Posted tagged ‘முரண்பாடு’

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

ஜூலை 17, 2016

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில்  தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

நாயக் ஆதரவு - அனைத்து இஸ்லாமிய கட்சிகள் கூட்டமைப்பு - மோடி விரோதம்

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர்.  23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].

  1. மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
  2. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
  3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
  4. மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
  5. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
  6. ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
  7. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
  8. இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
  9. ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
  10. வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
  11. ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
  12. முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
  13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி

இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

img_2005-1

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது,  பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

ஜாகிர் ஆதரவு போராட்டம் - 16-07-2016 - த.த.ஜா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

muslims-against-zakirnaik

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!

ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?

© வேதபிரகாஷ்

17-07-2016

IRF - Islamic research Centre, Mumbai - The Hindu

[1] http://ns7.tv/ta/muslims-protest-against-central-government-chennai.html

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610

[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST

[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html

[5] http://adiraipirai.in/?p=26723

[6] http://adiraipirai.in/?p=26767

[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/