Posted tagged ‘முஸ்லிம் நடிகை’

பாகிஸ்தான் நடிகை கொலை – ஆணவக் கொலையா, கௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?

ஜூலை 19, 2016

பாகிஸ்தான் நடிகை கொலை – ஆணவக் கொலையா, கௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?

How-qandeel-was killed by his brother

பவுசியா அஷீம், குவாந்தீல் பலூச் ஆகி, நடிகைமாடல் ஆனது: பாகிஸ்தானைச் சேர்ந்தவர் குவாந்தீல் பலூச் (26). இவரது இயற்பெயர் பவுசியா அஷீம். பாகிஸ்தானில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். அத்துடன் மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். மாடலிங்கில் ஈடுபட ஆரம்பித்தவுடன் தனது பெயரை குவாந்தீல் பலூச் என்று மாற்றிக் கொண்டார். மாடலிங்கில் அவருக்கு கிடைத்த புகழை விட சமூக வலைதளங்களில் அவரால் வெளியிடப்பட்ட அவரது வீடியோக்கள் மற்றும் ஏடாகூட”செல்பி” புகைப்படங்கள் மூலம் அவரது ரசிகர் கூட்டம் பெருகியது[1]. அத்துடன் முகநூலில் வெளியிட்ட அவரது சர்ச்சைக்குரிய சுய விளம்பரம் தேடும் கருத்துக்கள் மூலமும் புகழ்பெற்றார்[2]. கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிதியை திட்டி தீர்த்து வீடியோ வெளி யிட்டார். அண்மையில் அவரது சர்ச்சைக்குரிய இசை ஆல்பம் ஒன்றும் வெளியானது. ஆனால், பழமைவாதிகளால் அவர் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தார்.

_qandeel_baloch_640x360_qandeelquebee_nocreditஇந்திய தொலைக் காட்சியின்பிக்பாஸ்ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு கொடுத்தது: சமூகவலைத்தளம் மூலம் உல களாவிய அளவில் அவர் பிரபலமானதால் இந்திய தொலைக் காட்சியின் ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் நட்சத்திரங்களில் இணையத்தில் அதிகம் தேடப்படும் 10 பேரில் ஒருவராக குவான்டீல் பிரபலமடைந்தார். பழமைவாதிகள் அவருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். இதன்காரணமாக கராச்சியில் வசித்து வந்த அவர் பாதுகாப்பு கருதி முல்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவருக்கு உடன் பிறந்த 2 சகோதரிகளும் 5 சகோதரர்களும் உள்ளனர். குவான்டீலின் சமூக வலைத்தள வாழ்க்கையை குடும்பத்தினர் விரும்பவில்லை[3]. வெளியில் பெரிய அளவில் புகழ் பெற்ற போதும் அவரது மாடலிங் தொழில் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகளுக்கு அவரது குடும்பத்தார் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.   மாடலிங் தொழிலை விட்டு விலகும்படி அவரது சகோதரர் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பகிறது.

qandeel-650x425முஃப்தி அப்துல் குவாயின் நிலை: அண்மையில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவரும், மத குருவுமான முஃப்தி அப்துல் குவாய் [member of Central Ruet-e-Hilal Committee, Mufti Abdul Qawi] என்பவருடன் செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்தியாவில் இத்தகைய படங்களை வைத்து, ஊடகங்கள் “இன்னொரு நித்தியானந்தா” என்றெல்லாம் விவரிப்பர். படங்களுடன் செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்வர். ஆனால், இவ்விசயத்தில் அமுக்கப் பார்க்கின்றன போலும். இதனைத் தொடர்ந்து முஃப்தி அப்துல் குவாய் மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது மற்றும் மத்திய ருயத்-இ-ஹிலால் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார் [4].  குவாந்தீல் இம்ரான் கானை சந்திக்க வேண்டும் என்று தன்னிடம் சொன்னதாகவும், ஆனால், அச்சந்திப்பு நிகழவில்லை என்றும் முப்தி கூறினார். ஆனால், இத்தகைய “மரியாதை கொலைகளை” இஸ்லாம் அனுமதிப்பதில்லை மற்றும் பலூச்சின் கொலையை ஷரியத்தின் படியும் நியாயப்படுத்த முடியாது என்றார்[5]. மேலும் தான் பலுச்சை நல்வழிபடுத்த அறிவுறுத்தியதாகவும், பாவம் செய்யக்கூடாது என்று போதித்ததாகவும் கூறினார்[6]. இது (பலூச்சின் கொலை) ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார்[7]. இவரை போலீஸார் விசாரிக்க வேண்டுமா, கூடாது என்பது பற்றி மாறுபட்ட கருத்து நிலவுகிறது[8]. ஆக இறுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தான் விஞ்சியது என்றாகிறது.

