Posted tagged ‘மும்பை’
நவம்பர் 20, 2016
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.

இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டேசனின் நடவடிக்கைகள்: மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார்[1]. இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது[2]. இப்போது இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் ஷாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும், அதாவது அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் முன்பு பல பிரசாரங்களில் கூறியிருக்கிறார்[3]. அனைத்து விசாரணைகளுக்கும் ஷாகிர் நாயக் ஒத்துழைப்பார் என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்[4]. இருப்பினும் வெளிநாடு சென்ற நாயக் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை[5]. சென்ற வாரம் தனது தந்தை இறந்த போது கூட, வந்தால், கைது செய்யப் படுவோம் என்று அஞ்சி வராமல் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. இதையெல்லாம் கவனிக்கும் போது, வெளிநாட்டில் இருக்கும் நாயக்கிற்கு, விசயங்கள் சென்று சேர்ந்து வருகின்றன என்று தெரிகிறது.

மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[6]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[7]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[8]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[9]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[10]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூரமாக தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப் படுத்தப்படுவதாக உறுதியானது.
19-11-2016 அன்று நடந்த சோதனைகள்: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் [National Investigation Agency], அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 2016 நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். பங்களாதேசமே இதை அறிவித்து, தடை செய்யுமாறுஈந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன. இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.
முறைப்படி மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள்: ஊடகங்கள் தினமும், அரசு நடவடிக்கைகளை பலவிதமாக வர்ணித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முக்கிய பிரச்சினைகளை விடுத்து, ஜாகிர் நாயக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும், கைது செய்யப் பட்டால் என்ன செய்வார், ய்ஜடை செய்யப் பட்டால் மேல்முறையீடு செய்வாரா, என்றெல்லாம் விவாதம் என்ற பெயரில் நாயக்கிற்கு சாதகமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தீவிரவாத செயல்களை உலகளவில் கட்டுப் படுத்த எல்லா நாடுகளும் இறங்கியுள்ளன. இந்தியாவில் ஜி.எஸ்.டி அமூல் படுத்தியவுடன், அந்நிய நாடுகளின் முதலீடு அதிகமாகி, தொழிற்சாலைகள் நிறுப்பப்படும். அந்நிலையில், தீவிரவாதிகள் ஒன்றும் செய்யக் கூடாது. அத்தகைய, சுமூகமான நிலையை இந்தியா ஏற்ப்டுத்த வேண்டியுள்ளது. ஆகவே, ஜாகிர் நாயக்கின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்தது.
முறைப்படி விசாரணை, ஆதாரங்கள் முதலியவற்றுடன் வழக்கு பதிவு செய்த விதம்: சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால், ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எப். நிறுவனத்தில் வேலை செய்பவஎகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாயக்கின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை கொண்டு வரப்பட்ட முழுமையாக அலசிப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கிறேன் என்ற போர்வையில், எவ்வாறு முஸ்லிம்-அல்லாதர்களின் மீது ஜிஹாத் என்ற போரை நடத்துவது, போன்ற தீவிரவாதத்தை போதிக்கும் போக்கு அறியப்பட்டது. இவரால் ஈர்க்கப் பட்டு, ஐசிஸ்.சில் சேர்ந்து, ஓடி வந்தவர்களிடம் விசாரித்து திட்டத்தையும் அறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15–ந்தேதி [செவ்வாகிழமை 15-11-2016] அறிவித்தது[11]. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் [ Unlawful Activities (Prevention) Act and the Indian Penal Code] பல்வேறு பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை 18-11-2016 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது[12]. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
© வேதபிரகாஷ்
20-11-2016

