அல்லாவை மகிழ்விக்கவே பலி கொடுத்தேன் – ரம்ஜான் போது, நான்கு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்த 26 வயது தந்தை!
செக்யூலரிஸ இந்தியாவில், மதபண்டிகைக்களுக்கு விடுமுறைகளும், அரசியலும்: முன்பெல்லாம், இந்தியர்களுக்கு, முகமதிய மற்றும் கிருத்துவப் பண்டிகைகளைப் பற்றியெல்லாம் அதிகமாக தெரியாது. ஏதோ விடுமுறைக் கொடுக்கிறார்கள், வீட்டில், விடுமுறையை அமைதியாக, சுகமாகக் கழிக்கலாம் என்று இருப்பர். பிறகு தான் அவர்களுக்கு, கொண்டாட்டம் மற்றும் துக்கம் அனுஷ்டிக்கும் நாட்கள் பற்றி தெரிய வந்தது. முன்பெல்லாம் சிலர், “குட் பிரைடே”விற்கு வாழ்த்து சொல்வார்கள், கிருத்துவர்களும் “தேங்க் யூ” என்பார்கள். ஆனால், பிறகு தான் தெரிந்தது, “குட் பிரைடே,” “நல்ல வெள்ளி” அல்ல, ஆனால், கெட்ட வெள்ளி, அதாவது, அன்று தான், ஏசு சிலுவையில் அறைப்பட்டு, இறந்த நாள்.. பிறகு, அது வேறுவிதமாகியது. இப்பொழுது 12% முகமதிய மற்றும் 2% கிருத்துவப் பண்டிகைகள், மற்ற 88% / 86% மக்கள் மீது திணிக்கப்பட்டுகின்றன. விளம்பரங்கள் வேறு, தொந்தரவு கொடுக்கும் முறையில் உள்ளன. ரம்ஜானுக்காக, காஷ்மீரத்தில் “சண்டை நிறுத்தம்” அறிவித்தாலும், ஜிஜாதிகள் சுட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் ரம்ஜான் கொண்டாடவில்லை போலும். அதாவது, இது அரசியலாகத்தான் இருக்கிறது அதேபோலத்தான், ஒரு தந்தை, தனது நான்கு வயது குழந்தையை, அல்லாவுக்கு பலி கொடுத்தான் என்ற செய்தி வந்துள்ளது.
காணாமல் போன நான்ஹ்கு வயது குழந்தை கழுத்தறுப் பட்டு இறந்து கிடந்தது: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் நவாப் அலி. இவருக்கு மனைவி ஷபானா, மகள்கள் ரிஸ்வானா (4) உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்[1]. வியாழக்கிழமை 07-06-2018 அன்று எல்லோரும் தூங்கினர். 08-06-2018, வெள்ளிக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, ரிஸ்வானாவைக் காணவில்லை. இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை வேளையில் குழந்தையை காணவில்லை என அலியின் மனைவி ஷபானா தேடியுள்ளார், இன்னொரு இணைதள செய்தி [புதியதலைமுறை] கூறுகிறது. அப்போது தனது மகள் வேறொரு அறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தேடிபார்த்த போது, வீட்டின் தரை தளத்தில் கழுத்தறுப்பட்ட நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள்[2]. சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என்று அலி குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார் என்று கூறியதாக குறிப்பிடுகிறது[3]. சந்தேகப் பட்டதால், போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தந்தை நவாப் அலியை மீது சந்தேகம் எழ, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நரபலி கொடுத்த முகமதியன், தன்னை சாத்தான் / பேய் பிடித்துக் கொண்டது என்றது: குரேஷி சாத்தான் / பேய் தன்னுடலில் புகுந்து கொண்டது என்றான்[4]. இந்தியா டுடே குறிப்பிடுவதாவது[5], “சாத்தான் தான் என்னுடல் புகுந்து அவ்வாறு செய்ய வைத்துள்ளது. இதனை நம்புவதனால், அவன் செய்யவில்லை, சாத்ட்தான் செய்தது என்று சொல்வது போலுள்ளது…….”. மேலும், இது பக்ரீதின் போது, ஆட்டை பலி கொடுப்பது போலுள்ளது, ஆனால், இவனோ தனது மகளையே பலி கொடுத்துள்ளான்.[6] “நான் ஒரு நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம். என்னுடைய வாழ்வில், நான் என் மகளை உயிரைவிட மேலாக பிரியம் கொண்டிருந்தேன். இஸ்லாத்தில், தனக்குப் பிரியமானதை அல்லாவுக்குக் கொடுக்க வேண்டும் என்றுள்ளது. அதன்படியே, நான் செய்தேன். பலநாட்கள் பாட்டியின் வீட்டில் இருந்து வியாழக்கிழமை தான் வந்தாள். அவளை சந்தைக்குக்கூட்டிச் சென்று, அவளுக்கு இனிப்புகள், பழங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். பிறகு, கீழே கூட்டிச் சென்று, கலிமா சொல்லி, அவளது கழுத்தை அறுத்துக் கொன்றேன். மாடிக்கு வந்து படுத்துத் தூங்கினேன்,” என்று போலீஸாரிடன் சொன்னான்[7]. வெள்ளிக்கிழமை, 08-06-2018 அன்று போஸ்ட்மார்டம் செய்யப்பட்டுபுதைக்கப் பட்டாள்:[8] இது “பிடிஐ” செய்தியானதால், ஆங்கிலத்தில் ஒர்ரே மாதிரியாக செய்த் வெளியிடப்பட்டது[9].
