Posted tagged ‘மோசடி’

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை – வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

நவம்பர் 2, 2022

திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரைவழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

திருக்குறளை வைத்து பணம் டிபாசிட் பெற்று மோசடி செய்த ஷேக் முகைதீன்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு விசாரணையை, மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் முடிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது[1]. மதுரை, சின்ன சொக்கிகுளம் ஹக்கீம் அஜ்மல்கான் ரோட்டில், பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டது[2]. இங்கு, ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து, 900 ரூபாய் முதிர்வுத் தொகை வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது[3]. இத்தவறான வாக்குறுதியை நம்பி, 45 ஆயிரத்து, 501 பேர், 65 கோடியே, 46 லட்சத்து, 87 ஆயிரத்து, 508 ரூபாய் முதலீடு செய்தனர்[4]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல் ஏமாற்றியதாக நிறுவனம் மற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் உட்பட சிலர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், 2010ல் மோசடி வழக்கு பதிந்தனர்[5].  இது பற்றிய விவரங்களை, எனது முந்தைய, சென்ற வருட பதிவில் காணலாம்[6].

பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் முதல் ஷேக் முகைதீன் வரை (2010-2021)[7]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[8]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ் துறையில் விரல் ரேகை பிரிவு நிபுணராக 1970ல் சேர்ந்தார். 2005ல் விருப்ப ஓய்வு பெற்றேன். சென்னையில் பசிபிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கியது. அதைப்பார்த்து, தனியாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மதுரையில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினேன். இதன் நிர்வாக இயக்குனர்களாக நானும் (ஷேக்முகைதீன்), எனது மனைவி மனைவி ஜானு, மகன்கள் சர்தார் உசேன், யாகூப் உசேன் மற்றும் சிவக்குமார், முபாரக்அலி ஆகியோர் இருந்தோம்”.

2011ல் விசாரணைக்கு வழக்கு வந்தது: 06-05-2010 அன்று ஷேக் முகைதீன் கைது செய்யப் பட்டார். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்தாண்டு டிசம்பர் 2009 வரை லாபத் தொகையை கொடுத்தார். இதன் பின், காலம் தாழ்த்தினார். சிலர், போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, முதலீடு பணத்தை திருப்பிக் கொடுத்தார். இன்னும் வாங்காதவர்கள் நேற்று நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த தேவேந்திரன், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, ஷேக் மைதீனை இன்ஸ்பெக்டர் நேதாஜி கைது செய்தார். முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

2022ல் மறுபடியும் விசாரணைக்கு வழக்கு வந்தது: டான்பிட் எனப்படும் மதுரை முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது[9]. பாதிக்கப்பட்டோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எம். நிர்மல்குமார் முன் முறையிட்டதாவது: “டான்பிட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹுசைன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டான்பிட் நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் முன்னேற்றம் இல்லை. விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, ‘குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எங்கள் தரப்பில் தாமதம் ஏற்படவில்லை. 2,685 சாட்சிகளை விசாரித்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கத் தயார்’ என, தெரிவித்தது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றடான்பிட்நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், எதிர்மனுதாரர்கள் மனுக்கள் மேல் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.

மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும்: ஆக, இதை எதிர்த்து மேல்முறையீடு செய்து, உச்சநீதி மன்றத்திற்குச் சென்று காலந்தாழ்த்தி இருப்பதும் தெரிகிறது. அதனால் தான்  முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது, என்றாலும், ஷேக் முகைதுனுக்கு ஏதோ ஆதரவு உள்ளதால், இது நடந்துள்ளது. சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்றாலும், இழுத்தடிப்பு வேலை நடந்துள்ளது.  நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. நீதிபதி, ‘பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி கீழமை நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை மாதந்தோறும் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளார். இப்பொழுது நவம்பர் 2022, அதாவது, மே 2023ற்குள் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வழக்கு முடிய வேண்டும். என்னாகுமோ பார்க்கலாம்.

வேதபிரகாஷ்

02-11-2022


[1] தமிழ்.இந்து, திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, செய்திப்பிரிவு, Published : 01 Nov 2022 06:39 AM; Last Updated : 01 Nov 2022 06:39 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/890545-order-to-close-the-case-in-6-months.html

[3] தினமலர், திருக்குறள் புத்தகம் விற்பனை மோசடி விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு,  தமிழகம் செய்தி, Added : நவ 02, 2022  00:34

[4] https://www.dinamalar.com/news_detail.asp?