Mufti Qavi removed from Ruet-e-Hilal Committee after controversial selfies with Qandeel Balochதென்னாப்பிரிக்கா, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுகளில் வேலை செய்தது (2007-2012): பௌசியா ஆஸீம் மார்ச்.1, 1990ல் பிறந்தாள். 2003-04ல் 14 வயதில் எட்டாவது படிக்கும் போதே, ஒரு பையனை காதலித்தாள், ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள நினைத்தாள், ஆனால் நடக்கவில்லை, அவன் ஏமாற்றி விட்டான் என்றெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன[9]. இதனால், தான் தனித்து இருக்க விரும்பினாள். அந்த ஏமாற்றம் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு பேருந்து கம்பெனியில் சேர்ந்து வேலை செய்தாள். 2007ல், அதாவது 17 வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு தைரியமாக சென்று வேலைக்கு சென்றாள். பிறகு, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வேலை செய்துள்ளாள். அப்படியென்றால், அவளுக்கு அந்த அளவுக்கு துணொவும், தைரியமும் இருந்திருக்க வேண்டும். யாராவது உதவினார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை. பிறகு தான் பாகிஸ்தானுக்கு வந்து நடிப்பு மூலம் தனது திறமைகளை வெளிகாட்டத் தீர்மானித்தாள்[10]. அப்படியென்றால், பத்தாண்டுகளில் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள், உழைத்திருப்பாள் என்பதை கவனிக்க வேண்டும். 2013க்குப் பிறகு தான் அவள் பிரபலமடைந்தாள். வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!” என்று தலைப்பிட்டுதான் செய்திகளை வெளியிட்டுள்ளன.

Bloch husband and m-in-Lகாதல் போல, திருமணமும் தோல்வியில் முடிந்தது (2008-09): குவான்டிலுக்கு 17 வயதிலேயே அவரது பெற்றோர் ஆஷிக் ஹுஸைன் என்பவருக்கு திருமணம் 2008ல் செய்து வைத்தனர்[11]. 2009ல் ஒரு குழந்தை பிறந்தது. ஒரு வருடத்திலேயே அந்த பந்தம் முறிவுக்கு வந்தது. அது ஒரு காதல் திருமணம், பலூச் தனக்கு காதல் கடிதங்களை ரத்ததினால் எழுதினாள் என்றெல்லாம் அவர் சொன்னார்[12]. அவள் தனக்கு பங்களா வேண்டும் என்றெல்லாம் கேட்ட்டாள், அவளுக்காக தான் அதிகமாக செலவிழக்க வேண்டியிருந்தது என்றெல்லாம் குற்றஞ்சாட்டினார். அவளே பல நாடுகளுக்குச் சென்று வேலை செய்து சம்பாதித்துள்ளாள் எனும் போது, கணவனிடம் ஏன் பணம் கேட்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. அவர் மேலும், பலூச் மூன்று திருமணங்கள் செய்து கொண்டால் என்றும் கூறினார்[13]. தினம் தினம் தன்னை கணவர் அடித்து சித்ரவதை செய்ததாக குவான்டில் கூறியுள்ளார்[14]. சீறிய வயதான, அழகான மனைவியுடன் அவரால் வாழ முடியவில்லை என்றால், அவர் மீது ஏதோ தவறுள்ளது என்ற் தெரிகிறது. அவருடன் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தையுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள தாரூல் அமானில் போய் அகதியாக வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர் தாய்நாடு திரும்பிய குவான்டில், அடிக்கடி சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு வந்தார்[15].

