யூகங்களை உண்டாக்கியுள்ளன. பொதுவாக, தென்கிழக்காசிய நாடுகள், எத்தகைய பிரச்சினை, தீவிரவாதம், போன்ற விசயங்களை ஏற்பதாக இல்லை. அவர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தான் என்று வாதிக்கும் நேரத்தில் தான், மியன்மார் அவர்கள் தங்கள் நாட்டவர் அல்ல என்கிறது மற்றும் மலேசியா “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடுகிறது. ஐநா போன்ற குழுக்கள் பொதுவாக மனித உரிமைகள் என்றெல்லாம் பேசினாலும், முரண்பாடுகள் அதிகம் உள்ள இப்பிரச்சினையில், அனைவருமே ஜாக்கிரதையாகத் தான் செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் வழக்கம் போல இதன் மூலம் ஆதாயம் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஊடக விளம்பரங்களுக்குக்காக ஆர்பாட்டங்கள் நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
30-05-2015
[1] http://www.hrw.org/sites/default/files/reports/burma0413webwcover_0.pdf
[2] http://www.cbc.ca/news/world/why-burma-s-rohingya-muslims-are-among-the-world-s-most-persecuted-people-1.3086261
[3] http://www.telesurtv.net/english/news/Myanmar-Denies-Rohingya-Muslims-Citizenship-Under-UN-Pressure-20150529-0018.html
[4] http://www.tamilmurasu.com.sg/story/50804
[5] http://www.telesurtv.net/english/news/Thousands-of-Rohingya-Migrants-Remain-Stranded-at-Sea-20150516-0011.html
[6]http://www.tamilantelevision.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99-20362.html
[7]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE-219430.html
[8] http://www.telesurtv.net/english/news/Malaysia-Says-800-Rohingya-Migrants-Muslims-Not-Welcome-20150514-0009.html
[9] http://www.tamilmurasu.com.sg/story/51689
[10] http://seithi.mediacorp.sg/mobilet/asia/21may-us-asia-migrants/1862354.html
[11] http://www.chicagotribune.com/news/nationworld/ct-boat-people-mass-grave-20150524-story.html
[12] http://www.dailyherald.com/article/20150525/news/305259989
[13] http://www.chicagotribune.com/news/nationworld/ct-migrants-rohingya-20150516-story.html#page=1
அண்மைய பின்னூட்டங்கள்