Posted tagged ‘முஸ்லிம் லீக்’

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]

பிப்ரவரி 7, 2021

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]

பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[1], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[2]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும். பெரியார் என்கின்ற ஈவேராவின் கதை அப்படியென்றால், காயிதே மில்லத் என்கின்ற முகமது இஸ்மாயில் கதை (5.6.1896 – 5.4.1972) இப்படியுள்ளது.

மணிச்சுரரில் வெளியான பெரியாரின் கையறுகதறிய நிலை: 06-0-2021 தேதியிட்ட “மணிச்சுடர்” என்கின்ற முஸ்லிம் நாளிதழ், ஈவேரா மற்றும் முகமது இஸ்மாவிலைப் பற்றி, இவ்வாறு, வெளியிட்டுள்ளது[3]: “கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மீது இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் பெரும் மரியாதையும் மாறாத பேரன்பும் கொண்டிருந்தனர். குறிப்பாக காயிதே மில்லத் அவர்களை தந்தை பெரியார் அவர்களும் , மூதறிஞர் ராஜாஜி அவர்களும் தம்பி என்றும், பெருந்தலைவர் காமராஜர் அண்ணன் என்றும், அன்பொழுக உறவு முறை கூறி அழைக்கும் அளவுக்கு நெருக்கமான நல்லுறவு அவர்களிடையே நிலவியது.


“1972
ம் ஆண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலமானபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தந்தை பெரியோர் கதறி அழுத சம்பவம் நம் நெஞ்சங்களை உருகச் செய்யும். ஆம். இமைய மலை போல் எதற்கும் அசையாத் நெஞ்சுரம் கொண்ட தமிழர் தந்தை பெரியார் அவர்கள், காயிதேமில்லத் அவர்களின் மறைவு சற்று நிலை குலையச் செய்தது.தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.


திராவிட இயக்கங்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் இடையே நிலவி வந்த பிரிக்க முடியாத நல்லுறவை தந்தை பெரியார் நன்கு உணர்ந்தவர். காயிதே மில்லத்தையும், இஸ்லாமிய சமுதாயத்தையும் தன் நெஞ்சத்தில் ஏந்தி நேசித்தவர் தந்தை பெரியார். திராவிட இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையேயான இந்த பேரன்பும் நல்லுறவும் இன்றளவும் இம்மியளவு கூட குன்றாமல் குறையாமல் வாழையடி வாழையாகத் தொடர்கிறது”. காயிதே மில்லத் புராணம், அவ்வப்போது, ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன[4]. இதில் எந்த விதிவிலக்கோ, ஆராய்ச்சியோ இல்லை, அப்படியே, இருப்பவற்றை, திரும்ப-திரும்ப வெளியிடுவது வழக்கமாக உள்ளது[5].

 அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முயன்றதை முகமது இஸ்மாயில் எதிர்த்தது[6]: இதே போல, முகமது இஸ்மாயில் பற்றி, முகமதியர் எழுதுவது தான் உள்ளது. அவை எவ்வாறு 100% ஆராய்ச்சிக்கு ஏற்றது என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு – புதுமடம் ஜாபர் அலி என்பவர் காயிதே மில்லத் பற்றி, போற்றி எழுதியதிலிருந்து தெரியும் விசயங்கள் கொடுக்கப்படுகின்றன[7]. “……..காயிதே மில்லத்என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்என்று இதற்குப் பொருள். 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தார். அப்போது, சென்னை அண்ணா சாலையில் கன்னிமரா ஹோட்டல் எதிரே இருந்த முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முகமதியன் கல்லூரியைக் கையகப்படுத்திய அரசு, அதை அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முடிவுசெய்தது. இதை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இருக்கும் ஒரே ஒரு கல்லூரியையும் அரசு கையகப்படுத்துவதால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதினார். அப்போதைய உள்துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயனைச் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினார், காயிதே மில்லத். அப்போது அமைச்சர் சுப்பராயன், ‘ஒரு கல்லூரிக்காகப் போராடுவதில் காட்டும் உழைப்பை, முஸ்லிம் சமூகத்துக்காக உங்கள் சமூகத்தில் உள்ள செல்வந்தர்களிடம் பேசி தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கல்லூரிகளைத் தொடங்குவதில் நீங்கள் ஆர்வம் காட்டினால் அதிக பலன் கிடைக்குமேஎன்று யோசனை தெரிவித்தார்.

