Posted tagged ‘முஸ்லிம்கம்பனி’

தேசிய வக்ப் மேம்பாட்டு கார்ப்புரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி உருவாக்கப் பட்டது – தேர்தலுக்கு முன்னர் சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி!

ஜனவரி 29, 2014

தேசிய வக்ப் மேம்பாட்டு கார்ப்புரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி உருவாக்கப் பட்டது – தேர்தலுக்கு முன்னர் சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி!

பகீம் பெய்க் கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

பகீம் பெய்க் கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

தேசிய வக்ப் மேம்பாட்டு கார்ப்புரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி உருவாக்கப் பட்டது: இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்களை மாநிலங்கள் தோறும் ‘வக்ஃப் வாரியம்’ நிர்வகித்து வருகிறது. இதற்கான மத்திய வக்ஃப் கமிட்டி அலுவலகம் புது டெல்லியில் உள்ளது. இதனை மேம்படுத்தி ‘தேசிய வக்ஃப் மேம்பாட்டு வாரியம்’ [ the National Waqf Development Corporation Limited (NAWADCO)] ஒன்றை ஏற்படுத்தி நாடு முழுவதிலும் உள்ள 4.9 லட்சம் வக்ப் சொத்துகளை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து நலிவடைந்த நிலையில் உள்ள ஏழை முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ள வாரியங்களை சேர்த்து இப்படி ஒரு கம்பனி உருவாக்குவதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை.

பகீம் பெய்க் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

பகீம் பெய்க் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

வக்ப் என்றால் என்ன?: வக்ப் என்றால் ஒரு முஸ்லிம் எந்த அசையும் அல்லது அசையாத சொத்தை முஸ்லிம் சட்டப்படி ஒரு புனிதமான, மதம் மற்றும் தரும காரியங்களுக்கு உபயோகப்படுத்தப் படக்கூடிய சொத்தாகும். ஒருமுறை அவ்வாறு சொத்தை அளித்து விட்டால், அளித்தவருக்கும் அச்சொத்துக்கும் உள்ள எல்லா உரிமைகளும் இல்லாமல் போய்விடுகின்றன. அதாவது அதற்குப் பிறகு, வக்ப் வாரியத்தின் அனுமதி இல்லாமல் அச்சொத்தை மாற்றியமைக்கவோ, மாற்றவோ எம்முறையிலும் விற்கவோ முடியாது. இந்த சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து நலிவடைந்த நிலையில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்கு உதவ உபயோகப்படுத்தப் படுகிறது. ஆனால், முஸ்லிம்களே – அதாவது வாரியத்தில் உள்ள மற்ற பணக்கார முஸ்லிம்கள் – அவற்றை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

அதாவது, முஸ்லிம்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை ஏன் இப்படி பெரிது படுத்தி, அதற்கு ஒரு கம்பனியை உண்டாக்க வேண்டும்? முஸ்லிம்களில் உள்ள எல்லா பிரிவினரும் (சுன்னி, ஷியா, போஹ்ரா, அஹம்மதியா, லெப்பை, சையது) இதனை ஏற்றுக் கொள்வார்களா அல்லது மறுப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப் படுமா?

Manmohan Singh with Sonia Gandhi and K. Rahman Khan inauguration of National Waqf Development Corporation in New Delhi on 29-01-2014. Photo-S. Subramanium

Manmohan Singh with Sonia Gandhi and K. Rahman Khan inauguration of National Waqf Development Corporation in New Delhi on 29-01-2014. Photo-S. Subramanium

தேசிய  வக்ஃப்  மேம்பாட்டு  வாரியத்தின்  துவக்க  விழா: இந்த தேசிய வக்ஃப் மேம்பாட்டு வாரியத்தின் துவக்கவிழா 29-01-2014 அன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இது சிறுமான்மையினர் நலம் அமைச்சகத்தின் கீழ் வருகின்ற மத்திய அரசு நிறுவனமாக ஏற்படுத்தப் பட்டுள்ளது. வல்க் (திருத்தம்) சட்டம் 2013 [Waqf (Amendment) Act, 2013] உருவாக்கப் பட்டு, வக்ப் சொத்துக்களை வெலிப்படையாக நிருவகிக்கும் முறையில் சட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக ரூ.500 கோடி நிதியுதவியுடன் இந்நிறுவனம் அமைக்கப் பட்டுள்ளது. மத்திய / மாநிலங்களில் உள்ள வக்ப் வாரியங்கள் மற்றும் மூத்தாவலி [state/Union Territory waqf boards and mutawallis (managers)] முதலியோர்களுக்கு நிதியுதவி அளித்து குஸ்லிம்களுக்கான சொத்துகளை மேம்பாடு செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது[1]. இதுவரை 4,90,00 வக்ப் சொத்துக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன, அவற்றி மூலம் ரூ.163 கோடி வருவாய் வந்துகொண்டிருக்கிறது[2]. சச்சார் கமிட்டியின் அறிக்கையின் படி, இவற்றை தகுந்தபடி மேம்பாடு செய்தால் குறைந்த படசம் ரூ.12,000 கோடிகள் வரும் உயரும் என்று பரிந்துரைத்துள்ளது[3]. பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பகீம் பெய் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