[1] தினகரன், ஜாகிர் நாயக் மீது வழக்கு: 10 இடங்களில் சோதனை: என்.ஐ.ஏ நடவடிக்கை, Date: 2016-11-20@ 00:02:37.
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=260007
[3] பிபிசி.தமிழ், இஸ்லாமிய போதகர் ஷாகிர் நாயக்கோடு தொடர்புடைய மும்பையின் 10 இடங்களில் சோதனை, நவம்பர் 20,2016,11.25 pm.
[4] http://www.bbc.com/tamil/india-38040016
[5]http://www.dinamani.com/india/2016/nov/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2599256.html
[6] Deccan Herald, Govt bans Zakir Naik’s organisation, Wednesday 16 November 2016
News updated at 2:37 AM IST.
http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[7] The Hindustan Times, IRF ban: Mumbai police await notification, clarity before initiating action, Saurabh M Joshi, Hindustan Times, Mumbai, Updated: Nov 16, 2016 01:10 IST
[8] http://www.hindustantimes.com/mumbai-news/irf-ban-mumbai-police-await-notification-clarity-before-initiating-action/story-iagR2YPHn98Qdxqq8OYIrL.html
[9] http://tamil.oneindia.com/news/india/zakir-naik-ngo-banned-five-years-267327.html
[10] http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[11] தினத்தந்தி, தொண்டு நிறுவனங்களில் சோதனை: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 2:26 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 3:45 AM IST
[12] http://www.dailythanthi.com/News/India/2016/11/20022625/Religious-preacher-Zakir-Naik-cases–National-intelligence.vpf
பிரிவுகள்: அடிப்படைவாதம், அடையாளம், அழிவு, அழுக்கு, ஆதரவு, ஆதாரம், ஆயுதப்படை, இந்திய ஊடகங்கள், இந்தியா, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐஸில், ஒஸாமா பின் லேடன், ஜாகிர் நாயக், ஜாகீர், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாத், மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, யுத்தம், வங்காள தேசம், வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, வளைகுடா, வழக்கு, வேலை, ஷிர்க், Uncategorized
Tags: அமைதி குலைத்தல், அமைதி டிவி, அல்லா, இடையூறு, இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐஎஸ்ஐஎஸ், ஐசில், ஐசிஸ், சவுதி, சவுதி அரேபியா, சிரியா, ஜாகிர், ஜாகிர் நாயக், தடை, துவேசப் பேச்சு, பீஸ் டிவி, மும்பை
Comments: Be the first to comment
நவம்பர் 16, 2016
ஜாகிர் நாயக்கின் “இஸ்லாமிய ஆராய்ச்சி இயக்கம்” சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது!
பங்களாதேச தீவிரவாத கொலைகள் மூலம் ஜாகிர் நாயக்கின் ஜிஹாதி தூண்டுதல் பிரச்சாரம் வெளிப்பட்டது: ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி 2016 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹன் இம்தியாஸ், முகநூலில் வெளியிட்ட பதிவில் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தெரிவித்திருந்தார்[1]. இதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறிய ஜாகிர் நாயக், அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார்[2]. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி’க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. மலேசிய அரசும் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்தது.
உள்நாட்டு ஜிஹாதிகளை ஊக்குவித்து தீவிரவாதத்தை வளர்க்கிறது என்பதும் தெரிய வந்தது: மும்பை, ஹைதராபாத், கேரளா, சென்னை / தமிழகம், போன்ற இடங்களில் கைதான முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத – ஐசிஸ் தொடர்புகளும் ஜாகிர் நாயக்கின் தீவிரவாத ஊக்குதல் எடுத்துக் காட்டியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறேன் என்ற போர்வையில், தீவிரவாத-பயங்கரவாதத்தையே நாயக் தூண்டி விட்டுள்ளது உறுதியானது. இதனால், ஜாகீர் நாயக் “இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்” (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] கல்வி அறக்கட்டளை, ‘பீஸ் டிவி’ [Peace TV] ஆகியவற்றை நிறுவி, தீவிரவாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தது[3].
மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[4]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[5]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை [Foreign Contribution (Regulation) Act (FCRA)] மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[6]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[7]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[8]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப்படுத்தப்படுவதாக உறுதியானது.
எல்லாவற்றையும் ஆராய்ந்து மத்திய அரசு தடை செய்ய தீர்மானித்தது: இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு [Unlawful Activities Prevention Act (UAPA)] கீழ் ஐந்து வருடங்கள் தடை விதித்துள்ளது[9]. மேலே கூறப்பட்டுள்ள விவகாரங்களை முறைப்படி ஆய்ந்து, ஆவணங்கள் முதலியவற்றை சர்பார்த்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை உறுதி செய்து, அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15-11-2016 அன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[10]. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகிர் நாயக் மேல் முறையீடு செய்யலாம் என்று “தி இந்து” ஆலோசனை செய்தி வெளியிட்டுள்ளது: ஐ.ஆர்.எப்பை தடை செய்ய பாராளுமன்ற அனுமதி தேவைப்படுகிறது, அதற்குப் பிறகு அரசு கெஜட்டில் முறைப்படி “தடை செய்யப்பட்ட இயக்கம்” என்று அறிவிக்கப் படும்[11]. இதை எதிர்த்து டிரிப்யூனல் [Tribunal] மூலம் மேல்முறையீடு செய்யலாம்[12] என்றெல்லாம் “தி இந்து” விவரிக்கிறது. அதாவது, நடந்துள்ள தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், உயிரிழந்த அப்பாவி மக்கள், அவர்களின் மனைவி-மக்கள், உறவினர்கள் முதலியோரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப் படாமல், ஜாகிர் நாயக் சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்லும் ரீதியில் செய்திகளை வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. அரசுக்கு இதெல்லாம் தெரியாமலா நடவடிக்கை எடுத்துள்ளது? இத்தகைய செய்திகளும் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாக உள்ளது.
ஊடகங்கள் தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்று ஏல் ஆலோசனை சொல்லக் கூடாது?: அதற்கு பதிலாக, சட்டப்படி, நடவடிக்கை எப்படி எடுக்கப்பட வேண்டும், இத்தகைய தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆல்லோசனை கூறி, செய்திகளை வெளியிடலாமே? அவ்வாறு வெளியிட நிருபர்களுக்கு தெரியவில்லையா அல்லது “தி இந்து” அவ்வாறெல்லாம், நாட்டுக்கு, இளைஞர்களுக்கு நல்லது செய்யும் விசயங்களை வெளியிட வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளதா? கனடா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும், மேல்முறையீடு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லலாமே? அந்த நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களையெல்லாம் விட, “தி இந்து” நிருபர்கள் பெரிய சட்ட ஆலோசகர்கள் ஆகி விட்டார்கள் போலும். விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வதை விடுத்து, இவ்வாறு சித்தாந்த ரீதியில் வேலை செய்வது தான். “தி இந்துவின்” முகமூடியை அவ்வப்போது, திறந்து காட்ட வைக்கிறது.
© வேதபிரகாஷ்
16-11-2016

[1] தினமணி, ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அமைச்சரவை முடிவு, By DIN | Published on : 16th November 2016 02:44 AM
[2]http://www.dinamani.com/india/2016/nov/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2599256.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை !, By: Karthikeyan, Updated: Wednesday, November 16, 2016, 0:27 [IST]
[4] Deccan Herald, Govt bans Zakir Naik’s organisation, Wednesday 16 November 2016
News updated at 2:37 AM IST.
http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[5] The Hindustan Times, IRF ban: Mumbai police await notification, clarity before initiating action, Saurabh M Joshi, Hindustan Times, Mumbai, Updated: Nov 16, 2016 01:10 IST
[6] http://www.hindustantimes.com/mumbai-news/irf-ban-mumbai-police-await-notification-clarity-before-initiating-action/story-iagR2YPHn98Qdxqq8OYIrL.html
[7] http://tamil.oneindia.com/news/india/zakir-naik-ngo-banned-five-years-267327.html
[8] http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[9] மாலைமலர், மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை, பதிவு: நவம்பர் 16, 2016 03:55
[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/16035525/1051018/Government-bans-controversial-preacher-Zakir-Naiks.vpf
[11] The Hindu, Centre bans Zakir Naik’s NGO, calls it ‘unlawful’, New Delih, November 15, 2016
[12] Banning any organisation under the Unlawful Activities Prevention Act (UAPA) requires an approval by the Cabinet, and a Gazette notification will follow soon. A Tribunal will be set up where Dr. Naik could challenge the ban on his NGO.
http://www.thehindu.com/news/national/zakir-naiks-ngo-banned-for-5-years/article9349724.ece
பிரிவுகள்: ஃபத்வா, அமைதி, அமைதி டிவி, அமைதி தூதுவர், அரேபியா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இறைதூதர், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், குண்டு தயாரிப்பு, குண்டுவெடிப்பு, சட்டமீறல், சட்டம், சவுதி, சவுதி அரேபியா, ஜாகீர், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, Uncategorized
Tags: அமைதி, அமைதி டிவி, இஸ்லாம், சென்னை, ஜாகிர், ஜாகிர் நாயக், ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாத், தீய சக்திகள், தீவிரவாதம், தீவிரவாதி, பங்களாதேசம், மதம், மும்பை, ரஹீல் செயிக், ரோஹன் இம்தியாஸ், ஹாவிஸ் சயீது, ஹாவிஸ் சையீத்
Comments: 1 பின்னூட்டம்
ஒக்ரோபர் 26, 2016
கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (1)?