முகமதிய கல்லூரிகள் தமிழகத்தில் உருவானது[8]: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “இந்த யோசனையில் இருக்கும் நன்மையைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத், உடனடியாகத் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரும் செல்வந்தர்களைச் சந்தித்து, ‘முஸ்லிம் சமூகத்துக்கென்று கல்லூரிகள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அவரது வேண்டுகோளைப் பல செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியாரைச் சந்தித்து, தனது இந்தத் திட்டம் பற்றி விளக்கி அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்தே, சென்னையில் புதுக் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து சென்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் தொழில்செய்து வந்த முஸ்லிம் தனவந்தர்களிடம், கல்லூரிகளின் கட்டிட வசதிக்காக நிதி கோரினார். அவரது வேண்டுகோளை உத்தரவாக மதித்து அவர்கள் தாராளமாக நிதி வழங்கினர். ஒட்டுமொத்த நிதியையும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் கல்லூரிகளின் கட்டிடங்களுக்காக செலவிட்டார். இன்றும் புதுக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரிகளில் பர்மாமலாய் வாழ் முஸ்லிம் பெயர்கள் கட்டிடங்களுக்குச் சூட்டப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி,” என்று எழுதியது.

1972ல் எம்ஜிஆர் மூன்று கிமீ நடந்து, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “தந்தை பெரியார் முதல் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி வரை எல்லாத் தலைவர்களும் காயிதே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் துணை நின்றார். தேர்தலின்போது அவரது இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினார் அண்ணா. எந்த முகமதியன் கல்லூரியை அரசு மகளிர் கல்லூரியாக மாற்ற காயிதே மில்லத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே கல்லூரிக்கு காயிதே மில்லத்தின் பெயரையே சூட்டினார், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1983-ல் காயிதே மில்லத்தின் வாழ்க்கை பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தார். காயிதே மில்லத் மறைந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட புதுக் கல்லூரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய எம்ஜிஆர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்தே வந்தார்,” என்று எழுதியது.

© வேதபிரகாஷ்

07-02-2021


[1]  பெரும்பாலும், இத்துகுப்புகள்,  இப்பொழுது, இவை இணைதளங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவையெல்லாம், “கிரிடிகல் எடிஷன் பதிப்பு” போன்றவை இல்லை.

[2]  ம.வென்கடேசன், க. சுப்பு போன்ற வலதுசாரி, இந்துத்துவ எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகங்கள்.

[3]  மணிச்சுடர், தந்தை பெரியாரின் தம்பி காயிதே மில்லத், பிப்ரவரி 6, 2021, பக்கம்.4

[4] தினமலர், முகம்மது இஸ்மாயில் () காயிதே மில்லத் 5.6.1896 – 5.4.1972, திருநெல்வேலி, பதிவு செய்த நாள்: 04ஜூன் 2018 00:00.

[5] https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43039&cat=1360

[6] தமிழ்.இந்து, காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!, Published : 05 Jun 2017 09:08 AM; Last Updated : 06 Jun 2017 10:18 AM

https://www.hindutamil.in/news/opinion/columns/220078-.html

[7] புதுமடம் ஜாபர் அலி, காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

[8] https://www.hindutamil.in/news/opinion/columns/220078-.html

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம்களின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (1)

மார்ச் 23, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்முஸ்லிம்களின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (1)

முஸ்லிம்ம் லீக் பேட்டி 2016 தேர்தல்

முஸ்லிம் கட்சிகளின் அபாயகரமான அரசியல் சூழ்ச்சிகள்: கடந்த 2011 தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் போட்ட வேடங்களை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்துள்ளேன். வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொண்டு தங்களுக்கு அதிக அளவில் இடங்களை கைப்பற்ற யுக்திகளை எப்படி கையாளுகின்றன முதலியவை அப்பொழுது வெளிப்பட்டன. வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்! முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? இதை பயங்கரமான அரசியல் சூழ்ச்சி என்று தான் சொல்லவேண்டும்.

Fight among the mohammedan parties in Tamilnaduகாபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்தம்: காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? “எதிரியின் எதிரி” நண்பன் என்று இந்த விரோதிகள் ஒன்றாக கூடியுள்ளனர். அதாவது, காபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்த போலிருக்கிறது. குரானில், ஹதீஸில், ஷரீயத்தில் அத்தகைய கொள்கை உள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளனர் போலும். கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். அரசாட்சி, அதிகாரம் பணம், புகழ் வரவேண்டும் அவ்வளவே தான்! ஆனால், இப்பொழுது, திமுக காங்கிரசுடன் சேர்ந்து விட்டது. அதாவது, ஊழல்- ஊழலோடு ஐக்கியமாகி விட்டது. இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

