Posted tagged ‘மோகம்’

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (1)

ஒக்ரோபர் 11, 2015

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (1)

வில் ஹியூம் சூளைமேட்டில் பிடிபட்ட பிடோபைல்

வில் ஹியூம் சூளைமேட்டில் பிடிபட்ட பிடோபைல்

சூளைமேடும், பிடோபைல்களும்: வில் ஹியூம் என்ற அதிபிரபல பிடோபைல் சூளைமேட்டில் பிடிபட்டது, சென்னைவாசிகள் மறந்திருப்பர். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிடோபைல் என்கின்ற குழந்தை கற்பழிப்பாளிகளின் நடமாட்டம், நிரந்ததரமாகத் தங்கியிருந்தத் தன்மை முதலியன கடந்த 25 ஆண்டுகளில் அதிகமாக உணரப்பட்டன. அவர்களில் பலர் அந்நியநாட்டவர்களாக இருந்துள்ளனர்[1]. பெரும்பாலும், அவர்கள் தங்களது பணபலத்தினால், அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளிவராமல் மறைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அவ்வாறு பல்லாண்டுகளாக வாழ்வதற்கு உள்ளூர்காரர்கள் தாம் உதவி செய்துள்ளனர். அவர்களில் சிலர், அவரளைப் பார்த்து தாங்களும் அத்தகைய பாலியல் வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம். ஒருவேளை அவர்கள் அத்தகைய அந்நியநாட்டவர்களின் நடவடிக்கைகளை அறிந்து, புகார் செய்திருக்கலாம், ஆனால், அவ்வாறு செய்யாததால், 25 ஆண்டுகள் என்று வாழ்ந்துள்ளனர். குறிப்பாக வில் ஹியூம் என்ற உலகமகா பிடோபைல் கடைசியாக சூளைமேட்டில் தான் பிடிபட்டான்[2]. இதைத்தவிர பாட்ரிக் மாத்யூஸ் என்ற பாதிரி 20ற்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கற்பழித்தான்[3]. அவ்விடமும் அருகில் தான் இருந்தது.

பிடோபைல்கள் சென்னையில் கைது

பிடோபைல்கள் சென்னையில் கைது

இங்கிலாந்தைச் சேர்ந்த பிடோபைல்கள் கைது[4]: சூளைமேட்டிற்கு அருகில், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ளது செயின்ட் ஜார்ஜ் அனாதை ஆசிரமம் ஆகும். ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராக வேலை செய்து வந்தார்[5]. பேடிமான் டிரஸ்ட்[6] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது. இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[7]. சென்னை போலீஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விசயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்றதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. அவனை கைது செய்து கொண்டு, இங்கிலாந்தில் விசாரிக்கிறோம் என்று கூட்டிச் சென்று விட்டனர்.  அலெக்ஸ் தாம்ப்ஸன் என்ற அந்த டிரஸ்டின் தலைவியைக் கேட்டபோது, பேசுவதற்கு மறுத்துவிட்டார். பிறகு, அவர் சொன்னதாவது, “நாங்கள் இந்த வழக்கை மிகவும் சிறப்பாக கையாண்டு வருகிறோம். அதனால், ஊடகங்களுடன் பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.” உடனே ஊடகக்கரார்களும் பவ்யமாக இருந்து விட்டனர் போலும்!