அபு நைஸா மற்றும் அபு அல்–ஸ்வீடி பெண்களுடன் தொடர்பு கொண்டு சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஐசிஸ்ஸில் சேர்ந்தது: அல்-மக்ரபி 2015ல் அபு பக்கர் அல்-பாக்தாதி [Abu Bakr al-Baghdadi] என்பவன் இஸ்லாமிய அரசுக்கு [the land of Islamic State of Iraq and Syria (ISIS)] குடியேறி, அந்நாட்டிற்காகப் போராடுமாறு அழைப்பு விடுத்தான். +2 படித்து கடைகள் மற்றும் ஆடையுற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த சுபஹனி ஹாஜா மொஹிதீன் [Subahani Haja Moideen] இதற்கு ஈர்க்கப்பட்டான். திருமணமாகியும், இணைதளத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். ஸ்வீடன் நாட்டு பெண் ஒருத்தி உம்ரா / ஹ்ஜ் யாத்திரை செய்வது எப்படி என்று சந்தேகம் கேட்டபோது, அவளுடன் நண்பன் ஆனான். அதாவது “ஹஜ்-யாத்திரை” செல்வது என்பது “மோசுலுகுச் செல்வது” என்பது போன்ற பரிபாஷைகளை வைத்துள்ளனர் போலும். மேலும் பெண்களை வைத்து ஆட்களைப் பிடிப்பதும், செக்ஸ்-தூண்டில் போட்டு பிடிக்கின்றனர் என்பதும் தெரிகிறது. இதே போல அபு நைஸா அல்-மக்ரபி [Abu Naisha al Maghrabi] மற்றும் அபு அல்-ஸ்வீடி [Abu al-Swedi] என்ற பெண்களுடன் தொடர்பு துரித தொடர்பு சேவை மூலம் [instant messaging app Telegram] கிடைத்தது. துருக்கிக்கு வந்து விட்டால், அங்கிருந்து ஐசிஸ் நாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்வதாகவும், அங்கு அவனுக்கு சகல வசதிகளுடன் வேலை கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தனர்.

ஹஜ் யாத்திரை செல்கிறேன் என்று மோசுலுக்குச் சென்றது: அதன்படியே, மொஹித்தீன் தனது வீட்டை ரூ.18 லட்சங்களுக்கு விற்ருவிட்டு, இஸ்தான்புல்லிற்கு பறந்தான். வீட்டில் ஹஜ் யாத்திரைக்கு செல்வதாக கூறிக்கொண்டான். தாய்-மனை எல்லோரும் சந்தோஷமாகத்தான் அனுப்பி வைத்தனர் போலும்! இஸ்தாபுல்லில் ஒரு வீட்டில் தங்க வைத்தபோது, தன்னைப் போன்று மொரோக்கோ, இங்கிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வந்தவர்களை சந்தித்தான். அங்கிருந்து துருக்கி சிரியா எல்லையில் இருக்கும், ரக்தாத் பகுதியில் உள்ள டெல் அபயது [Tell Abyad on Turkey-Syria border in Raqqa] என்ற நகரத்தை அடைந்தனர். அவர்களுக்கு இஸ்லாம், ஜிஹாத், போர்முறை முதலியவை சொல்லிக் கொடுக்கப்பட்டது. பயிற்சியும் அளிக்கப்பட்டது. பிறகு, சிரிய படைகளுடன் போரிட அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போரில் குண்டு போட்டபோது, தன்னுடன் இருந்த இருவர் கருகி உயிரிழந்தனர். இதைக் கண்டதும், மொஹித்தீன் அலறிவிட்டான். சாவின் கொடூரம், போரின் பயங்கரம் முதலியவற்றை புரிந்து கொண்டான். இதனால் தான் அவன் திரும்பி ஓடி வந்து விட்டான் என்று கூறப்படுகிறது.

மோசுல்லுச் சென்று திரும்பியவன் “ஹாஜா” எப்படி ஆவான்?: சுபஹனி ஹாஜா மொஹிதீன் என்று குறிப்பிடுவதே கேவலமானது, மோசமானது கூட, ஏனெனில், அவன் ஹஜ்ஜிற்கு சென்று திரும்பவில்லை. அதனால் அவனை “ஹாஜா” என்று சொல்வதே தவறு. மோசுலுக்குத்தான் சென்று திரும்பியிருக்கிறான். திரும்பி ஓடி வந்தான் என்பதைவிட, அவன், வேறொரு காரணத்திற்காகத்தான் வந்துள்ளான் என்பது தெரிகிறது. ஏனெனில், அவன் தொடர்ந்து, ஐசிஸுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு தீவிரவாதத்திற்காக வேலைசெய்து வந்தது, அவன் “டபுள்-ஏஜென்ட்” அல்லது ஐசிஸ்-உளவாளி என்ற முறையில் செயல்படுவதாக தெரிய வந்தது. ஒருவன் எப்படி இருந்தாலும், ஐசிஸுக்கு உதவுகிறான் என்றால் அவனை, பட்டியிலில் வைத்துக் கொண்டு கவனிக்கப்படுவார்கள். தீவிரவாதியாகி விட்டப் பிறகு, அத்தொழிலில் ஈடுபடமாட்டான் என்பதெல்லாம் மாயை. ஆகவே, இந்திய தூதரகம், ஐ.பி, முதலியவற்றை ஏமாற்றவே அத்தகைய பொய்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவனைப் போன்று, இன்னும் ஏத்தனை உளவாளிகள், ஐசிஸ் ஏஜென்டுகள் உள்ளனர் என்று தெரியவில்லை.

தமிழக போலீஸாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது ஆச்சரியமாக உள்ளது: மேலும் தமிழக போலிஸார் அவன் சிரியாவில் போரிடவில்லை என்றெல்லாம் வக்காலத்து வாங்கியதும் வியப்பாக இருந்தது[1]. ஒருவேளை, வழக்கம் போல தீவிரவாதத்தில் கூட “செக்யூலரிஸ” முறைகளை கையாளுகிறார்கள் போலும். சென்னையிலேயே ஐசிஸ்காரகள் பிடிப்பட்ட பிறகு, மெத்தனமாக இருப்பதும் வேடிக்கைதான். இஸ்தான்புல் இந்திய தூதரகத்தில் கூட மொஹித்தீன் பொய் சொல்லியிருக்கிறான். தான் ஒரு சுற்றுலா பயணி என்றும், பாஸ்போர்ட் மற்றும் உடமைகள் காணாமல் போய்விட்டன என்று கூறிக் கொண்டு, திரும்பிச் செல்ல அவசர சான்றிதழ் பெறுறுள்ளான்[2]. இதன்படிதான் செப்டம்பர் 22, 2015 அன்று மும்பைக்கு வந்து, கடையநல்லூருக்குச் சென்றுள்ளான். ஐ.பி இவ்வாறான “அவசர சான்றிதழுடன்” திரும்பிவரும் நபர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையும் விட்டது. ஆனால், தமிழக போலீஸ் உயரதிகாரிகள், அவன் சிரியாவுக்குச் சென்று திரும்பியது எல்லாம் தெரியாது என்று சாதிக்கின்றனர்[3]. இஸ்தான்புல் தூதரகம் கூட தமிழக போலீஸாருக்கு விவரங்களை அனுப்பியிருக்கலாம்.

