ரம்ஜான் கஞ்சியும், செக்யூலரிஸமும், பச்சரிசியும்-ரேசன் அரிசியும், இப்தர் பார்ட்டிகளும்-சமூக விலகலும்- எல்லாமே கொரோனா விளையாட்டு தான்!
2020 ரம்ஜான் மாறுபட்டதாக இருக்கிறது: கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் மே3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது[1]. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க, அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது[2] என்று நியூஸ்.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், ரம்ஜானுக்கு இலவசமாகத்தான் அரசு அர்சி டன் டன்னாக கொடுத்து வருகிறது.. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது[3]. இதில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்[4]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், “5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும்,” என்றார். இவை வரும் 19ஆம் தேதிக்குள் [இஸ்லாமிய] தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என்றும், இதனை இயலாதவர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்[5]. மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்[6].
அரசு தலைமை காஜியை வைத்து விவகாரத்தை முடிக்க ஆலோசனை கூட்டம் நடதியது: இதனிடையே இது போன்ற விவகாரங்கள் முடிவெடுக்கும் போது இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளின் தலைவர்களை அழைத்து தான் தலைமைச் செயலாளர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்[7]. ஆனால் இன்று தமிழ்நாடு அரசு தலைமை காஜியை அழைத்து அவருடன் மட்டும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது[8] என்கிறது இன்னொரு ஊடகம். ஏனெனில், துலுக்க இயக்கத்தினர், இதுவரை, “கொரோனா பிரச்சினை” வரும் வரை, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் கஞ்சி காய்ச்சுவது மசூதியிலா, விட்டிலா என்பதை எல்லாம் தீர்மானிப்பது, துலுக்கரின் வேலையே தவிர அரசின் வேலை கிடையாது. ஆனால், இம்முறை கரோனா அச்சுருத்தல், அனைவரையும் பீடித்துள்ளது. தப்லிக் விவகாரத்தினால், துலுக்கர் பலர், தொற்றினால் பீடித்துள்ளனர். அதனால், குடும்பங்கள், வீதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், யார் கஞ்சி காய்ச்சுவது, யாருக்குக் கொடுப்பது, குடித்தால் என்னாகும் போன்ற கேள்விகள் எழுந்து அச்சுருத்தத் தொடங்கி விட்டன. இது அவரளுக்குள்ளேயே பிரச்சினையாகி உள்ளது.
ரேசனில் மோசமான அரிசி, ரம்ஜான் கஞ்சிக்கு பச்சரசி: ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும்[9]. ரேசனில் மோசமான அரிசி விநியோகித்தது இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சக்கூடாது என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்[10]. இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்ரல் 25 அன்று தொடங்க உள்ளது[11]. ஆனால், கொரோனா பீதி காரணமாகப் பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், துலுக்கர் ஒன்றாக வந்து, கஞ்சி காய்ச்சி உண்ணும் நிலையில், கரோனா விதிமுறைகள் பின்பற்ற முடியாமல் போகும். அதனால், பிரச்சினை ஏற்படும். அதனால், ரமலான் நோன்பு வருவதை ஒட்டி நோன்புக் கஞ்சி காய்ச்ச தமிழக அரசு அரிசியை வழங்குவது, ரமலான் நோன்பை எதிர்கொள்வது, தொழுகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இஸ்லாமியத் தலைவர்கள், தலைமை காஜி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம்: பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம். இதை இந்த ஆண்டு கரோனா தொற்று, ஊரடங்கு உத்தரவினைக் கருத்தில் கொண்டு அரிசியை எப்படி வழங்குவது பள்ளிவாசல்கள் எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இஸ்லாமியத் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினோம். இன்றும் இஸ்லாமிய சமயத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஆலோசனை செய்து அதன்படி சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நோன்புக் கஞ்சி காய்ச்ச பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் அரிசி 19-ம் தேதிக்குள் நேரடியாக வழங்கப்படும். அதை சிறு, சிறு பைகளாக பிரித்து தன்னார்வலர்கள் மூலம் அந்தக் குடும்பங்கள் இருக்கும் வீடுகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது.
