Posted tagged ‘முஹரம்’

“திருமணம் என்னும் நிக்காஹ்” படம், ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு, முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

மே 30, 2014

“திருமணம்  என்னும் நிக்காஹ்”  படம்,  ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு,  முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

திருமணம் என்னும் நிக்காஹ்.2

திருமணம் என்னும் நிக்காஹ்.2

இந்து பையன், முஸ்லிம் பெண் காதல் முதலியன:  “திருமணம் என்னும் நிக்காஹ்” என்ற தலைப்பும்,  அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே,  அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது[1] என்று “தமிள்.ஒன்.இந்தியா” போட்டு வைத்தது.  சென்ற வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம் வெளிவரவில்லை,  காரணமும் சொல்லப் படவில்லை[2]. மே 15  வெளிவருகிறது என்று அறிவித்தார்கள்,  ஆனால்,  தேதி தள்ளிவைக்கப்பட்டது என்றார்கள்[3]. “தி இந்துவில்”  வந்த விமர்சனம் இப்படத்தின் கதையை அலசியுள்ளது.  ஒரு இந்து பிராமண பையன், முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறான்.  இரு குடும்பங்களை மையமாக வைத்துக் கொண்டு விவரணங்கள் செல்கின்றன.  இத்தகைய படங்களை எடுப்பதில் அபாயம் இருக்கிறாதா என்ற கேள்வியை எழுப்பி, படத்தில் சரிசமமாக எல்லாவற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப்படுகின்றன. அதேபோல, ஆவணிஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்க ப்பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[4]

 

Indian Express photo

Indian Express photo

ஷியா முஸ்லிம்கள் இயக்கம் எதிர்ப்பு, நீதிமன்றத்தில் மனு: இம்மாதம்  14ம் தேதி வெளியிடுவதாக இருந்தது,  வெளிவரவில்லை[5].  ஆனால், கதை தொடர்ந்தது.  நஸ்ரியாவுக்கு இது திருப்புமுனை என்றெல்லாம் அளந்தார்கள்.  அந்நிலையில் தான், ஷியா முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நடிகர் ஜெய்,  நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார், அனீஸ் இயக்கியுள்ளார். “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது[6].  இது தொடர்பாக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத்தலைவர் டேப்லெஸ் /  டப்ளஸ்  அலிகான் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன்  உரிமையாளர் வி. ரவிசந்திரன்.  அதை மே மாதம் 30-ஆம் தேதி திரையிடவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  அந்தத் திரைப்படத்தில் முஸ்லிம்கள் தரக்குறைவாக சித்திரிக்கப் பட்டுள்ளனர்.  அதிலும்,  ஷியா பிரிவு முஸ்லிம்களை மிகவும் இழிவு படுத்தி சித்திரித்துள்ளனர். இதனால் மதக்கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  எற்கெனவே,  இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை[7].எனவே,  இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்”, என மனுவில் கோரப் பட்டுள்ளது.

 

Muharram festival

Muharram festival

விடுமுறை  நீதிமன்ற  இடைக்கால  நடவடிக்கை:  இந்த மனு விடுமுறைக் கால நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை (மே 29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3- ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[8]. மனுவுக்கு ஜூன் 4– ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்[9].  போற போக்கைப் பார்த்தால் எல்லா தமிழ்ச் சினிமாவையும் இனிமேல் கோர்ட்டு தான் ரிலீஸ் செய்யும் போலிருக்கு..  திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடைகேட்டு இன்றைக்கு கோர்ட் படியேறியிருக்கிறது, ஒருகூட்டம்[10] என்று காட்டமாகக் கூட ஒரு இணைதளம் கமென்ட் அடித்துள்ளது.

 

M2U00474

M2U00474

சினிமா தயாரிப்பாளர் விளக்கம்[11]: பட சர்ச்சை குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறுகையில்,  ‘‘படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’  சான்றிதழ் தந்துள்ளது.  குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி படம் எடுத்திருந்தால் தணிக்கைக் குழு அனுமதிக்குமா? இது இஸ்லாம் மதத்துக்கு பெருமை சேர்க்கும் படம்.  படத்தை இயக்கியவர்,  இசையமைத்தவர், குறிப்பிட்ட நடிகர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்.  படம் வெளிவரும் முன்பே அவதூறாக கூறியாரும் விளம்பரம் தேடக்கூடாது. திட்டமிட்டபடி படம் வெளிவரும்.  எப்போது ரிலீஸ் என்பதை சனிக்கிழமை அறிவிப்போம்’’  என்றார்.