சுபஹனி மொஹிதீனின் பாரிஸ் குண்டுவெடிப்பவர்களின் தொடர்புகள்: தமிழக முஸ்லிம் இளைஞனுக்கும் பாரிஸ் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கும் இருக்கும் தொடர்புகள் திடுக்கிட வைக்கின்றன. ஆனால், அவனை, தமிழகத்தில் பெற்றோர், உற்றோர், மற்றோர் போற்றி வளர்ந்துள்ளனர் என்பது, அவர்களது ஜிஹாதி மனப்பாங்கைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஒருவேளை இவர்கள் தமது அரசியல், பணம், செல்வாக்கு வைத்து, இவனது நடவடிக்கைகளை மறைத்திருப்பார்கள் போலும்! அதனால் தான், தமிழக போலீஸார் தமக்கு தெரியாது என்கிறார்கள். ஐசிஸ் இஸ்லாத்திற்கு எதிரி என்று சில நேரங்களில் சில முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அவர்கள் ஆதரவு கொடுப்பது தான் அதிகமாக உள்ளது என்பது, இத்தகைய ஒத்துழைப்புகளில் வெளிப்படுகிறது. திருநெல்வேலி, கடைய நல்லூரில் கைதான, மொஹிதீம் தனக்கு பாரிஸ் குண்டுவெடிப்பில் பங்கு கொண்ட அப்துல் அஹமது அபாவைத் [Abdelhamid Abaaoud], ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி [Omar Ismail Mostefei] மற்றும் சலாஹ் அப்சலாம் [Salah Abdeslam] முதலியோரை சந்தித்துள்ளதாக ஒப்புக் கொண்டான்[4]. அப்துல் அஹமது அபாவைத் நவம்பர் 2015ல் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டான். சலாஹ் அப்சலாம் மார்ச் 2016ல், மோலன்பெக், பெல்ஜியத்தில் [Molenbeek, Belgium] பிடிபட்டு, பாரிஸ் போலீஸ் காவலில் உள்ளான். ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி பற்றிய விவரங்களை சொல்ல அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது. வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை.
© வேதபிரகாஷ்
26-10-2016

[1] Police officers from Tamil Nadu said Moideen did not take part in any armed conflict either in Mosul or Raqqa, because he was physically inept and also because he questioned IS strategies.
http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839
[2] At the Indian embassy, Moideen, too, pretended to be an Indian tourist who had lost his passport and luggage. The Indian embassy, after checking his background, issued him an Emergency Certificate that allowed him to travel back. He returned on September 22 to Mumbai and headed to his village in Kadayanallur in Tamil Nadu’s Tirunelveli district. Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839
[3] Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839
[4] DNA-Daily News & Analysis, ‘Indian ISIS operative Subahani Haja Moideen knew Paris bombing accused, Sun, 23 Oct 2016-03:30pm , PTI.
பிரிவுகள்: அழிவு, இந்தியா, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், கடையநல்லூர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சுபஹனி மொய்தீன், சுபஹனி மொஹித்தீன், ஜமாத், ஜிஹாதி, மொய்தீன், மொஹித்தீன், Uncategorized
Tags: இஸ்லாம், இஸ்லாம் ஜிஹாதி, உம்ரா, ஐசில், ஐசிஸ், கடையநல்லூர், சுபஹனி, சென்னை, ஜிஹாத், தமிழ்நாடு, திருநெல்வேலி, துருக்கி, மும்பை, மொய்தீன், மொஹித்தீன், மோசுல், ஹஜ், ஹாஜா, ஹாஜா மொய்தீன்
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 13, 2015
மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

Mohammed messenger of God – A R RAhman fatwa
முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்[1]. ஆஸ்கார் விருது பெற்ற, ஸ்லம்-டாக் மில்லியனர் படம் இசைப்புகழ் ரஹ்மானுக்கு பத்வா போடப்பட்டுள்ளது என்று “ஹாலிவு ரிப்போர்டர்” தலைப்பிட்டு அறிவித்துள்ளது[2]. 1989ல் முஸ்லிமாக மாறிய இவர், தனது பெயரான திலிப் குமார் என்பதனை மாற்றிக் கொண்டார்[3]. அதிலிருந்து, இவர் பழுத்த முஸ்லிமாக நாகூருக்குச் செல்வது, மொட்டை அடித்துக் கொள்வது, சூபித்துவத்தில் ஈடுபடுத்திக் கொள்வது, சூப்பாடல்களை சினிமா பாடல்களில் சேர்ப்பது என்று பரிசோதனை செய்து வந்தார். சினிமா பாடல்களில் கூட இஸ்லாமிய ராகங்கள், இசைக்கருவிகள், கவ்வாலிகள் போன்ற மெட்டுகள் முதலியவற்றைக் காணலாம். இருப்பினும், இப்பொழுது பத்வாவிக்கு உட்பட்டிருக்கிறார்.

A R Rhman and Majid Majith
மஜித் மஜீதும், ரஹ்மானும், இறைத்தூதர் மொஹம்மது திரைப்படமும்: ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை மஜித் மஜிதி தன் பக்கம் ஈர்த்தார். உலகப்பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதேபோல் ‘த கலர் ஆப் பாரடைஸ்’, ‘த சாங் ஆப் ஸ்பாரோ’ போன்ற அன்பைப் பற்றி பேசும் தரமான திரைப்படங்களை இவர் அளித்துள்ளார்[4]. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ [ ‘Muhammad: Messenger of God’] என்ற ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்[5].

