இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா?
முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள சினிமாக்காரர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர். இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[1].
சாதீய திரிபுவாதம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்: உண்மை அவ்வாறாக இருக்கும் போது, சில தமிழ் ஊடகங்கள், வேறுமுறையில் திரிபுவாதம் கொடுத்துள்ளது கவழத்தை ஈர்த்துள்ளது. வழக்கம் போல “இனியொரு.டாட்.காம்”, “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து[2], யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது[3]. “இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா” எனும்போது, ரஹ்மான் கூட அவ்வ்வாறு இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் போது, அவரை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே, அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், இதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.
வந்துள்ள செய்தி, வதந்தி, விளக்கம்: இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாயின[4]. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5].. மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர் அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்[6]. சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார், என்று சுருக்கமாக செய்திகளைக் கொடுத்துள்ளனர்.
இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா: பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். குடும்பமே சேர்ந்து ஒரு தொழிலை செய்வது, வியாபாரம் செய்வது என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இளையராஜா ஆன்மீகம், பக்தி என்று ஊறித்திளைக்கும் நேரத்தில் தன் மகன் இப்படி மாறுகிறார் என்றால் அது ஆன்மீக தேடலும் இல்லை, பக்தியும் இல்லை ஆனால், அதற்கு மேலாக வேறொன்றுள்ளது என்று தெரிகிறது.
1–வதுதிருமணம் (2005): இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா சினிமா இசையமைப்பாளராகிப் பிரபலமானார். பல திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர். பிரித்தானியாவில் வசித்த சுஜயா சந்திரன் என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை 2002லிருந்து காதலித்து வந்தார். சி. ஆர். வேலாயுதம் மற்றும் சரோஜினி சந்திரன் மகளான இவரை லண்டனில் 2003ல் பதிவு திருமணம் செய்து கொண்டு, மார்ச்.21, 2005ல் பெற்றோர் சம்பதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால்,ஆகஸ்ட் 2007ல் விவாகரத்து மனு போட்டு பிப்ரவரி 2008ல் விவாகரத்து பெற்றனர்[7]. யுவன்சங்கர் ராஜா, சுஜயா மனுவில் கூறியிருந்த காரணம், “தீர்த்துக் கொள்ளமுடியாத வேறுபாடுகள்” [irreconcilable differences[8]] என்று குறிப்பிட்டிருந்தனர்! பிரிந்த பிறகு, சுஜயா, வெளிநாடு போய்விட்டார்[9]. ஆக முதல் திருமணம் தோல்வி என்றாகி விட்டது. என்னத்தான் இசை அமைத்தாலும், மனைவியுடன் இயைந்து வாழ்க்கை நடத்தமுடியவில்லை என்றாகிறது.
2–வதுதிருமணம் (2011): அதன்பிறகு யுவன்சங்கர் ராஜா ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் 01-09-2011 அன்று செய்துகொண்டார். இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. முதல் திருமணம் டைவர்ஸில் முடிந்ததால், இது ரகசியமாக நடத்தப் பட்டது[10]. குடும்பத்தினர் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் [மைத்துனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மாமா கங்கை அமரன், விஷ்ணு வர்தன், அவரது மனைவி அனு, சுப்பு பஞ்சு, மிர்சி சிவா போன்றோர்] மட்டுமே கலந்து கொண்டனர்[11]. கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இரண்டுபேரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஆக, இரண்டாவது திருமணத்தையும் திருப்திகரமாக இல்லை அல்லது இரண்டாவது மனைவியை திருப்திகரமாக வைத்துக்கொள்ள முடியவில்லை, தாம்பத்தியம் ஒழுங்காக நடத்தமுடியவில்லை என்றாகிறது.
முஸ்லிமாகமாறினார்[12] (2014): இந்தநிலையில், யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறியிருக்கிறார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார். குரான் படிக்கிறார். தாடியும் வளர்த்துவருகிறார், என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. யுவன்சங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியதை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘நான் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டேன். ஆனால், மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை’’ என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், யுவன்சங்கர் ராஜா, மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது இஸ்லாத்தையும், திருமணத்தையும் அவரே இணைத்துப் பேசுவதிலிருந்து அதற்கு சம்பந்தம் உள்ளது என்றாகிறது.
ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்: தன்னுடைய தாயார் 31-10-2011 இறந்ததிலிருந்து[13] அன்று அவர் தனிமையை உணருவதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆன்மீகக் குருவை சந்தித்து இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் இஸ்லாமுக்கு சென்றது ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போல மாறவில்லை என்கிறார்கள்[14]. கடந்த ஒரு வருடமாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார். ஸ்டூடியோவில் இருந்தாலும், வேலையில் இருந்தாலும் தவறாமல் ஐந்துமுறை தொழுகை செய்து வருகிறார். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டுமா என்பதைப் பற்றொ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்பதினால் அவரது குடும்பத்தினரும் தலையிடவில்லையாம்[15]. ஏ. ஆர். ரஹ்மான் போல முஸ்லிமாக மாறவில்லை என்றால், வேறு எவர் போல முஸ்லிமாக மாற துணிந்தார் என்று அவர்தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தை இவ்வாறு உபயோகப் படுத்துகிறார்கள், இஸ்லாம் அவ்வாறு உபயோகப்படுகிறது என்றால், இஸ்லாம் அதனை ஏன் ஊக்குவிக்கிறது, அனுமதிக்கிறது, பதிவு செய்கிறது? 1995ல் சரளா முதுகல் தீர்ப்பில் உச்சநீதி மன்ற, இஸ்லாத்துக்கு மாறினால் கூட இரண்டாவது திருமணம் செல்லாது என்று குறிப்பிட்டது[16].
வேதபிரகாஷ்
© 10-02-2014
[1] http://articles.timesofindia.indiatimes.com/2009-06-21/view-from-venus/28160163_1_hindu-marriage-act-hindu-man-islam
[2] இனியொரு.டாட்.காம், http://inioru.com/?p=39133
[4] தினமணி, நான்இஸ்லாத்தைபின்பற்றுவதற்காகபெருமைப்படுகிறேன்: யுவன்சங்கர்ராஜா, பிப்ரவரி.10 2014. By Web Dinamani, சென்னை, First Published : 09 February 2014 02:58 PM IST
[6] http://www.dinamani.com/cinema/2014/02/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/article2047144.ece
[10] Yuvan has kept the marriage as a closely guarded secret since it is his second marriage. However, the event was publicized and eventually everyone came to know about it before the Yuvan’s wedding. Remember, Yuvan’s first marriage with Sujaya ended in divorce in 2008 and the promising music director now found Shilpa as his life partnerhttp://www.teluguone.com/tmdb/news/Music-Director-Yuvan-Shankar-Raja-Marriage-en-6135c1.html
[12] தினத்தந்தி, சினிமாஇசையமைப்பாளர்யுவன்சங்கர்ராஜாமுஸ்லிம்மதத்துக்குமாறினார், பதிவு செய்த நாள் : Feb 10 | 02:15 am
[14] While we tried to reach Yuvan regarding this, a source close to the music director revealed, “Yuvan was very attached to his mother and soon after she passed away, he started missing her a lot. He also met a spiritual guru, but we cannot say what exactly made him follow Islam,” and maintained that, he was definitely not inspired by fellow composer AR Rahman (who had converted to Islam) in his decision.
[15] Yuvan, the source said, has been practicing Islam for almost a year now. “He has been doing namaz five times a day all these months. He is not missing his prayers even when he is at work and ensures that he allots time for it at his studio as well,” said the source. The source added that Yuvan is now in the process of converting to Islam. “Currently, he is planning to convert to Islam and is also thinking of going for a change of name. But, he is yet to decide on these. Since it is his personal decision, his family members respect it.”
[16] In 1995, the Supreme Court ruled in the Sarla Mudgal case that under the Hindu Marriage Act 1955, a Hindu husband cannot marry a second time simply by embracing Islam without lawfully dissolving the first marriage. He would be guilty of bigamy, the Court ruled.
அண்மைய பின்னூட்டங்கள்