[5] ஜி.7.தமிழ், திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு, Order to close the case in 6 months, 1 day ago g7tamil

[6]  வேதபிரகாஷ், திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை,  ஆகஸ்ட் 8, 2021.

[7]  தினமலர், மோசடி நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளுக்கு ‘சீல்’, மே 10,2010,00:00  IST

[8] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18450

[9] https://g7tamil.in/tag/%E0%AE%B0%E0%AF%82-65-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/

தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது!

ஜூலை 12, 2021

தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது!

1970 களிலிருந்து நடந்து வரும் வியாபாரம்: தமிழகத்தில், தமிழக அரசியல்வாதிகளின் தொடர்பு, நேரிடையாக அல்லது மறைமுகமாக வைத்திருந்து, அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருகிறேன் என்று லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, வேலை வாங்கிக் கொடுப்பதும், பல நேரங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதாக ஏமாற்றுவதும் வாடிக்கையான விவகாரமாக 1970களிலிருந்து இருந்து வருகிறது. இதில் திராவிடக் கட்சிகள் எதுவும் சளைத்தவை அல்ல. குறிப்பாக, பாஸ்போர்ட், விசா, ஃபோரக்ஸ், டிராவல்ஸ் என்ற போர்வையில் ஆரம்பித்து, பணி நிரந்தரம் செய்வது, பணி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றில் ஈடுபட்டு, தொடர்ந்து கோடிகளில் சம்பாதிப்பது, ஒரு வேலையாகவே இருந்து வந்துள்ளது. அதற்காக அலுவலகம் எல்லாம் வைத்து, நடத்தி, ஏமாற்றுவது என்பது கைவந்த கலை. இதில் மாட்டிக் கொள்பவகள் சிலர், ஆனால், மாட்டிக் கொள்ளாமல், பரம்பரையாக செய்து வரும் நபர்களும், கம்பனிகளும் இருக்கின்றன. இதற்கான ஏஜென்டுகள், எடுபிடிகள் அங்கங்கு இருந்து, ஆள் பிடித்துக் கொண்டு வருவதும் சகஜமான விசயமே.


போலியான அரசு ஆணை நகல்களை கொடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்யும் கும்பலின் கைவரிசையை போலீசாரால் ஒழித்துக்கட்ட முடியவில்லை. அரசு வேலையில் மோகம் கொண்டு அதற்காக குறுக்கு வழியில் பணம் கொடுப்பவர்களை இந்த கும்பல் தங்கள் வலையில் விழவைத்து விடுகிறது. இதுபோன்ற ஒரு மோசடி கும்பலின் ஆசை வலையில் சிக்கி 85 பேர் பணத்தை வாரி கொட்டி உள்ளனர்[1]. அந்த மோசடி கும்பல் வேலை கிடைத்து விட்டது என்பது போன்ற தோற்றத்தை காட்ட, போலியான அரசு ஆணை நகல்களை கொடுத்து ரூ.4½ கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியதாக முதலில் புகார் கூறப்பட்டது[2]. ஏமாந்தவர்கள் பட்டியலில் உள்ள ஆனந்தி என்ற பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து முறையிட்டார்[3]. கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்[4]. அதன்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்யப்பட்டது[5]. கடந்த மாதம் ஜூன் 30-ம் தேதி 3 பேரையும் கைது செய்தனர்[6].

அரசியல் தொடர்புமுஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூத்தின் மகள், மகளிர் அணி தலைவர்: சென்னை, திருவான்மியூரை சேர்ந்தவர் ரேஷ்மா தாவூத்,35 (Reshma Dawood, State secretary of the Tamil Manila Muslim League). இவர், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூத்தின் மகள். இவரும், வளசரவாக்கம், காமராஜர் சாலையை சேர்ந்த நந்தினி, 37; இவரது கணவர், அருண் சாய்ஜி, 36 ஆகியோர் (of Epic Lakshmi Condominium, Valasaravakkam.), அரசு வேலை வாங்கித் தருவதாக, 150க்கும் மேற்பட்டோரிடம், 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்[7]. முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் ரேஷ்மா தாவூத் மீது ஏற்கெனவே 2016, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் மத்திய குற்றப்பிரிவு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலைவாய்ப்பு மோசடி, குற்றம் கருதி மிரட்டல் ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது[8]. ஆக, இந்த நதினி-சாய்ஜி என்பது, ஒரு முகத் தோற்றமே அன்றி, பின்னணியில், அரசியல் கட்சிக் காரர்கள் வேலை செய்வது / செய்தது புலனகிறது. ஏனெனில், அரசியல் ஆதரவு இல்லாமல், இத்தகைய வேலைகளை செய்ய முடியாது.

