Posted tagged ‘மைனாரிட்டி’

அரசாங்க சம்பளம், சம்பள உயர்வு: மோமின் இமாம்கள், காஃபிர் எம்பிக்கள், செக்யூலார் காங்கிரஸ்

ஓகஸ்ட் 22, 2010

அரசாங்க சம்பளம், சம்பள உயர்வு: மோமின் இமாம்கள், காஃபிர் எம்பிக்கள், செக்யூலார் காங்கிரஸ்

முஸ்லீம்களிடம் ஊடல், கூடல், கெஞ்சல், கொஞ்சல், தாஜா முதலியன ஏன்? காங்கிரஸ் என்றாலே, சிறுபான்மையினரை, அதாவது முஸ்லீம்களைக் கொஞ்சுவது, குலவுவது, ஊடல் புரிவது, தாஜா செய்வதுதான் வேலை என்றாகி விட்டது. பீஹார், மேற்கு வங்காளம் மற்றும் இதர மாநிலங்களில் தேர்தல் நடக்கப்போகிறது என்பதும், அரசியல் கட்சிகள் குதிக்க ஆரம்பித்துவிட்டன். அரசு உதவிபெறும் மசூதிகளில் பணியாற்றும் இமாம்கள்  ஊதியம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மக்களவையில் இன்று கேள்வி நேரத்திற்கு முந்தைய நேரத்தில் அவை முன்னவர் பிரணாப் முகர்ஜி இந்த உறுதி மொழியை அளித்தார்[1].

அகில இந்திய இமாம்கள் அமைப்பும், லல்லுவும்:  முன்னதாக ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத் அரசு உறுதி பெறும் மசூதிகளில் இமாம்கள், உதவி பெறாத தொழுகை இடங்களில் பணிபுரியும் சமய ஊழியர்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக அகில இந்திய இமாம்கள் அமைப்பு தாக்கல் செய்த மனு மீது 1993ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்துவதில்  தாமதத்திற்கான காரணங்களை அறிய விரும்புவதாக குறிப்பிட்டார்[2].  உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் இமாம்கள் வேண்டாம் என்று ஏன் 17 வருடங்கள் அமைதியாக இருந்தார்கள் என்று லல்லுவிற்கு ஏன் தெரியவில்லை, புரியவில்லை? வழக்கு போட்ட இமாம்கள் என்ன, ஒன்றும் தெரியாத குழந்தைகளா, இல்லை, லல்லு மற்றும் இதர அரசியல்வாதிகள் வந்துதான், அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டுமா? பிறகென்ன, இந்த கூத்து?

இமாம்களிடம் ஒருமித்தக் கருத்து இல்லை: இதற்கு பதிலளித்த சிறுபான்மை விவகாரங்கள்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் கருத்துகள் அவையில் அமளியை ஏற்படுத்தின. இமாம்களிடம் ஒருமித்தக் கருத்து இல்லை, ஆகையால்தான் அவர்கள் கோர்ட்டுக்குச் சென்றார்கள். இமாம்களிடம் இதைப்பற்றிய கருத்துகள் வேறுபடிகின்றன, அதாவது அரசாங்கத்திடமிருந்து சம்பளம் வாங்க்ஜக் கூடாது என்ற கருத்தும் நிலவுவதைச் சுட்டிக்காட்டினார். ஆகவே, இமாம்களைக் கேட்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது, என்று விளக்கள் அளித்தார்[3]. ஆனால், லல்லுவோ அரசாங்கம்தான், சம்பளம் கொடுக்கவேண்டும் என்று அடம்பிடித்தார்[4]! ஆமாம், செக்யூலார் / காஃபிர் அரசாங்கம் பணம் கொடுத்தால், மோமின் இமாம்கள் வாங்கிக் கொள்ளலாமா?

மசூதிகளில் வேலைசெய்பவர்களுக்கு சம்பளம் என்றால், கோவில்களில் வேலை செய்பவர்களுக்கு ஏன் சம்பளம் இல்லை? இப்படி. பிஜேபி உறுப்பினர்கள் கேள்வி கேட்டதும் தான் செக்யூலர் அரசியல்வாதிகளுக்கு உண்மை தெரிந்தது போலும். நாடெங்கும் உள்ள 8,00,000 கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு இதேபோன்று ஊதியம் வழங்க வேண்டும் என்று பிஜேபி உறுப்பினர்கள் கோரினார்கள்[5]. இந்த நிலையை குறிப்பிட்ட அவை முன்னவர் பிரணாப் முகர்ஜி, இந்த நிலைமை குறித்து அரசு நன்கு உணர்ந்திருப்பதாகவும் உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

