மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (2)
தார்மீகக் கட்டுப்பாடு, தார்மீக போலீஸ் கட்டுப்பாடு தேவையா?: தார்மீக காவல் கட்டுப்பாடு (Moral policing), போலீஸ் வேலையை தாங்கள் எடுத்துக் கொள்ளுதல், எச்சரிக்கை தாக்குதல் [“vigilante attack”] முதலிய வேலைகளில் ஈடுபடுகின்றனர், என்று ஊடகத்தினர் குறைகூறி வருகின்றனர்[1]. தமாஷான விசயத்தில் மாணவன் அடிக்கப்பட்டான், என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. இங்கு “தமாஷான” விசயங்கள் என்று எதையெல்லாம் சொல்வார்கள் என்று தெரியவில்லை. கர்நாடகாவில், “ஶ்ரீராம் சேனா”, பப்புகளில் இளம் பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவிகள் குடித்து, ஆட்டம் போட்டபோது, அவர்களை அடித்துத் துரத்தியதை, பெரிய பிரச்சினையாக்கி, அத்தகைய சட்டத்தை தங்கள் கைகளுக்குள் எடுத்துக் கொள்ளும் காரியத்தை “தார்மீக காவல் கட்டுப்பாடு”, “மாரல் போலிஸிங்” (Moral policing) என்றெல்லாம் விமர்சித்துக் கண்டித்தன. இந்து இயக்கங்கள் தாம் அவற்றில் ஈடுபட்டு வருகின்றன என்பது போல சித்தரிக்கப்பட்டு, அத்தகைய போக்கைத் தொடர்ந்து, மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றன மற்றும் எதிர்த்து வருகின்றன.

The Melangadi Mohiuddin Masjid in Ullal was against the stay order issued by the Karnataka Wakf Board
மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலி அல்லது அப்துர் ரஹ்மான் அல்லது வேறேராவது இருந்தாலும், அவர் தனது மகள், சகோதரி அல்லது உறவினர் பெண்ணை இவ்வாறு ஒரு பையனோடு படுக்க வைத்து, போட்டோ எடுக்க அனுமதிப்பார்களா: பள்ளியில்-கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இவ்வாறு “ஐந்து மாணவிகளின் மடிகளில் ஒரு மாணவன்”, மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளலாம், என்றதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், தங்களது மகள், சகோதரி அல்லது உறவினர் பெண்ணை இவ்வாறு செய்ய அனுமதிப்பார்களா? மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலி அல்லது அப்துர் ரஹ்மான் அல்லது வேறேராவது இருந்தாலும், அவர் தனது மகள், சகோதரி அல்லது உறவினர் பெண்ணை இவ்வாறு ஒரு பையனோடு படுக்க வைத்து, போட்டோ எடுக்க அனுமதிப்பார்களா. “ஆமாம்” என்றால், ஆஹா, இந்தியர்கள், குறிப்பாக “இந்திய முஸ்லிம்கள்” முன்னேறி விட்டார்கள் என்று விட்டுவிடலாம், “இல்லை” என்றால், அவர்களது போலித்தனத்தைக் காட்டுகிறது. அதாவது, ஒருபக்கம் “மாரல் போலிஸிங்” என்று எதிர்த்துக் கொண்டு, இன்னொருப் பக்கம், முஸ்லிம் பையன்களை, இந்து பெண்களுடன் நட்பு ஏற்படுத்த ஊக்குவிக்கின்றனர்; உறவாட வைக்கின்றனர்; காதல் உண்டாக்கப் பாடுபடுகின்றனர் என்றாகிறது. உண்மையில், இது பெண்களை, கேவலப்படுத்தும், பெண்மையை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. பெண்மை அவமதிக்கப் படுகிறது என்ற எண்ணமே ஏன் யாருக்கும் இவ்விசயத்தில் எழவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அதே போல, எந்த பெண்ணும், பெண்ணிய வீராங்கனையும், தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து எவரும், இவ்விசயத்தில் தங்களது கருத்தை வெளியிட்டதாகத் தெரியவில்லை, ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. மேலும், படுத்தவன் ஒரு “முஸ்லிம் பையன்“ என்பதால், பிரச்சினையைத் திசைத்திருப்பப் பார்க்கின்றன.
