காஷ்மீரத்தில் இஸ்லாமிய பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்தாம் தங்களுக்குள் சுட்டுக் கொள்/கொல்கின்றனராம்!
தொடர்ந்து நடத்தப்படும் கருத்தரங்கங்கள்: காஷ்மீர் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் முதலியோர் சிந்தாதிகளாக மாறிவிட்டனரோ என்ற ரீதியில் கருத்தரங்கங்கள் நடத்த ஆரம்பித்து விட்டனர். அப்துல் கனி பட், பிரிவினைவாத-தீவிரவாதி தலைவர், “மீர்வாயிஸ் மௌல்வி, அப்துல் கலி லோன் போன்ற தலைவர்களைக் கொன்றது, தீவிரவாதிகளேத் தவிர, பாதுபாக்குப் படையினர் இல்லை”, என்று இப்பொழுது ஒப்புக்கொண்டுள்ளாராம்[1]. ஸ்ரீநகரில் டிசம்பர் 31ம் தேதி 1993, அப்துல் அஹத் வானி என்ற பிரிவினைவாதத் தலைவர் சுட்டுக் கொன்ற தினத்தன்று[2], ஒரு கருத்தரங்கத்தை ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியினர் (Jammu and Kashmir Liberation Front – JKLF) ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பேசும்போது இப்படி உண்மையை ஒப்புக்க்கொண்டுள்ளார்[3]. காஷ்மீரத்தில் இஸ்லாமிய பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் பற்பல பேனர்களில் / ப்பொர்வைகளில் தங்களது குரூரக் கொலைகள், குண்டுவெடிப்புகள் மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரத்தில் இஸ்லாமிய பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போட்டி, பொறாமை, உட்பூசல்கள் போன்ற காரணங்களுக்காக தங்களுக்குள் தாக்கிக் கொலை செய்கின்றனராம்! அதில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படத்தான் செய்கின்றனர். பாதுபாப்புப் படைகள், அவர்களை எதிர்கொள்ளும் போது, பல பாதுபாப்பு வீர்ர்களும் கொல்லப்படத்தான் செய்கின்றனர்.
கொலைக்காரர்களை அடையாளங்காட்ட வேண்டிய அவசியம் இல்லை நம்மக்கள்தாம் நம்ம்வரைக் கொன்றார்கள்[4]: இதுவரைக்கும் ஷஹீத் என்றெல்லாம் பேசிவந்தவர்களுக்கு, இறப்பின் பயம் வந்துவிட்டது போலும். “இறப்பு என்பது மிகவும் கொடியதாகும். எவரையும் கொல்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத செயலாகும். அதிலும் அப்பாவிகள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாவது நியாயப்படுத்தவே முடியாது. மனித மனசாட்சி அப்துல் ஹட்வானி, மௌலானா மெஹ்மூத் ஃபரூக், அப்துல் கனில் லோன் முதலியோர் எங்களது மக்களின் துப்பாக்கி குண்டுகளல் பலியானார்கள் என்ற போது உண்மையிலேயே நடுங்குகிறது”, என்று தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்[5]. “என்னுடைய சகோதரன் என் கண்கள் முன்னாலேயே, எங்களது ஆட்களால் கொல்லப்பட்டான். அந்த நிதர்சனத்தை நான் உணற்கிறேன். நானும் அதுமாதிரி பாதிக்கப்படலாம். ஆனால், என்னை யாரும் பயமுறுத்த முடியாது. என்னுடைய வாயைக் கட்டமுட்யாது, காதுகளை அடைக்கமுடியாது. நான் தொடர்ந்து எனது வேலையைச் செய்து வருவேன்”, என்று முடித்தார்.
