Posted tagged ‘ராஸா அகடெமி’

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

செப்ரெம்பர் 13, 2015

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

Mohammed messenger of God - A R RAhman fatwa

Mohammed messenger of God – A R RAhman fatwa

முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்[1]. ஆஸ்கார் விருது பெற்ற, ஸ்லம்-டாக் மில்லியனர் படம் இசைப்புகழ் ரஹ்மானுக்கு பத்வா போடப்பட்டுள்ளது என்று “ஹாலிவு ரிப்போர்டர்” தலைப்பிட்டு அறிவித்துள்ளது[2]. 1989ல் முஸ்லிமாக மாறிய இவர், தனது பெயரான திலிப் குமார் என்பதனை மாற்றிக் கொண்டார்[3]. அதிலிருந்து, இவர் பழுத்த முஸ்லிமாக நாகூருக்குச் செல்வது, மொட்டை அடித்துக் கொள்வது, சூபித்துவத்தில் ஈடுபடுத்திக் கொள்வது, சூப்பாடல்களை சினிமா பாடல்களில் சேர்ப்பது என்று பரிசோதனை செய்து வந்தார். சினிமா பாடல்களில் கூட இஸ்லாமிய ராகங்கள், இசைக்கருவிகள், கவ்வாலிகள் போன்ற மெட்டுகள் முதலியவற்றைக் காணலாம். இருப்பினும், இப்பொழுது பத்வாவிக்கு உட்பட்டிருக்கிறார்.

A R Rhman and Majid Majith

A R Rhman and Majid Majith

மஜித் மஜீதும், ரஹ்மானும், இறைத்தூதர் மொஹம்மது திரைப்படமும்: ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை மஜித் மஜிதி தன் பக்கம் ஈர்த்தார். உலகப்பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதேபோல் ‘த கலர் ஆப் பாரடைஸ்’, ‘த சாங் ஆப் ஸ்பாரோ’ போன்ற அன்பைப் பற்றி பேசும் தரமான திரைப்படங்களை இவர் அளித்துள்ளார்[4]. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ [ ‘Muhammad: Messenger of God’] என்ற ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்[5].

Muhammad_-_The_Messenger_of_God_poster

Muhammad_-_The_Messenger_of_God_poster

இறைத்தூதர் மொஹம்மது திரைப்படத்திற்கு எதிப்புத் தெரிவிக்கும் முஸ்லிம்கள்: ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப்பற்றி மக்கள் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, இந்த படத்தை திரையிட கூடாது எனவும் மும்பையில் உள்ள சன்னி பிரிவினர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்[6].  மஹாராச்ட்ரா முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் போன்றோரை சந்திப்போம் என்றும் கூறியுள்ளனர். தங்களது எதிர்ப்பையடுத்து, இந்த படத்தை வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குனர் கைவிடாததால், இயக்குனர் மஜித் மஜிதி, மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ராஸா அகாடமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி [Saeed Noorie, chief of Raza Academy] தெரிவித்துள்ளார்[7]. இந்த ராஸா அகடெமி ஏற்கெனவே பல சர்ச்சைகளில், கலவரங்களில் ஈடுபட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மொஹம்மது இறைத்தூதர் - சினிமா

மொஹம்மது இறைத்தூதர் – சினிமா

மும்பை முதி பத்வா போட்டது ஏன்?: இது தொடர்பாக ரஸாக் அகாடமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[8]:  “மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத்மெஸஞ்சர் ஆப் காட் படம்  இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. தன்னைப்பற்றிய எந்த உருவத்தையும் எவ்விதத்திலும் உருவாக்கக் கூடாது என்று மொஹம்மது நபி கூறியுள்ளார்[9]. இந்நிலையில் இஸ்லாம் மத கோட் பாட்டுக்கு எதிராக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது. இந்த படத்தில் தொழில்முறை முஸ்லிம் கலைஞர்களும், முஸ்லிம்-அல்லாத பிற மதக்கலைஞர்களும் (காபிர்களும்) பணியாற்றியுள்ளனர்[10]. இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு படத்தில் பணியாற்றியதன் மூலம் மஜித் மஜிதியும், ஏ.ஆர்.ரகுமானும் தெரிந்தே இஸ்லாத்தின் சட்டங்களை மீறி இருக்கிறார்கள்[11]. இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மஜித் மஜிதி மற்றும் .ஆர்.ரஹ்மானுக்குபத்வாவிதிக்கப்படுகிறது”, இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது[12].

Mohammed messenger of God - An Iranian film

Mohammed messenger of God – An Iranian film

பிராயசித்தம் செய்ய வேண்டியது என்ன?: மொஹம்மது அக்தர், மும்பை முப்தி அந்த பத்வாவை அறிவித்துள்ளார்[13]. அப்படத்தில் நடித்த, வேலை பார்த்த முஸ்லிம்கள், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. மஜீதி மற்றும் ரஹ்மான் இருவரும், அவர்களது கருத்துகளைக் கேட்க முற்பட்டபோது, இருவரையும் காணவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது[14]. அதாவது காபிர்களுடன், மோமின்கள் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இருக்கும் நிலையில், முஸ்லிம்களான இவர்கள், காபிர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர். “இறைவனின் தூதர்” என்ற பெயரை வைத்து, அதில் காபிர்களையும் நடிக்க வைத்துள்ளனர். இதனால், அவர்களை காபிருத்துவம் ஒட்டிக்கொண்டுள்ளது. அதனால், அவர்கள் காபிர்களாகவும் மாறி விட்டனர். அதனால், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்வதின் மூலம் மோமின் நிலையை அடையலாம் என்று, தனக்கேயுரிய பாணியில் முப்தி கூறியுள்ளார். இனமவர்கள் பிராயசித்தம் செய்து மறுபடியும் முஸ்லீம்களாக மாறுவார்களா அல்லது அப்படியே இருப்பார்களா என்று பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-09-2015