Muhammad_-_The_Messenger_of_God_poster
இறைத்தூதர் மொஹம்மது திரைப்படத்திற்கு எதிப்புத் தெரிவிக்கும் முஸ்லிம்கள்: ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப்பற்றி மக்கள் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, இந்த படத்தை திரையிட கூடாது எனவும் மும்பையில் உள்ள சன்னி பிரிவினர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்[6]. மஹாராச்ட்ரா முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் போன்றோரை சந்திப்போம் என்றும் கூறியுள்ளனர். தங்களது எதிர்ப்பையடுத்து, இந்த படத்தை வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குனர் கைவிடாததால், இயக்குனர் மஜித் மஜிதி, மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ராஸா அகாடமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி [Saeed Noorie, chief of Raza Academy] தெரிவித்துள்ளார்[7]. இந்த ராஸா அகடெமி ஏற்கெனவே பல சர்ச்சைகளில், கலவரங்களில் ஈடுபட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மொஹம்மது இறைத்தூதர் – சினிமா
மும்பை முதி பத்வா போட்டது ஏன்?: இது தொடர்பாக ரஸாக் அகாடமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[8]: “மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத் – மெஸஞ்சர் ஆப் காட் படம் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. தன்னைப்பற்றிய எந்த உருவத்தையும் எவ்விதத்திலும் உருவாக்கக் கூடாது என்று மொஹம்மது நபி கூறியுள்ளார்[9]. இந்நிலையில் இஸ்லாம் மத கோட் பாட்டுக்கு எதிராக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது. இந்த படத்தில் தொழில்முறை முஸ்லிம் கலைஞர்களும், முஸ்லிம்-அல்லாத பிற மதக்கலைஞர்களும் (காபிர்களும்) பணியாற்றியுள்ளனர்[10]. இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு படத்தில் பணியாற்றியதன் மூலம் மஜித் மஜிதியும், ஏ.ஆர்.ரகுமானும் தெரிந்தே இஸ்லாத்தின் சட்டங்களை மீறி இருக்கிறார்கள்[11]. இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மஜித் மஜிதி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பத்வா’ விதிக்கப்படுகிறது”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[12].

Mohammed messenger of God – An Iranian film
பிராயசித்தம் செய்ய வேண்டியது என்ன?: மொஹம்மது அக்தர், மும்பை முப்தி அந்த பத்வாவை அறிவித்துள்ளார்[13]. அப்படத்தில் நடித்த, வேலை பார்த்த முஸ்லிம்கள், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. மஜீதி மற்றும் ரஹ்மான் இருவரும், அவர்களது கருத்துகளைக் கேட்க முற்பட்டபோது, இருவரையும் காணவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது[14]. அதாவது காபிர்களுடன், மோமின்கள் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இருக்கும் நிலையில், முஸ்லிம்களான இவர்கள், காபிர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர். “இறைவனின் தூதர்” என்ற பெயரை வைத்து, அதில் காபிர்களையும் நடிக்க வைத்துள்ளனர். இதனால், அவர்களை காபிருத்துவம் ஒட்டிக்கொண்டுள்ளது. அதனால், அவர்கள் காபிர்களாகவும் மாறி விட்டனர். அதனால், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்வதின் மூலம் மோமின் நிலையை அடையலாம் என்று, தனக்கேயுரிய பாணியில் முப்தி கூறியுள்ளார். இனமவர்கள் பிராயசித்தம் செய்து மறுபடியும் முஸ்லீம்களாக மாறுவார்களா அல்லது அப்படியே இருப்பார்களா என்று பார்ப்போம்.
© வேதபிரகாஷ்
13-09-2015
[1] पैगंबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे महंगी फिल्म में संगीत देने वाले भारत के सबसे बड़े संगीताकार को मुस्लिम समुदाय ने फतवा जारी कर दिया है। मुंबई के सुन्नी मुस्लिम समुदाय की राजा एकेडमी ने इरानी फिल्मकार माजिद मजीदी और संगीतकार भारतीय संगीतकार एआर रहमान को फतवा जारी कर पैंगबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे बड़ी फिल्म पर कड़ा विरोध जताया है।
http://www.amarujala.com/photo-gallery/multiplex/entertainment-photo-gallery/fatwa-against-a-r-rahman-for-film-on-prophet/
[2] http://www.hollywoodreporter.com/news/fatwa-issued-slumdog-millionaire-composer-822668
[3] Rahman, 48, is one of India’s most successful composers, whose multiple awards include an Oscar and Grammy for his work onDanny Boyle‘s Slumdog Millionaire. He worked again with Boyle on the 2010 release 127 Hours. Rahman officially converted to Islam in 1989, replacing his Hindu birth name Dileep Kumar.
[4] தினமணி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்பு ‘ஃபத்வா‘ அறிவிப்பு!, By எழில்
First Published : 12 September 2015 05:17 PM IST.
[5] http://www.maalaimalar.com/2015/09/12130105/Fatwa-issued-against-AR-Rahman.html
[6]http://www.dinamani.com/cinema/2015/09/12/%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/article3024497.ece
[7] மாலைமலர், ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 12, 1:01 PM IST.
[8] தினகரன், முகமது நபிகள் பற்றிய ஈரான் படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்வா: மும்பையை சேர்ந்த சன்னி அமைப்பு அறிவிப்பு, செப்டம்பர்.13, 2015, 03.22.14, ஞாயிற்றுக்கிழமை.
[9] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/fatwa-against-a-r-rahman-majid-majidi-for-film-on-prophet/
[10] http://www.dailythanthi.com/News/CinemaNews/2015/09/12142522/Fatwa-against-AR-Rahman-Majid-Majidi-for-film-on-Prophet.vpf
[11] தினத்தந்தி, ஏ.ஆர்.ரகுமான்– ஈரான் இயக்குனருக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம், மாற்றம் செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST; பதிவு செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST.
[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=166848
[13] Saeed Noorie, chief of Raza Academy, which initiated the fatwa that was issued by Muhammad Akhtar – the chief mufti of Mumbai.
http://www.thehindu.com/news/national/fatwa-against-ar-rahman-for-film-on-prophet/article7642275.ece
[14] In the fatwa, they cite as the reason the Prophet’s word that no visual or picture of him be created or kept. The fatwa claims the film makes a mockery of Islam, and professional actors, including some non-Muslims, have been cast in the key roles.The fatwa adds that the Muslims working on the film, especially Majidi and Rahman, have thus committed sacrilege and will have to read the kalma again and also solemnise their marriage again. Despite repeated attempts, Rahman remained unavailable for comment.
பிரிவுகள்: இறைத்தூதர், ஈரான், காபிர், சயீத் நூரி, சினிமா, படம், பிராயசித்தம், மஜீத் மஜீதி, முப்தி, மும்பை, மொஹம்மது அக்தர், மோமின், ரஹ்மான், ராஸா, ராஸா அகடெமி
Tags: ஈரான், சயீத் நூரி, சினிமா, படம், பத்வா, மஜித் மஜீதி, முப்தி, மும்பை, மொஹம்மது அக்தர், மொஹம்மது இறைத்தூதர், ரஹ்மான், ராஸா அகடெமி
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 2, 2015
யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (4)