 

Muharram Hyderabad 2009

Muharram Hyderabad 2009

முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?:  ஷியா முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  மொஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் முதலியவை சினிமாவில் காட்டுவதில் என்ன எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை!   முதலில் இவற்றிற்கெல்லாம் விடுமுறை கூட இல்லை, ஆனால், செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் விடுமுறை அளித்து,  பிறகு அவற்றை தேசிய விடுமுறைகளாக்கினர். முஸ்லிம் நாடுகளிலேயே அவ்வாறு விடுமுறை அளிப்பது கிடையாது.  இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப் படுகின்றன. அதேபோல,  ஆவணி ஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்கப் பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[12].  ஆக  அந்த “முர்ஸித் / கொலு” தான் பிரச்சினை போலும்! ஒருவேளை, சுன்னி முஸ்லிம்கள் தூண்டி விட்டு, ஷியாக்கள் எதிர்த்திருக்கலாம். “மாரடி விழா” முதலிய ராயப்பேட்டையிலேயே மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஹைதரபாதில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். மற்ற வட இந்திய நகரங்களில் அமர்க்களமாகக் கொண்டாடுவார்கள். ஆகவே, இவற்றைக் காண்பிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகவே, வேறு பிரச்சினையை மதப்பிரச்சினையாக்கி, இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.

 

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

© வேதபிரகாஷ்

30-05-2014

[1] http://tamil.oneindia.in/movies/news/petition-seeks-ban-on-thirumanam-ennum-nikkah-202275.html

[2] http://www.deccanchronicle.com/140514/entertainment-kollywood/article/thirumanam-ennum-nikkah-release-soon

[3] http://www.kollytalk.com/video/video-news/jai-nazriyas-thirumanam-ennum-nikkah-postponed-153313.html

[4] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

[5]Rumours were rife that Anis’s Thirumanam Ennum Nikkah, starring Jai and Nazriya, was postponed from May 15, the date slated for release, due to certain issues. However, when DC quizzed the director on it, he said, “There were plans of postponing it owing to trivial reasons. However, going by the present scenario, it is highly likely that the movie might release on the fixed date itself.” Thirumanam Ennum Nikkah, produced by Aascar Ravichandran, bagged a ‘U’ certificate recently. The songs scored by Ghibran has already topped the charts.

[6]தினமலர்,  “திருமணம்எனும்நிக்காஹ்திரைப்படத்துக்குதடைகோரிவழக்கு, By dn, சென்னை, First Published : 30 May 2014 03:09 AM IST

[7]தினத்தந்தி,திருமணம்என்னும்நிக்ஹாபடத்துக்குதடைவிதிக்கவேண்டும்; சென்னைஐகோர்ட்டில்வழக்கு, பதிவுசெய்தநாள் : May 30 | 12:20 am

[8]http://www.dinamani.com/cinema/2014/05/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article2253242.ece

[9] http://www.dailythanthi.com/2014-05-30–marriage-nikha-film-to-be-banned-case-in-the-madras-hc

[10] http://www.tamilcinetalk.com/some-muslims-ask-ban-on-thirumanam-ennum-nikkah/

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article6064424.ece

[12] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!

திசெம்பர் 6, 2011

இமாம் ஹுஸைனின் 700வது தியாகத்திருநாள் அன்று குண்டு வெடிப்பு: 54 ஷியா முஸ்லீம்கள் சாவு, 160ற்கும் மேல் காயம் – தாலிபன்களின் கொடூரம்!


ஷியா முஸ்லீம்கள் சன்னி முஸ்லீம்களா; தாக்கப் படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[1]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[2]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[3]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[4] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம் பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[5] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்கவேண்டும்[6].

மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : சுமார் 54 பேர்பலி: உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் சிக்கி 54 பேர் பலியாயினர்[7]. நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்கள் அபு பசல் மசூதி [Abu Fazal shrine] யில் கூடி பாடிக்கொண்டிருக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இது தற்கொலை குண்டுவெடிப்பு என்று கருதப்படுகிறது[8]. 160 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். காபூல் அருகே உள்ள இந்த மசூதியில் சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருத நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இது ஒரு தற்கொலை மனித வெடிகுண்டாகும்[9]. இதனையடுத்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும் பதட்டத்துடன் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் சிக்கி 35 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காபூலின் வடக்கு பகுதியான மசார் இ ஷெரீப் பகுதியில் சித்தி முஸ்லிம் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்திலும் குண்டு வெடித்தது. இக்குண்டு ஒரு சைக்கிளில் கட்டப்பட்டிருந்தது. காபூலில் குண்டு வெடித்ததும், இக்குண்டு வெடித்ததாம். குண்டு வெடித்ததும், ஒரு இளம் வயது பெண் சிறுவர்களின் பிணங்களுக்கு நடுவில் நின்று கொண்டு கூக்குரல் இட்டதாக பார்த்தவர்கள் சொல்கின்றனர்[10]. சால்வார்-கமீஜ் அணிந்திருந்த அவள் உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்ததாம்[11].

முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகத்தை போற்றும் அஷூரா என்ற நிகழ்ச்சியும் ஆப்கனில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 30 மில்லியன் ஆப்கன் மக்கள் தொகையில் ஹஜ்ராக்கள் என்ற ஷியா முஸ்லீம்கள் 20% உள்ளனர். 1990களில் சன்னி-தாலிபான்கள் ஷியக்களைத் தாக்கி வந்தனர், கொன்றும் உள்ளன.