Mathews abused 9 students TOI June.17, 2009

Mathews abused 9 students TOI June.17, 2009

2010-15 ஆண்டுகளில் தொடர்ந்து பல அனைத்துலக, அனைத்து இந்திய ரீதியில் செயல்பட்ட பிடோபைல்கள் சென்னையில் பிடிப்பட்டது: கிருத்துவம் மட்டுமல்லாது, மற்ற மதங்களில் பிடோபைல்கள் இல்லையோ என்று நினைக்க முடியாது என்ற நிலையில், இஸ்லாத்தைச் சேர்ந்த பிடோபைல்களும் இருந்துள்ளனர். நஷீரின் உதாரணம் அதில் வருகிறது எனலாம். இங்கு கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் என்று ஆராய்ச்சி செய்வது தொடர்ந்து அதிகமாக அத்தகைய மதத்தினர் அத்தகைய பாலியல் குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டு வருவதால் தான் கவனத்திற்கு வருகிறது. ஆனால், அவர்களைப் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டன. பொதுவாக, இஸ்லாத்தில் இடைக்காலத்தைய பழக்க-வழக்கங்கள் இப்பொழுதும் தொடர்ந்து வருவதை சரித்திராசிரியர்கள், சமூகவியல் வல்லுனர்கள், மனிதவியல் விற்பன்னர்கள், முதலியோர் அறிந்திருந்தாலும், இந்தியாவில் அவற்றை எடுத்துக் காட்டாமல் மறைத்து வந்துள்ளனர். நவம்பர் மாதம் வந்தாலே சென்னையில் கலக்கலான விஷயங்கள் தாம். சென்ற நவம்பரில் 2009 இன்டர்போல் சொன்ன சூளைமேட்டில் இருந்த வில் ஜியூமை பிறகு பாய்ந்து பிடித்தனர். வில் ஹியூம்ஸ்[8], ரப்பி ஆலன் ஜே, பாட்ரிக் மாத்யூஸ்[9], பிறகு எரிக் மார்டின் (53) என்ற இன்னுமொரு ஃபிடிடோஃபைல் சென்னையில் 16-11-2010 அன்று மாதவரத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

Alex Thompson of Bateman defending Patrick Matthews 2009

Alex Thompson of Bateman defending Patrick Matthews 2009

நஷீர் பெண்குழந்தையை திட்டமிட்டு பாலியல் வக்கிரகத்திற்கு உட்படுத்தியது: “சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவரது 4 வயது மகள் சுபத்ரா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அதே பகுதியில் உள்ள ஒரு மெத்தைக் கடையில் வேலை பார்ப்பவர் நஷீர் (31). கடந்த 2014 ஏப்ரல் 24ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுபத்ராவை நஷீர் தனது  கடைக்குள் கூட்டிச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்”, என்கிறது தினகரன்[10]. சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தவர் நஷீர் (வயது 32). இந்த கடைக்கு அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி அவ்வப்போது விளையாட வருவார். கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் 26–ந் தேதி அந்த சிறுமி விளையாட வந்தபோது, நஷீர் அந்த குழந்தையை கடைக்குள் தூக்கிச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார்[11]. தினமலர், “சூளைமேட்டை சேர்ந்தவர், நஷீர், 32; மெத்தை கடை ஊழியர். 2014ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமியை, கடையில் வைத்து, பாலியல் தொந்தரவு செய்தார் என, சிறுமியின் தந்தை சூளைமேடு போலீசில் புகார் செய்தார்” என்கிறது[12].  சிறுமி விளையாடிக் கொண்டே தானாகவே உள்ளே வந்தாளா அல்லது நஷீர் தூக்கிக் கொண்டு வந்தானா என்ற விசயத்தை ஊடகங்கள் தெளிவாகக் குறிப்பிடா விட்டாலும், அவனது குற்றத்தை நிரூபித்து தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக நஷீர் திட்டமிட்டே அப்பெண் குழந்தையை பாலியல் வக்கிரகத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறான் என்றது நிரூபிக்கப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

10-10-2015


 

[1] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/

[2]https://lawisanass.wordpress.com/2010/04/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

[3] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/

[4] இங்கிலாந்தைச் சேர்ந்த கிருத்துவ பாதிரிகள், குழந்தை பாலியல் குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  1. Derek Slade — Headmaster, Anglo-Kutchi Medium School, Gujarat.
  2. Jonathan Robinson — Funder, Grail Trust Child Care home, Tirunelveli.
  3. Patrick Matthews — volunteer and sports tutor, St. George’s Anglo-Indian School, Chennai.
  4. Allan Waters and Duncan Grant – former British Navy officers who ran Anchorage Orphanage in Mumbai.
  5. Robert Dando — Baptist Minister who was arrested in the U.S. on child sex charges. He worked with a children’s charity in Goa.
  6. Paul Meekin —– Principal, Trios International School, Bangalore.

http://www.thehindu.com/todays-paper/tp-national/known-cases-of-uk-nationals/article4020740.ece