அல்லாவைத் திருப்தி படுத்தவே பலி கொடுத்ததை ஒப்புக் கொண்ட நம்பிக்கையான தந்தை: முதலில், சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என்று அலி குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். பிறகு முன்னுக்கு முறணாக பேசியதால், மனோதத்துவ முறையிலும், விசாரணை செய்துள்ளனர். விசாரணை நடைபெறும் வரை ஏதும் தெரியாதவராக இருந்த குரேஷி, சற்று அழுத்தமாக கேட்டதும் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்[10]. தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும், கடவுளிடம் சொல்லி என்னை காப்பாற்றுங்கள் என்றும் கூறியுள்ளார்[11]. முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் குரேஷியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், தன் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கடவுள்தான் எனக்கு பிடித்தமான ஒன்றை பலியிட வேண்டும், அப்போதுதான் நன்மை செய்வேன் என்று கூறினாராம்… அதனால், கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவே தன் மகளின் கழுத்தை அறுத்து கொன்று பலியிட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து குரேஷியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.
ரிஸ்வானா பலி பிறகு தமிழ் ஊடகங்கள் இவ்வாறு குறிப்பிட்டன: ரம்ஜான் மாதத்தில் அல்லாஹுவின் ஆசி தனக்கு கூடுதலாக கிடைக்க வேண்டும் என பிரார்தனை செய்து தனது நான்கு வயது குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்துள்ளார் நவாப் அலி[12]. சம்பவ தினத்தன்று இரவு தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை ரிஸ்வானாவை அவரது தந்தை அலி தூக்கிக் கொண்டுசென்று வேறொரு அறையில் வைத்து பிரார்த்தனை செய்துள்ளார். இதையடுத்து, கூர்மையான கத்தி கொண்டு தனது குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்துள்ளார். குழந்தை உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் அலி தனது மனைவியுடன் சென்று உறங்கியுள்ளார். விசாரணையில், தனது குழந்தையை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அல்லாவின் ஆசி பெறுவதற்காக தன்னுடைய சொந்த மகளை கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் ஜோத்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 2016ல் இதேபோல, ஒரு பெண் நான்கு வயது குழந்தையைக் கொன்று, “அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் ,” என்று நீதிமன்றத்தில் சொன்னது ஞாபகத்தில் வருகிறது..
2016ல் இதேபோல, நான்கு வயது குழந்தை பலியிட்டது: நான்கு வயது குழந்தையை அல்லாஹ் கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாக மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையுடன் நடமாடிய ஆயா தெரிவித்துள்ளார்[13]. உஸ்பெகிஸ்தானை சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா (39) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து தலையை கத்தியால் துண்டாக வெட்டி அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றார். மெட்ரோ நிலையத்தில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் நின்று கொண்டு நான் ஒரு தீவிரவாதி என்று அவர் கத்தினார். இது குறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குழந்தையை கொலை செய்தீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றார்[14]. முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் சிரித்துக் கொண்டே கூறுகையில், அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் என்றார். போபோகுலோவா தனக்கு மனநல பாதிப்பு இருப்பதை மறைத்து அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
© வேதபிரகாஷ்
12-06-2018
[1] ஈநாடு.தமிழ், அல்லாவின் ஆசிவேண்டி 4 வயது மகளை பலி கொடுத்த தந்தை கைது, Published 10-Jun-2018 15:32 IST
[2] புதியதலைமுறை, கடவுளை மகிழ்விக்க குழந்தையை கொன்ற தந்தை!, puthiyathalaimurai.com ராம் பிரசாத், Published : 10 Jun, 2018 01:24 pm
[3] http://www.puthiyathalaimurai.com/news/india/46666-rajasthan-man-arrested-for-sacrificing-daughter.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner
[4] Siasat.com, Jodhpur: Father sacrifice 4-year-old daughter to ‘appease Allah during Ramzan’, arrested, June 10, 2018, 11:21 AM IST.
[5] India Today, Man slits 4-year-old daughter’s throat as sacrifice to Allah, Rohit Parihar, Jaipur, June 10, 2018UPDATED: June 10, 2018 03:59 IST
[6] https://www.indiatoday.in/crime/story/jodhpur-rajasthan-father-slits-daughter-throat-ramzan-human-sacrifice-1256365-2018-06-10
[7] https://www.siasat.com/news/jodhpur-father-sacrifice-4-year-old-daughter-appease-allah-during-ramzan-arrested-1367122/
[8] NDTV, Rajasthan Man Allegedly Kills Daughter To “Appease Allah”, Goes Off To Sleep, All India | Press Trust of India | Updated: June 10, 2018 10:34 IST.
[9] https://www.ndtv.com/india-news/rajasthan-man-arrested-for-sacrificing-daughter-for-ramzan-police-1865056
[10] நியூஸ்.டிஎம், கடவுளுக்காக மகளை பலியிட்டேன்– கொடூர தந்தையின் பகீர் வாக்குமூலம், Ishwarya | Last Modified : 11 Jun, 2018 04:42 pm
[11] http://www.newstm.in/news/national/38823-rajasthan-jodhpur-man-killed-4-year-old-daughter.html
[12] http://tamil.eenaduindia.com/Crime/CrimeNational/2018/06/10153211/man-arrested-for-sacrificing-daughter-to-appease-allah.vpf
[13] தமிழ்.ஒன்.இந்தியா, ரஷ்ய குழந்தையை அல்லாஹ் கொலை செய்ய உத்தரவிட்டார்: ஆயா பேட்டி, Posted By: Siva Published: Thursday, March 3, 2016, 14:47 IST.
[14] https://tamil.oneindia.com/news/international/allah-ordered-kill-the-child-says-babysitter-248198.html
அண்மைய பின்னூட்டங்கள்