Posted tagged ‘மௌலிம் மோஸின் பின் உஸைன்’

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு!

ஏப்ரல் 22, 2010

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு!

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நேற்று உத்தரவு இட்டது.  மஸ்லுமின்-உம்மதை முகமதியா என்ற முஸ்லிம் அமைப்பின் தலைவர் மௌலிம் மோஸின் பின் உஸைன், சோயப் மாலிக்கின் தந்தையின் பெயர்கள் இரண்டு நபர்கள் இருப்பது மாதிரி குறிப்பிடப் படுகின்றன. சானியா, சானியா தந்தை- இம்ரான் மிர்ஜா, அஜாருத்தீன், இரு காஜிக்கள் உட்பட 14 பேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தினமலரில் 23-04-2010 அன்றைய செய்தி:

சோயப் – சானியா மீது புது வழக்கு: அறிக்கை தர போலீசுக்கு உத்தரவு
ஏப்ரல் 23,2010,00:00  IST

Court news detail

ஐதராபாத்: முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மீது தொடரப்பட்ட புதிய வழக்கு தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி ஐதராபாத் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், சானியா மிர்சா திருமணம் கடந்த 12ம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. ஆனால், சோயப் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவரால் பலமுறை கருச்சிதைவு செய்து கொண்டதாகவும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண், போலீசில் புகார் செய்தார்.  இதனால், சோயப் பின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்யும் சூழல் உருவானது. ஆந்திர அமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர், முஸ்லிம் பெரியவர்கள் தலையிட்டு பிரச்னைக்கு முடிவு கட்டினர். இதையடுத்து சோயப், ஆயிஷாவை, ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்தார். உடனடியாக சானியாவை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் சோயப் வீட்டு சார்பில் இந்த வாரம் திருமண வரவேற்பு நடக்க உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் சோயப்பிடம் ஐதராபாத் போலீசார் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தனர்.

‘சட்டப்படி ஆயிஷாவை, சோயப் விவாகரத்து செய்யவில்லை. இது முஸ்லிம் மதத்தை அவமதிப்பதாக உள்ளது’ எனக் கூறி, ஐதராபாத்தைச் சேர்ந்த மஸ்லுமின் -இ-உமாதோ முகமதியா என்ற அமைப்பு உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் சோயப், சானியா, சானியாவின் தந்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், ஐதராபாத்தைச் சேர்ந்த இரண்டு காஜிகள் உள்ளிட்ட 14 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஐதராபாத் கூடுதல் மெட்ரோபாலிடன் தலைமை மாஜிஸ்திரேட் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து விசாரித்து, அடுத்த மாதம் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும் படி பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார். ‘கோர்ட் உத்தரவை தொடர்ந்து புகார் கூறப்பட்டுள்ள 14 பேரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்’ என, துணை கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.