முகரம் / முஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இந்த மாதத்தில் சண்டைகள் தடை செய்யப் பட்டுள்ளன. முஸ்லீம்கள் இம்மாதத்தின் போது உண்ணாநோன்பு இருப்பர் .முகரம் மாதத்தின் பத்தாம் நாள் – அஷுரா  ஷியாக்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப் படும். அன்று ஷியாக்கள் மற்றும் சன்னிகள் ஒன்பதாம் அல்லது பதினொராம் நாளில் உண்ணாதிருப்பர்.

ஆனால், பிறகு அவர்கள் தமது கவனத்தை முஸ்லீம் அல்லாதவர்கள் – காபிர்கள் என்ற ரீதியில் அமெரிக்க-நாடோ வீரர்களை, அந்நிய சுற்றுலா பயணிகள், வேலையாட்கள் முதலியோர் மீது திருப்பி, அவர்களைக் கொன்று வந்தது. அதனால், இப்பொழுது, சியாக்கள் மறுபடியும் தாக்கப்படுவதற்கு, உலக கவனத்தை ஈர்க்கவே என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஷியா முஸ்லீம்கள் முஹரம் பண்டிகையை வெளிப்படையாகவே கொண்டாடி வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இன்று அதற்காக விடுமுறையும் உள்ளது. பொதுவாக ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானைப் போல இல்லாமல், ஷியா-சன்னி மோதல்கள் குறைவாகவே இருந்து வந்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தலிபான் ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தலிபான்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இல்லை பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-கைதா தாக்கியிருக்கக் கூடும், ஏனெனில் பாகிஸ்தானிய சன்னிகள் ஷியாக்களை முஸ்லீம்கள் என்று கருதுவதில்லை.மற்றும் அவகள் தாக்கப்படுவது, அவர்களின் மசூதிகளில் குண்டு வெடிப்பது முதலியவை சாதாரணமா விஷயங்களாக இருந்து வருகின்றன[12]. இருப்பினும் தாலிபனைச் சேர்ந்த ஜபியுல்லா முஜாஹித் மூலம் தாங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்று இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].

காந்தகாரிலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்கப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் மூவர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டுகளில் தாலிபனால் நடட்தப் பட்ட குண்டுவெடிப்புகள், தாலிபனின் தாக்குதலால் இறந்தவர்கள் முதலிய விவரங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன:

January 14, 2008 A Taliban suicide attacker leaves eight dead at the Serena, Kabul’s most luxurious hotel.
July 7, 2008 A car-bomb attack on the Indian embassy building kills more than 60 people.
February 11, 2009 At least 26 people die and 55 are wounded in three almost simultaneous Taliban attacks on official buildings.
 October 28, 2009 An attack claimed by the Taliban kills at least eight people, including five UN staff, at a Kabul hostel. Three attackers also die.
December 15, 2009 At least eight die and 40 are wounded in a suicide attack near a hotel hosting foreigners.
January 18, 2010 Five people die and at least 71 are injured as Taliban guerrillas carry out a wave of coordinated bomb and gun attacks around the capital.
February 26, 2010 Suicide attacks on two Kabul guesthouses kill at least 16 people, including seven Indians, a French national and an Italian.
May 18, 2010 A suicide bomber kills at least 18 people, including five US soldiers and one Canadian soldier, in an attack on a Nato convoy in a busy city centre street.
December 19, 2010 Two suicide bombers attack an Afghan army bus, killing five soldiers.
January 28, 2011 Eight people are killed in a suicide bombing at a central Kabul supermarket popular with Westerners.
May 21, 2011 Six medical students are killed in a Taliban suicide attack at Afghanistan’s main military hospital.
June 18, 2011  Nine people are killed when suicide attackers storm a police station in the capital.
June 28, 2011 21 are killed, including 10 civilians, when suicide bombers storm Kabul’s luxury Intercontinental Hotel.
August 19, 2011  Nine people, including a New Zealand special forces soldier, die when suicide bombers attack the British Council cultural centre in Kabul.
September 13/14, 2011 Taliban attacks targeting locations including the US embassy and headquarters of foreign troops kill at least 14 during a 19-hour siege.
September 20 Burhanuddin Rabbani, Afghanistan’s former president leading efforts to find a peace deal with the Taliban, is assassinated in a suicide attack at his home in Kabul’s supposedly secure diplomatic zone.
October 29, 2011 13 US troops operating under Nato are among 17 people killed in a car-bomb attack on a foreign military convoy in Kabul.
December 6 , 2011  At least 54 people are killed in a shrine bombing in Kabul, with four more dead in another blast at a shrine in the northern city of Mazar-i-Sharif, a day after a major conference in Germany on Afghanistan’s future pledged sustained support for another decade.

வேதபிரகஷ்

06-12-2011


 


[7] தினமலர், மொகரம்பண்டிகை : ஆப்கன்குண்டுவெடிப்பு : 40 பேர்பலி, http://www.dinamalar.com/News_detail.asp?Id=362666

[13] An email message to news organizations from the spokesman for the Taliban, Zabiullah Mujahid, denied responsibility. “We strongly condemn this wild and inhuman act by our enemies, who are tyring to blame us and trying to divide Afghans by doing such attacks on Muslims.”

http://www.nytimes.com/2011/12/07/world/asia/suicide-bombers-attack-shiite-worshipers-in-afghanistan.html