இதனால் பாதுகாப்புப் படையினர் ஒன்றும் தேவதைகளாகி விடமாட்டார்கள்: அமைதி முயற்சிகளுக்காக பாடுபட்டனர் என்ற காரணத்திற்காக, மௌலானா மெஹ்மூத் ஃபரூக் 1991லும், அப்துல் கனில் லோன் 2002லும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து பேசுகிறார், “இதனால் பாதுகாப்புப் படையினர் ஒன்றும் தேவதைகளாகி விடமாட்டார்கள், அவர்களும் மக்களைக் கொன்றதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். ஆக உள்ளப் பிரச்சினை என்னவென்றால், எங்கள் மக்களே எங்களைக் கொல்வதுதான்” என்று விளக்கமும் கூறினார். அதாவது இங்குதான், அந்த வித்தியாசம் வெளிப்படுகிறது போலும். அதாவது, பாதுகாப்புப் படையினர் மற்றும் லட்சக்கணக்கான / ஏன் கோடிக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்கப் படவில்லை. ஏனெனில், அவை காஃபிர்களின் உயிர்கள், அதனால், சந்தோஷம்தான் போலும்! ஆனால், சகோதரன், தந்தை………என்று வரும்போது பாசம் வந்து விடுகிறது. ஆமாம், இவர்கள் எல்லாம் என்ன சுத்தமான முஸ்லீம்களா, இல்லையே இன்னும் அந்த பட், லேன் என்ற தமது இந்து பூர்விகத்தை ஒட்டவைத்துக் கொண்டுதானே உலவி வருகிறார்கள்!
ஹர்தால், கடையடைப்பு போன்றதால் சாதித்தது ஒன்றும் இல்லை: சைத் அலி ஷா ஜிலானி பேசும்போது, “கடந்த ஐந்து மாதங்களாக ஹர்த்தால் நடந்தது. 112 பேர் கொல்லப்பட்டனர். முடிவில் சாதித்தது ஒன்றும் இல்லை, ஏனெனில், ஒரு வழிமுறையே இல்லாமல் காரியம் நடக்கின்றது. பித்துப் பிடித்து, உணர்ச்சிகள் மூலமாகவே மூழ்கியிருக்க முடியாது, ஒரு நிலையில், உண்மையை பேசியேயாக வேண்டும்”, என்றார்.
என்னுடைய சகோதரனும் பிரிவினைவாதியினால்தா கொல்லப்பட்டான்[6]: பேராசிரியர் அப்துல் கனி பட் பேசும் போது, “தம் மக்கள் சாவதை தியாகம் என்ரு சொல்லிக்கொண்டே காலத்தைக் கடத்த முடியாது. மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய காலம் உள்ளது. ஜிலானி ஒரு பக்கம் இந்தியாவுடன் பேச முடியாது என்கிறார். ஆனால், மறுபக்கம் இந்திய பாரளுமன்ற உறுப்பினஎர்களுடன் பேசி வருகின்றார். இத்தகைய முரண்பாடுகள் இருக்கக்கூடாது. அதே மாதிரி நாங்கள் டில்லியுடன் பேசினால் எங்களை காஃபிர்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்[7]. இத்தகைய முரண்பாட்டையும் கவனிக்க வேண்டும்”. இவர் சையத் ஜிலானியின் தீவிரவாத பிரிவினைவாதத்தை எதிர்ப்பவர்[8]. இவரது சகோதரை மொஹம்மது பட் 1995ல் சுட்டுக் கொல்லப் பட்டார்.
“உண்மை வெளிவர வேண்டும்” சஜ்ஜத் லோன் சொல்வது[9]: சஜ்ஜன் லோன், “திருவாளர் பட் இத்தனை காலமாக அமைதியாக இருந்துவிட்டு, இப்பொழுது ஏன் இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை. இம்மாதிரி பேசுவதால், இயக்கத்தின் வலுதான் குறையும். மற்றவர்கள் இதை தமது லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வர்”, என்றெல்லாம் ஃபேஸ்புக்கில் எழுதுகிறாராம்!
வேதபிரகாஷ்
04-01-2011
[2] http://www.indianexpress.com/news/hurriyat-leader-says-end-lies-our-own-killed-lone-mirwaiz-sr/732364/2
[4] http://timesofindia.indiatimes.com/india/We-not-India-killed-our-own-people-Hurriyat-leader/articleshow/7210759.cms
[5] http://www.indianexpress.com/news/Hurriyat-leader-says–end-lies—our-own-killed-Lone–Mirwaiz-Sr/732364
[6] http://www.sify.com/news/my-brother-too-was-killed-by-separatists-says-bhat-news-national-lbdvkhbbhea.html
அண்மைய பின்னூட்டங்கள்