Posted tagged ‘ரகசிய சர்வே’

இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே: கேரளாவில் 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, வழக்கு பதிவு!

நவம்பர் 7, 2010

இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே: கேரளாவில் 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, வழக்கு பதிவு!

ஒபாமா வருகையைப் பற்றி அமெரிக்கா நடத்திய கருத்துக் கணிப்பு: ஒபாமா இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு, இந்திய முஸ்லீம்கள் அமெரிக்கா, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை முதலியவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றறிய இந்தியாவின் பல நகரங்களில் கருத்தறிய சர்வே ஒன்றை அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நடத்தியுள்ளது. ஆனால், கேரளாவில் நடந்தபோது, அது பிரச்சினையாகியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்தினரிடம், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ரகசிய சர்வே நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, ஐந்து பெண்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள முஸ்லீம்களிடம் அமெரிக்காவின் கருத்துக் கணிப்பு: கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிமடம் காலனி இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி. இங்கு அக்டோபர் 2ம் தேதி ஐந்து பெண்கள் சென்று இஸ்லாமிய பெண்களிடம் சர்வே நடத்தினர். அவர்கள் அப்பெண்கள், ஆண்கள் என பலரிடமும் வினாத்தாளில் இருந்த 90க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடை தேடினர். அதில், “ஒசாமா பின்லாடனை நீங்கள் விரும்புகிறீர்களா?’ “நீங்கள் பர்தா (இஸ்லாமிய பெண்கள் அணியும் சம்பிரதாய உடை) அணிவீர்களா?’ போன்ற இஸ்லாமிய சமுதாயம் சம்பந்தமான வினாக்களைக் கேட்டனர். அங்கிருந்த ஏழைப் பெண்களுக்கு அவர்கள் எதற்கு இதுபோன்ற கேள்விகள் கேட்கின்றனர் என தெரியாமல் பதிலளித்துள்ளனர். சர்வேக்காக வந்த பெண்கள் அப்பகுதியில் வசிக்கும் நாசர் என்பவரது வீட்டுக்கும் சென்றனர். அங்கு அப்பெண்களிடம் நாசர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அப்பெண்கள் சரிவர பதில் சொல்லவில்லை. இதனால் அப்பெண்கள் மீது சந்தேகம் கொண்ட அவர் அப்பெண்களை தனது வீட்டில் சிறை வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்[1].

போலீஸார் விசாரித்த பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]: இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் அப்பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பெண்கள் டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெய்லர் நெல்சன் சோப்ரஸ் இந்தியா TNS (Taylor Nelson Sofres-India) நிறுவனத்தின் கொச்சி கிளையில் இருந்து அனுப்பப்பட்டவர்கள் என்பதும், அவர்களுக்கு ஒரு சர்வேக்கு 30 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதும் தெரிந்தது. அப்பெண்கள் அளித்த விலாசத்தில் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரித்தனர். TNSஐக்கெட்டபோது, அவர்கள் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் சர்வே ஆராய்ச்சி நிறுவனத்திற்காக (Princeton Survey Research Associates) அந்த சர்வே செய்வதாக கூறினர்[3]. போலீசார் உடனே இரு சமூகத்தினரிக்டையே வெறுப்பையுண்டாக்க முயல்வதாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்[4].

மத்திய விசாரணை ஏஜன்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்திய கேரள அரசு: விசாரணையில், டில்லி நிறுவனம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் இருந்து செயல்படும் பிரின்ஸ்டன் சர்வே ரிசர்ச் அசோசியேட்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்காக இந்த சர்வே பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுபோல், டில்லி, ஐதராபாத் நகரங்களிலும் சர்வே நடந்துள்ளதாகவும் தெரிந்தது. விசாரணைக்குப் பின் அப்பெண்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் விசாரணை, பொதுமக்கள் எதிர்ப்பு ஆகியவை காரணமாக கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் நடத்தப்பட இருந்த இதுபோன்ற சர்வேக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற சர்வே நடந்து வருவதால், இதுகுறித்து மத்திய விசாரணை ஏஜன்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி விட்டதாக, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர்  கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொடியேறி பாலகிருஷ்ணன், கொடியை அவமத்தித்த கிலானி, ஆராய்ச்சி செய்யும் போலீஸார்; எல்லாம் விஷயத்தை அறிந்து கொண்டு இப்படியெல்லாம் பேசுவது கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு கைவந்த கலை, ஏனெனில் அவர்களுக்கு வேண்டியது முஸ்லீம்களின் ஓட்டுதானே தவிர வேறொன்றும் இல்லை, ஒபாமாவைப் பற்றிய கவலையும் இல்லை. ஆனால், டில்லியிலேயோ அருந்ததிராய், கிலானி, ஜிலானி, வராவர ராவ் போன்ற பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் தேசவிரோதமாக பேசியதற்கு வழக்குப் பதிவு செய்ய போலீஸார் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

கேட்கப்பட்ட கேள்விகள் (பல பத்திரிக்கைகளினின்று தொகுத்தது): சர்வே 85 பக்கங்களில் 90க்கும் மேற்பட்ட கொண்ட அந்த கருத்துக் கணிப்பு இரண்டு பகுதிகள் கொண்டதாக இருந்தது. முதலாவது அமெரிக்கா, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை முதலியவற்றைப் பற்றியது, இரண்டாவது பகுதி முஸ்லீம்களுக்கென்றே கேள்விகள் பித்யேகமாகத் தொகுக்கப்பட்டிருந்தது[5].