போலி அரசு பணி நியமன ஆணைகள், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல், முத்திரைகள் கைப்பற்ரப் பட்டன: இவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் [The Central Crime Department (CCB)] கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பலரிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்த இந்த நபர்கள், அந்த பணத்தில், சொகுசு கார் மற்றும் நிலம் வாங்கி குவித்தது தெரிய வந்துள்ளது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், இவர்களின் வீடு மற்றும் அலுவலங்களுக்கு அழைத்துச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும், தமிழக அரசின் அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவி பொது மேலாளர், தமிழ்நாடு மின் சார வாரியத்தில் உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, சத்துணவு அமைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து போலியாக அனைவருக்கும் பயிற்சி அளித்து மோசடி செய்தது தெரியவந்தது[9]. அதாவது, நம்பிக்கை உண்டாக்கும் வகையில் அத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன என்றாகிறது. அப்போது, போலி பணி நியமன ஆணைகள், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல், குற்றத்திற்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்[10]. கிடுக்கிப்பிடி விசாரணையில், இவர்கள் மோசடி செய்த ரூபாயில், கார் மற்றும் நிலம் வாங்கி குவித்தது தெரியவந்தது[11]. கார் மற்றும் சொத்து ஆவணங்களையும், போலீசார் 09-07-2021 அன்று பறிமுதல் செய்துள்ளனர்[12].

2016ல் ஏமாற்றியதாக புகார்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவராக இருப்பவர் தமீம் மரைக்காயர் (36). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: “எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் உள்ளது. கட்சியின் தலைவராக ஷேக் தாவூத்தும், பொதுச் செயலாளராக ரேஸ்மா தாவூத் (சேக் தாவூத் மகள்), பொருளாளராக ஜலாலூதீன் (ஷேக் தாவூத் மருமகன்) உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 2016 சென்னை அலுவலகத்தில் வைத்து ஷேக் தாவூத் என்னிடம் அதிமுக கூட்டணியில் நமக்கு 3 சீட்கள் கிடைக்கும். அதில், உனக்கு ஒரு சீட் தருகிறேன். அதற்கு நீ ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 22ம் தேதி 2016 ஜலாலூதீன் வங்கி கணக்கிற்கு  ரூ.10 லட்சம் செலுத்தினேன். தற்போது, ஷேக் தாவூத் மட்டும் அதிமுக கூட்டணி சார்பில் கடையநல்லூர் தொகுதியில் நிற்க இடம் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு சீட் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் தற்போது பணத்தை தர முடியாது என்று ஷேக் தாவூத் மிரட்டுகிறார். என்னைப்போல பலரிடம் சீட் வாங்கி தருவதாக ஷேக் தாவூத்தும் அவரது மகள், மருமகனும் ஏமாற்றியுள்ளனர். எனவே, என்னிடம் சீட் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்த ஷேக் தாவூத், ரேஸ்மா தாவூத், ஜலாலூதீன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது[13]. இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்[14].

செக்யூலரிஸ பாணியில் செய்தி வெளியிட்டு அமைதியான விவகாரம்: வழக்கம் போல, இச்செய்தியும் சிறியதாக போடப் பட்டு, ஒரே நாளில் அமைதியாக்கப் பட்டது. அரசியல் கட்சி பிரமுகர் சம்மந்தப் பட்டிருப்பது, அதிலும், மைனாரிட்டி-முஸ்லிம் என்றதால், அமுக்கி வாசித்து, முடித்து வைக்கின்றனர் என்று தெரிகிறது. சிர்கான் இன்டெர்நேஷனல்  (Sircon Internatinal LMT), சிர்கான் ஏர்வேஸ், பிரீமியர் டூர்ஸ் டிராவல்ஸ்  (PremierTouries Tavels LMT) போன்ற கம்பெனிகளை வைத்து நடத்துவதாகத் தெரிகிறது[15].முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் ரேஷ்மா தாவூத் மீது ஏற்கெனவே 2016, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் மத்திய குற்றப்பிரிவு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலைவாய்ப்பு மோசடி, குற்றம் கருதி மிரட்டல் ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது, எனும் போது, அரசியல் தாக்கம், ஆதிக்கம், முதலியனவும் வெளிப்படுகிறது. இவ்விசயத்திலும், நந்தினி-சாய்ஜி என்று பிரதானமாக செய்தியில் காணப்படுகிறது, ரேஷ்மா தாவூத் பெயர் குறிப்பிட்டாலும், அமுக்கப் படுகிறது. இதுவும், செக்யூலரிஸ ஊடக செய்தி வெளியீடு, பத்திரிகா-தர்மம் எனலாம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

