Posted tagged ‘முஹமது’

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

காபாவைப் பற்றிய உண்மைகளும், மாயைகளும்

மே 22, 2010

காபாவைப் பற்றிய உண்மைகளும், மாயைகளும்

காபா, காபத்துல்லாஹ், என்றெல்லாம் வழங்கப்படுவது முஸ்லீம்களின் வழிப்பாட்டு ஸ்தலமாகும். ஆனால், இதைப் பற்றி பல தகவல்கள், விவரங்கள், சரித்திரத்திற்கு புறம்பாக பிரச்சார ரீதியில் பரப்பப் படுகின்றன. இது எல்லோரும் நினைப்பது போல இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதல்ல. இஸ்லாத்திற்கு முந்தியிருந்த பலவற்றை இஸ்லாத்தில் தகவமைத்துக் கொண்டவற்றில் இதுவும் ஒன்றாகும் என்பதே உண்மையாகும்.

மெக்காவில் விக்கிரங்கள் இருந்ததைப் பற்றி பலவிதமான விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் கொடுக்கின்றனர். மெக்கா ஒரு பழமையான வானியல் சாத்திர நோக்கு மையமாக இருந்ததினால், அந்த 360 விக்கிரங்கள் 360 பாகைகளைக் குறிப்பதற்காக அமைக்கப் பட்டிருந்ததாகவும், ஆனால், அந்த 360 விக்கிரங்களையும் முகமது நபி உடைக்க ஆணையிட்டு இவ்வாறே உடைக்கப் பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மத்தியில் இருந்த ஒரு பெரிய விக்கிரகத்தை மட்டும் அரேபியர்களின்  வேண்டுகோளுக்கு இணங்க விட்டுவைத்ததாகவும், ஆனால் அந்த விக்கிரகமும் பலமுறை தாக்குதல்களுக்கு உட்பட்டதாலும், எரிக்கப்பட்டதாலும், பல துண்டுகளாகின. அவ்விடத்தை விட்டு வெளியே எடுத்துச் சென்ரும் உள்ளனர். பிறகு, மறுபடியும் உள்ளே கொண்டு வந்து வைத்துள்ளனர். அரேபியர்கள் இஸ்லாத்திற்கு முன்பும், பின்னும் அதனை “கடவுளாக” அல்லது “இறைச்சின்னமாக” மதித்து வழிபட்டு வந்துள்ளனர். இப்பொழுது, அவ்வாறில்லை என்று மறுக்கப் படுகிறது.

islam-black-stone-fragments

islam-black-stone-fragments

தலைமை தேவதை ஜிப்ராயில் மூலம் பெறப்பட்ட பெரிய கருப்புக் கல் – ஹட்ஜெரா எல்–அஸௌத் (Hadjera el-Assouad) எனவும் வழங்கப்படுகிறது. அதன் அதிகபட்ச விட்டம் 30.5 செ.மீ அதாவது ஒரு அடிக்கு சிறிது நீளமாக உள்ளது.

hajar-aswad-embedded-in-silver

hajar-aswad-embedded-in-silver

உடைந்த துண்டுகள் வெள்ளியில் பதிக்கப் பட்டு வைத்துள்ளன.

Kaaba-Interior

Kaaba-Interior

உள் அமைப்பு

காபா அமைக்கப்படுவது

காபா அமைக்கப்படுவது

காபாவின் படங்கள் பலவித விவரங்களைத் தருகின்றன.

Kaaba_Interior2

Kaaba_Interior2

அந்த காபாவிற்குள் என்ன இருக்கும் என்று பல முஸ்லீம்களுக்கே இன்று வரை தெரியாமல் இருக்கிறது.

Kaba-Hacibektas

Kaba-Hacibektas

இடைக்காலத்திலிருந்து, இப்பொழுதுவரை பல படங்கள், சித்திரங்கள் இருந்தாலும், அவற்றுள் எஞ்சிள்ளவை சிலவே.

pics--flood kaba 1941 01

pics--flood kaba 1941 01

1940ல் வெள்ளம் வந்தபோது, வெள்ளத்தில் மூழ்கியபோது எடுத்த படங்கள், சில விவரங்களைக் கொடுக்கின்றன.

pics--flood kaba 1941 02

pics--flood kaba 1941 02

அதைச் சுற்றியுள்ள கட்டடங்கள் இப்பொழுது உள்ளனவா என்று தெரியவில்லை.

pics--flood kaba 1941 03

pics--flood kaba 1941 03

உள்ளேயும் நீர் போனபோது, திறந்து சுத்தம் செய்தபோது, சில முஸ்லீம்கள் எல்லாவற்றையும் பார்த்திருப்பார்கள்.

pics--flood kaba 1941 04

pics--flood kaba 1941 04

ஒவ்வொரு நூறு ஆண்டுகளில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

KABA 1960

KABA 1960

கிருத்துவர்களைப் போன்றே எதிர்மறை மற்றும் உடன்பாட்டு முறையிலான பிரச்சார யுக்திகளை இதில் பயன்படுத்துவது தெரிகின்றது. அதாவது, பக்திமான் போன்று சிரத்தையுடன் மாயைகளையும் கட்டுக்கதைகளையும் பரப்புவது.  எதிர்ப்பதைப் போன்றும், மேன்மேலும் விவரங்களை கொடுத்து குழப்புவது. அதாவது, இல்லை என்று ஆரம்பித்தால், இருக்கிறது என்று வந்து விடுவர்கள் பலர். அதன் மூலம், அதிக தகவல்களைப் பெறலாம். மேலும், நமக்குத் தெரியாமல் அப்படி ஆதாரங்கள் உள்ளன என்று எடுத்துக் க்ஆட்டினால், அதையும் அழித்து விட்டு, தமது கொள்கைகலுக்கேற்றபடி செயல்படலாம், என்றெல்லாம் திட்டங்களுடனும் செய்ல்படுவர்.