[1] पैगंबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे महंगी फिल्म में संगीत देने वाले भारत के सबसे बड़े संगीताकार को मुस्लिम समुदाय ने फतवा जारी कर दिया है। मुंबई के सुन्नी मुस्लिम समुदाय की राजा एकेडमी ने इरानी फिल्मकार माजिद मजीदी और संगीतकार भारतीय संगीतकार एआर रहमान को फतवा जारी कर पैंगबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे बड़ी फिल्म पर कड़ा विरोध जताया है।

http://www.amarujala.com/photo-gallery/multiplex/entertainment-photo-gallery/fatwa-against-a-r-rahman-for-film-on-prophet/

[2] http://www.hollywoodreporter.com/news/fatwa-issued-slumdog-millionaire-composer-822668

[3] Rahman, 48, is one of India’s most successful composers, whose multiple awards include an Oscar and Grammy for his work onDanny Boyle‘s Slumdog Millionaire. He worked again with Boyle on the 2010 release 127 Hours. Rahman officially converted to Islam in 1989, replacing his Hindu birth name Dileep Kumar.

[4] தினமணி, .ஆர்.ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்புஃபத்வாஅறிவிப்பு!, By எழில்

First Published : 12 September 2015 05:17 PM IST.

[5] http://www.maalaimalar.com/2015/09/12130105/Fatwa-issued-against-AR-Rahman.html

[6]http://www.dinamani.com/cinema/2015/09/12/%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/article3024497.ece

[7] மாலைமலர், ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்த .ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 12, 1:01 PM IST.

[8] தினகரன், முகமது நபிகள் பற்றிய ஈரான் படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மானுக்கு பத்வா: மும்பையை சேர்ந்த சன்னி அமைப்பு அறிவிப்பு, செப்டம்பர்.13, 2015, 03.22.14, ஞாயிற்றுக்கிழமை.

[9] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/fatwa-against-a-r-rahman-majid-majidi-for-film-on-prophet/

[10] http://www.dailythanthi.com/News/CinemaNews/2015/09/12142522/Fatwa-against-AR-Rahman-Majid-Majidi-for-film-on-Prophet.vpf

[11] தினத்தந்தி, .ஆர்.ரகுமான்ஈரான் இயக்குனருக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம், மாற்றம் செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST; பதிவு செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=166848

[13] Saeed Noorie, chief of Raza Academy, which initiated the fatwa that was issued by Muhammad Akhtar – the chief mufti of Mumbai.

http://www.thehindu.com/news/national/fatwa-against-ar-rahman-for-film-on-prophet/article7642275.ece

[14] In the fatwa, they cite as the reason the Prophet’s word that no visual or picture of him be created or kept. The fatwa claims the film makes a mockery of Islam, and professional actors, including some non-Muslims, have been cast in the key roles.The fatwa adds that the Muslims working on the film, especially Majidi and Rahman, have thus committed sacrilege and will have to read the kalma again and also solemnise their marriage again. Despite repeated attempts, Rahman remained unavailable for comment.

ராஸா அகடெமியின் தேசிய விரோதச் செயல்கள்!

ஓகஸ்ட் 14, 2012

ராஸா அகடெமியின் தேசிய விரோதச் செயல்கள்!

எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தே, ராஸா அகடெமி இந்த எதிர்ப்பு-போராட்டம் நடத்தியதோடல்லாமல், மற்றொரு கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதற்கு முன்பாகவே தங்களுக்கும், கடலவரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வேறு வெளியிட்டிருக்கிறது.

ராஸா அகெடமியின் மற்ற தேசிய விரோத செயல்கள் என்று கீழ்கண்டவை எடுத்துக் காட்டப்படுகின்றன:

  • Raza Academy’s president Yusuf Raza was involved in provoking the Muslims during 2007 riot in Bhivandi and killing 2 policemen by setting them on fire. He was arrested also in the incident.
  • Raza Academy issued a Fatwa to kill Mr. Charles Moor, journalist of London-based renowned daily ‘Telegraph’ under the charge that he insulted Prophet Mohammad. The press statement is available at the Academy’s website.
  • In January 2012, Mr. Salman Rushdie was to attend a book exhibition in Jaipur, Rajasthan. To oppose him, the Academy declared that ‘he who will slap him with a shoe will be given a reward of Rs.1 lakh’.

 

ராஸா அகடெமி சார்பில் நடத்தப் பட்ட முஸ்லீம் ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீவைப்பில் முடிந்து இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்!

ஓகஸ்ட் 11, 2012

ராஸா அகடெமி சார்பில் நடத்தப் பட்ட முஸ்லீம் ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீவைப்பில் முடிந்து இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்!

ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால்  மும்பையில் ஆஜாத் மைதானத்தில் நடத்தப் பட்ட ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்[1]. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன.

மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர். ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக் காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.

ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு  CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[2].

3 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[3].

கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர். அவர்களின் அடையாளம் தெரியவில்லை. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[4]. 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[5].  இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[6].

[புகைப்படங்கள் மற்ற இணைத்தளங்களினின்று எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளன – நன்றி]

© வேதபிரகாஷ்

11-08-2012


[6] Meanwhile, Raza Academy distanced itself from the violence. “While we were protesting at the ground, some people got aggressive and started behaving violently,” Mohammed Saeed, General Secretary of the academy, said. “We never encourage violence and strongly condemn such acts,” he added.

http://www.indianexpress.com/news/16-injured-as-antiassam-riot-protest-turns-ugly-in-mumbai/987080/2