12-07-2021


[1] தினத்தந்தி, சென்னையில், அரசு வேலைக்காக போலி அரசாணை நகலை காட்டி ரூ.4½ கோடி மோசடி – 3 பேர் கைது, பதிவு: ஜூலை 02,  2021 11:44 AM.

[2] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/02114428/in-Chennai-Rs-40-crore-scam–3-arrested-for-showing.vpf

[3] தினத்தந்தி, அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: கைதான கணவன்மனைவி பரபரப்பு வாக்குமூலம் 150 பேரிடம் ரூ.5½ கோடி சுருட்டியதாக தகவல், பதிவு: ஜூலை 10, 2021 05:14 AM.

[4] https://www.dailythanthi.com/News/State/2021/07/10051459/Fraud-that-the-government-buys-jobs-Arrested-husbandwife.vpf

[5] தமிழ்.இந்து, அரசு வேலை வாங்கித் தருவதாக 150-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.5 கோடி கைவரிசை கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அம்பலம், Published : 10 Jul 2021 03:14 AM; Last Updated : 10 Jul 2021 06:58 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/691427-money-fraud.html

[7] ஈ.டிவி.பாரத், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 கோடி ரூபாய் மோசடி!, Published on: Jul 10, 2021, 10:54 AM IST.

[8] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/5-crore-rupees-scam-claiming-that-the-government-jobs/tamil-nadu20210710105424773

[9] தினகரன், அரசு வேலை வாங்கி தருவதாக 150 பேரிடம் 5 கோடி மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது, 2021-07-10@ 00:05:42.

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=689226

[11] தினமலர், மோசடி பணத்தில் சொத்து குவிப்பு: பறிமுதல் செய்து போலீஸ் அதிரடி, Added : ஜூலை 10, 2021  16:25.

[12]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2799869

[13] தினகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார், 2016-04-30@ 00:36:14.

[14] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=213505

[15] https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=1795

சட்டம் இந்தியர்களுக்கு, குறிப்பாக கிருத்துவ-முகமதியர்களுக்கு சலுகை அளிப்பது ஏன்? –  ஜவாஹிருல்லாவுக்கு ரம்ஜான் முடியும் வரை கைது நடவடிக்கை நிறுத்தி வைப்பு!

ஜூன் 24, 2017

சட்டம் இந்தியர்களுக்கு, குறிப்பாக கிருத்துவமுகமதியர்களுக்கு சலுகை அளிப்பது ஏன்? –  ஜவாஹிருல்லாவுக்கு ரம்ஜான் முடியும் வரை கைது நடவடிக்கை நிறுத்தி வைப்பு!

M H Jawahirullah and four others - CBI charge sheet - 05-10-2011-VP

வெறுப்பை வைத்து, வெறுப்பை வளர்த்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கும்பல்: கோயம்புத்தூர் வன்முறையைப் பற்றி மூண்டும் விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. முகமதிய அடிப்படவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிஹாதித் தீவிரவாதம் அதில் எப்படி வெளிப்பட்டது என்பது தெரிந்த விசயமே. இருப்பினும், ஜவாஹிருல்லாஹ் போன்றோர், “நவம்பர்-டிசம்பர் 1997ல், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது, காவி கும்பல் [saffron hooligans] கடைகளை சூரையாடியது, அதில் கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்……,” என்றெல்லாம் ஜவாஹிருல்லா தனது அக்டோபர்.9. 2011 அறிக்கையில் குறிபிட்டார்[1]. அதாவது, வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற புகார், வழக்கு, நீதிமன்றம், தீர்ப்பு என்ற நிலையில் வெளியியட்ட அறிக்கையில் அவ்வாறு கதை விடுகிறார். இப்பொழுது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம்பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகியான ஜவாஹிருல்லா [M H Jawahirulla] உள்ளி்ட்ட 5 பேரும் சரணடைய ஒருவாரம் விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது, என்று செய்தி வருகின்றது.

