Posted tagged ‘முஸ்லீம் சட்டம்’

மலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம்மன் தலை உருளல்!

ஏப்ரல் 5, 2012

மலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம்மன் தலை உருளல்!

மலேசியா முஸ்லீம் நாடானது: இந்து நாடாக இருந்த மலேசியா எப்படி முஸ்லீம் மயமாக்கப் பட்டது என்று முன்னமே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[1]. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம்[2]. 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது[3]. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே. அந்நாட்டுச் சட்டதிட்டங்கள், இந்துக்களுக்கு எதிராகத்தான் உள்ளது. அதாவது இஸ்லாமிய-ஷரீயத் சட்டம் அமூலில் உள்ளதால், காபிர்களான இந்துக்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. வெளிப்படையாக பார்த்தால் ஒன்றும் இல்லாதது போல தெரியும். ஆனால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் அதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

தொடர்ந்து கோவில்கள் இடிக்கப்படுதல்: கோவில்கள் உடைப்பது, இடிப்பது முதலியன சர்வசகஜமான காரியங்கள், விஷயங்களாக உள்ளன. கோவில்களில் ஏதாவது நடந்தால், அது “திருடர்கள்” செய்தார்கள் என்றுதான் செய்திகள் வரும், அதாவது நம் ஊரில் “சமூக விரோதிகள்” என்பதுபோல. ஏப்ரல் 26, 2006ல் கோலாலம்பூரில் நூறாண்டுகளுக்கும் மேலாக விளங்கி வந்த மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் புல்டோசர்களால் இடித்துத் தள்ளிப் பட்டது[4]. ஆயிரக்கணக்கில் இந்துக்கள், அழுது-புலம்பி வேண்டியும், அதிகாரிகள் கொஞ்சமுன் இரங்காமல், போலீசை வைத்து இடித்துத் தள்ளியது. 107 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்கோவிலுக்கு, இஸ்லாம் அரசு அனுமதி மறுத்து வந்தது. 1977லிருந்து விண்ணப்பித்தும், அதனை வேண்டுமென்றே நிராகரித்து வந்தது. இதுபோல நூற்றுக்கணக்கான கோவில்கள் இடுத்துத்தள்ளப்பட்டன.

இந்து கோவில் கட்டக்கூடாது என்று முஸ்லீகளின் வெறிச்செயல்!

ஆகஸ்ட்.29, 2009ல் இந்துக்கள் தங்களுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்தபோது, செலங்கூர் தலைநகர் ஷா ஆலம் என்ற இடத்தில் 50 முஸ்லீம்கள் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். வழக்கம்போல, தொழுகைக்குப் பிறகு மசூதியிலிருந்துப் ( Sultan Salahuddin Abdul Aziz Mosque ) புறப்பட்ட முஸ்லீம்கல் ஒரு பசுமாட்டின் தலையை அறுத்து, அதனை வீதி-வீதியாக எடுத்துச் சென்று, அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டனர். வெறிபிடுத்து கால்களினால் ரத்தம் சொட்டும் அந்த பசுத்தலையை உதைத்துத் தள்ளினர்.

Malaysian Muslims protest against proposed construction of Hindu temple[5]

August 29, 2009|Associated Press

KUALA LUMPUR, Malaysia – Dozens of Malaysian Muslims paraded yesterday with the head of a cow, a sacred animal in Hinduism, in a dramatic protest against the proposed construction of a Hindu temple in their neighborhood.

The unusual protest by some 50 people in Shah Alam, the capital of Selangor state, raises new fears of racial tensions in this multiethnic Muslim-majority country where Hindus make up about 7 percent of the 27 million population.

The demonstrators who marched from a nearby mosque after Friday prayers dumped the cow head outside the gates of the state government headquarters. Selangor adjoins Kuala Lumpur.

மைக் சகிதம் வைத்துக் கொண்டு, “தாரே தக்பீர், அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டனர். தலையை அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டுவிட்டு சென்றனர்[6]. பசு இந்துக்களுக்கு புனிதமான விலங்கு, அதனை தெய்வமாகப் போற்றுகின்றனர். 7% இருக்கின்ற இந்துக்கள் மதரீதியிலாக பாதிப்பில் இருந்து வருகின்றனர். வேடிக்கை என்னவென்றால், மலேசிய உள்துறை அமைச்சர் அதனை ஆதரித்துள்ளார்[7].இவ்வளவு குரூரமான செயல் நடந்தும், போலீஸ் ஒன்றும் செய்யமுடியவில்லையாம்.

