Posted tagged ‘மேயர்’

ஆசிக் மீரானால் அலைக்கழிக்கப்படும் துர்கேஸ்வரி: பெண்ணிய வீராங்கனைகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்று தெரியவில்லை!

ஜூன் 14, 2014

ஆசிக் மீரானால் அலைக்கழிக்கப்படும் துர்கேஸ்வரி: பெண்ணிய வீராங்கனைகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்று தெரியவில்லை!

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

துர்க்கேஸ்வரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்ததால் நடவடிக்கை[1]:  பெண்பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, திருச்சி மாநகராட்சி துணைமேயர் மரியம்ஆசிக்கிடம்,  பொன்மலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா, நேற்று விசாரணை மேற்கொண்டார். திருச்சியை சேர்ந்த துர்க்கேஸ்வரி, 28.  சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சையின் மகன் ஆசிக்மீரான், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக,  போலீசில் புகார் தெரிவித்தார்[2]. இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், துர்க்கேஸ்வரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார். அவர் கொடுத்த புகாரை விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி,  முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து, பொன்மலை மகளிர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதனால், நேற்றுமதியம், 2:00 மணிக்கு, துர்க்கேஸ்வரி, துணைமேயர் மரியம்ஆசிக் ஆகியோர்,  பொன்மலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப் பட்டனர். இந்த தகவல்அறிந்த, பத்திரிகையாளர்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

பத்திரிகையாளர்களை கண்டதும், மரியம் ஆசிக், இன்ஸ்பெக்டர் ஜெயசுதாவுடன், ஸ்டேஷனில் இருந்த பாத் ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்[3]: பத்திரிகையாளர்களை கண்டதும், மரியம் ஆசிக்,  இன்ஸ்பெக்டர் ஜெயசுதாவுடன், ஸ்டேஷனில் இருந்த பாத்ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அப்படியென்றால், இன்ஸ்பெக்டர் ஒத்துழைக்கிறார் என்றால்லாவா ஆகிறது.  பத்திரிகையாளர்களைக் கண்டதும் மறைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே? தொடர்ந்து, இன்ஸ்பெக்டரின் அறையை மூடிக்கொண்டு, போலீசார் விசாரணை நடத்தினர். இதென்னா “காமராக்குள் நடக்கும்” ரகசிய விசாரணையா என்ன?  அப்படியென்றால், பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? போலீசார் விசாரணை நடத்தினர் என்றால்,  இன்ஸ்பெக்டர் இல்லாமலா விசாரணை நடத்தினர்? எதற்கோ பெண்ணியக் கூட்டங்கள் கொடிபிடித்துக் கொண்டு வரும் போது, இத்தகைய சட்டமீறல்களுக்கு, ஏன் குரல் கொடுப்பதில்லை என்று தெரியவில்லை.

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

விசாரணை குறித்து, துர்க்கேஸ்வரி கூறியதாவது: “விசாரணை நியாயமாக நடக்கும் என, தெரியவில்லை. ஆசிக் மீரானும், போலீசாரும் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். முதல்வர் தலையிட்டால் மட்டுமே, எனக்கும், என் குழந்தைக்கும் நீதி கிடைக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்[4].  தான்தான் அவரது மனைவி,  குழந்தை அவருடையது என்று மெய்ப்பிக்கப் படவேண்டும், தனக்கு நீதி வேண்டும் என்று கேட்கிறார்[5].  மரபு அணுபரிசோதனை செய்தாலே உண்மை விளங்கிவிடும். பிறகு இதற்கு ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.  மேலும் புகாரில், “என் கணவர், துணைமேயர் ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன் நிஷா, அவரது சகாக்கள் பாபு,  சரவணன், உமர் ஆகியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார், அதில் உமர் என்பவன் ஏற்கெனவே கொலைக்குற்றத்தில் தேடப்பட்டு வருகிறான் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன[6].