Jawahirullahs clarification - 09-10-2011- Milli Gazette

  1. எம். எம். ஜவாஹிருல்லாஹ், தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் [H. Jawahirullah President of Tamilnadu Muslim Munnetra Kazhagam]
  2. எஸ். ஹைதர் அலி [S. Hyder Ali, General Secretary of TMMK]
  3. நிஸ்ஸார் அஹமது [Nissar Ahamed],
  4. ஜி. எம். ஷேக் [G.M. Sheikh]
  5. நல்ல மொஹம்மது களஞ்சியம் [Nalla Mohamed Kalanjiam].

Jawahirulla exempted from arrest till 26-06-2017

அந்நிய நிதிபெறுவதை ஒழுங்குப்படுத்தும் சட்டப்பிரிவுகளுக்கு எதிராக பணம் பெற்றது: கடந்த 1997-2000ம் காலகட்டத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்அனுமதி பெறாமல், அந்நிய நிதிபெறுவதை ஒழுங்குப்படுத்தும் சட்டம் [Foreign Contribution (Regulations) Act, (FCRA) 1976] பிரிவுகளுக்கு எதிராகவும், டிசம்பர் 15, 1997 – ஜூன் 20, 2000 காலத்தில், கோயம்புத்தூர் முஸ்லிம் உதவி நிதி [Coimbatore Muslim Relief Fund (CMRF) ] என்ற பெயரில், வெ‌ளிநாடுகளில் இருந்து ரூ. 1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 ஐ சட்டவிரோதமாகப் பெற்றது. பிறகு, அப்பணத்தை சௌகார்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்தது. அப்பொழுது அந்த நிறுவனமே பதிவ்வாகவில்லை, அனுமதியும் பெறப்படவில்லை. தமுமுக நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகிய 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது[2]. [120(B), R/W 4(1)(C) AND SECTIONS 23 R/W 6&11 AND U/S 25&22 OF FOREIGN CONTRIBUTION REGULATION ACT 1976, ALLEGATION IS COIMBATORE MUSLIM RELIEF FUND AN ORGANISATION RECEIVED CONTRIBUTION FROM FOREIGN SOURCES WITHOUT GETTING PRIOR PERMISSION FROM CENTRAL GOVT. RCMA 12001-A-0053, DATED 31-02-2001, SPE, CBI-ACP, CHENNAI, C.C.NO. 1123/2004] 19-01-2004 அன்று குற்ரப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது[3]. முதலில் வராத அவர்கள், ஜூன் 15, 2011 அன்று  மாஜிஸ்ட்ரேட் முன்னர் தோன்றியதால், அந்த வாரன்ட் திரும்பப் பெற்றது[4]. செப்டம்பர் 30, 2004ல் நீதிமன்ற இக்குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்கியது[5].  அதற்கு தான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, வாஜ்பாயி அரசு தான் வந்த நிதியைத் தடுத்தது, அரசியல் காழ்ப்புணர்வுடன் ஒன்று வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. மூலமாக, இரண்டு வழக்குகளை போட வைத்தார் என்றேல்லாம் கூறி தனது விலாசம் முதலியவற்றுடன் அறிக்கை விட்டார்[6]. அது மில்லி கெஜட் என்ற முஸ்லிம் நாளிதழில் காணப்பட்டது[7].

 M H Jawahirullah and four others sentenced for fraud - MIDDAY

ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய காலஅவகாசம் வழங்கவும், மேல்முறையீட்டு காலம் வரை தங்களுக்கு ஜாமீன் வழங்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்: இந்த வழக்கை விசாரித்த பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலிக்கு தலா ஓரா‌ண்டு ‌சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்லமுகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு ‌சிறை தண்டனையும் விதித்து, அனைவருக்கும் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது[8]. இந்தத் தீர்ப்பை சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்தது[9]. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய காலஅவகாசம் வழங்கவும், மேல்முறையீட்டு காலம் வரை தங்களுக்கு ஜாமீன் வழங்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்[10]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் சரணடைய வரும் 28-ம் தேதி வரை விலக்கு அளித்து, அதுவரை அவர்களை போலீஸார் கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்[11].இவ்வாறு, மத காரணங்களுக்காக, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, செக்யூலரிஸ கொள்கைகளின் படி சரியாகத் தெரிவில்லை[12]. மேலும் சரண்டர் என்றால், கைது என்பது அமுங்கி விடும். ஊடக பப்ளிசிடி இல்லாமல் தப்பித்துக் கொள்ளல்லாம். எப்படியும் பைலில் / பிணையில் வெ;ளியிலும் வரலாம். PTI செய்தி என்பதனால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே வந்துள்ளது[13].