SDPI, MMK, IUML all in DMK 2016கருணாநிதியும் முஸ்லிம் கட்சிகளும் (மார்ச்.21, 2016): “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உங்களோடு நீண்ட நாட்களாக கூட்டணியிலே உள்ள கட்சி. இப்போது மனிதநேய மக்கள் கட்சி உங்கள் கூட்டணியிலே சேருகிறது. அதனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு உள்ள இடம் குறையுமா?,” என்று கருணாநிதியிடம் கேட்டபோது, “குறையாது” என்று பதிலளித்துள்ளார்[1]. “இடவொதிக்கீடு” பாணியில், தனித்தனியாக ஒதுக்கீடு செய்வாரா அல்லது அருந்ததியரை / எஸ்.சிக்களை ஏமாற்றியது போல, உள்-ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவாரா? அதாவது, முஸ்லிம் கட்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சமயோஜிதமாக கூறியுள்ளது தெரிகிறது[2]. நாளைக்கு, திமுகவுக்கு பாதகமான தொகுதிகளை இவர்களுக்கு ஒதுக்கி விட்டு, கணக்குக் காட்டிக் கொள்ளலாம். முஸ்லிம்களால் ஜெயிக்க முடியும் என்ற தொகுதிகளை தாம் அவர்களுக்குக் கொடுப்பது என்பதை யுக்தியாகக் கொண்டுள்ளனர். அதிலும், அதிமுக மற்றும் திமுக கட்சியினர், கூட்டணி முஸ்லிம் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக, தமது கட்சி முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் என்று நினைத்தாலும், வெற்றி பெற்றப் பிறகு, முஸ்லிம் முஸ்லிமாகதான் நடந்து கொள்ளும் போது, மதவாதத்திற்கு திராவிடக் கட்சிகளும் துணைபோய் கொண்டிருக்கின்றன.

2011 அதிமுக, ம்மக ஒப்பந்தம்அதிமுகவிலிருந்து திமுக கூட்டணியில் தாவியுள்ள மனிதநேய மக்கள் கட்சி (மார்ச்.19, 2016): தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்[3]. அதிமுகவிலிருந்து, திமுகவுக்குத் தாவியிருப்பது நோக்கத்தது[4]. முஸ்லிம் கட்சியினர், இவ்வாறு அதிமுக-திமுக கூட்டணிகளில் தாவி-தாவி விளையாடிக் கொண்டிருக்கும் “சர்க்கஸ் கூத்துகளை” மக்கள் கவனிக்க வேண்டும். இதில் முஸ்லிம் கட்சிகளுக்கு கவலையே இல்லை, ஏனெனில், அவர்கள் எப்படியாவது சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஜனநாயகமற்ற, கொள்கையற்ற, சித்தாந்தம் மறந்த வேசி அரசியலை கவனிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ல் நடைபெறவிருக்கிறது. பலமுனைப் போட்டி காணும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ansar, Jawahirullaஸ்டாலினை ஜவாஹிருல்லா சந்தித்து பேசியது: இந்நிலையில், சென்னையில் 19-03-2016 அன்று (சனிக்கிழமை) கூட்டணி குறித்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும்” என்றார்[5]. ஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மமக இணைந்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி தோல்வி அடைந்தார்[6].

IUML conference, Trichy entrance 24-11-2015 those who selectedதிமுக தலைமையிலானமதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும்: திமுக கூட்டணியில் முஸ்லிம்களின் அடிப்படைவாத-தீவிரவாத கட்சியான எஸ்டிபிஐ இணைந்துள்ளது. இது பற்றி அதன் தலைவர் தெஹலான் பாகவி செய்தியாளர்களிடம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான “மதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணி யில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி இணைந்துள்ள திமுக கூட்டணி மதசார் பற்றகூட்டணியாம். தமிழர்களை எவ்வளவு வடிகட்டின முட்டாள்களாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது தமாஷாகத்தான் இருக்கிறது. அப்படி தமிழக மக்கள்களை மூடர்களாக மாற்றி வைத்துள்ளது திராவிட போலி நாத்திக கூட்டங்கள். முஸ்லிம்களின் நலனுக்காக மட்டும் வரிந்து கட்டி கொண்டு செயல்படும் இயக்கங்களான தவ்கீத்ஜமாத், எஸ்டிபிஐ, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரி வான மனித நேயமக்கள் கட்சி ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மதவாத பிஜேபியை வளரவிட மாட்டோம் என்று சொல்வது, வேடிக்கைதான்.

05-karunanidhi-iuml-head-khadeவிஜயகாந்தை மிரட்டிய எஸ்டிபிஐ திமுக கூட்டணியில் சேர்ந்தது (19-03-2016): சென்ற மாதம் பிப்ரவரி 21ம் தேதி விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியது ஞாபகம் கொள்ளலாம்[7]. தெஹலான் பாகவி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  “234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு எஸ்டிபிஐ கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. எஸ்டிபிஐ இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றிபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது,” என்றெல்லாம் பேசியது உள்ளே விவகாரம் உள்ளது என்பதுதான் தெரிகிறது[8]. அப்படி 234 தொகுதிகளிலும் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதனை ஆராய வேண்டும். இப்பொழுதோ, 23-03-2016 அன்று விஜயகாந்த், முட்டாள்தனமாக மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்திருப்பது அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. இது நிச்சயமாக ஓட்டுகளைப் பிரிக்கும் யுக்திதான். ஒன்று பிஜேபி அடியோடு ஓரங்கட்டப்பட்டு விட்டது. அரசியல் தெரியாத தமிழக பிஜேபிக்காரர்களின் நிலை இதுதான் என்று தெரிந்து விட்டது. இனி அமித் ஷா வந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தினத்தந்தி, தி.மு.. கூட்டணிக்கு தே.மு.தி.. வரலாம்: இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லைகருணாநிதி பேட்டி, பதிவு செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 1:26 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 5:45 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/India/2016/03/22012602/Didnt-lose-hope-of-DMDK-joining-DMK-alliance-Karunanidhi.vpf

