சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (2)
குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், நஷீருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: பெண் குழந்தை பாலியல் வன்மத்திற்குட்பட்டதனால், அந்த சிறுமியின் உடலில் காயம் ஏற்பட்டது[1]. இதையடுத்து அந்த சிறுமியிடம், அவரது பெற்றோர் அதைப்பற்றி விசாரித்தனர்[2]. அப்போது, நடந்த சம்பவத்தை அந்த சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார். அவள் கூறியதிலிருந்து, நஷீர் அவளை பாலியல் ரீதியில் சதாய்த்துள்ளான் என்று தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்[3]. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நஷீரை கைது செய்தனர்[4]. பிறகு முறைப்படி, வழக்கை மகளிர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சதீஷ் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ‘குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், நஷீருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். இதுதவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்[5]. இத்துடன் செய்தி முடிந்து விட்டது. ஆனால், நஷீர் அவ்வாறு ஏன் ஈடுபட்டான், அதன் பின்னணி என்ன என்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தனது பெண் போன்றிருக்கும், ஒரு சிறுமியை எப்படி நஷீரால் அவ்வாறு வன்புணர்ச்சியில் ஈடுபட முடிந்தது என்பது ஆராயப்படவில்லை. அவன் முஸ்லிம் என்பதனால், பிடோபைல் கோணத்தில் செல்லாமல், சாதாரண குற்றம் போல செய்தியாக, அதிலும் சுருக்கமாக வெளியிட்டு அமைதியாகி விட்டனர் போலும். அவனது புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்ற அளவில், அதே செய்தியை திரும்ப-திரும்ப சுருக்கமாகத்தான் வெளியிட்டுள்ளன[6]. வில் ஹியூமைப் போன்று அதிரடி செய்திகளும் இல்லை, தேவநாதன் போன்று விடோயோக்களும் இல்லை, நித்யானந்தா போன்று பரபஎரப்பும் இல்லை. இதுதான் ஊடக செக்யூலரிஸம் போன்றிருக்கிறது. ஆனால், நஷீர் மேல்முறையீடு செய்வான், என்று நாளைக்கு செய்திகள் வரலாம்.
கேரள முஸ்லிம் ஆஸ்ரமங்கள் செயல்பட்ட விதம்: கேரளாவில் முஸ்லிம்கள் கிருத்துவர்களைப் போலவே அனாதை இல்லங்கள் வைத்து, பெண்குழந்தைகள், பருவத்திற்கு வந்த சிறுமிகள், இளம்-பெண்களை பாலியல் வேலைகளுக்கு உபயோகப்படுத்தியது சமீபத்தில் வெளிவந்தது[7]. தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigation Agency) ஜூலை 26, 2014 அன்று தனது விசாரணையை மேற்கொண்டது. 58 முஸ்லிம் குழந்தைகள் மால்டா என்ற இடத்திலிருந்து வேட்டத்தூர், மல்லப்புரத்தில் உள்ள அன்வர் ஹூடா அனதை இல்லத்திற்கு [Anwarul Huda Orphanage at Vettathur in Malappuram] கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [ Mukkam Muslim Orphanage] என்ற இன்னொன்றும் இதில் உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லி மௌல்விகள் ஏமாற்றி அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மால்டாவிலிருந்து இதை ஆயும் குழு வேட்டத்தூருக்கு பார்வையிட வந்தபோது, சிறுவர்கள் மட்டுமல்லாது, சிறுமியர்களும் இருந்தது கண்டு திகைத்தது. முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆயிரக்கணக்கில் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றை நடத்துவதற்கு வளைகுடா நாடுகளிலிருந்து தானம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப் படுகிறது. சுமார் 1,400 அனாதை இல்லங்களுக்கு கோடி கணக்கில் பணம் வசூலிக்கப் படுகிறது. இப்பணத்தை வசூலிக்கு ஏஜென்டுகள் 40% எடுத்துக் கொண்டு மீதம் 60%-த்தை கொடுத்து விடுகின்றனர்[8]. கேரளாவில் கடந்த 25 வருடங்களாக செக்ஸ் குற்றங்கள், விபச்சாரங்கள், சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்பது, பிடோபைல் (pedophile)/ குழந்தை செக்ஸ் விவகாரங்கள், கற்பழிப்புகள் என்று பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன[9].
இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினரின் தாக்கம் என்ன[10]: இங்கு இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினர் அதிகமாக மற்றும் எல்லாவிதங்களில் ஆதிக்கத்தில் இருப்பதால், அவர்களின் தாக்கம் என்ன என்பதும் அறிய வேண்டியுள்ளது. பொதுவாக இந்துமதம் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது முடிவுகளைப் பெறும் போக்கு, இங்குத் திணறத்தான் செய்கிறது. ஏனெனில், இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள் இவற்றிலுள்ள பங்கு என்ன என்பதை அவர்கள் எடுத்துக் காட்டுவதில்லை. செக்யூலரிஸ, கம்யூனிஸ மற்றும் அதிகாரத்துவ சித்தாந்தங்களில் உள்ள எழுத்தாளர்கள், அராய்ச்சியாளர்கள் மற்றும் சமூகவியல் அறிவுஜீவுகளும், அவற்றின் இறையியல் தாக்கத்தை அறிந்தும், அறியாதவர்கள் போன்று நடித்துக் கொண்டிருக்கின்றனர். “இறைவனுடைய தேசத்திலேயே” பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று செய்திகள் வெளியிடும் போது, அவர்கள் உண்மைகளை வெளியிட்டு, அக்குற்றங்களை எப்படி குறைப்பது என்று தீர்வுகளைக் காண்பதற்கும் தயங்குகின்றனர். மாறாக குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள், தங்களது அரசியல், பணம் மற்றும் அதிகாரக் காரணிகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.