இந்துஉரிமைகள்போராட்டக்குழு: 2007ல் நடந்த இக்குழுவின் போராட்டத்தில், அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மலேசிய நாட்டு தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டதால், இன்ட்ராப் குழு தனது போராட்டங்கள் முதலியவற்றை அடக்கிக் கொண்டது. அக்டோபர் 18, 2008ல் இன்ட்ராப் பொது ஒழுங்கு மற்றும் நேர்மை முதலியவற்றிற்கு குந்தகம் விளைக்கும் வகையில் செயல்பட்டுவதாகக் குற்றஞ்சாட்டப் பற்றி தடைச்செய்யப்பட்டது[8]. இன்ட்ராப் தலைவர்களில் ஒருவரான வைத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆறுவயது பெண்குழந்தை முதலியோர் கைது செய்யப்பட்டனர். ஆகமொத்தத்தில், இந்தியாவில், தமிழகத்தில் தமிழர்களின் உரிமைகள் என்றெல்லாம் கூச்சலிட்டுத் திரியும் கூட்டங்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. முஸ்லீம்தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததிராய், இம்மக்களின் உரிமைப்பறிப்புகள், கைதுகள் பற்ரி மூச்சுக் கூடவிடவில்லை.

இந்துக்கோவில்கள் தாக்கப்படுவது சகஜமான விஷயம்: முன்பு பல கோவில்கள் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அரசாங்கமே இடுந்துத் தள்ளியுள்ளது. மலேசிய தமிழ் அரசியல்வாதிகள், “நம்மவூர் நாத்திகத் திராவிடர்கள்” போல முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். உள்ளே இஸ்லாமிய அரசிற்கு சாதகமாகவும், வெளியில் ஏதோ மலேசிய இந்துக்களுக்கு உதவுவதுமாதிரிக் காட்டிக் கொள்வர்.

ஏப்ரல் 3, 2012ல் மறுபடியும் வெறியாட்டம்: பங்குனி உத்திரம் வந்தால், மலேசியர்களுக்கு வெறி பிடிக்கும் போல இருக்கிறது. குறிப்பாக கோவில்களைத் தாக்க அவ்வெறித்தூண்டுதல் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில், எட்டு சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கிழக்கு பகுதியில் டெர்ரங்கானு என்ற இடத்தில், ஸ்ரீ மகா மாரியம்மன் சபை கோவில் உள்ளது. கம்புங் பகுட் குயாங் (Kampung Bukit Kuang) என்ற இடத்திலிருந்து, துறைமுகத்தில் வேலைசெய்து வரும் தொழிலாளி ஒருவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, நேராகச் சென்று மாரியம்மன் கோவிலிலுள்ள சிலைகளை உடைத்துப் போடு என்று தனக்கு யாரோ ஆணைட்டதாக உணர்ந்தததால், மோட்டார் சைக்கிளில் விரைவாக அன்று சென்றான். யூனிபாம் போட்டு வந்தவன்,  நேராக கோவிலுக்குள் நுழைந்தான். 29 வயதான அவன் கோவில் கதவை சேதப்படுத்தி விட்டு உள்ளே சென்று, எட்டு சிலைகளை உடைத்துள்ளான். இந்த சம்பவத்தை பார்த்த பூசாரியும், கோவில் நிர்வாகியும் பயந்து போய், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, சிலைகளை உடைத்த நபரை கைது செய்தனர். இவரிடம் விசாரித்ததில், கோவில் சிலைகளை உடைக்கும்படி அசரீரி கூறியதாகக் குறிப்பிட்டுள்ளான்[9]. உடனே அவன் மனம் நலம் பாதிக்கப்பட்ட நபராக உள்ளான் என்று கூறி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

“கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’: தமிழர்களை, குறிப்பாக தமிழ் இந்துக்களை முஸ்லீம்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளார்கள். “கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’ என, போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகவே, மலேசியனுக்கு திடீர்-திடீர் என்று இவ்வாறு மனநிலை சரியாமல் போய்விடும்; யாரோ விக்கிரகத்தை உடை என்று சொல்வார்கள்; அவனும் உடைத்து விடுவான்; ஜாலியாக ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்து அனுப்பி விடுவர். இந்துக்களுக்கு மட்டும் சுரணையில்லாமல், காசு வருகிறது என்று அவர்களது கால்களை நக்கிக் கொண்டிருப்பார்கள் போலும்.

வேதபிரகாஷ்

05-04-2012


[8] After several warnings by the Malaysian government HINDRAF was officially banned on October 15, 2008, confirmed by Malaysian Home Minister Datuk Seri Syed Hamid Albar.In a statement issued at the ministry, Syed Hamid said the decision to declare HINDRAF as an illegal organisation was made following the ministry being satisfied with facts and evidence that showed HINDRAF had and was being used for unlawful purposes and posed a threat to public order and morality. “Based on powers vested under Section 5(1) of the Societies Act, HINDRAF from today is declared an illegal organisation,” he said.

http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=364772

http://thestar.com.my/news/story.asp?file=/2008/10/15/nation/20081015184431&sec=nation

http://www.malaysianbar.org.my/legal/general_news/hindraf_declared_an_illegal_organisation.html