இந்து மாணவிகளுடன் போஸ் கொடுத்த முஸ்லிம் பையன் அடித்து நொறுக்கப்பட்டான்[3]: இந்திய ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான அல்லது பாரபட்சமான போக்கு, பாகிஸ்தான் ஊடகங்களை வாசித்தப் பிறகுதான் தெரிகிறது. இதே செய்தியை, “பாகிஸ்தான் டுடே” இந்து மாணவிகளுடன் போஸ் கொடுத்த முஸ்லிம் பையன் அடித்து நொறுக்கப்பட்டான், என்று செய்தி வெளியிட்டுள்ளது[4]. இந்தியாவில் இப்படி செய்து வெளியிடக்கூடாது என்று “செக்யூலரிஸ” கட்டுப்பாடு இருக்கலாம். அவனது மதம் என்ன என்று கேட்கப்பட்டு உதைக்கப்பட்டான் மற்றும் நண்களும் அடிக்கப்பட்டனர் என்று “தி இந்து” தனக்கே உரிய பாணியில் கூறுகிறது[5], என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது. அப்படியென்றால், “பாகிஸ்தான் டுடே”க்குத் தெரிந்திருப்பது, “தி இந்து”வுக்குத் தெரியவில்லையா, அல்லது உண்மையினை உண்மையாக எடுத்துரைக்க தைரியம் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இதே, சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், விசயத்தை அப்படியே அமுக்கி விடுவார்களா? பிரச்சினையை, பிரச்சினையாக அணுகாமல், இத்தகைய “செக்யூலரிஸ-கம்யூனலிஸ” நிறம் பூசி செய்திகளை அரைகுறையாக வெளியிடுவதன் மூலம் தான் பொது மக்களிடத்தில் நம்பிக்கைக் குறைகிறது, சந்தேகம் எழுகின்றது, மனங்களில் கலவரம் ஏற்படுகின்றது. உண்மையில் மதங்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்றால், பொதுப்பிரச்சினைகளை, பொதுப்பிரச்சினைகளாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.
மேற்குக்கடற்கரைக் கரைப் பகுதிகள் அந்நிய சக்திகளின் கைகளில் போகும் அபாயம்: மேற்குக்கடற்கரைக் கரைப் பகுதிகளில் தீவிரவாதம், கடத்தல், போதை மருந்து விநியோகம், விபச்சாரம், அந்நிய சுற்றுலா இவற்றுடன் சம்பந்தப் பட்டுள்ள தொழில்கள், வியாபாரங்கள் என்று பல விசயங்கள் அடங்கியுள்ளன. மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இப்பகுதிகள், மிகவும் அபாய வளையத்தில் வந்துள்ளன. கோவாவில், அந்நிய சுற்றுலா பயணிகளுக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளமையால், அவர்கள், கீழே கோகர்ணம், முருடீஸ்வர், பட்டகல், மங்களூரு போன்ற பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். பட்டகல் என்பது, ஏற்கெனவே அனைத்துலக தீவிரவாதம், போதை மருந்து மற்றும் கடத்தல் வளையத்தில் உள்ளது. பட்டகல் சகோதர்களின் ஜிஹாதி தீவிரவாதச் செயல்கள் அனைவரும் அறிந்த விசயங்களாக இருக்கின்றன. இக்கடற்கரைப் பகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஆதிக்கத்தைப் பெருக்கி வருகின்றனர். பட்டகல் மற்றும் அதற்கு மேல் மற்றும் கீழ் பகுதிகளில் அவர்களது ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. போதாகுறைக்கு, வளைகுடா நாடுகளிலிருந்து, இஸ்லாமிய மதகுருக்கள், காஜிக்கள் முதலியோரது போக்குவரத்தும் அதிகமாகியுள்ளது. புதியதாக மசூதிகளும் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் எண்ணிகையும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. இது கேரளாவையே மிஞ்சிவிடும் போலுள்ளது. அதே நேரத்தில், இக்கடற்கரைகளில் இந்துக்களின் புண்ணிய க்ஷேத்திரங்கள் அதிகமாக உள்ளன மற்றும் அவர்கள் ஆண்டு முழுவதும் வந்து போகிறார்கள் என்பதும் தெரிந்த விசயம் தான். எனவே, அவர்களது தீர்த்த-யாத்திரை போக்குவரத்துகளில் ஏற்படும் எந்த தொந்தரவும், இடைஞ்சலும், பாதிப்பும் நாளடைவில் பெரிய விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இப்பொழுதே, இந்து தீர்த்த யாத்திரிகளுக்கு, அந்நிய சுற்றுலாப் பயணிகளால், கோகர்ணம் போன்ற பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிகமுக்கியமான கோகர்ண கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் அவர்களது ஆக்கிரமிப்பில் சேருவது புலப்படுகிறது.
© வேதபிரகாஷ்
28-02-2015
[1] http://indianexpress.com/article/india/india-others/whatsapp-picture-raises-hackles-of-moral-police-in-mangalore/
[2] http://www.deccanherald.com/content/461514/mluru-student-assaulted-over-photo.html
[3] http://www.pakistantoday.com.pk/2015/02/27/foreign/muslim-boy-beaten-black-and-blue-for-posing-with-hindu-girls/
[4] Pakistan Today, Muslim boy beaten black and blue for posing with Hindu girls, 28-02-2015.
[5] When contacted by The Hindu , Riaz said his friend Ritesh, who was in the photo, had come to his (Riyaz’s) house in Kana with another friend, Vinith, around 11 a.m. on Sunday to discuss the photo going viral. He said that suddenly, four persons came in a car, pushed the three of them inside and drove to Kaikamba, near Bajpe. Riaz said that at a ground there, five more persons joined the assailants and mercilessly beat him after asking about his religion. They also beat up his two classmates.
அண்மைய பின்னூட்டங்கள்