Posted tagged ‘முஸ்லீம்களின் அடிப்படைவாதம்’

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது? (1)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது?  (1)

19-04-2022 கவர்னருக்கு கருப்புக் கொடி, கொம்புகள் எறிந்தது: 19-04-2022 அன்று தமிழக கவர்னர் மயிலாடுதுறை வந்தபோது, போலீஸார் முன்பே, திக-வகையறாக்கள் கூடி, ஆர்பாட்டம் செய்து, கொம்புகளை வீசி எறிந்தனர். அத்தகைய வன்மம் ஏன், எப்படி, எதற்காக வெளிப்படுகிறது என்பதனை ஆராய வேண்டும். தினம்-தினம் சட்டசபையிலேயே கவர்னர் தேவையில்லை என்று முதலமைச்சரே பேசுவது, மசோதாக்கள் போடுவது என்றெல்லாம் செய்து வரும் போது, மற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் போகும். ஆனால், இவையெல்லாம் பெரிய சட்டமீறல், தேசவிரோதம் ஆகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சி அமைதியாக மறக்கப் படுகிறது. அதே மயிலாடுதுறையில் போலீஸாரை எதிர்த்து மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. என்.ஐ.ஏ.வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவரங்கள் வெளியே வந்தாலும், தமிழக ஊடகங்கள் இவற்றை அமுக்கப் பார்க்கிறது. முஸ்லிம்கள் என்பதால், திமுக ஆட்சி செய்திகளில் கூட குறைவாகவே வருவது போல கவனித்துக் கொள்கிறது போலும். இத்தகைய, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தமிழகத்தில் வளர்ப்பது என்ன நன்மை பயக்கும்?

மார்ச் 2022 – தமிழக முஸ்லிம் கர்நாடக நீதிபதிகளை மிரட்டுவது: ஹிஜாப் வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.  மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து,  சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்[1]. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்[2]. இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

21-02-2022 அன்று போலீஸார் ஐந்து முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது: முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது திகைப்பாக இருக்கிறது.

  1. மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38.
  2. அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58.
  3. இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29;
  4. காரைக்கால் முகமது இர்பான், 22;
  5. சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.

இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்[3].  அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்[4]. துப்பாக்கி நீட்டி மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறது, தயாரானார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரியாதா, எப்படி அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால், அதன் தீவிரத்தை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்து விட்டது மாநில அரசும், சித்தாந்தமும், தினம்-தினம் மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் பேச்சுகளும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிக் காட்டி போலீஸாரை மிரட்ட தைரியம் எப்படி வந்தது?: தமிழகம் காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பேசுவது, அயல்நாட்டில் முஸ்லிம்கள் பாதிப்பு என்றால் இங்கு ஆர்பாட்டம் செய்வது, அந்நிய தேசவிரோத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது-எழுதுவது-பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசவிரோதம்  என்றெல்லாம் பார்க்காமல், அதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை, யாரும் தலையிடக் கூடாது, தலையிட்டால், விமர்சித்தால் மிரட்டப் படுவார்கள், தாக்கப் படுவார்கள் போன்ற மனோபாவத்தை உண்டாக்குவது தான், போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியது.

முகமது ஆசிக் கைது 27-02-2021: மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்[5].. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டு குழுவாக செயல்பட்டு வந்தனர்[6]. இவர்கள் கோவையை சேர்ந்த இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர்[7]. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 2010ஆம் ஆண்டு 7 பேரையும், என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்[8]. இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவர் பிணையில் வெளியானது[9] முதல் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் ஆசிக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தது[10]. எனினும் அவர் விசாரணை ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் கோழிக்கடையில் பதுங்கியிருந்த ஆசிக்கை 27-02-2021 அன்று நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] மாலைமலர், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்தமிழகத்தை சேர்ந்தவர் கைது, பதிவு: மார்ச் 23, 2022 06:07 IST; மாற்றம்: மார்ச் 24, 2022 01:27 IST.

[2] https://www.maalaimalar.com/news/national/2022/03/23060702/3604832/A-man-from-Tamil-Nadu-who-had-allegedly-issued-death.vpf

[3] தினமலர், .எஸ்., ஆதரவாளர்களுக்கு நிதியுதவி: பின்னணியை விசாரிக்கிறது என்..., Updated : மே 11, 2022  09:01 |  Added : மே 11, 2022  09:00

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3027224

[5] டாப்.தமிழ்.நியூஸ், மயிலாடுதுறை அருகே .எஸ்..எஸ் வழக்கில் தொடர்புடைய இளைஞர் கைதுஎன்.. அதிகாரிகள் நடவடிக்கை!,  By NEWSDESK Fri, 28 May 2021 2:22:36 PM.

[6]https://www.toptamilnews.com/districts/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/youth-arrested-in-connection-with-isis-case-near/cid4926959.htm

தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[7] தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[8] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/2021/may/28/the-youth-who-came-out-on-bail-in-connection-with-the-organization-was-arrested-near-mayiladuthurai-3631508.html

[9] இ.டிவி.பாரத், தலைமறைவு குற்றவாளி கைதுதேசிய புலனாய்வு முகமை அதிரடி, Published on: May 28, 2021, 3:31 PM IST

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/the-culprit-involved-in-the-isis-case-has-been-arrested/tamil-nadu20210528153155208

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

ஏப்ரல் 7, 2013

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:

  1. அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
  2. அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
  3. அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
  4. ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
  5. எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
  6. பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
  7. ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.

இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].

அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7].  “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர்.  இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].

அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.

இஸ்லாமிஸ்டுகள்மற்றும்செக்யூலரிஸ்டுகள்: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • ·         முஸ்லீம்களின் வெறியாட்டம்பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].

வேதபிரகாஷ்

07-04-2013


[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.

[2] The demands included declaration of the Ahmadiyya Muslim sect as non-Muslim, a ban on free mixing of men and women, making Islamic education mandatory at all levels and no installation of any sculpture in any public place.

http://edition.cnn.com/2013/04/06/world/asia/bangladesh-blasphemy-protest/

[3] The group listed 13 demands, including reinstating “absolute trust and faith in the Almighty Allah” in the nation’s constitution, which is largely secular, and passing a law providing for capital punishment for maligning Allah, Islam and its Prophet Muhammad.

http://abcnews.go.com/International/wireStory/hardline-muslims-rally-bangladesh-amid-shutdown-18895209#.UWEgOqJTCz4

[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

மார்ச் 19, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].

மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது.  முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம்  இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!

நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.

நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!

முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

19-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.

ஜூன் 22, 2010

காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.

சுதந்திரத்தின் முன்னும், பின்னும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை அளவிற்கு அதிகமாக கொஞ்சி, கெஞ்சி, செல்லம் கொடுத்து, சீரழந்துதான் மிச்சம். அதுமட்டுமல்லாது, நாட்டையே இரண்டாகப் பிளந்து, பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்தது. “சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்”, என்று முகமது அலி ஜின்னா எகத்தாளத்துடன் கூறிக்கொண்டார். ஆனால், காந்திஜியோ லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை.

முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் உள்ள இந்துக்களையும் அறவே ஒழித்துக் கட்டிவிட்டது. அதனை கேட்க எந்த இந்திய அரசியக் கட்சிக்கும் யோக்கியதை இல்லை, உணர்வுல் இல்லை. மதத்தால் ஒன்றாக இருக்கமுடியாத பாகிஸ்தான் இரண்டாகியது. ஆனால், விடுதலைக்காக உதவிய இந்தியாவிற்கே எதிராகத்தான் பங்களாதேசம் செயல்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது.

செக்யூலரிஸம் வந்து முஸ்லீம்களின் வெறித்தனத்தை, அடிப்படைவாதத்தை, ஏன் தீவிரவாதத்தைக்கூட அதிகமாகவே வளர்த்தது. இன்று தேசிய ஜிஹாதி தீவிரவாதம் உள்ளதாக இந்தியா பெருமைப் பட்டுக் கொள்கிறது.

தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு, முஸ்லீம்களை ஓட்டுவங்கிகளாக மாற்றி, அவர்களின் வெறியை இன்னும் வளர்க்கத்தான் செய்தது.

இந்ந்திலையில், காங்கிரஸைத் தொடர்ந்து முஸ்லீம் அமைப்புகள் மிரட்டி வருவது ஆச்சரியமாக உள்ளது. முன்பு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை “ஜிஹாதி” விஷயத்தில் மிரட்டினர். இப்பொழுது, வெளிப்படையாக, இவ்வாறு மிரட்டியுள்ளது, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.

சென்னையில் ஜூலை 4ல் காங்.,க்குஎச்சரிக்கை விடும் முஸ்லிம் மாநாடு:தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பேட்டி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23986

ராமநாதபுரம்:””முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத காங்கிரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில், ஜூலை 4ல் சென்னையில் முஸ்லிம்கள் மாநாடு நடைபெறும்,” என, தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2004 தேர்தலில் காங்.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பிய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தர ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தும், அது குறித்து லோக்சபாவில் காங்.,விவாதம் செய்யவில்லை. சட்டம் இயற்றவில்லை. அறிக்கை தாக்கல் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அனால் பிரதமரோ,””அனைத்து கட்சியின் ஒத்த கருத்து வந்த பின்தான் ஒதுக்கீடு செய்யப்படும்,” என , பல்டி அடித்துவிட்டார். இதன்காரணமாக முஸ்லிம்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.

இதன் வெளிப்பாடாகத்தான் ஜூலை 4 ம் தேதி, சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. தமிழகத்திலிருந்து 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கின்றனர். மாநாடு காங்கிரசுக்கு எச்சரிக்கை மாநாடாக இருப்பதோடு, வரும் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காங்கிரசுக்கு எதிராக செயல்படுவது என முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் இடஒதுக்கீடு தர காங்., சம்மதித்தால் ஆதரவு தருவோம், என்றார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர், சோனியாவிடம் முறையீடு
திவு செய்த நாள் : ஜூலை 07,2010,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34630

புதுடில்லி : ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைத்தபடி, கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவிடம், நேரில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது. அதில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, தீர்மானம் போடப்பட்டது.இந்த தீர்மானங்களை விளக்கியும் இட ஒதுக்கீட்டை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.