Posted tagged ‘யாகுப்’

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (4)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (4)

 

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி

கே. வீரமணி, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்?[1]: தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை மனிதநேய அறிக்கை என்று மேலேயுள்ள விசயங்களைத் தொகுத்து கே. விரமணி வெளியுட்டுள்ளார். மும்பைக் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப் பட்டு சிறையிலிருந்த யாகூப் மேமனுக்கு அவசர அவசர மாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதானது –  பல விமர்சனங்களுக்கு வழி வகுத்து விட்டது[2].

  1. மகாராட்டிர மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிரான கலவரத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டனரே! அதற்குக் காரணமானவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
  2. நீதிபதி கிருஷ்ணா ஆணையம் குற்றவாளிகளைப் பட்டியலிட்டுக் காட்டியதே – அன்றைய பிஜேபி சிவசேனா ஆட்சி ஒரே ஒரு வரியில் கிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையை ஏற்க மறுப்ப தாகக் கூறிடவில்லையா?
  3. மும்பைக் குண்டு வெடிப்பு என்பது அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் எதிரொலிதான்; நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அய்யப்பாடு- மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணமான பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படாதது ஏன்? இன்னும் சொல்லப் போனால் வழக்கு விசாரணை முறையாகக் கூடத் தொடங்கப்படவில்லையே ஏன்?
  4. இதன் பொருள் என்ன? நீதித்துறையும், ஆட்சித் துறை யும் நபர்களைப் பொறுத்து வளையும் – நெளியும் என்பதைத்தானே இது காட்டுகிறது! மனுதர்மத்தை எடுத்துக் காட்டி தீர்ப்பு வழங்குபவர்கள் இன்னும் இருக்கிறார்களே!
  5. அத்வானியின் ரத யாத்திரை (1991 அக்டோபர்) காரணமாக ஏற்பட்ட மதக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 564 பேர்.
  6. மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி களான பெண் சாமியார் பிரக்யாசிங், சாமியார் அசிமானந்த், கர்னல் புரோகித் உள்ளிட்டோருக்கான வழக்கு விசாரணை ஏன் முடிக்கப்படவில்லை – உரிய தண்டனை ஏன் வழங்கப் படவில்லை?
  7. தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படட்டும்! தூக்குத் தண்டனையே கூடாது; இது மிகவும் காட்டு விலங்காண்டித்தனம்; மனித நேயத்துக்கும், உரிமைக்கும் எதிரானது என்று குரல் உலகெங்கும் கிளர்ந்தெழும் இந்தக் கால கட்டத்தில், இப்படியொரு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட முறை கண்டிக்கத்தக்கது!
  8. மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் காட்டிய இந்த அசாதாரண நடைமுறைகள் மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்து விடும். யாகூப் மேமன் தூக்குத் தண்டனையே கடைசியாக இருக்கட்டும்!
Yakub versus prohit, etc

Yakub versus prohit, etc

தி இந்துவின் ஒருதலைப் பட்சமான கருத்துத் திணிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான விவரங்கள் “தி இந்து” (தமிழ்) இதழிலிருந்து எடுத்தாளப்பட்டவை ஆகும். தொடர்ந்து, தூக்குத்தண்டனை கூடாது, மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று யாகூப் மேமன் தூக்கிற்கு முன்னரும் பின்னரும் அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால், ஏன் தூக்குத்தண்டனை அல்லது மரணதண்டனை தேவை, மனிதத் தன்மையற்ற குரூர தீவிரவாதிகளுக்குக் கருணைக் காட்டக் கூடாது, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை, திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை யாரிடமிருந்தும் பெற்று வெளியிடவில்லை. ஒருவேளை அத்தகைய கருத்தே தேவையில்லை என்று “தி இந்து” மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் முடிவு செய்திருப்பது போலிருக்கிறது. பிறகு, எப்படி அவர்களை சமநோக்குள்ளவர்கள், பாரபட்சமற்றவர்கள், உள்ள நாட்டி சட்டங்களை மதிப்பவர்கள், நீதிமன்றங்களை போற்றுபவர்கள் என்று கருத முடியும்?

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி, நாத்திகம் கூட்டு

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி, நாத்திகம் கூட்டு

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும்: விக்கிப்பீடியாவின் விளக்கமும் பாரபட்மாக இருக்கிறது[3], “மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம்[4] தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கும், பாலியன் வன்புணர்வு போன்றவையும் தவிர்த்து போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கும் பல உலக நாடுகள் மரண தண்டனையை தருகின்றன மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.” சரி, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாத் பற்றி ஒன்றும் விவாதங்கள் இல்லையா?

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்.2

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்.2

மும்பையில் பயங்கரவாத தாக்குதல்கள் (1993 முதல் 2011 வரை): மும்பை, இந்தியாவின் வணிக-வியாபார தலைநகரம், பொருளாதார மையம் என்பதனால், தொடர்ந்து குண்டுவெடிப்பில் தாக்கப்பட்டு வருகின்றது. இதில் அப்பாவி-பொது மக்கள் பலிகடாக்களாக குரூரமாகக் கொல்லப்பட்டு வருகிறர்கள்.

 

  1. 12 மார்ச் 1993 – 13 வெடி குண்டுகள் கடுமையாக வெடித்ததில் 257 பேர் பலியாகினர்
  2. 6 டிசம்பர் 2002 – கட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர்
  3. 27 ஜனவரி 2003 – வைல் பார்லேவில் ஒரு மிதிவண்டியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் .
  4. 14 மார்ச் 2003 – முலுண்டில் ரயில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்,
  5. 28 ஜூலை 2003 – காட்கோபரில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர் .
  6. 25 ஆகஸ்ட் 2003 – இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் நுழைவாயில் அருகே காரில் இரண்டு வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்
  7. 11 ஜூலை 2006 – தொடர் 209 கொலை, ரயில்களில் ஏழு குண்டுகளில் போகவில்லை
  8. 26 நவம்பர் 2008 முதல் 29 2008 நவம்பர் வரை – ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில், குறைந்தது 172 பேர் கொல்லப்பட்டனர்.
  9. 13 ஜூலை 2011 – வெவ்வேறு இடங்களில் மூன்று ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகள்; 26 பேர் கொல்லப்பட்டனர்.

இவற்றில், நிச்சயமாக பழிவாங்கும் எண்ணம் எல்லைகளை மீறி, இந்தியாவையே அழிக்க வேண்டும் என்ற வெறித்தனம், குரூர சதிதிட்டம், நாசகாரத்தனம் முதலியவை அடங்கியிருப்பது வெளிப்படுகிறது. இது தீவிரவாதத்தை விட மிக-மிக அதிகமானது. அதனை எப்படி, எவ்வாறு, ஏன் அறிவிஜீவிகள் உணராமல் இருக்கின்றனர் என்று புரியவில்லை.  ஒருவேளை அவர்களும் அந்த அதி-தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்று ஆராய வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

02-08-2015

[1] விடுதலை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , சனி, 01 ஆகஸ்ட் 2015 14:47 http://www.viduthalai.in/e-paper/106140.html

[2] கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம், சென்னை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , விடுதலை, 1-8-2015

[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88

[4] நீதிமன்றங்களை அவ்வாறு கூறலாமா, சரி பிறகு உயிர் எடுப்பவர்களை, கொலைகாரகளை, தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை என்னென்று கூறுவார்கள்?