காதர்பாஷா மற்றும் அபுசாத்கர் என்ற சாமியார்கள், நிர்வாண பூஜையில் சில்மிஷம் செய்ததால் கைது!
மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது.3
முஸ்லிம்கள் மந்திர–தந்திர வித்தைகளில் ஈடுபடவது: செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் புதுப்பாக்கம் பகுதியில் மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட சேர்ந்த காதர்பாஷா (39), அபுசாத்கர் (30) என்ற போலி சாமியார்களை பொதுமக்கள் வளைத்து பிடித்து கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர், பிறகு பொலீஸார் அவர்கள் கைது செய்யப்பட்டனர்[1], என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, முஸ்லிம்கள் மாந்திரகத்தில் வல்லவர்கள் என்பது தெரிந்த விசயம். அதிலும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற வேலைகளில் கைதேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கேரளாவில் இவர்கள் அதிகமாக இருக்கின்றனர். தெருவோரமாக வித்தை செய்து, மக்களைக் கவரும் அல்லது பள்ளிப் பிள்ளைகளை மிரட்டும் மந்திரவாதிகள், மோடி-மஸ்தான்களில் பலர் முஸ்லிம்கள் தாம். இருப்பினு, சமீபகாலத்டதில், முஸ்லிம்கள் அத்தகைய மாந்திரிகத்தில் ஈடுபடுவது “ஹராம்” என்று அடிப்படைவாத முஸ்லிம் இயக்கங்கள் சொல்லி வருகின்றன. ஆனால், செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். “பில்லி, சூனியம் ஒரு பித்தலாட்டம்”, என்ற புத்தகத்தை ஜைனுல் ஆபிதீன் புத்தகம் எழுதி, நபீலா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘பில்லி, சூனியம், எல்லாம் பொய். எனக்கு பில்லி, சூனியம், ஏவல் மூலமாக பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 50 லட்சம் பரிசு வழங்கப்படும்’ என ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்’தின் மாநிலத் தலைவர் பி.ஜெய்னுலாபிதீன் சவால் விட்டிருந்தார்[2]. அந்தச் சவால்கள் போஸ்டர்களாக இணையத்திலும் பரபரப்பு வலம் வந்தன[3].
மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது
இணைதள விளம்பரங்கள் செய்யும் முஸ்லிம் மாந்திரீகர்கள்: செங்கல்பட்டு அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (30), பொன்விளைந்த களத்தூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (30) பட்டதாரிகளான இருவரும் கம்ப்யூட்டர் டிசைனர்கள்[4]. இவர்கள், சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் பார்த்த விளம்பரத்தில், ‘குடும்ப கஷ்டமா? உடனே எங்களது செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். மாந்திரீகம் மூலம் உங்களது பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அந்த செல்போன் நம்பருக்கு ராதாகிருஷ்ணன் போன் செய்துள்ளார்[5]. எதிர்முனையில் பேசியவர், ரூ.20 ஆயிரம் தந்தால் மாந்திரீக முறைபடி பூஜை செய்து பிரச்னைகளை தீர்ப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய ராதாகிருஷ்ணன் அவர்களை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதையடுத்து சூளைமேடு பகுதியை சேர்ந்த காதர்பாஷா (39), அபுசாத்கர் (30) ஆகியோர் புதுப்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று வந்தனர்[6]. ராதாகிருஷ்ணனிடம் ரூ.20,000 பெற்றுக்கொண்டனர். தடபுடலாக வீட்டிற்கு ஒரு கூட்டாளியுடன் விஜயம் செய்தார்.

மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது
பூஜை செய்வதற்கு கன்னிப் பெண் வேண்டும், அந்த பெண் நிர்வாணமாக நிற்கவேண்டும் என்று கேட்ட முஸ்லிம் மாந்திரீகர்கள்: பூஜை செய்வதற்கு கன்னிப் பெண் வேண்டும், அந்த பெண் நிர்வாணமாக நிற்கவேண்டும் என கூறியுள்ளனர்[7]. அதற்கு ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். 15 வயது சிறுமியையாவது அழைத்து வரும்படி ஆசாமிகள் கூறியுள்ளனர். அப்போது தான் மாந்திரீகம் பலிக்கும் என்றுள்ளனர். இதற்கும் அவர் மறுப்பு தெரிவித்தார். அப்படியானால் நீங்கள் பூஜையின்போது நிர்வாணமாக நின்றால் தான் பூஜை முழுமை பெறும் என கூறியுள்ளனர்[8]. ஒருவழியாக ராதாகிருஷ்ணன் டவல் கட்டிக்கொண்டு நின்றுள்ளார். பூஜை நடந்து கொண்டிருந்த போது அந்த ஆசாமிகள் திடீரென ராதாகிருஷ்ணன் கட்டியிருந்த டவலை அவிழ்த்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்[9]. அதாவது, முஸ்லிம் மாந்திரீகர்கள் ஓரின புணர்ச்சிக்கும் தயார் போன்று நடந்து கொண்டனர் போலும்.