Jawahirulla exempted from arrest till 26-06-2017-2

சட்டம் இந்தியர்களுக்கு, குறிப்பாக கிருத்துவமுகமதியர்களுக்கு சலுகை அளிப்பது ஏன்?: முன்பு, ஒரு கிருத்துவ பாதிரிக்கு, தண்டனை கொடுக்காமல், வருத்தப் படுங்கள் [repentance] என்று ஆணையிட்டது ஞாபகம் இருக்கலாம். அதாவது, அவர்களது மதநம்பிக்கையின் படி, வருத்தப் பட்டால், பாவம் விலகி, அவர் நல்லவராகத் திருந்தி விடுவாராம். அப்படியென்றால், எல்லா குற்றவாளிகளுக்கும் அத்தகைய தண்டனை கொடுக்கலாமே? இப்பொழுது, ரம்ஜான் மாதம் என்பதால் 28-06-2017 வரை சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என்று நீதிபதி, போலீஸாருக்கு, உத்தரவிட்டிருப்பது, சட்டத்திற்கு முரணானது போன்றேயுள்ளது. ஏனெனில், மற்றவர்களுக்கு, மதரீதியிலாக, இத்தகைய சலுகைகளைக் கொய்டுப்பதில்லை. அப்படியிருக்கும் போது, கிருத்துவர்களுக்கும், முகமதியர்களுக்கும், இத்தகைய சலுகைகளை ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. முன்னர், காஞ்சிமட சங்கராச்சாரியார், தீபாவளி அன்றே கைது செய்யப்பட்டது கவனிக்கப் பட வேண்டும். பிறகு சட்டம், நீதி எல்லோருக்கும் ஒன்றாகத்தனே செயல்பட வேண்டும். ஆக செக்யூலரிஸ நாட்டில் இப்படியும் நடக்கும் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

22-06-2017

Jawahirulla exempted from arrest till 26-06-2017-3

[1] Coimbatore a commercially vibrant city in Tamilnadu witnessed unprecedented carnage against Muslims in November-December 1997. 19 Muslims were killed and properties worth several million rupees were looted by saffron hooligans who were aided and abetted by the local police. Tamilnadu has never witnessed such a large scale riot and arson.

http://www.milligazette.com/news/2449-dr-jawahirullah-s-clarification-coimbatore-indian-muslims-riots-relief-work-news

[2] DNA, Madras HC exempts TMMK leader from surrendering in FCRA case, Wed, 21 Jun 2017-08:11pm , PTI.

[3] The Hindu, Non-bailable warrants recalled, CHENNAI:, JUNE 15, 2011 00:00 IST ; UPDATED: JUNE 15, 2011 04:10 IST.

[4] A city magistrate court on Tuesday recalled the non-bailable warrants of arrest issued against an MLA and four others in connection with a case relating to alleged violation of Foreign Contributions Regulation Act. On Monday, the Additional Chief Metropolitan Magistrate, Egmore, had issued the warrants against M.H.Jawahirullah, MLA, and four others in connection with a case in which the prosecution alleged that they had collected foreign contribution to the tune of Rs.two crore in the name of “Coimbatore Muslim Relief Fund,” violating the law. The charge sheet had been filed in the case. As the accused did not turn up in the court on Monday, the Additional CMM ordered issue of the warrants against them. On Tuesday, the five came to the court and the warrants against them were recalled. — Special Correspondent

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nonbailable-warrants-recalled/article2105543.ece

[5] http://www.dnaindia.com/india/report-madras-hc-exempts-tmmk-leader-from-surrendering-in-fcra-case-2479714

[6] The CMRF did not receive any fund from any Foreign Government, Foreign Agency or Foreign Citizens. However the NDA Government led by Vajpayee slapped two cases against Coimbatore Muslim Relief Fund. One was through the Income Tax Department and another one was by the Central Bureau of Investigation. The Vajpayee government slapped these cases with political vendetta.

http://www.milligazette.com/news/2449-dr-jawahirullah-s-clarification-coimbatore-indian-muslims-riots-relief-work-news

[7] The Milli Gazette, Dr Jawahirullah’s clarification,  Published Online: Oct 09, 2011.

