Posted tagged ‘யார்’

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (2)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (2)

anti_terrorism_muslim_conference_Islam-means-peaceயாசின் பட்டகல் வடக்கு பீஹாரில் அதே இடங்களில் ஆள் சேர்த்தது எப்படி?: சரி, பீஹாரில் ஏன் தீடீரென்று இத்தகைய சர்ச்சை ஏற்பட வேண்டும்? இதெல்லாம் காஷ்மீரத்தில் அதிகமாகப் பேசப்படுகின்றது. அதன்படியே தீவிரவாதிகள் செயல்பட்டு, அங்கிருந்து காபிர்களை-பண்டிட்டுகளை-இந்துக்களை விரட்டியடித்துள்ளனர். பிறகு, பீஹார் என்ன அத்தகைய ஜிஹாதிகளின் விளையாட்டுக் களமாக இருக்கிறதா என்ன? இங்கு தான் விஷயமே வெளிவருகிறது. அதாவது, யாசின் பீஹார் இளைஞர்கள் பலரை, ஜிஹாதில் சேர்க்க வேலைசெய்துள்ளான். அவர்களைத் தூண்டிவிட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளான்[1]. மேலே குறிப்பிட்ட தர்பங்கா, மதுபனி, கதிஹர், பேடியா, புர்னியா, கிருஷ்ணகஞ் முதலிய இடங்களில் தான் அத்தகைய ஆள்-சேர்ப்பு நடந்திருக்கிறது[2]. தர்பங்காவில் மட்டும் 18 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிடிபட்டுள்ளனர். அவர்கள்:இடம் விசாரித்தபோது, யாசின் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன. யாசின் சிறந்த இஸ்லாமிய போதகன் மாதிரி இருந்து கொண்டு, முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாதிகளாக மாற்ரியுள்ளான். உணர்ச்சியுள்ள அவனது பேச்சுகளை, இந்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களது மொபைல்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு கேட்டு மகிழ்ந்து வருகின்றனர். தூண்டுதலும் பெறுகின்றனர்.

IM-email-2010-1காங்கிரஸின் குண்டுவெடிப்பு டுவிட்டர்களும், பிரச்சாரங்களும்: புத்தகயா குண்டுவெடிப்புகளுக்கு “இந்திய முஜாஹித்தீன்” பொறுப்பேற்றுக் கொண்டது, திக்விஜய சிங் கிண்டலடித்து சங்கப்பரிவார் மீது குற்றஞ்சாட்டியது முதலியவற்றை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இதே போல, பெங்களூரு குண்டுவெடிப்பின் போது முகமது ஷகீல், “இந்த குண்டு வெடிப்பு பிஜேபிக்கு உதவும்”, என்றார், ஆனால், காங்கிரஸ் தான் வென்றது. ஆகவே, இது தீவிரவாததிற்கு ஒத்திகையா அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு உதவும் தந்திரமா என்று தெரியவில்லை. கடந்த 10-15 ஆண்டுகளுகாக எங்கெல்லாம் குண்டுவெடிப்பு நடக்கின்றனவோ அங்கெல்லாம் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் ஆதரவு கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று வருகிறது. இதனை மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்தே கண்டு கொள்ளலாம். எனவே “இந்திய முஜாஹித்தீன்” காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்து வருகின்றாதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

Key players in the blastsபீஹார் அரசியல்வாதிகள், முஸ்லிம்கள் யாசினுக்கு உதவியது ஏன்?: தர்பங்கா நேபாள எல்லைக்கு அருகில் இருப்பதால், பிரச்சினை வரும் போது, சுலபமாக அங்குச் சென்றுவிடலாம் என்ற திட்டத்துடனே அவ்வூரைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும் அவ்வூரில், ஏற்கெனவே LeT தொடர்பாளிகள் இருந்திருக்கிறார்கள். யாசின் பீஹாரில், தர்பங்காவில் இருந்து கொண்டு, பலருடன் போனில் பேசிக் கொண்டு, ஜிஹாதுக்கு ஆட்சேர்ப்பு செய்து கொண்டு, தாராளமாக வேலை செய்து கொண்டிருந்தபோது, பீஹார் போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 2006ல் உமர் மதானி என்ற LeT ஆளை சந்தித்துள்ளான். 2009ல் தில்லியில் கைது செய்யப்படும் வரை இவனுடன் தொடர்பு வைத்திருந்தான். தன்னை வியாபாரி மற்றும் யுனானி மருத்துவர் போல காட்டிக் கொண்டான். லெஹேரிசராய் [Laeherisarai] என்ற இடத்தில் தங்கியிருந்தான். தர்பங்காவின் ரப்பானி (இஸ்லாம் மதகுரு) இவனுக்கு ஜிஹாதி ஆள்-சேர்ப்பிற்கு உதவி செய்திருக்கிறார்[3]. 2007 மற்றும் 2010 வருடங்களில் தர்பங்காவில் இருந்துள்ளதால், “பீஹார் ஜிஹாத் திட்டம்” பற்றி உளவுத்துறை எச்சரித்துள்ளனர். இவ்வளவு விசயங்களும் மற்றவர்களுக்குத் தெரியாமல் பீஹார் வைத்துள்ளது ஆச்சரியமான விசயம் தான்.