முஸ்லீம்களை மையமாக வைத்து நடந்த விவாதம்[6]: முஸ்லீம்களை மையமாக வைத்து நடந்த விவாதம், எப்படி முஸ்லீம்களை அரசியல்ரீதியில் வளர்க்கிறார்கள் என்று வெளிப்படுத்துகிறது. லல்லு பிரசாத் யாதவ் சொல்கிறார், “காங்கிரஸ்தான் “வோட் கி ராஜ்நீதி” என்று “முஸ்லீம் ஓட்டு வங்கி”யை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றது[7], ஆனால், அவர்களது நலன்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. நாங்கள் பீஹாரில் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக அதனை செயல்படுத்துவோம்”! உடனே, சுதீப் பண்டோபாத்யாயா[8] என்ற தீர்னமூல் காங்கிரஸ்காரர், “மேற்கு வங்காளத்தில் இமாம்கள் மிகவும் கஷடப் பட்கிறார்கள்”, என்று ஆரம்பித்தார். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான், இப்படி பேசுகிறார்கள் என்று சொன்னபோது, அவர் கூறியதாவது, “நானே ஒரு முஸ்லீமை எதிர்த்துதான் போட்டியிட்டு வென்றேன். எங்கள் மாநிலத்தில் நான்கு லட்சம் மொழி ரீதியில் சிறுபான்மையினர் இருக்கின்றனர், அவர்கள் மாநிலத்தின் மக்கட்தொகையில் 28% ஆவர்”, என்று விளக்கமும் கொடுத்தார். ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, மேற்கு வங்காளத்தில்தான் முஸ்லீம்கள் அதிகமாக உள்ளார்கள் என்று குறிப்பிடத்தக்கது[9]. ஆனல், இதெல்லாம் “தேர்தல் ஸ்டன்ட்” என்று மணீஸ் திவாரி பார்லிமென்டிற்கு வெளியே பத்திரிக்கையாளர்களிடம் கமென்ட் அடித்தார்[10].


[1] http://timesofindia.indiatimes.com/india/Govt-promises-action-on-SC-judgment-on-Imams-salary/articleshow/6387221.cms

[2] http://www.hindustantimes.com/Polls-put-Imam-salary-in-focus/Article1-590068.aspx

[3] http://www.thehindu.com/news/national/article586392.ece

[4] http://www.asianage.com/india/lalu-wants-centre-pay-salary-imams-141

[5] செக்யூலரிஸம் பேசி, இப்படி இந்துக்களை வாட்டும் அரசு, எப்படி சமதர்ம அரச்சக இருக்க முடியும்? இதை கேட்டால், இந்துக்களையே, வகுப்புவாதம் பேசுகிறார்கள், என்றெல்லாம் விமர்சனிக்கப்படுகிறார்கள் என்று, பலரும் இன்றளவில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

[6] http://news.oneindia.in/2010/08/21/ahead-of-polls-rjd-trianmool-imams-to-be-paid.html

[7] இவ்வாறு, அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றாஞ்சாட்டிக் கொள்வதே, அரசியல் விபச்சாரத்தையும்விட, ராஜநீதி-வேசித்தனத்தைவிட கேவலமானதுதான், ஆனால், கூட்டணி என்று வந்துவிட்டால், அத்தகைய கற்பெல்லாம் பார்க்காமல், அனைவருடன் படுத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்களே?

[8] பண்டோபாத்யாயா என்றால் பார்ப்பனர், பிறகு, ஒரு பார்ப்பனர், மெற்கு வங்காளத்தில், தேர்தலில் நின்று, அதுவும் ஒரு முஸ்லீமை வென்று எம்.பி ஆனார் என்றால், அதென்ன சாதாரணமான அரசியல் விஷயமா, இல்லவே இல்லை. அட்கு அரசியலையும் கடந்து, அத்தகைய போலித்தனமான படத்தைக் காட்ட, சித்த்ரிக்கப்பட்ட நிகழ்ச்சியே ஆகும்.

[9] மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரைக்கும், பங்களாதேஷத்திலிருந்து உள்ளே நுழைந்து, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தீர்னமூல் காங்கிரஸ் முதலிய கட்சிகளின் ஆதரவுடன் ரேஷன்கார்ட், ஓட்டர்-கார்ட், பர்மிட் என்று அனைத்தையும் வழங்கி பெருக்கிய முஸ்லீம் ஜனத்தொகையும் சேர்ந்ததுதான்.

[10] http://www.dnaindia.com/india/report_congress-terms-lalu-prasad-s-imam-remuneration-issue-an-election-stunt_1426602