ஊடகக்காரர்களிடம் முறையிடும் துர்கேஸ்வரி

ஊடகக்காரர்களிடம் முறையிடும் துர்கேஸ்வரி

மார்ச்.1, 2014 அன்று கொடுத்த புகார்[7]: அ.தி.மு.க.,  துணைமேயர் ஆசிக் மீரா மீது புகார் தெரிவிக்க நேற்றும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த எட்டு மாத கர்ப்பிணியை, “கமிஷனர் இல்லை’ எனக் கூறி புகாரை வாங்காமல் போலீஸார் திருப்பி அனுப்பியதால், அப்பெண் ஏமாற்றத்துடன் சென்றார்.மறைந்த அ.தி.மு.க., அமைச்சர் மரியம் பிச்சை மகன் ஆசிக்மீரா, திருச்சி மாநகராட்சி துணைமேயராக உள்ளார். திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல் வாரித்துறைரோடு பகுதியைச் சேர்ந்த ரஞ்ஜித்சிங் ராணா மகள் துர்கா (என்ற) துர்கேஸ்வரி, 28. இவர் 01-03-2014 அன்று முன்தினம் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு துணைமேயர் ஆசிக் மீரா மீது புகார் அளிக்க வந்தார்.  அவரது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: “நானும், துணைமேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரால் மூன்று முறை கருத்தரித்தேன். அவர் நிர்ப்பந்தத்தால் கருவை கலைத்தேன்.  திடீரென அவரது அத்தை மைமூன் நிஷா மகள் சாஜிதா பேகத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது பற்றி கேட்ட போது, என்னை சமாதானம் செய்தார். மீண்டும் கருவுற்று தற்போது, எட்டு மாதமாக உள்ளேன்.  தனது மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும் படி மிரட்டுகிறார். எனவே, என்கணவர், துணைமேயர் ஆசிக்மீரா,  அவரது மாமியார் மைமூன் நிஷா, அவரது சகாக்கள் பாபு, சரவணன், உமர் ஆகியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

Asique Meeran Trichy Dy Mayor accused

Asique Meeran Trichy Dy Mayor accused

புகார் வாங்க மறுத்த பொன்மலை போலீஸ் ஸ்டேஷன்:  மாநகர போலீஸ் கமிஷனர் சைலஷ் குமார் யாதவ் இல்லாததால் அவர், பொன்மலை போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்கச் சென்றார்.  போலீஸார் புகாரை வாங்கவில்லை.நேற்று காலை, 10.30 மணிக்கு கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.  நீண்ட நேரம் கழித்து அவரை அழைத்த போலீஸார், “”கமிஷனர் இன்றும் இல்லை.  பொன்மலை போலீஸில் புகாரை கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளுங்கள்,” எனக்கூறி அனுப்பினர்.இதனால் நொந்து போன துர்கேஸ்வரி கூறுகையில்,  “”கருவுற்று எட்டுமாதம் ஆகியதால், என்னால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லை. கமிஷனர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்து,  மாடி ஏறிச் செல்லவும் முடியவில்லை. நீண்ட நேரம் காக்க வைத்து என்னை திருப்பி அனுப்பினர்.  வாந்தி வருவது போல இருந்ததால் பொன்மலை போலீஸ் ஸ்டேஷனக்குச் செல்லாமல் வீட்டுக்கு சென்றேன்,” என்றார். மார்ச், ஏப்ரல், மே என்று மாதங்கள் கழிந்து ஜூனில் உள்ள நிலை இது. இனி என்னாகும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்!

Ashik married - woman complained

Ashik married – woman complained

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=997116

[2] https://islamindia.wordpress.com/2014/03/09/muslims-affecting-hindu-women-their-rights-etc-in-secular-india/

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=997116&Print=1

[4]தினமலர், பாலியல்வழக்குவிசாரணை: பாத்ரூமில்ஒளிந்ததுணைமேயர், சென்னை, 12-06-2014

[5] http://www.youtube.com/watch?v=BlXKPLONa3s

[6] http://www.youtube.com/watch?v=BlXKPLONa3s

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=930944&Print=1