Posted tagged ‘மெகபூபா முப்தி’

மெஹ்பூபா முஃதி என்ற பெண்ணும், காஷ்மீர் கலவரமும், தீவிரவாதமும், பயங்கரவாதமும்!

ஜூலை 12, 2010

மெஹ்பூபா முஃதி என்ற பெண்ணும், காஷ்மீர் கலவரமும், தீவிரவாதமும், பயங்கரவாதமும்!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=37577

புதுடில்லி ஜூலை,12, 2010: காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படும் அமைதி கூட்டத்தில் பங்கேற்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த கோரிக்கையை, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஏற்க மறுத்து விட்டார். இதனால், கலவரத்துக்கு தீர்வு காணும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெரும் கலவரம் நடந்து வருகிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலியாயினர். இதனால், கலவரம் பெரிய அளவில் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அமைதி கூட்டம்: இந்நிலையில், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அமைதி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் இன்று நடக்கவுள்ளது.

கலாட்டா செய்ய்ம் பெண் மெகபூபா மறுப்பு: முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி, இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என அறிவித்தது. உடனடியாக அந்த கட்சித் தலைவர் மெகபூபா முப்தியை தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்,”காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும்’என, வேண்டுகோள் விடுத்தார். இருந்தாலும், கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்ற தனது முடிவில் மெகபூபா உறுதியாக உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“அமைதி கூட்டத்தில் பங்கேற்கும்படி பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். இதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கூட்டத்தில் பங்கேற்பதற்கு சாதகமான சூழ்நிலை இங்கு ஏற்படவில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்து விட்டேன். இப்படி கூறுவதற்காக பிரதமரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டேன். காஷ்மீர் பிரச்னையில் தலையிட்டு, உடனடியாக தீர்வு காணும்படி பிரதமரிடம் வலியுறுத்தினேன். குறிப்பாக, கலவரத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவரிடம் விளக்கினேன்.அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அளவுக்கு காஷ்மீர் மாநில அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார். மெகபூபாவின் இந்த அதிரடியான அரசியலால், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஹூரியத்தால் தொடரும் பதட்டம்: இதற்கிடையே, அனந்தநாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட பல இடங்களில்  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. இருந்தாலும், ஹூரியத் மாநாட்டு அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற இயக்கம் சார்பில், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக ஸ்ரீநகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், சாலைகள், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.

பதட்டம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.இந்நிலையில், சில தனியார் செய்தி சேனல்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, இந்திய எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு சார்பில் காஷ்மீர் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.