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி
கே. வீரமணி, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்?[1]: தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை மனிதநேய அறிக்கை என்று மேலேயுள்ள விசயங்களைத் தொகுத்து கே. விரமணி வெளியுட்டுள்ளார். மும்பைக் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப் பட்டு சிறையிலிருந்த யாகூப் மேமனுக்கு அவசர அவசர மாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதானது – பல விமர்சனங்களுக்கு வழி வகுத்து விட்டது[2].
- மகாராட்டிர மாநிலத்தில் முசுலிம்களுக்கு எதிரான கலவரத்தில் முசுலிம்கள் கொல்லப்பட்டனரே! அதற்குக் காரணமானவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
- நீதிபதி கிருஷ்ணா ஆணையம் குற்றவாளிகளைப் பட்டியலிட்டுக் காட்டியதே – அன்றைய பிஜேபி சிவசேனா ஆட்சி ஒரே ஒரு வரியில் கிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையை ஏற்க மறுப்ப தாகக் கூறிடவில்லையா?
- மும்பைக் குண்டு வெடிப்பு என்பது அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் எதிரொலிதான்; நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அய்யப்பாடு- மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணமான பாபர் மசூதியை இடிப்பதற்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படாதது ஏன்? இன்னும் சொல்லப் போனால் வழக்கு விசாரணை முறையாகக் கூடத் தொடங்கப்படவில்லையே ஏன்?
- இதன் பொருள் என்ன? நீதித்துறையும், ஆட்சித் துறை யும் நபர்களைப் பொறுத்து வளையும் – நெளியும் என்பதைத்தானே இது காட்டுகிறது! மனுதர்மத்தை எடுத்துக் காட்டி தீர்ப்பு வழங்குபவர்கள் இன்னும் இருக்கிறார்களே!
- அத்வானியின் ரத யாத்திரை (1991 அக்டோபர்) காரணமாக ஏற்பட்ட மதக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 564 பேர்.
- மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி களான பெண் சாமியார் பிரக்யாசிங், சாமியார் அசிமானந்த், கர்னல் புரோகித் உள்ளிட்டோருக்கான வழக்கு விசாரணை ஏன் முடிக்கப்படவில்லை – உரிய தண்டனை ஏன் வழங்கப் படவில்லை?
- தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படட்டும்! தூக்குத் தண்டனையே கூடாது; இது மிகவும் காட்டு விலங்காண்டித்தனம்; மனித நேயத்துக்கும், உரிமைக்கும் எதிரானது என்று குரல் உலகெங்கும் கிளர்ந்தெழும் இந்தக் கால கட்டத்தில், இப்படியொரு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட முறை கண்டிக்கத்தக்கது!
- மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் காட்டிய இந்த அசாதாரண நடைமுறைகள் மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்து விடும். யாகூப் மேமன் தூக்குத் தண்டனையே கடைசியாக இருக்கட்டும்!

Yakub versus prohit, etc
தி இந்துவின் ஒருதலைப் பட்சமான கருத்துத் திணிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான விவரங்கள் “தி இந்து” (தமிழ்) இதழிலிருந்து எடுத்தாளப்பட்டவை ஆகும். தொடர்ந்து, தூக்குத்தண்டனை கூடாது, மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று யாகூப் மேமன் தூக்கிற்கு முன்னரும் பின்னரும் அதிகமாகவே செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால், ஏன் தூக்குத்தண்டனை அல்லது மரணதண்டனை தேவை, மனிதத் தன்மையற்ற குரூர தீவிரவாதிகளுக்குக் கருணைக் காட்டக் கூடாது, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை, திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை யாரிடமிருந்தும் பெற்று வெளியிடவில்லை. ஒருவேளை அத்தகைய கருத்தே தேவையில்லை என்று “தி இந்து” மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் முடிவு செய்திருப்பது போலிருக்கிறது. பிறகு, எப்படி அவர்களை சமநோக்குள்ளவர்கள், பாரபட்சமற்றவர்கள், உள்ள நாட்டி சட்டங்களை மதிப்பவர்கள், நீதிமன்றங்களை போற்றுபவர்கள் என்று கருத முடியும்?

யாகூப் மேமன், ஒவைஸி, வீரமணி, நாத்திகம் கூட்டு
மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும்: விக்கிப்பீடியாவின் விளக்கமும் பாரபட்மாக இருக்கிறது[3], “மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம்[4] தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கும், பாலியன் வன்புணர்வு போன்றவையும் தவிர்த்து போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கும் பல உலக நாடுகள் மரண தண்டனையை தருகின்றன. மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.” சரி, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாத் பற்றி ஒன்றும் விவாதங்கள் இல்லையா?