[3] தமிழ்.இந்து, திமுக கூட்டணியில் மமக தேர்தலை எதிர்கொள்ளும்: ஜவாஹிருல்லா,  Published: March 19, 2016 14:39 ISTUpdated: March 19, 2016 14:39 IST

[4] தமிழ்.ஒன்.இந்தியா, திமுக கூட்டணியில் இணைந்தது ..: மு.. ஸ்டாலினுடான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா அறிவிப்பு, By: Mathi, Updated: Saturday, March 19, 2016, 17:46 [IST].

[5] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/mmk-join-dmk-alliance-jawahirullah-meets-mk-stalin-249330.html

[7] தினமணி, பாஜகவுடன் தேமுதிக கூட்டணி சேரக் கூடாது: எஸ்டிபிஜ கட்சி வலியுறுத்தல், By திண்டுக்கல், First Published : 22 February 2016 08:58 AM IST

[8]http://www.dinamani.com/edition_madurai/dindigul/2016/02/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A/article3290737.ece

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (2)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (2)

தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்): “யாகூப் மேமனின் விசாரணையில் பல்வேறு குறைகள் இருந்ததை அவரை சரணடையச் செய்த ரா உளவுப்பிரிவின் முன்னாள் அதிகாரி பி. ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். உலகம் முழுவதும் 140 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியாவும் மரண தண்டனையை முற்றாக கைவிட வேண்டும். மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்”. கொசுரு: இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கும் வகையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அதுவும் அவரது பிறந்த நாளில், இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்[1]. [பாரபட்சத்துடனும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக பேசி வரும் இவரது கருத்தை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. அண்டைநாடுகளான பஙளாதேசம் மற்றும் பாகிஸ்தானிலேயே தீவிரவாதிகளை தூக்கிட்டு வருகிறார்கள். அது இவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே. அரபு நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை].

அசாசுதீன் ஒவைஸி தீவிரவாத வாதங்கள்: அசாசுதீன் ஒவைஸி உடனே, பாபு பஜரங்கி, மாயா கொடானி, காலனெல் புரோஹித், சுவாமி அஸீமாநத் முதலியோரும் தூக்கில் போடப்படவேண்டும் என்றார்[2].  “பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்தி சிங் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இருந்ததைப் போன்ற அரசியல் பின்புலம் யாகூப் மேமனுக்கு இல்லாமல் போனதே அவர் தூக்கிலிடப்பட காரணமாக அமைந்தது. இதைப் பின்பற்றி பாபர் மசூதியை இடித்தவர்களையும் தூக்கிலிட வேண்டும்” முன்னர் யாகுப் மேனன் முஸ்லிம் என்பதனால் தான் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது என்றெல்லாம் பேசினார். இவரும், இவரது சகோதரனும் வாய்-தீவிரவாதப் பேச்சுகளில் வல்லவகள். இருப்பினும் ஊடகங்கள் இவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து பேச வைத்து, அவற்றை பிரபலப்படுத்தி, பரப்பி வருகிறார்கள். [அண்டைநாடுகளான பஙளாதேசம் மற்றும் பாகிஸ்தானிலேயே தீவிரவாதிகளை தூக்கிட்டு வருகிறார்கள். அவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள் தாம். பிறகு அவர்கள் முஸ்லிம்கள் என்றாலும், ஏன் தூக்கில் போடுகிறர்கள், மரணதண்டனையை நிறைவேற்ருகிறார்கள்? அது இவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே. அரபு நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை].

எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்)[3]: “அப்துல் கலாம் என்னும் மாமேதை மறைந்ததற்காக உலக மக்கள் அனைவரும் கவலை கொண்டுள்ளனர். இந்த வேளையில், யாகூப் மேமனை தூக்கிலிட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. தானாக சரணடைந்த யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” [இப்படி அரைகுறையாக இவர் கூறியிருப்பதிலிருந்தே, இவருக்கு விசயம் தெரிவில்லை அல்லது மறைக்கிறார் என்றாகிறது]

கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி. மாநிலத் தலைவர்): “முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் நடக்கும் நாளில், யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் மரண தண்டனை ஒழிப்பு குறித்த கலாமின் கோரிக்கையும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.” [இங்கும் கலாமின் கருத்து திரிக்கப் பட்டிருக்கிறது. தீவிரவாதிகளைப் பொறுத்த வரையிலும், அடுத்தவர்களின் உயிரை பறிக்க அவர்களுக்கு உரிமையில்லை, அதனால், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளார்]

Supporters of Memon against hanging 2015

Supporters of Memon against hanging 2015

அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் கருணை மனு கொடுத்தது: செக்யூலரிஸ வகையறாக்கள் அப்படி-இப்படி என்று சுற்றி வளைத்து, மரண தண்டனை கூடாது என்ற வாதத்தை குறிப்பிட்ட ஊடகங்கள் வெளிப்படையாக வைத்தன[4]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜிவ் காந்தி கொலைகாரர்களின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப் பட்டு, அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதுவும் குறிப்பட்ட மாநில மக்களை தாஜா செய்வதற்காக செய்யப் பட்டது என்று செக்யூலரிஸ வகையறாக்கள் திரிபு விளக்கம் அளித்தன. முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவில் யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத் (மார்க்சிஸ்ட் கம்யூ.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சிவா (தி.மு.க.) உள்ளிட்ட கட்சித்தலைவர்களும்,  பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்கா, மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களும் கையெழுத்து இட்டனர்[5].

Tejas, 1993 victim-Mehta family pays tribute every year

Tejas, 1993 victim-Mehta family pays tribute every year

257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்!: கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்பாவி 257 மனிதர்களின் உயிர்களைப் பற்றி இந்த மனிதர்கள் கவலைப் பட்டனரா என்று தெரியவில்லை. காயமடைந்த700க்கும் மேற்பட்ட மனிதர்களைப் பற்றியும் இரக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  தீவிரவாதிகள் இரக்கத்துடனா குண்டுகளை வைத்து வெடிக்க வைத்தனர்? கருணையுடனா அத்தனை அப்பாவி மக்களைக் கொன்றனர். கை-கால் பிய்ந்து, ரத்தம் பீய்ச்சி அடித்து, உடல்கள் சிதறிய போது, இரக்கம், கருணை, மனிதாபமானம் முதலிய குணாதரியங்களைப் பற்றி இவர்கள் சிந்தித்துப் பார்த்தார்களா? எந்த உயிரையும் எடுக்க மனிதனுக்கு உரிமையில்லை என்றால், இவ்வுயிர்களை எப்படி தீவிரவாதிகள் எடுத்தார்கள்?

1993 victim-pays tribute every year

1993 victim-pays tribute every year

பலிக்கடாக்களுக்கு நீதி தாமதப்படுத்துவது ஏன்?: பலிக்கடாக்களின் உறவினர்களுக்கு நீதி நேரம் தாழ்த்தித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. வினாயக் தெவ்ருக்கர் தனது 19 வயதான சகோதரி சசிகலா மற்றும் 11 வயது சகோதரன் வசந்த் முதலியோரை சென்சுரி பஜார், வோர்லியில் பிணமாக ரத்தம் மற்றும் உடல் பாகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. ஐந்து-மணி தேடலுக்குப் பிறகு மருத்துவ மனையில் அவர்களது உடல்களைக் கண்டு பிடித்தனர்[6]. 36 வயதாகும் தெவ்ருக்கர் மனப்பிராந்தியுடன் வாழ்ந்து வருகிறார். “எங்கள் பெற்றோர் அதிலிருந்து மீளவில்லை…..கொலையாளி சீக்கிரம் தண்டனை பெற்றால் தான், ஓரளவிற்கு பாதிக்கப்பட்டவருக்கு மனநிம்மதி கிடைக்கும்.. 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தண்டனை பெற்றால்…..இதெல்லாம் அரசியலாகி விட்டது. நாளைக்கே ஒரு குண்டு வெடிக்கலாம், நான் அத்தகைய நிகழ்சியுடன் சேர்ந்து வாழ வேண்டியதுதான். நான் எனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியதுதான். பலசாலிகளிடம் தான் நீதியுள்ளது. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோகத்தோடு கூறினார்[7].

A woman pays homage to victims of the 1993 Mumbai serial blasts, at one of the blast sites in Mumbai

A woman pays homage to victims of the 1993 Mumbai serial blasts, at one of the blast sites in Mumbai