*         தாங்கள் முதலில் இந்தியர் அல்லது முஸ்லீம் என்று கருதுவீர்களா[6]?

*         இந்தியாவில் முஸ்லீம்கள் எப்படி மதிக்கப் படுகிறார்கள்?

*         மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியாவில் முஸ்லீம்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள்?

*         இந்திய ராணுவத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

*         இந்திய ராணுவம் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

*         இந்தியாவில் ஷரீயத் சட்டத்தை அமூலாக்க விரும்பகிறீர்களா?

*         அமெரிக்காவை முஸ்லீகளின் எதிரி நாடாகக் கருதுகிறீர்களா?

*         அமெரிக்காவைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*         இந்திய-அமெரிக்க உறவுமுறைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*         ஒபாமா இந்தியாவிற்கு வருவதால், இந்தியாவிற்கு என்ன லாபம்?

*         இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்ததை ஆதரிக்கிறிர்களா?

*         அமெரிக்காவின் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்ற நிலைப்பாட்டைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*          ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாலிபான்களை ஒடுக்க மேற்கொண்ட செயலை ஆதரிக்கிறீர்களா?

*         இரானைப் பற்றிய தங்களது கருத்து என்ன?

*         இஸ்லாமிய சட்டம் இந்திய குற்றவியல் சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாகக் கருதுகிறீர்களா[7]?

*         இந்தியா பொதுவாக முஸ்லீகளின் எதிராக உள்ள நாடாகக் கருதுகிறீர்களா?

*         இந்தியாவில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?

*         ஒஸாமா பின் லேடனை விரும்புகிறிர்களா[8]?

*         தாங்கள் பர்கா / பர்தா அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளீர்களா?

*         ஒபாமா இந்தியாவிற்கு வருவதைப் பற்றி தங்களது கருத்து என்ன[9]?

*         இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*         ஷரீயத்தை விடுத்து இந்திய அரசியல் சட்டத்தின்படி நடக்கவேண்டும் என்றால் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டில் வாழ நினைக்கிறிகள்[10]?

இக்கேள்விகள் ஒன்று பிரமாதகாக இருப்பதாகத் தெரியவில்லை. அன்று அருந்ததி ராய் பேசியதில் பத்து சதவீதம் கூட இருப்பதாக தெரியவில்லை! தற்கு போய் கேரள முஸ்லீம்கள் மற்றும் அரசு இப்படி அலட்டிக் கொள்வதுதான் விசித்திரமாக இருக்கிறது.

ஆராய்ச்சி என்றால் சர்வே, கருத்துக் கணிப்பு முதலியவை மிகச்சாதாரணமான விஷயம் தான்: கேள்விகளின் தொகுப்பை விநியோகம் செய்தல், கேள்விகளுக்கு பதிலை நேரிடையாகவோ, தபாலிலேயோ பெறுவது, அவற்றைத் தொகுப்பது, குறிப்பிட்ட தலைப்புகளுக்கு ஏற்றவகையில் அவற்றைப் பிரிப்பது,  தர வரிசைப் படுத்தி அவற்றை வரிசைப்படுத்துவது……………..முதலியன ஆராய்ச்சியின் ஒரு கட்டம். இதன் பிறகு பல வேலைகள் இருக்கின்றன. இதில் பாரபட்சம் இல்லாமல் இருக்க, கேள்வி கேட்பவர்கள் மற்றும் பதில் சொல்பவர்கள் என இரண்டு பக்கத்திலும் பல விருப்பு-வெறுப்புகள், தாக்கங்கள், முதலியவற்றை அகற்ற, கேள்விகளின் அமைப்பு குறிப்பிட்டவாறு அமைக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட பதில்களை சொல்லுமாறு கிரமப்படுத்தப் பட்டிருக்கும். இதனால் அத்த்தகைய குறைகள் நீக்கப்படும். பெங்களூரில் ஒரு கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் முஸ்லீம்களைப் பற்றி இவ்வாறு கருத்துக் கணிப்பு நடத்தி இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்கம் மற்றும் இஸ்லாமியர்களின் சமூக சீர்திருத்தம் என்ற இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளது[11]. அதில் இவற்றைவிட இன்னும் பற்பல கேள்விகள் கேட்டு ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். அப்பொழுதெல்லாம் வராத பிரச்சினை, இப்பொழுது ஏன் வருகிறது என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

© 07-11-2010


[1] தினமலர், இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே : 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, நவம்பர் 06, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121228

[3] TNS authorities were called in who said they were doing the survey for the Washington-based Princeton Survey Research Associates.

[4] “Since the survey had many questions with a communal overtone, we have registered a case of promoting enmity between various groups (Sec 153 A of IPC) and we are investigating the matter. We have also sought the help of the Central agencies on this,” said Jacob Punnoose, Director General of Police, Kerala.

[5] ………….the firm planned to survey as many as 6000 citizens, mostly members of the Muslim community, in 55 different regions in the country. The 85-page two-part questionnaire had 93 questions in all. The second part of the questionnaire was meant exclusively for respondents from the Muslim community.

[8] “Do you consider yourself an Indian first or Muslim?”, “What’s your view on imposing Islamic law in India?”, “Do you like Osama bin Laden?” and “Do you wear burqa?” http://www.hindustantimes.com/Row-over-survey-in-Muslim-area-Central-probe-sought/Article1-622550.aspx

[11] K. S. Durrany, The Impact of Islamic Fundamentalism, CISRS and ISPCK, Bangalore,  1993.