Posted tagged ‘ருஷ்டி’

இந்தியாவின் அரசியல் அவதூறு: முஸ்லீம் ஓட்டு வங்கி, சல்மான் ருஷ்டி தடை, காங்கிரஸின் வெட்கங்கெட்டச் செயல்

ஜனவரி 26, 2012

இந்தியாவின் அரசியல் அவதூறு: முஸ்லீம் ஓட்டு வங்கி, சல்மான் ருஷ்டி தடை, காங்கிரஸின் வெட்கங்கெட்டச் செயல்

முழுவதுமாக தடை செய்யப் பட்ட ருஷ்டி: ருஷ்டி இந்தியாவிற்கு வராதலால், வீடியோ கான்பரன்ஸ் மூலம், அவர் பேச ஏற்பாடு செய்தார்கள். பிறகு, அவர் பேசிய

புத்தகத்திற்கு, எழுத்திற்கு தடை விதித்த பிறகு, எழுத்தாளனுக்கும் தடை என்றால், முந்தைய ஆண்டுகளில், அதே எழுத்தாளன் எப்படி வந்து சென்றான்? அப்பொழுது, முஸ்லீம்களுக்கு ஏன் எதிர்ர்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை?

பேச்சையாவது போட்டுக் காண்பிக்கலாம் என்று தீர்மானித்தபோது, அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி பேசிய வீடியோ காட்சிகள், முஸ்லிம்களின் போராட்டத்தின் காரணமாக இலக்கிய விழாவில் நேற்று திரையிடப்படவில்லை[1]. இதனால், பெரும் சலசலப்பும், சர்ச்சையும் எழுந்தது. இந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான் ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதற்காக, இவர் புக்கர் விருதை பெற்றார். 1988ல், “சாத்தானின் கவிதைகள்’ என்ற புத்தகத்தை எழுதினார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இந்த நூல் அமைந்ததால், ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு பத்வா மூலம் மரண தண்டனை அறிவித்தார். இதற்கு பிறகு, ருஷ்டி பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சர்ச்சைக்குரிய இந்த புத்தகம் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

புரளி கிளப்பி விட்டு, ருஷ்டியைத் தடுத்து, பிறகு முழுவதுமாக தடுத்த ராஜஸ்தான் காங்கிரஸ்காரர்கள்: “தாருல் உலூம் தியோபந்த்’ உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் மத தலைவர்களும் ருஷ்டியின் இந்திய வருகையை

ராஜஸ்தானில், பெண்களின் கற்பு காக்கப் படவில்லை. ஒரு காங்கிரஸ் மந்திரி, ஒரு மணமான நர்ஸை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டதுடன், அவளை கொலையும் செய்துள்ளார். கொலை செய்த கொலையாளி சஹாப்புதீன் என்பவன். இந்நிலையில், உண்மைகளை மூடி மறைத்து, வெள்ளையடிக்க, காங்கிரஸ், இதை எதுத்துக் கொண்டு விளையாடியுள்ளது.

எதிர்த்தனர். “ருஷ்டி இந்தியா வந்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர்’ என, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போலீசார்எச்சரித்தனர். இதையடுத்து, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதை ருஷ்டி தவிர்த்தார். “என்னை இந்த விழாவில் கலந்து கொள்வதை தடுக்கவே, ராஜஸ்தான் போலீசார் இதுபோன்ற கதையை புனைந்துள்ளனர்’ என, ருஷ்டி தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் சாமர்த்தியமாக செயல்பட்டிருப்பதாக இலக்கிய விழாவில் பங்கேற்ற பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இந்த விழாவில், ருஷ்டியின் உரையை வீடியோவில் ஒளிபரப்ப விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

வீடியோ கான்பரன்ஸ் / காட்சிக்கு தடை: நேற்று மதியம் 3.45 மணியளவில் “மிட் நைட்ஸ் சைல்ட்’ என்ற நாவலை பற்றி ருஷ்டியின் அனுபவ உரை ஒளிபரப்ப

காங்கிரஸ் அரசே நிறுத்தி வைத்த வீடியோ கான்பரன்ஸ். வீடியோ காபரன்ஸ் வசதியையே உபயோகப்படுத்த முடியாமல் துண்டித்து விட்டதாம். தீவிரவாதிகள், பலவழிகளில், உள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை குண்டு வைத்து கொன்று வரும்போது, அப்பொழுது காட்டாத, வேகம் இப்பொழுது காட்டுவது கேவலமாக உள்ளது.