பலிக்கடாக்களின் சோகக்கதையும், மனநிலையும்[8]: பாதிக்கப்பட்ட 1,600 குடும்பத்தினர் யாகுப் தூக்கிலப்படுவதில் உறுதியாக இருக்கின்றனர். தாய், தந்தை, மகள், மகன், சகோதரன், சகோதரன், மாமா, மாமி என்றெல்லாம் இழந்தவர்கள் இதில் மாற்றுக் கருத்து எதையும் கொள்ளாவில்லை-சொல்லவில்லை. உண்மையில் கருணை மனுவை அவன் கொடுத்தது, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது தான் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. துஸார் தேஷ்முக், “பலரது உடல்கள் கிடைக்கவில்லை. சிலருக்கு உடல் பகுதிகள் தான் கிடைத்தன. கிடைத்ததைக் கொண்டு இறுதி சடங்குகளை முடித்த குடும்பங்கள் ஏராளம். இந்நிலையில் ஒரு கொலைகாரனின் கருணை மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. கருணையே இல்லாத அவன் எப்படி கருணை மனு போடுகின்றான் என்றே தெரியவில்லை. அம்மனு விசாரணைக்குள்ளது என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாங்கள் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்று சோகக் கதையினை விளக்கினார். 1993 குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைவரும், யாகூப் துக்கிலிடப்படவேண்டும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுதுதான், இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கொஞ்சமாவது சாந்தி கிடைக்கும் என்கிறார்கள்[9]. பாதிக்கப்பட்ட 1,600 குடும்பத்தினர், முதலமைச்சருக்கு அவன் தூக்கிலிடப்படவேண்டும் என்று மனு கொடுத்தனர்[10]. மஹாராஷ்ட்ர அசெம்பிளிக்கு வெளியே கூடி தங்களது கோர்க்கையினை வெளிப்படுத்தினர்[11].

© வேதபிரகாஷ்

02-08-2015

[1]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/article7481183.ece

[2] All India Majlis-e-Ittehadul Muslimeen leader and Hyderabad parliamentarian Asaduddin Owaisi said the government should ensure death sentence in all similar cases. “Death sentence should also be given to Babu Bajrangi, Maya Kodnani, Col. Purohit and Swami Aseemanand,” he said.

http://timesofindia.indiatimes.com/india/Political-war-of-words-erupts-over-Yakub-Memons-execution-Owaisi-says-Kodnani-and-others-should-also-get-death/articleshow/48281117.cms

[3]  தி இந்து, இணையதள செய்திப் பிரிவு, அரசியல் விவாத மேடைக்கு வித்திட்ட யாகூப் தூக்கு மேடை, Published: July 31, 2015 10:06 ISTUpdated: July 31, 2015 10:08 IST

[4] http://www.ndtv.com/blog/lessons-from-the-yakub-memon-execution-1202101

[5] http://www.dailythanthi.com/News/India/2015/07/27021144/Yaqub-Memon–death-penaltyTo-cancel-Petition-to-the.vpf

[6] http://www.hindustantimes.com/india-news/yakub-memon-hanging-justice-comes-too-late-for-1993-mumbai-blasts-victims-kin/article1-1371806.aspx

[7] Badri Chatterjee, Justice comes too late for 1993 Mumbai blasts victims’ kin, Hindustan Times, Mumbai, Updated: Jul 22, 2015 11:14 IST

[8] Family members of some of the victims of 1993 Mumbai blasts on Wednesday demanded that Yakub Memon to be hanged and submitted a mass petition to Chief Minister Devendra Fanavis in this regard

http://www.ibnlive.com/videos/india/families-of-1993-mumbai-blasts-victims-demand-yakub-to-be-hanged-1027379.html

[9] http://www.dnaindia.com/mumbai/report-1993-blasts-death-to-yakub-memon-will-give-solace-to-victims-says-bjp-mp-kirit-somaiya-2106875

[10] Family members of the victims of 1993 Mumbai blasts on Wednesday 29-07-2015 demanded that Yakub Memon to be hanged and submitted a mass petition to Chief Minister Devendra Fanavis in this regard. “Yakub should be hanged,” Tushar Deshmukh, who lost his mother in the blasts, said in a memorandum to Fadnavis at Vidhan Bhawan here. “The families have suffered. We demand that the death sentence be carried out,” Deshmukh said. He said the memorandum was signed by of 1600 family members of the victims.on Tuesday 28-07-2015, the Supreme Court set up a three-judge bench to decide Yakub’s fate after a two-judge bench was split on his plea seeking stay of his execution scheduled for tomorrow (30-07-2015). On March 12, 1993, 12 coordinated blasts had rocked Bombay, as the city was then known, leaving 257 dead and over 700 injured.

http://www.ibnlive.com/news/india/hang-yakub-demand-kin-of-blast-victims-1027262.html

[11] http://www.odishanewsinsight.com/breakingnews/1993-mumbai-blast-victims-demonstrate-outside-maha-assembly/

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)

திசெம்பர் 22, 2013

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)

முஸ்லிம்கள் கருணநிதியை மிரட்டுவது சகஜமான விசயமே

முஸ்லிம்கள் கருணநிதியை மிரட்டுவது சகஜமான விசயமே

முஸ்லிம்களின் மனப்பாங்கு இந்துவிரோதமே என்பது போலத்தான் முஸ்லிம் லீக் தலைவர்கள் இன்றும் பேசி வருவது வியப்பாகத்தான் இருக்கிறது. மக்களவைத்

தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என  ஏதோ கெஞ்சுகின்ற அல்லது சமரசம் செய்து கொள்ளும் முறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் ஒரு பக்கம் தெரிவித்தார்[1]. மதவாதத்தை மனங்களில் ஏற்றிவைத்துள்ள முஸ்லிம்கள் இப்படி கருணாநிதியை மிரட்டியே எப்படியாவது எம்.பி, எம்,எல்.ஏ, போன்ற பதவிகளைப் பெற்றுக் கொண்டு, தமிழகத்தில் பிரிவினையை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில், கருணாநிதிக்கு சவால் விடும் தோரணையில், “அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்”. என்று இன்னொரு பக்கத்தில் மிரட்டியுள்ளார். [2]

Jinnah, Periyar, Ambedkar 1940

இந்த கூட்டம் அன்று காங்கிரஸுக்கு எதிராக திட்டம் தீட்டியது, இன்றோ – அதாவது சித்தாந்த ரீதியில் – பிஜேபிக்கு எதிராக செயல்படுகிறது

ஜனநாயகம்,   சமயச்சார்பின்மை,   சமூகநீதி  ஆகியவையே  இந்திய  யூனியன்  முஸ்லீம்  லீக்   கட்சியின்  கொள்கை; இப்படி ஒரு ஜோக்குடன் தூத்துக்குடியில் சனிக்கிழமை கே.எம். காதர் மொய்தீன் அளித்த பேட்டி என்று ஊடகங்கள் வெளியிட்டுள்ளன: ஜனநாயகம், சமயச் சார்பின்மை, சமூக நீதி ஆகியவையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை. இதையே அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது.

கேரளத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இப்படி லீக்கின் இரட்டை வேடங்கள் ஜனநாயகத்தைக் காட்டுகிறதா அல்லது பதவி ஆசை, சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறதா என்பதனை மக்கள் அறிவார்கள்
பாஜகவை பொருத்தவரையில் அக்கட்சி எங்களுக்கு விரோதி கிடையாது. ஆனால், மோடி கிராம ராஜ்யம் பற்றி பேசுவதற்குப் பதிலாக, ராம ராஜ்யம் பற்றி பேசி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் அவர் எங்களிடம் இருந்து முரண்படுகிறார். காந்தி கூடத்தான் ராம ராஜ்யம் வேண்டும் என்றால், “ஹே ராம்” என்று சொல்லிக் கொண்டுதான் இறந்தார். பிறகு காந்தியை ஒன்றும் ஜின்னா விட்டு வைக்கவில்லையே? எனது இணத்தின் மீது தான் நடந்து செல்ல வேண்டும் என்ற போதிலும், பாகிஸ்தானை உருவாக்கத்தானே செய்தார்!

திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரையில், அவர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக அறிவித்துவிட்டார். நட்பு என்றாலும் சரி, பகை என்றாலும் சரி அதில் தெளிவாக இருப்பவர் கருணாநிதி. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் 3-ஆவது அணி அமைய விரும்புகிறோம். நரேந்திர மோடியை கருணாநிதி பாராட்டினார் என்பதற்காக, அவர் பாஜகவுக்கு ஆதரவு தருவார் என்பதாக அர்த்தமில்லை.

முஸ்லிம் கட்சிகள் தமிழகத்தில் கூட்டு

இப்படி சண்டைப் போட்டுக் கொள்வது போல நடித்தாலும், தங்களது விசயங்களை சாதித்துக் கொள்வார்கள்

பா.ஜனதாவுடன்கூட்டணிவைத்தால்தி.மு..வில்இருந்துவிலகுவோம்[3]: தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். திமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு காரணம் கலைஞர் ஒரு சிறந்த தலைவர். அவர் நட்பாக இருந்தாலும், பகையாக இருந்தாலும் தெளிவான சிந்தனையோடு இருப்பார். கலைஞர் தலைமையில் 3–வது அணி அமைந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் அவர் பிரதமராக ஆசைப்படாதவர். மற்றவர்களை பிரதமராக ஆக்குபவர்.  காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தெளிவாக சொல்லிவிட்டார். அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்[4].

திருச்சியில் டிசம்பர் 28-ஆம் தேதி மஹல்லா ஜமா அத் மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் அறிஞர்கள், முஸ்லிம் கல்வி நிறுவன நிர்வாகிகள் அதில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் காதர் மொய்தீன்[5]. அதாவது என்னத்தான், ஜனநாயகம், கூட்டணி முதலியவை பேசினாலும், மதரீதியில் கூடுவோம் அங்கு முடிவெடுப்போம் என்ற ரீதியில் தான் முஸ்லிம் போகு உள்ளது. ஜமா அத் முடிவுதான் இறுதியானது போலும்!