[5]  Patrick Matthews, a 62-year-old UK national who was accused of sexually abusing several boys of St George Anglo-Indian Higher Secondary School in the city between 2003 and 2006, has been arrested by the UK police. Sources told TOI that the police arrested Matthews from the UK on Thursday night (Aug 1, 2009, 12.21AM IST) based on evidences collected from Chennai. A four-member team of Gloucestershire Constabulary was in Chennai for two weeks in June interviewing children and staff of the school, besides collecting evidence from a beachside retreat in Kovalam, near Chennai, where Matthews allegedly took the boys to. “We have strong evidence against Matthews,” detective inspector Mark Little who led the team of investigators had told TOI before returning to the UK on June 24. After interviewing 14 children and 16 adults, the team concluded that Matthews, who worked as a volunteer in the school, had sexually abused at least nine students. The UK-based Batemans Trust, through which Mathews had come to the school as a volunteer, had filed a complaint alleging that he sexually abused students at the school.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Abuser-of-city-school-kids-held-in-UK/articleshow/4843819.cms

[6]  http://www.batemans.org.uk/

[7]http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Mathews+sexually+abused+9+students&artid=NMIqdTdvmew=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SEO=St+George%E2%80%99s+Anglo+Indian+Higher+Secondary+School&SectionName=rSY|6QYp3kQ=

[8] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ்  ஊடகங்கள்– II , https://socialterrorism.wordpress.com/2009/12/06/will-heum-buwaneswari-devanathan-and-media-2/

[9] வேதபிரகாஷ், வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?,

https://socialterrorism.wordpress.com/2010/02/20/will-heum-horowitz-alan-chennai-haven-for-pedophiles/

[10] தினகரன், சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை; மகளிர் மன்றன் தீர்ப்பு, அக்டோபர்.07, 2015: 01:06:54, புதன்கிழமை.

[11] தமிழ்.வெப்.துனியா, 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை, Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (07:37 IST)

[12] தினமலர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ஊழியருக்கு 5 ஆண்டு சிறை, அக்டோபர்.07, 2025: 03:36.

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (3)

ஓகஸ்ட் 7, 2015

ஆம்பூர் கலவரம்முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன்அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (3)

Pavitra-Pazhani Ambur

Pavitra-Pazhani Ambur

பவித்ராவின் மறுபக்கம் (நக்கீரன்)[1]: மாயமான பவித்ராவை மையங்கொண்டே ஷகீல் அகமது மரணமும், ஆம்பூர் கலவரமும் வெடித்திருக்கிறது. தற்போது பவித்ரா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். பவித்ரா யார்? இவர் மாயமானது ஏன்? கண்டு பிடிக்கப்பட்டது எப்படி? என்று கேள்விகளை எழுப்பி பவித்ரா புராணம் பாடியியுக்கிறது நக்கீரன் பத்திரிக்கை. திருவண்ணாமலை மாவட்ட கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்-செல்வி ஆகியோரின் மகள்தான் பவித்ரா. சிறுமியாக இருக்கும் போதே பவித்ராவை, குச்சிப்பாளையத்தில் இருக்கும் அவளது பாட்டி ராதாம்மாளிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டார்கள். அவர்தான் வளர்த்து 10 ஆம் வகுப்புவரை படிக்கவைத்தார். 10ஆம் வகுப்பில் ஃபெயிலான பவித்ராவுக்கு அதற்கு மேல் படிக்க ஆர்வம் இல்லை. ஒருவருடம் வீட்டிலேயே இருந்த அவரை, அவரது மாமா மகனான பழனிக்கு 7 வருடங்களுக்கு முன் கட்டிவைத்தனர்[2]. அப்போது பவித்ராவிற்கு வயது 17. அவரை விட பழனி 10 வயது மூத்தவர். திருமணமான 3 ஆம் வருடம் பவித்ராவிற்கு  ரிஷிதா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை என ஊர்ப்பெண்கள் சிலர் வேலைபார்க்கும்ஷூ’ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா திசை மாறியதைப் பற்றி மாலைமலரின் விவரங்கள்: “சுறுசுறுப்பான கேரக்டர் உடைய பவித்ராவுக்கு குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எனவே வேலைக்கு செல்லப்போகிறேன் என்று அடம் பிடித்தார். இறுதியில் ஆம்பூர் பகுதியில் உள்ள , ’டெல்டா ஷூ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா. டெல்டா ஷூ பிரைவேட் லிமிடெட், பரிதா குழுமத்தைச் செர்ர்ந்த கம்பெனி[3]. அங்கிருந்து அவரது பாதை மாறும் என்று பழனியும் நினைக்கவில்லை. அவரது பெற்றோரும் நினைக்கவில்லை. உடன் பணிபுரிந்த பெண்களும், பவித்ராவின் தோழிகளும் அவரது மனம் தடம் மாற வழிவகுத்தனர். “என்னடி உன் புருசன் இப்படி கன்னங்கரேல்ன்னு இருக்கார். உன்னைவிட இத்தன வயசு மூத்தவரோட எப்படி குடும்பம் நடத்துறே” என்று கேட்டுக் கேட்டே உசுப்பேற்றினர்”, மாலை மலர் இவ்வாறு கூறுகிறது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ கம்பெனியில், சமீல் அகமதுவிடம் தொடர்பு வைத்துக் கொண்டது: ஷூ கம்பெனிகள் சில பெண்கள் பல காரணங்களுக்காக பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அத்தகையோர் மற்றவர்களையும் தம்மை போல ஆக்க முயல்வது வழக்கம். அவ்விதத்தில் தான், பவித்ராவைப் பார்த்து இவ்வாறு கணைகளைத் தொடுத்தனர். அந்த கேள்விகள் பவித்ராவின் மனதில் அதுவரை தோன்றாமல் இருந்த கணவரின் வயதும் நிறமும் திடீரென தவறாக தெரிய தொடங்கியது. இதுவே கணவரிடம் இருந்து பவித்ராவை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தது.  தனது அழகை உயர்வாக நினைத்த அவர் அங்கு பணிபுரிந்த ஷமில் அகமதுவுடன் பழகினார். இது அவரை தவறான வழிக்கு கொண்டு சென்றது என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், ஒரு மணமான பெண்ணுடன் பழக எப்படி மணமான ஷமில் அகமது ஒப்புக்கொண்டார், இயைந்து நடந்தார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஓன்று இருவரும் திருமணம் ஆனவர்கள் மற்றும் வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள். மேலும், ஏற்கெனவே, லவ்-ஜிஹாத் போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன என்பது தெரிந்திருக்கும். அதனையும் மீறி, இடங்கொடுத்திருக்கிறார் என்றால், ஷமீல் அகமதுக்கு ஏதோ உள்-நோக்கம் இருந்துள்ளது என்றாகிறது.