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் கொலயுண்டவர்கள்.2
மும்பையில் பயங்கரவாத தாக்குதல்கள் (1993 முதல் 2011 வரை): மும்பை, இந்தியாவின் வணிக-வியாபார தலைநகரம், பொருளாதார மையம் என்பதனால், தொடர்ந்து குண்டுவெடிப்பில் தாக்கப்பட்டு வருகின்றது. இதில் அப்பாவி-பொது மக்கள் பலிகடாக்களாக குரூரமாகக் கொல்லப்பட்டு வருகிறர்கள்.
- 12 மார்ச் 1993 – 13 வெடி குண்டுகள் கடுமையாக வெடித்ததில் 257 பேர் பலியாகினர்
- 6 டிசம்பர் 2002 – கட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர்
- 27 ஜனவரி 2003 – வைல் பார்லேவில் ஒரு மிதிவண்டியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் .
- 14 மார்ச் 2003 – முலுண்டில் ரயில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்,
- 28 ஜூலை 2003 – காட்கோபரில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர் .
- 25 ஆகஸ்ட் 2003 – இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் நுழைவாயில் அருகே காரில் இரண்டு வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்
- 11 ஜூலை 2006 – தொடர் 209 கொலை, ரயில்களில் ஏழு குண்டுகளில் போகவில்லை
- 26 நவம்பர் 2008 முதல் 29 2008 நவம்பர் வரை – ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில், குறைந்தது 172 பேர் கொல்லப்பட்டனர்.
- 13 ஜூலை 2011 – வெவ்வேறு இடங்களில் மூன்று ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகள்; 26 பேர் கொல்லப்பட்டனர்.
இவற்றில், நிச்சயமாக பழிவாங்கும் எண்ணம் எல்லைகளை மீறி, இந்தியாவையே அழிக்க வேண்டும் என்ற வெறித்தனம், குரூர சதிதிட்டம், நாசகாரத்தனம் முதலியவை அடங்கியிருப்பது வெளிப்படுகிறது. இது தீவிரவாதத்தை விட மிக-மிக அதிகமானது. அதனை எப்படி, எவ்வாறு, ஏன் அறிவிஜீவிகள் உணராமல் இருக்கின்றனர் என்று புரியவில்லை. ஒருவேளை அவர்களும் அந்த அதி-தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்று ஆராய வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
02-08-2015
[1] விடுதலை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , சனி, 01 ஆகஸ்ட் 2015 14:47 http://www.viduthalai.in/e-paper/106140.html
[2] கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம், சென்னை, யாகூப் மேமனுக்கு அவசர கதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஏன்? , விடுதலை, 1-8-2015
[3]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
[4] நீதிமன்றங்களை அவ்வாறு கூறலாமா, சரி பிறகு உயிர் எடுப்பவர்களை, கொலைகாரகளை, தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை என்னென்று கூறுவார்கள்?
பிரிவுகள்: அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொல்லப்படுதல், இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம், மும்பை, மேமன், யாகுப், யாகுப் மேமன், யாகூப், யாகூப் மேமன்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, கைது, கொலை, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், டைகர் மேமம், தாவூத் இப்ராஹிம், மிதிக்கும் இஸ்லாம், மும்பை, யாகுப், யாகுப் மேமன், யாகூப், யாகூப் மேமன்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 2, 2015
யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (3)

The Memons at the wedding of Yakub and Ayub- The occasion provided a valuable photo album to the police- India today photo
கசாப்பை அடுத்து யாகூப் மேமன்[1]: மகாராஷ்டிர மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012 நவம்பரில் தூக்கிலிடப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக இப்போது அங்கு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கசாப் புணே எரவாடா சிறையிலும், யாகூப் மேமன் நாக்பூர் சிறையிலும் தூக்கிலிடப்பட்டனர். மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்திய கசாப் தூக்கிலிடப்பட்ட பிறகு. 2013 பிப்ரவரியில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குருவுக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு நிறைவேற்றப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இரு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது[2]. முன்னதாக சுதந்திர இந்தியாவில் முதல் தூக்கு தண்டனை, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் குற்ற வாளிகளான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நிறை வேற்றப்பட்டது. அவர்கள் இருவரும் பஞ்சாப் மாநிலம் அம்பாலா சிறையில் 1949-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். அதன் பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த சத்வந்த் சிங், கேஹார் சிங் ஆகியோருக்கு 1989-ம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை சுமார் 50 தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் சமீப ஆண்டுகளில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்படுவதும், நிறைவேற்றப் படுவதும் அதிகரித்துள்ளதாக தூக்கு தண்டனைக்கு எதிராக போராடி வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன[3]. ஆனால், அவர்களால் கொலையுண்டவர்களைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்வதில்லை? தீவிரவாதிகள் தொடர்ந்து இவ்வாறு குண்டுகளை வெடித்து, அப்பாவி மக்களைக் கொண்டு வந்தால், அது மனித உரிமைகளில் ஏற்கப்படுமா?
அம்புகளுக்கு ஆயுள், அம்பை ஏவியவருக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம் கருத்து[4]: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 129 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் யாகூப் மேமன் உட்பட 12 பேருக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டில் மரணதண்டனை விதித்தது. வழக்கு விசாரணையின்போதே ஒருவர் உயிரிழந்துவிட்டார். எனினும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது. யாகூப் மேமனுக்கு மட்டும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அப்போது கூறியதாவது: “பத்து பேரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. அந்த 10 பேரும் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்த வர்கள். அவர்களுக்கு நிரந்தர வேலை இல்லை. இதனால் வறுமையில் வாடிய அவர்கள் சிலரின் சதிவலையில் சிக்கியுள்ளனர். இதை ஏற்க முடியாது என்றாலும் அவர்கள் வெறும் அம்புகள்தான். அவர்களை வில்லில் இருந்து ஏவியவர்களை மன்னிக்க முடியாது. அவர்கள்தான் திட்டமிட்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். அந்தந்த வழக்கின் பின்னணி, உண்மைகளை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும்”, இவ்வாறு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது[5]. இங்கும், தீர்ப்பின் பகுதியை வெளியிட்டு அலசுவதைக் கவனிக்க வேண்டும். மேலே ஆரம்பத்தில் அதற்காகக் தான், மற்ற பத்திகளையும் சேர்த்துக் கொடுத்துள்ளேன்.