M.H. Jawahirullah, President, Tamilnadu Muslim Munnetra Kazhagam, 7 Vada Maraicoir Street, Chennai 600 001; Email: jawahir[@]tmmk.in;  9 October 2011.

[8] தமிழ்.ஒன்.இந்தியா, வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி, By:  Mathi , Published: Monday, June 19, 2017, 15:10 [IST]

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html

[10] தி.இந்து.தமிழ், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் சரணடைய ஒருவாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு, Published: June 22, 2017 08:56 ISTUpdated: June 22, 2017 08:56 IST.

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9732564.ece

[12] India Today, Madras HC exempts TMMK leader from surrendering in FCRA case, June 21, 2017 | UPDATED 20:05 IST.

[13] http://indiatoday.intoday.in/story/madras-hc-exempts-tmmk-leader-from-surrendering-in-fcra-case/1/984305.html

சோயப் மாலிக்கின் உறவால் கர்ப்பமானார் ஆயிஷா – இதிலென்ன பிரச்சினை?

ஏப்ரல் 6, 2010

சோயப் மாலிக்கின் உறவால் கர்ப்பமானார் ஆயிஷா – உறவினர்

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 6, 2010, 9:57[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/04/06/ayesha-was-pregnant-says-relative.html

ஹைதராபாத்: சோயப் மாலிக்குடன் ஏற்பட்ட உறவால் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் பின்னர் கர்ப்பம் கலைந்து விட்டது. இது சோயப்புக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் ஆயிஷாவின் உறவினர்.

இதுகுறித்து ஆயிஷாவின் உறவினரான ஷம்ஸ் பாபர் கூறுகையில், சோயப் மாலிக், ஆயிஷா திருமணம் நடந்த்துடன் அனைத்தும் முடிந்து விடவில்லை. மாறாக சோயப் மூலம் ஆயிஷா கர்ப்பமடைந்தார். ஆனால் அது பின்னர் கலைந்து விட்டது. இது சோயப்புக்குத் தெரியும்.

இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இருவரும் 14 முறை சந்தித்துள்ளனர்.

ஆயிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய துன்புறுத்தினார் சோயப் மாலிக் என்றார் ஷம்ஸ்.

சோயப்புக்கு எதிராக வலுவான ஆதாரம் – ஆயிஷா வக்கீல்

இதற்கிடையே, சோயப் மாலிக் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டும். கல்யாணத்தை நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்று ஆயிஷாவின் பாகிஸ்தான் வக்கீல் பாரிஸ்டர் பரூக் ஹசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது முக்கிய குறிக்கோள், சோயப் மாலிக்கின் மோசடியை அம்பலப்படுத்துவதுதான். அவருக்கும், சானியா மிர்ஸாவுக்கும் இடையே நடக்கவுள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்று வருகிறோம். இடைக்காலத் தடையை நிச்சயம் பெறுவோம்.

சோயப் – சானியா கல்யாணத்தை தடுத்து நிறுத்தத் தேவையான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார் ஹசன்.

சோயப் பாஸ்போர்ட் முடக்கம்; கைது ஆவாரா? அதிரடி திருப்பங்கள்
ஏப்ரல் 06,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7129

Front page news and headlines today

ஐதராபாத் : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணக்க உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை, ஐதராபாத் போலீசார் பறிமுதல் செய்து முடக்கினர். வரதட்சணை கொடுமை, மிரட்டல், திருமண மோசடி உள்ளிட்ட குற்றங்களின் கீழ் மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், வரும் 15ம் தேதி டென்னிஸ் நட்சத்திரம் சானியாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த நேரத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண் சர்ச்சையை கிளப்பினார்.தனக்கும், சோயப் மாலிக்கிற்கும் இடையே, 2002ல் தொலைபேசி மூலம் திருமணம் நடந்ததாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னை முறைப்படி சோயப் மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஆயிஷாவின் தந்தை சித்திக் ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அச்சுறுத்தல் (506), திருமண மோசடி(420), வரதட்சணை கொடுமை (498, ஏ) உள் ளிட்ட பிரிவுகளில் மாலிக் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘பாஸ்போர்ட்’ பறிமுதல்: இதில் அதிரடித் திருப்பமாக, திருமணம் தொடர்பாக கலந்து ஆலோசிக்க, சானியா வீட்டுக்கு வந்த சோயப் மாலிக்கிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் கூறியதாவது: மாலிக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. சானியா வீட்டில் உள்ள மாலிக், போலீசாருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தார். அப்போது சானியாவும் உடனிருந்தார்.மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது ‘பாஸ்போர்ட்’ மற்றும் மொபைல்போன் தற்போது எங்கள் வசம் உள்ளது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதை விமான நிலைய மற்றும் குடியேற்ற அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளோம்.மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு முதல் ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும். இப்பிரச்னைக்கு 15ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டியுள்ளது.இவ்வாறு திருமலா ராவ் கூறினார்.