Pazhani with his daughter Rishitha- Ambur issue

Pazhani with his daughter Rishitha- Ambur issue

ஆம்பூரிலிருந்து ஈரோடுக்குச் சென்ற ஷமீல்பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, “மலர் கணவரையும், குழந்தையையும் முற்றிலும் மறக்க தொடங்கினார். ஷூ கம்பெனியில் பவித்ராவின் தவறான நடவடிக்கையை அறிந்த நிர்வாகம் அவரை வேலையை விட்டு தூக்கியது. ஷமில் அகமதுவையும் நீக்கினர். அதன்பின்னர் ஷமில் அகமது ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றார்.  அதன்பின் பவித்ராவை ஷமில்அகமது ஈரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார். பின்னர் பயத்தினால் பவித்ராவிடம் ரூ.300– கையில் கொடுத்து அவரை குச்சிபாளையத்திற்கு செல்லும்படி அனுப்பி வைத்து உள்ளார்[4]. அவரது நினைவாகவே பவித்ரா இருந்தார். அவருடன் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய படி இருந்தார். இதை அறிந்த அவரது கணவர் பழனி ஆத்திரம் அடைந்தார். ஒருநாள் செல்போனை பிடுங்கி எறிந்து உடைத்தார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் கணவருடனான விரிசல் அதிகமானது.  தனது மனவிருப்பப்படி நடந்து கொள்வதற்காக கணவரையும், குழந்தையையும் விட்டு பிரிந்து போக பவித்ரா முடிவு செய்தார்[5].  ஒரு வருடம் ஈரோட்டில் தனிகுடித்தனம் நடத்தியிருக்கிறார்கள் என்றால், எல்லோரிடத்திலும் அதிகமாகவே பொய் சொல்லியிருந்திருக்க வேண்டும்.

