முஸ்லிம் பிடோபைல்கள், சிறுவர்-சிறுமியர் கற்ப்பழிப்பாளர் பற்றி வெளிவந்துள்ள விவரங்கள்!
ரெஜினா மதரஸாவில் நடந்த அனுபவத்தை வெளியிட்டது: . பி. ரெஜீனா (V. P. Rajeena) என்ற பத்திரிக்கைக்காரர் தனது பேஸ்புக்கில் மதரஸாக்களில் சிறுவர்-சிறுமியர் செக்ஸ்-தொல்லைகளுக்குள்ளாகிறார்கள் என்று 22-11-2015 ஞாயிற்றுக் கிழமை அன்று குறிப்பிட்டார்.
- முதல் வகுப்பில், முதல் நாளில் நடந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். “குண்டான, நடுத்தர வயதான” உஸ்தாத் பையன்களை வரிசையாக தன்னிடம் வரச்சொன்னார். தன்னருகே வந்தபோது, டிரௌசரின் பொத்தான் / ஜிப்பைக் கழற்றி, தகாத முறையில் தொட்டார். இதனை, கடைசி பையன் வரைக்கு செய்தார்.
- நான்காம் வகுப்பு படிக்கும் போது, ஒரு உஸ்தாத் இரவு வகுப்புகளில், மாணவிகளுக்கு செக்ஸ்-தொல்லைகள் கொடுத்தார்.
- மின்சாரம் இல்லாத வேளைகளில், 60 வயதான உஸ்தாத் ஒருவர் மாணவிகள் உட்கார்ந்திருக்கும் பெஞ்சுகளை நோக்கி வருவார். ஒரு கொம்பை நுழைப்பார். இருமுறை, அவ்வகுப்பில் இருந்த பெரிய மாணவி, இப்படியே தொந்தரவு செய்து கொண்டிருந்தால், தலைமை-உஸ்தாத்திடம் புகார் செய்வேன் என்று எச்சரித்தாள்.
ரெஜினா இவ்வாறு மூன்று உதாரணங்கள் கொடுத்து, சிறுமிகள் மதரஸாக்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்பட்டதை எடுத்துக் காட்டினார். இதனால், மதரஸாக்களில் மாணவ-மாணவியர் நடத்தப் படும் முறைப் பற்றிய விவாதம் ஆரம்பித்தது[1]. இவர் “மத்தியமம்” என்கின்ற ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூலம் நடத்தப்படும் நாளிதழின் உதவி ஆசிரியர் ஆவர்[2].
ரெஜினாவின் மீது தாக்கு, பேஸ்புக் முடக்கம் முதலியன (நவம்பர் 22 முதல் 25 2015 வரை): பேஸ்புக்கில் அவரை இழித்து, பழித்து, அவதூறாக பேசி பலவிதங்களில் எதிர்ப்புகள் பதிவாகின[3]. அவர், அவரது குழந்தை, கணவர் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை[4]. “முஸ்லிம்-விரோதி, இஸ்லாம்-விரோதி, நாத்திகவாதி, ……..கைக்கூலி” என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டார். மிரட்டல்களும் இவற்றில் அடங்கும்[5]. எல்லைகளைக் கடந்ததால், அவரது பேஸ்புக் கணக்கே, 25-11-2015 அன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. “இந்நேரத்தில் இவ்விசயங்களை வெளிப்படுத்தும் நோக்கம் என்ன என்று கேட்கிறார்கள். பரூக்கிக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிற்குப் பிறகு, பால்–சமத்துவம் (Gender Justice) மற்ற இயக்கத்தினரிடம் (Conservative organizations) கருத்துக்களைக் கேட்டறிந்தேன். அதன் பிறகுதான், நான் இதனை சொல்ல விரும்பினேன். முஸ்லிம் பெண்களுக்கு நீதி பலநிலைகளில் மறுக்கப்படுகிறது, தமது சமூகத்தினுள், தமது பிரச்சினைகளை எழுப்பவே, விவாதிக்கவோ மேடை இல்லை. பெண்கள் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். என்னைத் தாக்குவதற்குப் பதிலாக, பெண்களுக்கு நீதி கிடைக்க அவர்கள் பாடுபடவேண்டும். அமைதியாக கண்டுகொள்ளாமல் இருப்பதினால், தீர்வு கிடைத்து விடாது”, என்று ரெஜீனா விளக்கிக் கூறினார்[6].
அலி அக்பர் என்ற சினிமா டைரக்டர் தானே பலிகடாவாக இருந்ததை ஒப்புக் கொண்டது: மதரஸாக்களில், உஸ்தாத் என்கின்ற ஆசிரியர்கள் எப்படி சிறிவர்-சிறுமியர்களை பாலியில் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளனர், சில்மிஷம் செய்துள்ளனர் மற்றும் வன்புணர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை வி. பி. ரெஜினா என்ற பத்திரிக்கைக்காரர் வெளிப்படுத்திய பிறகு, அலி அக்பர் என்ற கேரளா சினிமா தயாரிப்பாளர் தானும் சிறுவனாக இருக்கும் போது, மதரஸாவில் தன்னுடைய உஸ்தாத்தால் செக்ஸ்-தொல்லைகளுக்குட்பட்டார் என்று வெளிப்படையாக தெரிவித்தார்[7]. அபூபக்கர் முசலியார் என்ற சுன்னி முஸ்லிம் தலைவர், கேரளாவில் காந்தபுரம் என்ற இடத்தில் உள்ளவர், மதஸாக்களில் செக்ஸ்-தொல்லைகள் எல்லாம் ஒன்றும் கிடையாது என்று அறிவித்தார். இதனை மறுத்து, அலி அக்பர் தனக்கு ஏற்பட்ட செக்ஸ் தொல்லைகளை வெளியிட்டுள்ளார்[8].
