மார்ச் 1, 2013
காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

உடைந்த மைக்கின் கீழ் பகுதியை தூக்கி வரும் எம்.எல்.ஏ!
காஷ்மீர சட்டசபையில் கலாட்டா-ரகளை: காஷ்மீர சட்டபையில் தீவிரவாதி மொஹம்மது அப்சல் குரு தூக்கிலிட்டதை எதிர்த்து கோஷம் எழுப்பினர், பின்னர் உடல் கேட்டு பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்[1]. பேப்பர்களை வீசியும், மைக்கைப் பிடுங்கியும் கலாட்டா செய்தனர்[2]. மொஹம்மது அப்சல் குரு போன்று உடையணிந்த ஒருவர் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்ததை டிவி-செனல்கள் காண்பித்தன. சட்டபைக்கு வெளியிலும் ஆர்பாட்டத்தை நடத்தினர்[3]. கலாட்டா செய்த லங்கேட் அப்துல் ரஷீத் இஞ்சினியர் (MLA Langate Abdul Rashid Engineer ) என்ற எம்.எல்.ஏ வெளியேற்றப்பட்டார்[4]. சட்டசபையில் இப்படி கலாட்டா செய்வது அவர்களுக்கு வழக்கமான-வாடிக்கையான விஷயம் தான்[5]. பெண்ணான மெஹ்பூபா முப்தியே கலட்டா செய்துள்ளார்[6].

புதைத்த உடலைக் கேட்டு சண்டை: இதில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரண்டும் போட்டிப் போடுக் கொண்டு தீவிரவாதத்துரடன் துணைபோகுக் போக்கில் உடலைக் கேட்டு சண்டை போட ஆரம்பித்தனர். அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது குறித்தும், அவரது உடலை திரும்ப பெற வலியுறுத்தியும் காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கொண்டு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த மாதம் திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்ட பிறகு, அமைதியாக இருந்தவர்கள், திடீரென்று. அவனது உடல் கேட்டு ஆர்பாட்டத்தை ஆரம்பித்தனர். திகார் சிறை வளாகத்திலேயே அவ்வுடல் அடக்கம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே. அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மேலும் வியப்பிற்குரிய விசயமாக உள்ளது.

மார்ச் 2012ல் உமர் அப்துல்லாவை நோக்கி காலை உயர்த்தி வரும் எம்.எல்.ஏ!
முப்தி முஹம்மது சையது மற்றும் அவரது மகள் போடும் நாடகங்கள்: அப்சலின் உடலை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் கோரிக்கை வைத்துள்ளது, போட்டாட்ப்போட்டி அரசியலைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீர் குடிமக்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது, முன்னர் முப்தி முஹம்மது சையது, தமது மகளை எப்படி தீவிரவாதிகள் கடத்திக் கொண்டது போல நாடகம் ஆடி, பிரியாணி கொடுத்து அனுப்பி, பிறகு 180 தீவிவாதிகளை விடுவித்தார் என்பதனை நினைவு கூரவேண்டும்[7]. ஆனால், அதே முப்தியின்பின்னொரு மகள் கலாட்டா செய்கிறார்[8].

மார்ச் 2011 – சட்டசபையில் கட்டிப்பிடி கலாட்டா-ரகளை!
விளம்பர கலாட்டா-ஆர்பாட்டம்-ரகளை: தூக்கு தண்டனை கைதிகள் வரிசையில் 28ம் இடத்தில் இருந்த அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது, அண்டை நாடான இஸ்லாமிய பங்களாதேசத்தில் எப்படி, பல ஜிஹாதி பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பதனையும் மறந்து விடுகின்றனர். ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது போல அப்சல் குருவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வியை பிடிபி முன்வைத்துள்ளது இந்த உண்மைகளை மறைக்கவே என்று தெரிகிறது. அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது தொடர்பாகவும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பற்காக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் தாக்கல் செய்தது. இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, இந்த தகவலை மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பிறகும், சட்டசபையில் ரகளை செய்துள்ளது, வெறும் விளம்பரத்திற்காகவே என்று தெரிகிறது. இதில் காஷ்மீர இஸ்லாம் எப்படி செயல்படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்[9].