தமிழகத்து கோணத்தில் ஆராய்தல்: தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் பிடோபைல் குற்றங்கள் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடைப்பெற்று வருவதாலும், அவற்றில் அந்நியநாட்டவர்களின் பங்கு, குழந்தைகள்-சிறுமிகள் கடத்தல், அனாதை ஆஸ்ரமங்களுக்கு அனுப்புதல், அங்கிருந்து அவை பிடோபைல்களுக்கு அனுப்பப்படுதல், செக்ஸ்-டூரிஸத்தில் ஈடுபடுத்துவது, அரேபிய ஷேக்குகளுக்கு விற்பது மற்றும் உல்லாசங்களுக்கு விநியோகித்தல் முதலியவை நடந்து வருவதால், அவை சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறிப்பிட்ட மதப்பிரச்சினை மட்டுமல்லாது, சமூகப்பிரச்சினையாகவும் கையாளப்பட வேண்டியுள்ளது. அந்நியநாட்டவர்கள், இந்தியாவுடன் உள்ள நாடுகடத்தல், நாட்டிற்கு ஒப்படைத்தல், சொந்த நாட்டில் நீதிமுறைகளுக்கு உபடுத்தப்படுதல், அவ்வாறான ரீதியில், குற்றங்கள் இந்தியாவில் நடந்தாலும், குற்றாவாளிகள் அந்நியர்கள் என்பதனால், அவர்கள் அவரவர் நாடுகளுக்கு கைது செய்யப் பட்டு எடுத்துச் செல்லப்படுதல், அங்கு வழக்கை விசாரித்தல், தண்டனை கொடுத்தல் முதலியனவும் நடந்து வருகின்றன. ஆனால், முடிவுகள் செய்திகளில் வருவதில்லை.
பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு, ஒருவேளை இழப்பீடு கொடுத்து, வழக்குகளை முடித்து விட்டிருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், தங்களது மனப்பாராட்டங்கள், மனப்பிராந்தி, மனக்குமுறல், மனச்சிக்கல்கள் முதலியவற்றிலிருந்து விடுபட முடியுமா, அவர்கள் உண்மையிலேயே அவ்வாறே விடுபட்டார்களா என்பவற்றையும் வெளிப்படுத்துவதில்லை. இடைக்காலத்திலிருந்து, 19-20வது நூற்றாண்டுகள் வரையில் ஹேரம், அடிமைகள் போன்ற முறைகளில், இத்தகைய பாலியல் குற்றங்கள் அங்கீகரிகப்பட்டு நடத்தப்பட்டன. பிறகு, அவையெல்லாம் மனிதத்தன்மைக்கு எதிரானது, மனித உரிமைகளை மீறுவது என்று அறியப்பட்டு தடை செய்யப் பட்டன. ஆனால், இத்தகைய ஆள்-கடத்தல், விற்றல், பாலியல் தொல்லைகளுக்கு, தொந்தரவுகளுக்கு சட்டவிரோதமாக உபயோகப்படுத்துதல், விபச்சாரத்திற்கு உட்படுத்துவது போன்றவை, பலவழிகளில் நாகரிகமாக, அமுக்கமாக செயல் பட்டு வருகின்றன. இவற்றிற்கு, மதசாயம் பூசுவது, இறையியல் விமர்சனம், விளக்கம் கொடுப்பது, நியாயப்படுத்துதல் முதலியனவும் நடந்து வருவதால், பெற்றோர், உறவினர், மற்றோர் இழப்பீடு, உதவித்தொகை, வேலை போன்றவற்றால் சமசரத்திற்கு வற்புறுத்தப்பட்டு, சமாதானம் செய்யப்படுகின்றனர்.
© வேதபிரகாஷ்
10-10-2015
[1] http://www.dinamalar.com/district_detail.asp?id=1358646
[2] தினத்தந்தி, சிறுமியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு, மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 07,2015, 3:00 AM IST; பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 07,2015, 3:00 AM IST.
[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/little-girl-sexual-harassment-youth-5-years-prison-115100700015_1.html
[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=171428
[5] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/10/07030035/Young-men5-years-in-prisonSentencedWomen-CourtJudgment.vpf
[6] http://bharathnewsonline.com/24/
பாரத் நியூஸ் ஆன்லைன், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை, 07 October, 2015.
[7] https://womanissues.wordpress.com/2014/08/03/child-trafficking-in-kerala-organized-carried-on-as-trade-with-motive/
[8] https://womanissues.wordpress.com/2014/08/03/kerala-orphanage-trafficking-sexual-abuse-and-other-issues/
[9] https://womanissues.wordpress.com/2014/08/03/human-or-child-trafficking-a-sexual-crime-carried-on-in-kerala/
[10] https://womanissues.wordpress.com/2014/08/03/sexual-crime-rate-religious-nexus-going-together-in-kerala/
அண்மைய பின்னூட்டங்கள்