பிள்ளைக்கறி சாப்பிடவைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் – அத்தகைய எண்ணத்தை எப்படி வளர்த்துக் கொண்டார்கள் – ஒரு இறையியல் விளக்கம்!
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் குரூர செயல்கள்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செய்து வரும் குரூர காரியங்கள் உலகம் முழுவதும் பெருத்த வெறுப்பையும், அருவருப்பு மிக்க கோபத்தையும், திடுக்கிடும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஷியா மற்றும் கிருத்துவப் பெண்களைக் கடத்திக் கொண்டுச் சென்று கற்பழிப்பது என்பது தினசரி செய்தியாகி விட்டது. இந்நிலையில் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது[1] என்ற செய்தி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதாவது, பெற்ற தாயுக்கே பிள்ளைக்கறி அமைத்துக் கொடுத்து புனிதமான காரியத்தைச் செய்துள்ளனர்[2].
பிள்ளைக்கறி சாப்பிடவைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன வாலிபர் ஒருவரை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர். மொசுல் நகரில் வைத்து அந்த வாலிபரை தீவிரவாதிகள் அழக்கம் போல கொன்றுவிட்டனர்[3]. இந்நிலையில் அவரின் வயதான தாய் மொசுல் நகருக்கு வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார்[4]. அதற்கு தீவிரவாதிகள், நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வந்துள்ளதால் களைப்பாகவும், பசியாகவும் இருக்கும். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று தெரிவித்துள்ளனர்[5]. அதோடு நின்றுவிடாமல் அந்த தாய்க்கு சாதம், சூப், மாமிசம், டீ கொடுத்துள்ளனர். அந்த அப்பாவி தாயும் தனக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த உடன் அவர் தீவிரவாதிகளை பார்த்து தனது மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தீவிரவாதிகளோ, உங்களை மகனை தான் தற்போது சாப்பிட்டீர்கள். அவரை கொன்று, உடலை வெட்டி, கறி சமைத்து உங்களுக்கு கொடுத்தோம் என்று கூறி சிரித்துள்ளனர்[6]. தாய் திடுக்கிட்டு மயக்கமடைந்து விட்டார். அத்தகைய இரக்கமில்லத அரக்கர்களாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாறியிருப்பது காலத்தைய குரூரத்திலும் குரூரமான நிகழ்ச்சி எனலாம். மனித உணர்வு கொண்ட முஸ்லிம்கள் யாரும் கண்டிக்காதது நோக்கத்தக்கது.
பிள்ளைக்கறி தயாரிக்க ஏற்பட்ட மனப்பாங்கு எவ்வாறு ஏற்பட்டது?: இஸ்லாத்தில் எப்படி இத்தகைய குரூர எண்ணங்கள் வருகின்றன என்பதும் ஆராயத்தக்கது. சுன்னி முஸ்லிம்கள், தொடர்ந்து ஷியா முஸ்லிம்களைக் கொன்றுவருவது, துன்புறுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலியன எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் (இரானைத் தவிர) நடந்து வருகின்றன. அடிப்படைவாத சித்தாந்தம் எப்படி மக்களை கொடுமைப்படுத்த உபயோகப்படுத்தப் படுகிறது என்பதும் ஆராயத்தக்கது. பொதுவாக, மத்தியத் தரைக்கடல் நாகரிகங்கள் உழவு, உணவு உற்பத்தி, அறுவடை போன்றவற்றிடன் சம்பந்தப்பட்டுள்ளன[7]. விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, தலைப்பிள்ளையை பலிக்கொடுப்பது பழக்கமாக இருந்து வந்தது. அதன் மாமிசத்தையும், ரத்தத்தையும் தானிய மாவுடன் பிசைந்து தின்னும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. யூதர்களின் பழக்கம் பிறகு மற்றவர்களுக்கும் பரவியது[8]. ஹாலிவுட் படங்களில் இதனை உருவகமாக காட்டுவதுண்டு. கிருத்துவத்தில் யுகேரிஸ்ட் என்ற சடங்கே, மனித உடல் புசிகும் கிரியையை உள்ளாடக்கியதாகும்[9]. அதனால்தான், அதனை பலி, திருப்பலி என்றே கிருத்துவர்கள் கூறிவருகிறார்கள். சடங்கில் அளிக்கப்படும் ரொட்டி மற்றும் மது, ஏசுவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவதாக நம்பவேண்டும். இல்லையென்றால், அவன் கிருத்துவனாகவே கருதப்பட மாட்டேன். ஆனால், எந்த கிருத்துவனும் தான் அத்தகைய நம்பிக்கையினைக் கொண்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளமாட்டார்கள்.