கஞ்சியாக கொடுப்போம் என்று அடம் பிடித்த துலுக்கர்: செயலர் தொடர்ந்தார், “இதைக் கஞ்சியாக தயாரித்து வழங்கி விடுகிறோமே என இஸ்லாமியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கஞ்சி தயாரித்து வழங்குவது என்பது தினந்தோறும் கஞ்சியைத் தயாரித்து அதைத் தன்னார்வலர்கள் வீடு நோக்கிச் சென்று கொடுப்பது. அப்படிச் செய்தால் பாத்திரங்கள் பயன்பாடு காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாது. நோய்த்தொற்று வரக் காரணமாக அமையும். ஆகவே அது கூடாது என முடிவெடுக்கப்பட்டது[13]. ஆகவே 5,450 டன் பச்சரிசி வழக்கம்போல் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். அதை 22-ம் தேதிக்குள் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் கொண்டு சேர்த்து விடுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட, குவாரண்டைன் பகுதிகளில் என்ன வழிவகைகளைப் பின்பற்றி அளிக்கப்படுகிறதோ அதை அப்படியே பின்பற்றி தன்னார்வலர்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கொண்டு சேர்ப்பார்கள்[14]. சிறப்புத்தொழுகை பற்றி முடிவெடுக்க வேண்டியது அவர்கள் மதம் சார்ந்த பிரச்சினை. அதை அவர்கள் மதம் சார்ந்த தலைவர்கள் அறிவிப்பார்கள். ஏற்கெனவே வீடுகளில் தொழுகை என முடிவெடுத்து விட்டார்கள். அதனால் பிரச்சினை இல்லை,” இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பேட்டி அளித்தார்.
ஈரோட்டில் தனித்தனியாக கஞ்சி: ஈரோடு மாவட்ட, அரசு ஹாஜி முகம்மது கிபாயதுல்லா, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்[15]. அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அரசால் வழங்கப்படும் அரிசி, எங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே, தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை, நாங்களே ஜமாஅத் மூலமாக வீடுகளுக்கு வினியோகம் செய்து விடுகிறோம். அல்லது நாங்களே, நோன்பு கஞ்சி தயாரித்து வீடுகளுக்கு அனுப்பி, மக்கள் மசூதிகளுக்கு வருவதை தவிர்த்து விடுகிறோம். எனவே, ரம்ஜான் நோன்புக்காக வழங்கும் அரிசியை எங்களுக்கு வழங்க வேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் கோரியுள்ளார்[16]. ஈரோட்டில், கொரோனா பிரச்சினை தீவிரமாக உள்ளது என்பது அறிந்ததே. பெருந்துறை ஆஸ்பத்திரியில், தொற்றுடன் இன்னும் பீடித்துள்ளவர்கள் இருக்கிறார்கள்.
© வேதபிரகாஷ்
17-04-2020
[1] நியூஸ்.தமிழ், நியூஸ்.தமிழ், ரம்ஜான் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு !!, By Searma Samy | Thu, 16 Apr 2020, By Searma Samy | Thu, 16 Apr 2020
[2] https://newstm.in/tamilnadu/tamil-nadu-government-imposes-restrictions-on-ramzan/c77058-w2931-cid538450-s11189.htm
[3] தினத்தந்தி, ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்து ஆலோசனை – இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அறிவிப்பு, பதிவு : ஏப்ரல் 17, 2020, 08:00 AM
[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/17080011/1265214/Discussion-on-Ramzan-festival.vpf
[5] தினகரன், பள்ளிவாசல்களுக்கு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதிக்குள் நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்கப்படும்: தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி, 2020-04-16@ 18:05:50.
[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=579522
[7] தமிழ்.ஒன்.இந்தியா, பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுப்பு… வீடுகளுக்கு பச்சரிசியை விநியோகிக்க முடிவு, By Arsath Kan | Published: Thursday, April 16, 2020, 20:21 [IST]
[8] https://tamil.oneindia.com/news/chennai/denial-of-permission-to-produce-fasting-porridge-in-mosques-382848.html
[9] தமிழ்.இந்து, ரமலான் நோன்புக் கஞ்சிக்கு 5,450 டன் அரிசி; பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சப்படாது: தலைமைச் செயலர் அறிவிப்பு, Published : 16 Apr 2020 06:37 PM
Last Updated : 16 Apr 2020 10:01 PM.
[10] https://www.hindutamil.in/news/tamilnadu/549886-5450-tonnes-of-rice-for-ramadan-fasting-porridge-porridge-is-not-feverish-in-mosque-notice-of-chief-secretary.html
[11] ஏசியா.நெட்.தமிழ், வீட்டிலேயே தொழுகை… பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி கிடையாது… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!, By Asianet Tamil, Chennai, First Published 16, Apr 2020, 9:34 PM…
[12] https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-government-on-ramzan-festival-in-corona-curfew-period-q8w1zw
[13] புதியதலைமுறை, பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு, Web Team, Published :16,Apr 2020 09:48 PM
[14] http://www.puthiyathalaimurai.com/newsview/68618/Chief-Minister-Palanisamy-has-said-that-Islamic-organizations-have-decided-that-Ramadan-does-not-provide-porridge
[15] தினமலர், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி: மாவட்ட அரசு ஹாஜி கோரிக்கை, Added : ஏப் 15, 2020 09:02; https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561
[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561
அண்மைய பின்னூட்டங்கள்