Bloch husband and son17லிருந்து 26 வயதில் மூன்று திருமணம் செய்து கொண்டு, ஒரு பையனைப் பெற்ற நடிகை: தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கானை காதலிப் பதாகவும் அவரை திருமணம் செய்ய காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் குவான்டீல் பகிரங்கமாக அறிவித்தார். இதனிடையே குவான்டீலுக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவர் கூறியபோது பெற்றோர் வற்புறுத் தலால் இளம் வயதில் கட்டாய திருமணம் செய்து விவகாரத்து பெற்றுவிட்டதாகக் தெரிவித்தார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதையும் ஒப்புக்கொண்டார்[16]. இதெல்லாம் வழக்கம் போல, பிரபலமடைய அவள் கடைபிடித்த யுக்திகள் என்றே தோன்றுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று உள்துறை அமைச்சர் மற்றும் டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்திருந்தார்[17]. ஆனால், அரசு நிச்சயமாக கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

19-07-2016

Qandeel Baloch with her ex-husband Aashiq Hussain

[1] https://www.facebook.com/OfficialQandeelBaloch/

[2] தினமணி, பாகிஸ்தான் மாடல் அழகியைகவுரவக் கொலைசெய்த சகோதரர் கைது, By DN, முல்தான், First Published : 17 July 2016 02:35

[3]http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D/article8859718.ece

[4] விகடன், நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!, Posted Date : 13:46 (16/07/2016).

[5] Earlier today, Qawi said that neither Islam permits killing for ‘honour’ nor Qandeel Baloch’s murder could be justified through sharia. While talking to the media in a mosque in Multan’s Qadeerabad, Qawi said that none could justify murder for ‘honour’ of the family in light of Islam and murderer Wasim should be punished.

http://dunyanews.tv/en/Pakistan/345483-Police-decide-to-interrogate-Mufti-Qawi-in-Qandeel

[6] easternmirrornagaland.com, Qandeel Baloch’s murder a lesson for others: Mufti Abdul Qawi, By PTI  /  July 18, 2016.

[7] http://www.easternmirrornagaland.com/qandeel-balochs-murder-a-lesson-for-others-mufti-abdul-qawi/

[8]  Dunya News, Police decide to interrogate Mufti Qawi in Qandeel Baloch murder case,  Last Updated On 18 July,2016 03:53 pm

[9] http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-balochs-another-husband-with-son-come-forward-model-claims-it-was-forced-marriage/

[10] Back in 2003-04, when she was still in the eighth grade, she fell in love with a boy and they both decided to elope together. Unfortunately, the day Fouzia fled her home the boy she was in love with ditched her. This betrayal marked a turning point in the model’s life who then decided to become completely self-reliant in life. She joined a bus transport company as a hostess and braved the grim challenges of life. Back then, she was reportedly in touch with her family. However, she later decided to move on with her life and joined show business with a new name Qandeel Baloch. In 2007, she went to South Africa to earn money for herself. She later worked in the Middle East and various European countries before opting to return back to Pakistan to work on her acting skills.

http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-balochs-another-husband-with-son-come-forward-model-claims-it-was-forced-marriage/

[11] The Express Tribune, Plot thickens: Qandeel Baloch was once married and has a son, By News Desk, Published: July 14, 2016

[12] Daily Pakistan Global, Qandeel Baloch married thrice, not twice, claims ex-husband, Khurram Shahzad, July 14, 2016 8:41 pm

[13] http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-baloch-married-thrice-not-twice-claims-ex-husband/

[14] http://tribune.com.pk/story/1141469/plot-thickens-qandeel-baloch-married-son/

[15] http://www.vikatan.com/news/world/66243-pakistani-model-qandeel-baloch-killed.art

[16] தி.இந்து, பாகிஸ்தான் நடிகை கவுரவ கொலை: இந்திய கிரிக்கெட் அணிக்கு சவால் விடுத்தவர், Published: July 16, 2016 16:06 ISTUpdated: July 17, 2016 11:43 IST.

[17] Weeks before her murder, however, Qandeel had notified the Interior Minister and Senior Superintendent of Police in Islamabad about the threatening calls she had been receiving, and had requested security.

http://www.catchnews.com/world-news/why-the-qandeel-baloch-story-reveals-society-s-darker-side-1468839244.html/2