பாலியல் சில்மிஷத்தால் பயந்து போன பக்தர்: டவலை அவிழ்த்து சில்மிஷத்தில் ஈடுபட்டனால் ராதாகிருஷ்ணன் முதலில் மிரண்டு போனார். பிறகு சமாளித்துக் கொண்டு, வீட்டில் இருந்த மிளகாய்பொடியை கொண்டுவந்து அவர்களது கண்ணில் தூவிவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்து கூச்சலிட்டார்[10]. சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்ததும் இருவரும் தப்பிஓட முயன்றனர். ஆனால், அவர்களை மடக்கி பிடித்து கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து காதர்பாஷா, அபுசாத்கரை கைது செய்தனர்[11]. இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாந்திரீகம் மூலம் பிரச்னையை தீர்ப்பதாக ஏமாற்றி வாலிபரிடம் போலி சாமியார்கள் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாம், முஸ்லிம்கள், மாந்திரீகம், முரண்பாடுகள்: ஜைனுல் ஆபிதீன் மற்றும் மணிகண்டன் இவர்களின் சவால்கள்-ஏற்புகள், பரஸ்பர புகார்கள், குற்றச்சாட்டுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. அப்பொழுது தெளிவாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இப்பொழுதைய காதர்பாஷா மற்றும் அபுசாத்கர் பிரச்சினை இஸ்லாத்தில் மாந்திரீகம் உள்ளது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது. “போலி சாமியார்” என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், நடந்துள்ளவை அத்தகைய நிலையினைக் காட்டுகிறது. அலிபாபாவும் அற்புத விளக்கும், சிந்துபாதுவின் யாத்திரை கதைகள், அலிப் லைலா, ஆயிரத்தோரு இரவு கதைகள், சூப்பிக்களின் அதிசயங்கள் என பல விசயங்கள் இஸ்லாத்தில் மந்திர-தந்திர-மாயாஜாலங்களை உள்ளதைக் காட்டுகிறது. கேரளாவில் பல முஸ்லிம் மந்திரவாதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் கொடுத்துள்ளனர்; வேலைகளையும் செய்து வருகின்றனர். இஸ்லாமிய நாடுகளிலும், இவை சாதாரணமாகவே இருந்து வருகின்றன. இஸ்லாம் மயமாக்கும் முயற்சிகள் அவற்றைக் குறைத்து வந்தாலும், முழுமையாக நீக்க முடியவில்லை. தமிழகத்தில் அத்தகைய முஸ்லிம் மாந்திரீகர்கள் இருப்பதும் நிதர்சனமாகத்தான் தெரிகிறது.
© வேதபிரகாஷ்
30-12-2014
[1] தினகரன், மாந்திரீகத்தால் பிரச்னையை தீர்ப்பதாக கூறி, பூஜையின் போது சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 போலி சாமியார்களுக்கு தர்ம அடி, 29-12-2014: 00.08.00, சென்னை.
[2] http://news.vikatan.com/article.php?module=news&aid=32668&utm_source=vikatan.com&utm_medium=related&utm_campaign=36_97588
[3] http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97588
[4] http://www.tamilmurasu.com.sg/story/45315
[5] மாலைமலர், மாந்திரீகத்தால் பிரச்சனையை தீர்ப்பதாக நிர்வாண பூஜை செய்து வாலிபரிடம் சில்மிஷம், மாற்றம் செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 29, 12:47 PM IST;பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 29, 12:48 PM IST
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1148852
[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=124733.
[8] http://www.maalaimalar.com/2014/12/29124803/solve-the-problem-of-naked-you.html
[9] தினமலர், போலி சாமியார் இருவர் கைது, சென்னை, 29-12-204, 01:19.
[10]http://www.dinamani.com/latest_news/2014/12/29/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article2593935.ece
[11] தினமணி, செங்கல்பட்டு அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்கள் கைது, By அமுதா, செங்கல்பட்டு
First Published : 29 December 2014 05:17 PM IST
அண்மைய பின்னூட்டங்கள்