கலாட்டா செய்யும் எம்.எல்.ஏவை தடுக்கும் போலீஸ் / மார்ஷெல்!
கடையடைப்பு-பந்த்-போராட்டம்: பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது உறவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களும் பெருமளவில் இயங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய போராட்டங்கள் நடக்கும் என்று அந்நிய நாளிதழ்கள் சந்தோஷமாக செய்திகளை முன்னரே வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[10].

ஆறு ஜிஹாதிகள் தூக்கிலிடப்பட்ட செய்தி!
புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா?: புதைத்தப் பிணத்தைத் தோண்டி எடுக்கலாமா, மறுபடியும் புதைக்கலாமா, புதைத்த பிணம் இவ்வளவு நாள் முழுமையாக இருக்குமா, முதலிய கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் பொறுத்த வரைக்கும், தீர்ப்பு நாளில் புதைத்த உடல் உயிர் பெற்று எழும். அல்லா அவர்களின் செயல்களைப் பொறுத்து சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பி வைப்பார் என்று நம்பிக்கையாளர்கள் சொல்கின்றனர். அந்நிலையில் புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா, அதனை அல்லா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
01-03-2013
பிரிவுகள்: அடையாளம், அப்சல், அப்சல் குரு, அப்துல் கனில் லோன், அப்ஸல், அமர்நாத் யாத்திரை, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அழுகிய நிலையில், அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, உமர் ஃபரூக், உயித்தெழுதல், உயிர் பலி, உள்துறை அமைச்சகம், கற்களை வீசி தாக்குவது, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, குரு, சட்டசபை, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தன்னாட்சி, பாராளுமன்றம், முப்தி, மெஹ்பூபா, மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, ருபையா, ருபையா சையது
Tags: ஃபத்வா, அப்சல் குரு, அப்துல்லா, அப்ஸல், ஆப்சல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உமர், உயிர், உயிர்த்தெழுதல், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலாட்டா, காஷ்மீரம், காஷ்மீர், குடல், குரு, சமாதி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சையது, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தாக்குதல், பாராளுமன்றம், புதைத்த உடல், புனிதப்போர், முகமதியர், முஜாஹித்தீன், முப்தி, முஸ்லீம்கள், முஹம்மது அப்சல், மெஹ்பூபா, மைக், ரகளை, ருபையா
Comments: 1 பின்னூட்டம்
ஒக்ரோபர் 7, 2011
ஒரு உயிர் இழப்பு: காஷ்மீரில் கலாட்டா – தீவிரவாதிகளால் பல லட்ச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் கவலைப்படவில்லை!
காஷ்மீரில் மக்கள் கொல்லப்படுவது: காஷ்மீரில் மக்களுக்கு உயிர் போவது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குண்டுகள் வெடிப்பது முதலியவை ஒன்றும் புதியதான நிகழ்ச்சிகளோ, செய்திகளோ இல்லை. இருப்பினும், இப்பொழுது ஒருவர் மர்மமான முறையில் இறந்திருப்பதைப் பற்றி அதிகமாகவே அரசியல் கட்சிகள் கலாட்டா செய்து வருகின்றன. ஊடகங்களுக்கோ தேவையில்ல, வெறும் வாயிற்கு அவல் கிடைத்தக் கதை தான். தேசிய மாநாட்டுக்கட்சி தொண்டர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, தன் தந்தை மரணம் குறித்து முதல்வர் ஓமர் பொய் சொல்வதாக, இறந்தவரின் மகன் தெரிவித்துள்ளார்[1]. இவரைத் தவிர, மற்றொரு கண்ணால் பார்த்ததாக அப்துல் சலாம் ரேஷி[2] என்பவர் சைது முஹம்மது யூசுப், ஒமரின் வீட்டிற்குள் செல்லும் போது நன்றாகத்தான் இருந்தார். வெளியே வரும்போது, பேசமுடியாமல் வாந்தி எடுக்கும் நிலையில் இருந்தார்[3]. அந்நிலயில் தான் போலீஸார் அவரைப் பிடித்துச் சென்றதாகக் கூறுகிறார்.
காஷ்மீர் சட்டமேலவை பதவிக்கு லஞ்சம்: தேசிய மாநாட்டு கட்சித்தொண்டர் சையது யூசுப் (61). அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சட்டமேலவை உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக கூறி, இரண்டு பேரிடம் ரூ. 1 கோடியே 18 லட்சம் பெற்றுள்ளார். இவர் லஞ்ச வழக்கில் போலீஸார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி போலீஸ் காவலில் யூசுப் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓமர் அப்துல்லா, கட்சித்தொண்டர் மரணத்திற்கு தான் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், யூசுப் மகன் தலிப் உசேன் கூறுகையில், தனது தந்தையை போலீஸ் காவலில் வைத்து அடித்து உதைத்ததாகவும், ஓமருக்கு தெரிந்தே இது நடந்துள்ளதாகவும், இதுகுறித்து அவர் பொய் சொல்வதாகவும் தெரிவித்தார்.
மகனுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி – கூறுவது அப்பா!: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அக்கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபருக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்[4]. இந்த விஷயத்தில் பெரிய சதி இருப்பதாக எதிர்க்கட்சிகளான மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜக ஆகியவை குற்றம்சாட்டின. ஓமர் அப்துல்லா பதவி விலக வேண்டுமெனவும் அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியது: எங்கள் கட்சி எதையுமே மறைக்கவில்லை. யூசுப் இறந்தது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும்.
தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நீடிப்பது எதிர்க்கட்சிகள் விரும்பவில்லையாம்: காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீடிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அரசியல் ஆதாயத்துக்காகவும், எப்படியாவது மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். எந்த விஷயத்தை வைத்தாவது எங்களை குற்றம்சாட்ட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதும், காங்கிரûஸ தவிர்த்து விட்டு எங்கள் கட்சியை மட்டும் குறிவைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. எங்கள் கட்சியில் நேர்மையான முறையில்தான் பதவிகளுக்கும், தேர்தலில் போட்டியிடவும் நபர்களைத் தேர்வு செய்கிறோம். இங்கு வந்திருக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர்களைக் கேட்டு இதனை நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
ராஜினாமா செய்ய முடியாது: காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தனது பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்[5].காஷ்மீர் மாநிலத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சயித் முகமது யூசுப், 61, போலீஸ் காவலில் உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் ஒமர் அப்துல்லா கூறுகையில், இந்த விவகாரத்தில் நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை, நீதி விசாரணையில் உண்மைகள் விரைவில் வெளிவரும், என தெரிவித்தார்.
ஒமர் பதவி கொடுக்க பணம் வாங்கினாரா? அப்துல் சலாம் ரேஷி[6], “யூசுப் என்னை ஒமருக்கு அறிமுகப்படுத்தினார்[7]. பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுப்பதாகக் கூறினர். ஆனால், கொடுக்காததால் பணத்தைத் திரும்பக் கேட்டேன். முழுப்பணத்தைக் கொடுக்காததால் விடாமல் கேட்டேன்”. ஒருவேளை, ஒமருக்குண்டான தொடர்பு தெரிந்து விட்டது என்று, யூசுப் கொல்லப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதேப்போலத்தான், அமர்சிங் காங்கிரஸ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, பீஜேபி எம்.பிக்களுக்கு பணம் கொடுத்து, கட்சி மாற முயன்றுள்ளனர், ஆக காங்கிரஸ் இப்படி ஒரு வழியைக் கடைபிடித்து, எல்லா மாநிலங்களிலும் கோடிகளை அள்ளுகிறது போலும்!
[2] Abdul Salam Reshi, a key witness in the alleged killing of National Conference activist Syed Mohammad Yousuf, has broken his silence claiming that the latter was hale and hearty when he was taken to another room in the chief minister’s residence but was vomiting and unable to speak when he was being taken to the crime branch headquarters in a police vehicle.
[6] “I was introduced to Farooq Abdullah and Omar Abdullah by Yusuf. He came to my residence with the chief minister in a chopper. He also took me to meet Farooq Abdullah at his Jammu residence,” Reshi said in Srinagar. Reshi said his relations with Yusuf turned sour, after he demanded return of his money. “When I went to meet Omar sahib in July, he made sure I will get back some money. I was given Rs 10 lakh after a month and another Rs 10 lakh later. It was only after Mohammed Bhat of Ganderbal complained that he paid .`85 lakh to Yusuf for a ministerial berth did the Chief Minister decide to confront Yusuf,” he added.
பிரிவுகள்: இந்தியா, இஸ்லாம், உறவினர், கல்லெரிந்து கலவரம், கல்வீச்சு, குண்டு வெடிப்பது, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், கொலை, கொலை வழக்கு, ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், தன்னாட்சி, முன்னாள் தலைவர், முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு வங்கி, ருபையா சையத், வன்முறை, விமர்சனம்
Tags: ஃபத்வா, அப்துல்லா, இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், ஒமர், காங்கிரஸ், கூட்டணி, சாவு, சிறுபான்மையினர், போலீஸ், முஸ்லீம்கள், மெஹ்பூபா
Comments: 2 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 9, 2010
காஷ்மீரத்தில் தொடர்ந்து கலாட்டா செய்யும் மெஹ்பூபா!
இந்த மெஹ்பூபா பற்றி ஏற்கெனவே சொல்லியாகிவிட்டது!
ஜிஹாதிகளுக்கு கூட்டிக் கொடுத்து, தன்னுடைய மற்றொரு பெண்ணிற்கு பிரியாணி கொடுத்து, இப்பொழுது, இந்த பெண்ணை காஷ்மீர சட்டசபைக்கு அனுப்பி உதவியுள்ள முஃப்டி முஹம்மது சயைது தான்!