பிள்ளையை பலியிடும் நம்பிக்கை: மதரீதியில், இந்நம்பிக்கை அவர்களது மனங்களில் ஆழ்ந்து படிந்து கிடந்தாலும், நவீன காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகனுக்குப் பதிலாக விலங்கை பலியிடும் பழக்கம் இப்ராஹிம் கதையில் காணப்படுகிறது. பக்ரீதில் அதனால்தான், தலைப்பிள்ளைக்கு, மகனுக்கு, மனிதனுக்குப் பதிலாக ஆடு, மாடு, ஒட்டகம் என்று விலங்கு பலிக்கொடுக்கப்பட்டது. அம்முறை இப்பொழுதும் பின்பற்றப்பட்டுவருகிறது. ஆகவே, சுன்னிகள், மிகவும் குரூர எண்ணத்துடன் தான், ஷியா மக்களை அவ்வாறான கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள். மேலும் இஸ்லாத்தில் மதவெறி பிடித்தவர்கள், பெரும்பாலும் தாமே மொஹம்மது போல நினைத்துக் கொண்டு, அவர் செய்வது போல செய்வதில் குறியாக இருப்பார்கள். மொஹம்மது என்ற பெயரையும் கொண்டிருப்பார்கள். அப்ரஹாம் பிள்ளையை பலி கொடுத்தது போல, தமும் பலிகொடுத்தால், அல்லா சொர்க்கத்துக்கு நேராக செல்ல அனுமதி கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையும் அதனுடன் சேர்ந்திருப்பதால், ஜிஹாதிகள் இம்மாதிரியான காரியங்களை செய்வதில் எந்த இரக்கத்தையும் கொள்வதில்லை.
உலகம் ஏன் அமைதியாக இருக்கிறது?: இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த பாதுகாவலரான யாசிர் அப்துல்லா என்பவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் சென்றுள்ளார்[10]. அவர் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இஸ்லாத்தையே அவர்கள் கடத்தி விட்டார்கள். ஐஎஸ்ஐஎஸ் செய்வது தவறு, அவர்கள் மக்களின் தலைகளை வெட்டுகிறார்கள், உயிரோடு எரிக்கிறார்கள், தங்களுக்கு தானே சமாதியை வெட்டச் சொல்கிறார்கள். யாரும் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. என்று யாசிர் அப்துல்லா கூறியிருப்பதும் நோக்கத்தக்கது[11]. தீவிரவாதத்தின் உச்சத்தில் இருப்பதனால், மற்ற நாடுகள் அவர்களிடம் ஏன் மோத வேண்டும் என்று நினைத்து அமைதியாக இருக்கலாம். ஏனெனில், அமெரிக்கா போன்ற நாடுகளே இன்னொரு 26/11 போன்ற தீவிரவாத செயல்களை விரும்பவில்லை. இப்பொழுதுள்ள மோதல்கள் இஸ்லாதிற்குள் என்பதனால், அடக்கி வாசிக்கிறார்கள் என்றும் கொள்ளாலாம்.
[1] http://tamil.oneindia.com/news/international/inhuman-isis-men-fed-murdered-kidnap-victim-his-own-mother-222132.html
[2] http://www.deccanherald.com/content/463382/inhuman-isis-militants-trick-mother.html
[3] http://metro.co.uk/2015/03/02/isis-tells-mother-on-rescue-mission-youve-just-eaten-your-son-5084957/
[4] http://www.express.co.uk/news/world/561385/Islamic-State-Mother-Feed-Corpse-Body-Cooked-Son-ISIS-Kurdish-Fighter
[5] http://www.thesun.co.uk/sol/homepage/news/6351852/Sick-Islamic-State-jihadis-fed-mother-her-son-says-Brit-taking-fight-to-fanatics.html
[6] தமிழ்.ஒன்.இந்தியா.காம், வாலிபரை கடத்திக் கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள், Posted by: Siva
Published: Wednesday, March 4, 2015, 15:41 [IST]
[7] Van Seters, John. “From child sacrifice to paschal lamb: a remarkable transformation in Israelite religion.” Old Testament Essays 16.2 (2003): p-453.
[8] Paulien, Jon. “The Role of the Hebrew Cultus, Sanctuary, and Temple in the Plot and Structure of the Book of Revelation.” Andrews University Seminary Studies 33 (1995): 245-264.
[9] Douglas, Mary. “The Eucharist: Its Continuity with the Bread Sacrifice of Leviticus.” Modern Theology 15.2 (1999): 209-224.
[10] http://www.dailymail.co.uk/news/article-2975200/Isis-fed-murdered-kidnap-victim-mother-travelled-headquarters-demanded-him.html
[11] http://www.mirror.co.uk/news/world-news/isis-desperate-mum-told-youve-5257013
அண்மைய பின்னூட்டங்கள்