ஆம்பூர் பவித்ரா.- பழனி

ஆம்பூர் பவித்ரா.- பழனி

மனைவி பவித்ராவை தேடிய புருஷன் பழனி: மாலை மலர் தொடர்கிறது, “கடந்த 17.5.2015 அன்று வீட்டைவிட்டு சென்றார். பல இடங்களில் பவித்ராவை தேடினர். பழனியும் பவித்ரா பணிபுரிந்த இடங்களுக்கு சென்று விசாரித்தார். அப்போது ஷமில் அகமது, சரவணன், புகழேந்தி ஆகிய 3 பேருடன் பவித்ராவுக்கு பழக்கம் இருந்தது தெரிய வந்தது. அவர்களை பற்றி விசாரித்த பழனி அவர்களுடன் தனது மனைவி சென்றிருப்பாரா என்று தேடி அலைந்தார். கணவரையும், குழந்தையையும் பிரிந்த பவித்ராவோ நேராக ஈரோடு சென்றார். அங்கு ஷமில் அகமதுவை சந்தித்து பேசினார். தன்னுடன் இருக்க ஷமில் அகமது அனுமதிக்காததால் ரெயில் ஏறி பவித்ரா சென்னைக்கு சென்றார். அங்கு சரவணன், புகழேந்தி ஆகியோரின் உதவியை நாடினார். சினிமா வாய்ப்பு கேட்டும் அலைந்தார். ஒரு வழியாக அம்பத்தூரில் உள்ள துணிக்கடையில் ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு பவித்ரா வேலைக்கு சேர்ந்தார். அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்[6].  மூன்று பேருடன் பழக்கம் எனும்போது, எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. நிச்சயமாக, இதை தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது.

சமீல் அகமது காதலி காணவில்லை - இந்தியன் எக்ஸ்பிரஸ்.1

சமீல் அகமது காதலி காணவில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸ்.1

பழனி போலீஸாரிடம் புகார் கொடுத்ததும், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கலும்: மாலை மலர் தொடர்கிறது, “மனைவியை தேடி அலைந்த பழனிக்கு ஷமில் அகமதுவின் வீடு தெரிந்திருந்ததால் அங்கு சென்றுஎன் மனைவியை எங்கேஎன்று கேட்டு தகராறு செய்துள்ளார். அது கைகலப்பாகவும் மாறியது. இருந்தபோதிலும் மனைவி பற்றி தகவல் தெரியாததால் 24.5.2015 அன்று பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் பழனி புகார் செய்தார். அதில்எனது மனைவி மாயமானதில் சரவணன், புகழேந்தி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அறிகிறேன். எனவே அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தாருங்கள்என்று கூறி இருந்தார். சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்”.  அழனி சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார் என்றதால், யாரோ அவருக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள்  அல்லது உதவியிருக்கிறார்கள் என்றாகிறது.

சமீல் அகமது காதலி காணவில்லை - இந்தியன் எக்ஸ்பிரஸ்.2

சமீல் அகமது காதலி காணவில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸ்.2

17.5.2015 அன்று ஆம்பூர் வீட்டை விட்டுச் சென்ற பவித்ரா 04-07-2015 அன்று சென்னையில் பிடிபட்டது:  மாலை மலர் தொடர்கிறது, “சந்தேகத்தின் பேரில் ஷமில் அகமதுவை பள்ளி கொண்டா போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணை முடிந்து திரும்பிய ஷமில் அகமது போலீசார் தாக்கியதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் தாக்கிய தால்தான் ஷமில் அகமது இறந்ததாக கூறி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் பவித்ராவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். செல்போன் உதவியுடன் பவித்ரா சென்னையில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்றனர். கடந்த ஜூலை 4-ந் தேதி இரவு பவித்ரா போலீசில் பிடிபட்டார். அவருக்கு உதவிய சரவணன், புகழேந்தி ஆகியோரும் பிடிபட்டனர்”.

Pazhani Ambur with his daughter Rishitha

Pazhani Ambur with his daughter Rishitha

தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர்: மாலை மலர் தொடர்கிறது, “சென்னையில் சரவணன், புகழேந்தியிடம் சென்று பவித்ரா உதவி கேட்டது ஏன் பவித்ராவுக்கு அவர்கள் உதவியது ஏன் என்பது தெரியவில்லை. பவித்ரா மாயமானது தொடர்பாக கொடுத்த புகாரிலும், ஆட்கொணர்வு மனுவிலும்சரவணன், புகழேந்தி ஆகியோர் தனது மனைவியை கடத்தி சென்றிருக்கலாம்என்று பழனி கூறி இருந்தார். ஆனால் யாரும் தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர். இருந்தபோதிலும் சரவணனையும், புகழேந்தியையும் பவித்ரா தேடி சென்று வேலை கேட்டது எப்படி நடந்தது பவித்ராவுக்கும் சரவணன், புகழேந்திக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுபற்றிய உண்மை நிலை என்ன என்பது பின்னர்தான் தெரியவரும்”.  ஆம்பூரில் இவ்வளவு விவகாரங்கள் நடந்த நிலையில், எப்படி-ஏன் – எதற்காக இவ்விருவர், பவித்ராவை மறைந்து வாழ செய்ய வேண்டும்?