மதரஸாவில் இருந்த பிடோபைலின் பாலியல் லீலைகள்: 1970களில் வைநாடு மாவட்டத்தில், நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, தன்னை உஸ்தாத் செக்ஸ்-தொல்லைக் கொடுத்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டார். உஸ்தாத் மூலம் செக்ஸ்-வக்கிரகக்களை தெரிந்து கொண்ட பையன்கள் மற்றவர்களுடன் அவற்றைச் செய்ய முற்பட்டார்கள். “வுது” [whudu (ablution)] என்ற பெயரில், எப்படி அலம்பி சுத்தப்படுத்திக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்த வினைகளால் அவை பெருகின. அந்த செக்ஸ்-வக்கிரங்கள் தனது மனத்தை பல வருடங்கள் ஆட்கொண்டிருந்து, வருத்திக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து மீள்வதற்கு சில காலம் ஆயிற்று. அதனால், என் குழந்தைகளை மதரஸாவுக்கு அனுப்பக்கூடாது என்று தீர்மானித்தாகக் கூறினார். அம்மதரஸா காந்தபுரம் அபூபக்கர் முசலியாரால் நடத்தப்படும் மதரஸா தான். அந்த உஸ்தாத் பற்றிய விவரங்களையும் கொடுக்கத்தயார் என்று அறிவித்தார். தன்னை மட்டுமல்லாது மற்ற பையன்களையும் அவர் அவ்வாறு செக்ஸில் பயன்படுத்திக் கொண்டார். இவ்விதமான செக்ஸ்-தொல்லைகள், பாலியில் ரீதியில் தொந்தரவுகள்,
பீதியில், அச்சத்தில் உண்மையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்: காம-சில்மிஷங்கள், மற்றும் வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவது என்பனவெல்லாம், இப்பொழுதும் மதரஸாக்களில் நடந்து வருகின்றன. மதத்ததலைவர்கள் அவர்களைக் கொல்லவும் செய்வார்கள் என்ற பீதியில் அமைதியாக இருக்கிறார்கள்[9]. ஆனால், அச்சத்தினால், முஸ்லிம்கள் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள். அதிலும், காந்தபுரம் அபூபக்கர் முசலியார் போன்ற அரசியல் செல்வாக்கு, பலம் முதலியவற்றைக் கொண்டவருக்கு எதிராக புகார் கொடுக்க யாருக்கும் துணிவு வராது. பீப்-பசு மாமிசம் பிரச்சினை பற்றி ஏகப்பட்ட கலாட்டாக்கள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் என்று நடந்தன. ஆனால், இவற்றைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், இவரும் பேஸ்புக்கில் பல தொல்லைகளுக்குள்ளானார். அவர் கற்பழித்தார் என்றால், கர்ப்பம் உண்டானதா, குழந்தை பெற்றெடுத்தாயா, என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன; சரி, 40 வருடங்கள் கழ்த்து, இப்பொழுது ஏன் இதனை எடுத்துக் காட்டுகிறாய்? போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. பொதுவாக இஸ்லாத்தில் விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், முஸ்லிகள் எல்லோருமே பயந்து கிடக்கிறார்கள். பத்வா கொடுப்பார்கள், மிரட்டல்கள் வரும் என்ற பீதியில் உள்ளார்கள். ஏனெனில், கருத்து கூட இஸ்தாத்திற்கு எதிரானது என்று சொல்வதுடன், மிரட்டல்கள், சமூதாயத்திலிருந்து விலக்கி-வைக்கல் போன்ற காரியங்களை செய்து வருகிறார்கள்.
வேதபிரகாஷ்
03-02-12016
[1] http://indianexpress.com/article/india/india-news-india/woman-journalist-targeted-for-fb-post-on-abuse-in-madrasas/
[2] http://www.madhyamam.com/en/
[3] http://www.firstpost.com/living/kerala-journalist-faces-backlash-for-facebook-post-on-sexual-abuse-in-madrassa-2522022.html
[4] http://www.thenewsminute.com/article/some-disgusting-comments-journalist-vp-rajeena-got-post-abuse-madarassa-36350
[5] http://www.thenewsminute.com/article/kerala-woman-journalist-threatened-fb-account-blocked-after-post-child-sexual-abuse
[6] “One of the other criticisms was on the timing of my revelations. I thought of making this public after I started hearing the opinions of conservative community organisations on the question of gender equality, related to the Feroke college issue. Muslim women here are facing denial of justice on so many levels, but they do not have a platform to raise these issues within the community. I was forced to use social networks because of this very reason. The suppressed anger of so many years might have also come out through the post,” she says. She says that many of those who have targeted her have spoken out against intolerance in other issues. “In this case, their intolerance to my opinion is due to the fact that I am a woman from their community. They are scared of more women speaking out. Instead of targeting me, they should try to ensure that women from the community get justice. Being silent about issues is not the solution,” she says.
[7] http://indianexpress.com/article/india/india-news-india/kerala-filmmaker-ali-akbar-says-he-was-also-abused-at-madrasa/
[8] http://indianexpress.com/article/india/india-news-india/kerala-filmmaker-ali-akbar-says-he-was-also-abused-at-madrasa/
[9] http://zeenews.india.com/news/kerala/i-was-sexually-abused-in-kerala-madrasa-no-one-would-support-me-filmmaker-ali-akbar_1828381.html
அண்மைய பின்னூட்டங்கள்