பகீம் பெய் பிரயோஜனம் இல்லை என்று கூச்சலிட்டு எதிர்த்தார் 29-01-2014

எப். ஃபஹிம்பெய்க்என்பவரின் எதிர்ப்பு: பிரதமர் பேசி முடித்ததும் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து எழுந்து நின்ற ஒருவர், மேடையை நோக்கி கையை நீட்டி கூச்சலிட்டார்[4]. பிரதமரை நோக்கி விரலை நீட்டிய அவர், ‘ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் எதையுமே அரசு ஒழுங்காக செயல்படுத்துவதில்லை[5]. எந்த திட்டத்தின் பலனும் நலிந்த நிலையில் இருக்கும் சிறுபான்மையின மக்களை சென்றடைந்ததே இல்லை[6]. இந்த நிலையில் இதைப் போன்ற புதிய திட்டங்களுக்கான அவசியமே இல்லை’ என்று குற்றம் சாட்டினார்[7]. ‘இதுவரை உங்களுக்கு 150-க்கும் மேற்பட்ட கடிதங்களை நான் அனுப்பியுள்ளேன். ஆனால், அவற்றுக்கான எந்த பதிலும் எனக்கு கிடைக்கவில்லை’ எனவும் பிரதமரை பார்த்து நேருக்குநேராக அவர் கேள்வி எழுப்பினார். பிரதமரும், சோனியா காந்தியும் அந்நபரை உற்றுபார்த்தபடி அமர்ந்திருந்தனர். இதனால் அந்த அரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்துவந்த போலீசார் அவரை அரங்கத்தில் இருந்து வெளியேற்றி அழைத்து சென்றனர்[8]. பிரதமருக்கு எதிராக குரல் எழுப்பிய அவரது பெயர் எப். ஃபஹிம் பெய்க் [ M Faheem Baig] என்றும் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாபராபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், மேடையில் அமர்ந்திருந்த சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான  மத்திய  மந்திரி ரஹ்மான் கானை அழைத்த பிரதமர், ஃபஹிம் பெய்க்கை சந்தித்து அவரது குறை என்னவென்று கேட்டறிந்து, அவர் ஏற்கனவே அனுப்பியதாக கூறும் கடிதங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்[9].

தேர்தலுக்கு முன்னர் சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி: ஏற்கெனவே வக்ப் வாரியங்கள் எல்லா மாநிலங்களிலும் உள்ளபோது, அவற்றிற்கெல்லாம் சேர்த்து ஒரு கம்பெனி உருவாக்கப் பட வேண்டிய அவசியம் என்ன என்று முஸ்லிம்களே கேட்கிறார்கள். ஏனெனில், இதன் மூலம், மேலும் அதிகார வர்க்க முஸ்லிம்கள் தான் பயனடைவார்களே தவிர சாதாரண முஸ்லிம்களுக்கு எந்த நலனும் ஏற்படாது.மேலும், இந்த கம்பெனி அரசின் கட்டுப்பாடில் வரும் என்ற நிலையிருக்கும் போது, அரசியல் பலம் வாய்ந்த முஸ்லீம்கள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்வர். இதனால் தான், கூட்டத்தில் ‘ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் எதையுமே அரசு ஒழுங்காக செயல்படுத்துவதில்லை[10]. எந்த திட்டத்தின் பலனும் நலிந்த நிலையில் இருக்கும் சிறுபான்மையின மக்களை சென்றடைந்ததே இல்லை[11]. இந்த நிலையில் இதைப் போன்ற புதிய திட்டங்களுக்கான அவசியமே இல்லை’, என்று எப். ஃபஹிம் பெய்க் குற்றஞ்சாட்டினார்[12]. மேலும், செக்யூலரிஸ அரசு இம்மாதிரியான கம்பெனிகளை உருவாக்கினால், மதசார்பு நிலை என்னாகும் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்குல் மேலாக, தேர்தலுக்கு முன்னர் இது ஆரம்பிக்கப் பட்டுள்ளதால் இது சோனியாவின் முஸ்லிம்களை வளைத்துப் போடும் யுக்தி என்றே தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 30-01-2014


[3] NAWADCO has been set up on a recommendation of the Sachar committee. India has the largest number of waqf properties in the world. There are 490,000 registered waqf properties and the current annual income from these is about Rs 163 crore. The Sachar committee has estimated such properties, if properly developed, with a minimum return of 10 per cent, would be able to generate at least Rs 12,000 crore per annum.

[4] மாலைமலர், பார்வையாளரின் எதிர்கேள்வியால் பிரதமர், சோனியா பங்கேற்ற ‘வக்ஃப்’ நிகழ்ச்சியில் பரபரப்பு, பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 29, 2:18 PM IST