முஸ்லிம் கட்சி - பிஜேபி கூட்டு

பாவம், பிஜேபி – முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டு என்றார்கள், ஆனால், அக்கட்சியையே காணோம்!

தி.மு.., கூட்டணியா? பா.., அலறல்[6]: ”தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சிக்காத நிலையில், கூட்டணி பற்றி, அக்கட்சி கூறும் கருத்துகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,” என, பா.ஜ., மாநிலத் தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி: “தி.மு..,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தமிழக பா..,வோ, கட்சியின் அகில இந்திய தலைமையோ, இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ‘பா..,வுடன் கூட்டணி இல்லைஎன, தி.மு.., கூறுவதற்கு, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.மோடியை பிரதமராக ஏற்கும், கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனவே, அதன் அடிப்படையில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவெடுக்கப் படும்”, இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்[7].

Photographing faceless

முஸ்லிம்களின் முடிவு ரகசியமானது அதனை பார்க்க முடியாது

முஸ்லிம்களுக்குப் பின்னர் கிருத்துவர்களுடன் பிஜேபி கூட்டு: தமிழக பா.ஜனதா கட்சியில், பிற கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 21-12-2013 அன்று நடைபெற்றது[8].

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ”பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?” என்று கேட்டதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணிக்கு வாருங்கள் என்று தி.மு.க.வை பா.ஜனதா அழைக்கவில்லை’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். முஸ்லிம்களை அடுத்து கிருத்துவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டுள்ளது தெரிகிறது. மோடியுடன் பால் தினகரன் சந்தித்துள்ளதும் நினைவு கூரத்தக்கது. ஆனால், சோனியாவை விடுத்து பிஜேபிக்கு விசுவாசமாக ஓட்டளிப்பார்களா என்றுதான் பார்க்க வேண்டியதுள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாராயணன், ஐக்கிய ஜனதா தளம் பொது செயலர், தர்மன் யாதவ், 28 பாதிரியார், 50 வழக்கறிஞர் மற்றும், 75 கல்லுாரி மாணவர்கள் ஆகியோர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.

சோனியாவின் மந்திர, தந்திய, யந்திய வசியங்கள் இந்த நான்கு-ஐந்து மாதங்களில் தெரிந்து விடும்

சோனியாவின் மந்திர, தந்திய, யந்திய வசியங்கள் இந்த நான்கு-ஐந்து மாதங்களில் தெரிந்து விடும்

செக்யூலரிஸம், சிறுபான்மையினர் மற்றும் இந்திய அரசியல்: செக்யூலரிஸம் என்றால் பிஜேபியை வசைப்பாடினால் சான்றிதழ் கிடைத்து விடும் என்ற ரீதியில் மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. முஸ்லிம் லீக், எம்.ஐ.எம், கேரளா காங்கிரஸ் போன்ற மிகவும் அடிப்படைவாதம், மதவாதம் கொண்ட கட்சிகள் இதனால் தான், தாங்கள் செக்யூலார் என்று மார்தட்டிக் கொண்டு போலி வேடம் போட்டுக் கொண்டு நாடகம் ஆடி ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி வருகின்றன. சோனியா காங்கிர்ஸைப் பொறுத்த வரையிலும், அரசியல் விபச்சாரம் செய்து கொண்டு, பிஜேபியை ஆட்சிக்கு வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது மக்கள் பிஜேபிக்கு அதிக அளவில் ஓட்டளிப்பார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகு, இந்துக்களின் ஓட்டுகளை எப்படி பிரிப்பது என்று சதி செய்து கொண்டிருக்கிறார். இதன் விளைவுதான்  ஆம் ஆத்மி பார்ட்டி, லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வெளிவருதல், ராம் விலாஸ் பாஸ்வான் ஆதரவு, ஜெயலலிதா பிரதமர் ஆசை, கம்யூனிஸ்டுகளிம் மௌனம் முதலியன. மூன்றாவது அணி என்பது, பிஜேபியின் ஓட்டுகளைப் பிரிப்பதற்காகவே அன்றி, இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கு அல்ல. இப்பொழுதைய நிலையில் மக்கள் பிஜேபிகு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதால், 2004 மற்றும் 2009களில் செய்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளை சோனியா இந்த நான்கு-ஐந்து மாதங்களில் செய்து காட்டுவார். பிஜேபி அவற்றை எதிர்கொள்ளுமா, தாங்கி நிற்குமா அல்லது படுத்து விடுமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

வேதபிரகாஷ்

© 22-12-2013


[1] தினமணி, திமுககூட்டணியில்ஒருஇடம்கொடுத்தாலும்ஏற்போம், By dn, தூத்துக்குடி, First Published : 22 December 2013 01:23 AM IST.

[2] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST

[4] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST

[7] தினமலர், தி.மு.., கூட்டணியா? பா.., அலறல், பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013,02:10 IST