கணவன், மகளை ஏறேடுத்துப் பார்க்காத பத்னி பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, தாய் பாசத்துக்கு ஏங்கும் மகளுக்காக காப்பகத்தில் பவித்ராவை சந்தித்து பேசவில்லை ஒரே வார்த்தையில் பதிலளித்த கணவர் பழனி சென்னையில் பிடிபட்ட பின்னர் ஐகோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பவித்ரா தனது கணவரையும், குழந்தையையும் ஏறெடுத்து பார்க்கவில்லை. நீதிபதியிடம், “எனது கணவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்என்று அவர் கேட்ட கேள்வி நீதிபதி உள்பட கணவரையும் தூக்கி வாரிப்போட்டது. நீதிபதி எவ்வளவோ கூறியும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பவித்ரா விவாகரத்து கேட்பதிலேயே குறியாக இருந்தார். இதைத் தொடர்ந்து அவரை காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சென்னை காப்பகத்தில் பவித்ரா தங்க வைக்கப்பட்டார்”.  விவாகரத்து தான் குறி என்றிருக்கும் பவித்ராவின் போக்கு திடுக்கிட வைக்கிறது. கணவனைத் தவிர மூன்று பேருடன் தொடர்பு, சினிமாவில் நடிக்க முயற்சி என்றெல்லாம் பார்க்கும் போது, பவித்ராவின் மனநிலை என்ன என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடி  இருக்கும்                 மகள் ரிஷிதாவும், கண்டு கொள்ளாமல் இருக்கும் தாய் பவித்ராவும்: மாலை மலர் தொடர்கிறது, “பவித்ரா தனது மகள் ரிஷிதாவுக்காக மனம் மாறி தன்னுடன் சேர்ந்து வாழ வருவார் என்ற ஆசையில் பழனி இருக்கிறார். விசாரணைக்காக வேலூருக்கு பவித்ரா அழைத்து வரப்பட்ட போது தனது மகளுடன் பழனி அங்கு சென்றார். ஆனால் 2 பேரையும் பவித்ரா கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தாய் பாசத்துக்காக ஏங்கிய ரிஷிதாவை பார்த்து பலர் மனம் கலங்கினர். தற்போது ரிஷிதா குச்சிபாளையத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் உள்ளார் என்றபோதிலும் அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடிதான் ரிஷிதா இருக்கிறார். அவருக்காக பழனியுடன் பவித்ரா சேர்வாரா பவித்ராவை பழனி சந்தித்து பேசி மனம் மாற்றுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பழனியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, “பத்திரிகைக்காரங்களா…” என்று கேட்டுவிட்டு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஆனால் இணைப்பை துண்டிக்காமல் இருந்த அவரிடம், “உங்கள் மனைவி பவித்ராஎன்று ஆரம்பித்ததும், “சார் எம்பாட்டுக்கு நான் என் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன் சார். என்னை விடுங்க…” என்று கூறினார். உங்கள் மகளுக்காக காப்பகத்தில் இருக்கும் உங்கள் மனைவியுடன் பேசினீர்களாஎன்று கேட்டபோது, “இல்லைஎன்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நீதிபதி உத்தரவுபடி வருகிற 20-ந் தேதி வரை காப்பகத்தில் இருக்க வேண்டிய பவித்ரா மகளுக்காக கணவருடன் இணைவாரா”., என்று முடித்துள்ளது.

© வேதபிரகாஷ்

07-08-2015

[1] நக்கீரன், பவித்ராவின் மறுபக்கம், பதிவு செய்த நாள் : 8, ஜூலை 2015 (10:1 IST) ; மாற்றம் செய்த நாள் :8, ஜூலை 2015 (10:1 IST)

[2] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=146393

[3] http://www.farida.co.in/group_companies.php

[4] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/07/06012707/Pavithra-how-police-came-to-redeem.vpf

[5] http://www.maalaimalar.com/2015/07/12194252/Pavithra-track-changed-and-why.html

[6]  மாலைமலர், பவித்ரா தடம் மாறியது ஏன்? வெளிவராத புதிய தகவல், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 7:42 PM IST.