ஏற்படாகியிருந்தது. இதை தெரிந்து கொண்ட முஸ்லிம் அமைப்பினர் இலக்கிய விழா நடக்கும் பகுதியில் நுழைந்து, “ருஷ்டியின் வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது’ என, போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், ருஷ்டியின் வீடியோகாட்சியை ரத்து செய்யும்படி போலீசார் அறிவுறுத்தினர்[2]. வேறு வழியில்லாத நிலையில், விழா ஏற்பாட்டாளர்கள் இந்த வீடியோ காட்சியை ரத்து செய்தனர். அதுமட்டுமல்லாது ருஷ்டியின் வீடியோ காட்சி இணைப்பும் அரசால் துண்டிக்கப்பட்டது.

இலக்கிய விழாவை அரசியலாக்கி அசிங்கப்படுத்திய காங்கிரஸ்; இலக்கிய விழா நடக்கும் இடத்தை அளித்த ராம்பிரதாப் சிங் குறிப்பிடுகையில், “”என் இடத்தை சுற்றிலும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர். என்னுடைய சொத்து அமைந்த பகுதியில் வன்முறை ஏற்படுவதை விரும்பவில்லை; என்னுடைய குடும்பத்தினரும், குழந்தைகளும் இந்த இடத்தில் தான் உள்ளனர். எனவே, வீடியோ காட்சியை

காங்கிரஸ் இந்த அளவிற்கு அசிங்கப்படுத்தியுள்ளதால், இது ஒரு அரசியல் அவதூறு என்றே, நியூயார்க டைம்ஸ் விமர்சித்துள்ளது[3]. கருத்துரிமை, பேச்சுரிமை சுதந்திரம் என்று தீவிவாதிகள், இந்திய-விரோதிகள், துரோகிகள் முதலியோர்களுக்கு வசதி செய்து தரும் போது, ஏற்கெனவே வந்து போன ஆளைத் தடுக்க, இத்தனை ஆர்பாட்டம் நடத்துவது அசிங்கம் தான்.

அனுமதிக்க முடியாது,” என்றார். முன்னதாக திட்டமிட்டபடி வீடியோ காட்சி ஒளிபரப்பப்படும் என, விழா நிர்வாகி சஞ்சய் ராய் கூறியிருந்தார்.
வீடியோ காட்சி ரத்தானது குறித்து சஞ்சய் ராய் குறிப்பிடுகையில், “”சல்மான் ருஷ்டியின் முகத்தை திரையில் காட்டுவதை கூட நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்” என, போராட்டக்காரர்கள் எங்களிடம் கூறினர். இது துரதிருஷ்டவசமானது முட்டாள் தனமான சூழலால் மீண்டும் நாங்கள் பேச்சுரிமை சுதந்திரத்துக்கு எதிரான போராட்டத்தில் பின் தங்கியுள்ளோம். விழா திடலில் கூடியுள்ளவர்களை பாதுகாக்க, நாங்கள் போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு பணிய வேண்டியதாக விட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போராட்டக்காரர்கள், விழா நடக்கும் இடத்திலேயே தொழுகை நடத்தினர். ருஷ்டியின் வீடியோ ஒளிபரப்பினால் அதிகப்படியானபாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என, துணை கமிஷனர் வீரேந்திர ஜாலா கூறினார். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எங்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது’ என்றார்.

ஓட்டு வங்கி அரசியல் நடத்தி நாட்டைக் கெடுக்கும் காங்கிரஸ்: ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மைனாரிட்டி மக்கள் சிலர் உயிரிழந்தனர். இதையெல்லாம் மூடி மறைக்கவும், உத்தர பிரதேச தேர்தலில் முஸ்லிம்களின்

அரசே ஊக்குவித்து இப்படி முஸ்லீம்களை நடத்தி வரும் போது, முஸ்லீம்கள் மற்ற நேரங்களில், அளவிற்கு அதிகமாகவே, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும், தேர்தல் என்பதற்காகவும், இவ்வாறு, கேவலப்படுத்துவதை எப்படி சரிகட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை..

ஓட்டுகளை பெறவும், இலக்கிய திருவிழாவில் ருஷ்டியின் வீடியோ காட்சியை அரசு துண்டித்துள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் தணிக்கை முறையை திணிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இலக்கிய விழாவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரிவித்த மாநில அரசு, போராட்டக்காரர்களை விழா பந்தலுக்குள் நுழைய விட்டது எப்படி? இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல். ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் அரசு, தரம் தாழ்ந்து செயல்படுகிறது. – பிரகாஷ் ஜவேத்கார், பா.ஜ., தகவல் தொடர்பாளர். இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிபோய்விட்டது என்றும் சகிப்புத் தன்மையும் அருகி வருகிறது என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சாட்டியுள்ளார்[4].