ied-cutout01கைதுகளில் நிதிஷ்குமாரின் இரட்டை வேடம் ஏன்?: கடந்த மே 2012ல் கபீல் அக்தர் என்பவன் கர்நாடகா போலீசாரால் பர்ஹ் சமைலா என்ற இடத்திலிருந்து கைது செய்த போது, உள்ளூர் கோர்டில் அனுமதி பெறாமல் செல்லக்கூடாது என்று நிதிஷ்குமார் தடுத்தார். ஆனால், ஆதே மாதத்தில், அதே ஊரில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பாசி மெஹ்மூத் என்பவன் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப் பட்டுள்ளான். இப்பொழுதோ, யாசின் விசயத்தில் அவ்வாறு செய்யவே மறுத்திருக்கிறார்[4]. தனது மாநிலத்தில் இவ்வாறு எல்லைக்கடந்த சட்டமீறல்கள், தீவிரவாதிகளின் போக்கு வரத்து, ஜிஹாதி ஆள்-சேர்ப்பு முதலியவை நடந்து கொன்டிருக்கின்றன எனும் போடது, எப்படி நிதிஷ்குமார் அமைதியாக இருந்திருக்கிறார்? முஸ்லிம்கள் என்பதால் ம்சட்டும் இப்படி சும்மா இருந்துவிடலாமா? அல்லது அப்படி சும்மாயிருக்கச் சொன்னது யார்? அப்படியிருந்தால் என்ன ஆதாயம்? இதுதான் செக்யூலரிஸம் பேசுபவர்களின் லட்சணமாகத் தெரிகிறது.

Nitish-Modi Muslim politicsபீஹாரில் தொடர்ந்து நடந்துள்ள ஜிஹாதிகளின் கைதுகள் முதலியன: பீஹாரில் எல்லாவிதமான ஜிஹாதிகள், மாவ்வோயிஸ்ட் முகமூடிகளில் ஒளிந்துள்ள ஜிஹாதிகள், ஜிஹாதி வேலையாட்கள், தொடர்பாளிகள், வேவுபார்க்கும் வகைறாக்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நாள் / தேதி

தீவிரவாதி, பிடிபட்ட இடம், விவரங்கள்

2005 LeT terrorist Haroon Rashid arrested from Siwan
July 20, 2006 Mumbai ATS arrests Mohammed Kamal Ansari from Basopatti village, Madhubani, for Mumbai serial blasts
Nov 12, 2007 Mohammed Sabauddin alias Farhan, a Madhubani resident, arrested from Lucknow for Rampur CRPF camp attack and firing at a Jaipur science conference
Oct 14, 2008 UP ATS arrests Mohamed Khalil, a Madhubani resident, from Lucknow for the Delhi blast
Aug 17, 2009 LeT operative Omar Madani of Basopatti, a Madhubani resident, arrested from Delhi
2010 Rampur CRPF camp attack accused Mohammed Sabauddin arrested from Gandhwari, Madhubani
Nov 24, 2011 IM operatives Ghayur Ahmed Jamali and Mohammed Ajmal arrested from Madhubani
Nov 2011 IM operative Irshad Khan, a Samastipur resident, held by Special Cell in Chennai
Nov 22-23, 2011 Gauhar Aziz Khomaini, Qateel Ahmed Siddiqui arrested
Jan 12, 2012 IM operatives Naquee and Nadeem arrested from Darbhanga (official arrest shown later)
May 6, 2012 Kafeel Akhtar arrested by Karnataka Police fromDarbhanga

மதுபனியில் தான் அதிகம் கைதுகள் நடந்துள்ளன. அதாவது, அவ்விடம் அவர்களுக்கு எளிதான புகளிடமாக இருந்துள்ளது. உள்ளுர்வாசிகள் அவர்களுக்கு உதவுவதாகவும் தெரிகிறது. சரி, அவர்களுக்கு அப்படி ஏன் உதவவேண்டும் என்றால், அவர்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளார்கள் அதாவது புனிதபோரில் ஈடுபட்டுள்ளதால், எந்த முஸ்லிமும் அவர்களுக்கு உதவ வேண்டும், ஆனால், காட்டிக் கொடுக்கக் கூடாது. அதே போல காபிர்களான இந்தியர்களும் அவர்களுக்கு உதவ வேண்டும், உதவினால் அவர்களது ஆட்சி தொடரும், அதற்கு ஜிஹாதிகள் உதவுவார்கள். இல்லையேல், ஜிஹாதிகளுக்கு உதவாத ஆட்சி நீக்கப்படும்.

© வேதபிரகாஷ்

01-09-2013


[2] Bhatkal was the brain behind recruitment of youth in Bihar to carry out terror attacks across the country, a police official said on Saturday……he recruited youth from Bihar’s Mithilanchal region, including DarbhangaMadhubani and Samastipur districts, in the last few years, “Bhatkal confessed that he used to target young boys, mostly from poorest of the poor background, in Mithilanchal for recruitment to carry out terror attacks in the country,” ………..was the man behind recruitment of all 18 Indian Mujahideen operatives arrested by security forces from Darbhanga in the last two years.

http://www.business-standard.com/article/politics/yasin-bhatkal-wooed-bihar-youth-for-terror-attacks-113083100403_1.html

[3] During his Darbhanga stay, Bhatkal made important contacts, first as a business networking agent and then as a Unani practitioner. He had also come to know Rabbani (now dead) of Darbhanga, who helped him build a network of youths in villages.

http://www.indianexpress.com/news/close-to-border-darbhanga-was-yasins-hunting-ground/1163244/

[4] In May 2012, Kafeel Akhtar was arrested by Karnataka police from Barh Samaila. Chief Minister Nitish Kumar had objected to Karnataka Police taking him away without a transit remand from a local court. The same month, Fasih Mehmood, a Saudi Arabia-based engineer from Barh Samaila village, was arrested. He was deported to India. Terror links with Darbhanga was first established with D Company man Fazlur Rahman’s connection with Deora Bandhauli.

http://www.indianexpress.com/news/close-to-border-darbhanga-was-yasins-hunting-ground/1163244/2