அதே சமயம் மாலிக் மீது குற்றம் சாட்டியுள்ள ஆயிஷாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலிக்கை ஆயிஷா திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் உண்மை தானா என்பதை கண்டறிய இந்த சான்றிதழ், நாசிக்கில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. ஆயிஷா, 2000ம் ஆண்டு மாலிக்கை சந்தித்தது தொடர்பான, ‘சிடி’க்கள் போலீசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

ஆயிஷாவுக்கு கருச்சிதைவு: சோயப்புடன், ஆயிஷா உடலுறவு கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் திருமணத்துக்கு முன்னதாகவே கருவுற்று பின்னர் அபார்ஷன் செய்து கொண்டார். கர்ப்பம், கருச்சிதைவு செய்து கொண்டது இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை நாங்கள் போலீசிடம் அளித்துள்ளோம் என, ஆயிஷாவின் உறவினரும் டாக்டருமான ஷாம்ஸ் பாபர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘சோயபும், ஆயிஷாவும் ஐதராபாத் ஓட்டலில் தங்கியிருந்த போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் அவரது மனைவி சங்கீதாவும், சோயப்புக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர். சோயப் மாலிக்கிடமிருந்து நாங்கள் பணமோ, வேறெந்த உதவியையோ எதிர்பார்க்கவில்லை. ஆயிஷாவை மணந்து கொண்டதை ஒப்புக்கொண்டு முறைப்படி விவாகரத்து செய்யட்டும். நாங்கள் அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என்றார்.

ஆயிஷாவின் வக்கீல் டபிள்யு ரஹ்மான் குறிப்பிடுகையில், ‘ஆயிஷாவை சந்தித்ததேயில்லை என்கிறார் மாலிக். ஆனால், இருவரும் 2002ம் ஆண்டு முதல் 12 முறை சந்தித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை போலீசிடம் சமர்ப்பித்துள்ளோம்’ என்றார். ஆயிஷாவுடன் சோயப் இருக்கும் போட்டோ படங்களையும் நிருபர்களிடம் காட்டினார்.

ஆனால் சோயப் மாலிக் நிருபர்களிடம், ‘ நான் ஒன்றும் ஆயிஷாவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் வயது 18, அப்போது ஆயிஷாவை ‘ஆபா’ (அக்காள் என்று அர்த்தம்) என்று தான் அழைப்பேன். அவர் ஏன் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார்’ என்று கேட்டார்.

அருகில் இருந்த சானியா , எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். எதிர்காலக் கணவர் பற்றி இப்படி எல்லாம் தகவல் வெளிவருவது பரபரப்பாக இருக்கிறது’ என்றார்.

ஒத்துழைப்பு: சோயப் மாலிக் குறிப்பிடுகையில், ‘போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அதுவரை இந்தியாவை விட்டு செல்ல மாட்டேன். நானும், சானியாவும் கவுரவமான குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். ஆயிஷாவுடன் திருமணமானது தொடர்பான கேள் விக்கு பதில் சொல்வது, எங்களுக்கு கஷ்டமாக உள்ளது’ என்றார்.

பாக்., உதவ தயார் : சோயப் மாலிக்குக்கு எந்த உதவியையும் செய்ய அந்நாட்டு அரசு காத்திருக்கிறது என, பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரங்களை இந்திய ஹைகமிஷனிடம் அந்நாட்டு அரசு கோரியுள்ளது.இதற்கிடையே ஆயிஷாவின் தந்தையின் சார்பில் பாகிஸ்தான் கோர்ட்டிலும் மாலிக் மீது திருமண மோசடி வழக்கு தொடரப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மாலிக்குக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்.மாலிக் தான் செய்த ஊழல் பணம் ஒன்பது கோடி ரூபாயை சானியாவிடம் கொடுத்துள்ளதாக, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.