மும்பை மாபியா தலைவன் என்னைக் கொலை செய்ய இரண்டு ஆட்களை அனுப்பியுள்ளானாம், அதனால் நான் இந்தியாவிற்கு வரவில்லை!

ஜனவரி 21, 2012

மும்பை மாபியா தலைவன் என்னைக் கொலை செய்ய இரண்டு ஆட்களை அனுப்பியுள்ளானாம், அதனால் நான் இந்தியாவிற்கு வரவில்லை!

ருஷ்டியின் வருகையும், முஸ்லீம்களின் எதிர்ப்பும்: பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டியை இந்தியாவுக்குள் விடக் கூடாது என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளதால் அவர் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவுக்கு சத்தமில்லாமல் வந்து செல்லவிருக்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் ஊதி பார்த்தன. பிரபல பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளரான சல்மான ருஷ்டி வரும் 20 முதல் 24ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று செய்து வந்ததும், முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ருஷ்டியின் விசாவை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய மத அமைப்பான “தாரூல் உலூம் தியோபான்ட்” பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் அனுப்பியது. பிரமரும், சோனியாவும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாருல் உலூம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அதன் தலைவர் மௌலானா முப்தி அபுல் காசிம் நொமானி தெரிவித்துள்ளார்[1]. மேலும் சல்மான்ருஷ்டி மீது செருப்பு வீசினால் ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும் என்று மும்பையில் உள்ள இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது (தலைக்கே சன்மானம் அறிவித்துள்ளபோது செருப்பு வீசுவதற்கு என்ன பணம் கொடுப்பது?). ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அறிவித்தவாறு ருஷ்டி இலக்கிய விழாவில் கலந்து கொள்வார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பலதடவை வந்து சென்றுள்ளபோது, இப்பொழுது ஏன் ஆர்பாட்டம்? கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த ருஷ்டியின் “சேட்டனிக் வெர்சஸ்” (சாத்தானின் வேத வாக்கியங்கள்) என்ற நூல் மூலம் முஸ்லிம்களின் மத உணர்வை அவமதித்ததற்காக அவருக்கு எதிராக பத்வா கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு அவர் பலத்த பாதுகாப்புடன் இந்தியாவுக்கு வந்து சென்றார். கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி அவர் ஜெயப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் வழக்கமாக உள்ளபோது, இந்தாண்டு ஏன், அதனை பிரச்சினையாக்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை. தெரியாமல் என்ன, உபியில் தேர்தல் நடக்கிறதே, எத்தனை தொகுதிகளில் 30% மேலாக முஸ்லீம்கள் உள்ளனர், பிறகு ஓட்டு பெரிதா, இலக்கியம் பெரிதா?

ஓட்டுவங்கி அரசியல் செய்யும் சோனியா-காங்கிரஸ்: உத்தர பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களை மனதில் வைத்து அரசியல் கட்சிகள் ருஷ்டி விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ராஷீத் மசூத் கூறுகையில், “முஸ்லிம்கள் ருஷ்டியை மன்னிக்கக் கூடாது. உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கும்போது அவரது வருகை பிரச்சனையைக் கிளப்பும். அதனால் ஜெய்ப்பூர் விழாவை ரத்து செய்ய வேண்டும்”, என்றார். பயந்து போன, பாஜக துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், “தேர்தல் நேரத்தில் ருஷ்டி வருவது சரியல்ல. அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விசா வழங்குவது உகந்ததன்று“, என்று பாட்டு பாடியுள்ளார். ருஷ்டி வருகையை தடை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகமது ஹசன் தெரிவித்துள்ளார் அவர் வருவதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து தெரிவித்துள்ளார்.  அதெப்படி சொல்லிவைத்தால் போல மற்ற கட்சிகளில் மட்டும், முஸ்லீம்கள்தாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், ஆனால், காங்கிரஸில் அமைச்சர்களே வந்து விடுகிறார்கள்!

தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினரால் ஆபத்தாம் – கூறுவது உள்துறை-சிதம்பரம்: இந்நிலையில் சல்மான் ருஷ்டி உயிருக்கு சிமி இயக்கத்தை சேர்ந்தவர்களால் திடீர் ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது[2]. ஆஹா, சிதம்பரம் தான் என்னமாய் வேலை செய்கிறார்? சிமி இயக்க தலைவர்களின் நடவடிக்கையை கண்காணித்த பிறகே இந்த உத்தரவை உள்துறை வெளியிட்டுள்ளது[3]. அதாவது, அந்த அளவிற்கு, அவாது திறமை உள்ளது. தடை செய்த பிறகும், அவர்கள் வேலை செய்வார்களாம், சிதம்பரம் பார்த்துக் கொண்டே இருப்பாராம்! மேலும் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை அம்மாநில மக்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் அங்கு பெண்களை கற்பழித்துக் கொண்டிருப்பதையும், கற்பழித்துக் கொலை செய்து கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருப்பார்களாம்!

கெலாட்டின் கலாட்டா, சிதம்பரத்தின் சில்மிஷம்: சிதம்பரத்தைச் சந்தித்த பிறகு கெஹ்லாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருகிறாரா, இல்லையா என்ற அதிகாரப்பூர்வமான தகவல்கள் என்னிடம் இல்லை. ஆனால் அவர் வருவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. இலக்கிய விழா ஏற்பாட்டாளர்களுடன் எனது தலைமைச் செயலாளர் தொடர்பில் உள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை எந்த மாநில அரசும் விரும்பாது. எனவே, இது குறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளேன்”, என்றார்[4]. சல்மான் ருஷ்டி இந்தியா வருவது தொடர்பாக குழப்பம் நீடிக்கிறது[5]. இந்நிலையில் சல்மான் ருஷ்டி இலக்கிய விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பிற நிகழ்ச்சிகளில் மட்டும் சத்தமில்லாமல் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது[6].  சல்மான் ருஷ்டி 20.1.2012 அன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்க உள்ள இலக்கிய விழாவுக்கு வருகை தர உள்ளதால் அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து சல்மான் ருஷ்டி தங்கம் இடம் மற்றும் பயண விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சல்மான் ருஷ்டி ஜெயப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளவில்லை.

ருஷ்டி வரவில்லையாம்! இஸ்லாம் அடிப்படைவாதிகளால் ஆபத்து என்றால், இந்திய அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்றுதான் மற்றவர்கள் நினைத்துக் கொள்வர்கள், கேட்கவும் செய்வார்கள். இந்தியாவில் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

“Very sad not to be at jaipur. I was told bombay mafia don issued weapons to 2 hitmen to “eliminate” me. Will do video link instead. Damn”[7].

இதற்கிடையே ருஷ்டி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,இந்திய வருகையையொட்டி நான் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தேன். இதன் மூலம் மாநில நிர்வாகத்துக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படக்கூடாது என்பதால், அமைதியாக இருந்தேன்[8]. ஜெயப்பூருக்கு வர முடியாதது மிகவும் வருத்தமாக உள்ளது. மும்பை மாபியா டான் 2 அடியாட்களிடம் ஆயுதங்கள் கொடுத்து நான் இந்தியா வந்தால் என்னைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளாராம்[9]. அதனால் நான் விழாவுக்கு வரவில்லை என்னுடைய வருகையால் சக எழுத்தாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், இந்தவிழாவில் கலந்து கொள்வதை ரத்து செய்துள்ளேன்”, என்று தெரிவித்துள்ளார்[10].

ஜிலானியும், ருஷ்டியும் – இஸ்லாம் அடிப்படைவாதம் வேலை செய்யும் விதம்: இந்திய-விரோதிகள் தலைநகரில் மாநாடு நடத்த அனுமதி தருகிறார்கள், பாதுகாப்புத் தருகிறார்கள். அருந்ததி ராய் போன்ற தேசவிரோதிகளும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை கைது செய்கிறார்கள். பிறகு, ருஷ்டி விஷயத்தில் மட்டும் ஏன் வேறுவிதமாக நடந்து கொள்ள வேண்டும்? இது செக்யூலரிஸாமா? மதவாதமா, பிறகு யாரை அப்படி வளர்த்து வருகிறார்கள்? முஸ்லீம் அமைப்புகள் ஏன் ஜிலானியை எதிர்க்கவில்லை? ருஷ்டியும் முஸ்லீம், ஜிலானியும் முஸ்லீம் என்றால், இந்தியர்களாக இருக்கும் நிலையில், முஸ்லீம்கள், இருவரையும் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், ருஷ்டியை கொலையும் செய்வோம், ஆனால், ஜிலானி விஷயத்தில் வாயை மூடிக் கொண்டிருப்போம் என்றால், அது என்ன “யிஸம்”?

வேதபிரகாஷ்

21-01-2012