ஸ்ரீநகர் : ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பணி நியமன ஆணை தொடர்பான சட்டத்திற்கு விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்ததால் பி.டி.பி., கட்சியினர் சட்டசபையில் ரகளையில் ஈடுபட்டனர். காஷ்மீர் என்றவுடன் குளிர் என்பது நினைவுக்கு வந்த காலம் இப்போது இல்லாமல் போனது என்பதுதான் உண்மை. இந்த மாநிலத்தை பொறுத்தவரை ஊடுருவல், குண்டு வெடிப்பு. பந்த் என சூடான தகவல்கள் மட்டுமே காதில் விழுந்த படி இருக்கிறது. இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் பங்கிற்கு அவ்வப்போது களேபரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மாநாட்டுக்கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா தலைமையில் காஷ்மீரில் ஆட்சி நடந்து வருகிறது.
|
|
 |
( பி.டிபி., ) எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு : இன்று வழக்கம் போல் சட்டசபை கூடியது. இன்று பணி நியமனம் தொடர்பான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் படி பணி நியமனம் அந்தந்த மாவட்டத்தில் வசிப்போருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இதனால் மாவட்ட எல்லையோர இளைஞர்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்த சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சி ( பி.டிபி., ) எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் காரசாரமான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். சபாநாயகர் இருக்கை நோக்கி பாய்ந்து சென்று கோஷமிட்டனர். தொடர்ந்து நாற்காலி, மேஜை தூக்கி வீசப்பட்டன. மைக்குகள் நொறுக்கி வீசப்பட்டது. இதனால் சபையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். முடிவில் சட்ட திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக பி.டி.பி., யின் தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில் ; இந்த சட்டம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது குறித்து விவாதிக்க அனுமதி தராமல் சபாநாயகர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறார். விவாதம் என்பது எங்களின் அடிப்படை உரிமை இதைத்தான் கேட்கிறோம் என்றார். இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கடை அடைப்புக்கு பா.ஜ., இன்று அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறையில் குழந்தை கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் ரகளை ஏற்பட்டது நினைவிருக்கலாம். காஷ்மீர் ( சட்டசபை ) என்றால் சூடாகத்தான் இருக்கும் !
பிரிவுகள்: காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, சட்டத்தை வளைப்பது!, சரீயத், சரீயத் சட்டம், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாத், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மதமாறிய பெண்கள், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஃப்டி முஹம்மது சையத், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை
Tags: உமர் அப்துல்லா, கற்பழிப்பு, காஷ்மீரம், காஷ்மீர், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி தீவிரவாதம், தேசிய மாநாட்டுக்கட்சி, பாகிஸ்தான், மக்கள் ஜனநாயக கட்சி, முஃப்டி முஹம்மது, முஃப்டி முஹம்மது சயைது, மெஹ்பூபா
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்