யாகூம் மேமன், ஒவைஸி, வீரமணி
யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றம்: மரண தண்டனையை ஒழிப்பதே கலாமுக்கான உண்மையான அஞ்சலி – தலைவர்கள் கருத்து[6]: இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறி யுள்ளனர். யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலியாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்”, என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மற்ற தலைவர்களும் – தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்), எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்), கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர்) முதலியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்றால் 1993 முதல் 2011 வரை கொல்லப்பட்டவர்களுக்கு இவர்கள் எப்படி அஞ்சலி செல்லுத்துவ்வார்கள்?
- யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் ஒருவர், அப்படியென்றால் அவர்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியைக் கொடுக்கவில்லையா?
- இங்கு இஸ்லாமிய சமூகம் என்று குறிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால், பாதிக்கப்பட்ட இந்து சமூகத்தினைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை என்றாகிறது.
- இது செக்யூலரிஸ இந்தியாவில், இத்தகையோர்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை, சமத்துவம் ஒத்துப் போகல்லை, மனிதநேயம் நோகடிக்கவில்லை, மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் பார்க்கச் சொல்கிறது என்றாகிறது.
- தீவிரவாதிகளின் உரிமைகள், பயங்கரவாதிகளின் உரிமைகள், குண்டுத் தயாரிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடித்து ம்மக்களைக் கொல்பவர்களின் உரிமைகள்,……………..என்று பேசும் இவர்கள் மற்றவர்களின் உரிமைகளைப் பற்றி ஏன் நினைப்பதில்லை?
- அந்த பலிக்கடாக்களுக்கு அஞ்சலியை, பரஸ்பர கருணையை, சமரச தீர்ப்பை, சமூகநீதி போன்ற முடிவை இவர்கள் எப்படி அளிப்பார்கள் என்று யோசிக்கவில்லையே?
- தீவிரவாதிகளை இனிமேல் குண்டு தயாரிக்காதே, குண்டு வைக்காதே, குண்டுவெடிக்க வைத்து அப்பாவி மக்களைக் கொல்லாதே என்று ஒருவனும் சொல்லக் காணோமே?
- பயங்கரவாதிகள் அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தபோது, அவர்கள் எந்த சட்டங்களையும், நீதிகளையும், விதிமுறைகளையும் மீறவில்லையா?
- மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார் இன்னொருவர், சரி மரணத்தை ஏற்படுத்தும் தீவிரவாய்திகள், பயங்கரவாதிகள், இவர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஏன் எண்ணம் வரவில்லை அல்லது தைரியம் இல்லை?
© வேதபிரகாஷ்
02-08-2015
[1] தி இந்து, கசாப்பை அடுத்து யாகூப் மேமன், Published: July 31, 2015 08:53 ISTUpdated: July 31, 2015 08:56 IST.
[2] தி இந்து இவ்வாறு விவரிப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும், ஏனெனில், எங்குமே பலிக்கடாக்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய பேச்சே இல்லை!
[3]http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/article7484494.ece
[4] தி இந்து, அம்புகளுக்கு ஆயுள், அம்பை ஏவியவருக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம் கருத்து, Published: July 31, 2015 08:48 ISTUpdated: July 31, 2015 09:20 IST
[5]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article7484487.ece
[6] தி இந்து, யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றம்: மரண தண்டனையை ஒழிப்பதே கலாமுக்கான உண்மையான அஞ்சலி – தலைவர்கள் கருத்து, Published: July 31, 2015 08:18 ISTUpdated: July 31, 2015 08:18 IST
பிரிவுகள்: அடிப்படைவாதம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாமும் இந்தியாவும், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டைகர் மேமம், தாவூத் இப்ராஹிம், முஜாஹித்தீன், மும்பை, யாகுப் மேமன், யாகூப், யாகூப் மேமன்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கசாப், கலவரம், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம், தூக்கு, தூக்கு தண்டனை, மரண தண்டனை, மரணம், மிதிக்கும் இஸ்லாம், மும்பை, யாகுப் மேமன், யாகூப், யாகூப் மேமன்
Comments: 1 பின்னூட்டம்
ஓகஸ்ட் 2, 2015
யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (2)
தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்): “யாகூப் மேமனின் விசாரணையில் பல்வேறு குறைகள் இருந்ததை அவரை சரணடையச் செய்த ரா உளவுப்பிரிவின் முன்னாள் அதிகாரி பி. ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். உலகம் முழுவதும் 140 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியாவும் மரண தண்டனையை முற்றாக கைவிட வேண்டும். மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்”. கொசுரு: இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கும் வகையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அதுவும் அவரது பிறந்த நாளில், இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்[1]. [பாரபட்சத்துடனும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக பேசி வரும் இவரது கருத்தை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. அண்டைநாடுகளான பஙளாதேசம் மற்றும் பாகிஸ்தானிலேயே தீவிரவாதிகளை தூக்கிட்டு வருகிறார்கள். அது இவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே. அரபு நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை].
அசாசுதீன் ஒவைஸி தீவிரவாத வாதங்கள்: அசாசுதீன் ஒவைஸி உடனே, பாபு பஜரங்கி, மாயா கொடானி, காலனெல் புரோஹித், சுவாமி அஸீமாநத் முதலியோரும் தூக்கில் போடப்படவேண்டும் என்றார்[2]. “பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்தி சிங் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இருந்ததைப் போன்ற அரசியல் பின்புலம் யாகூப் மேமனுக்கு இல்லாமல் போனதே அவர் தூக்கிலிடப்பட காரணமாக அமைந்தது. இதைப் பின்பற்றி பாபர் மசூதியை இடித்தவர்களையும் தூக்கிலிட வேண்டும்” முன்னர் யாகுப் மேனன் முஸ்லிம் என்பதனால் தான் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது என்றெல்லாம் பேசினார். இவரும், இவரது சகோதரனும் வாய்-தீவிரவாதப் பேச்சுகளில் வல்லவகள். இருப்பினும் ஊடகங்கள் இவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து பேச வைத்து, அவற்றை பிரபலப்படுத்தி, பரப்பி வருகிறார்கள். [அண்டைநாடுகளான பஙளாதேசம் மற்றும் பாகிஸ்தானிலேயே தீவிரவாதிகளை தூக்கிட்டு வருகிறார்கள். அவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள் தாம். பிறகு அவர்கள் முஸ்லிம்கள் என்றாலும், ஏன் தூக்கில் போடுகிறர்கள், மரணதண்டனையை நிறைவேற்ருகிறார்கள்? அது இவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே. அரபு நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை].
எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்)[3]: “அப்துல் கலாம் என்னும் மாமேதை மறைந்ததற்காக உலக மக்கள் அனைவரும் கவலை கொண்டுள்ளனர். இந்த வேளையில், யாகூப் மேமனை தூக்கிலிட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. தானாக சரணடைந்த யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” [இப்படி அரைகுறையாக இவர் கூறியிருப்பதிலிருந்தே, இவருக்கு விசயம் தெரிவில்லை அல்லது மறைக்கிறார் என்றாகிறது]
கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர்): “முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் நடக்கும் நாளில், யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் மரண தண்டனை ஒழிப்பு குறித்த கலாமின் கோரிக்கையும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.” [இங்கும் கலாமின் கருத்து திரிக்கப் பட்டிருக்கிறது. தீவிரவாதிகளைப் பொறுத்த வரையிலும், அடுத்தவர்களின் உயிரை பறிக்க அவர்களுக்கு உரிமையில்லை, அதனால், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளார்]

Supporters of Memon against hanging 2015
அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் கருணை மனு கொடுத்தது: செக்யூலரிஸ வகையறாக்கள் அப்படி-இப்படி என்று சுற்றி வளைத்து, மரண தண்டனை கூடாது என்ற வாதத்தை குறிப்பிட்ட ஊடகங்கள் வெளிப்படையாக வைத்தன[4]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜிவ் காந்தி கொலைகாரர்களின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப் பட்டு, அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதுவும் குறிப்பட்ட மாநில மக்களை தாஜா செய்வதற்காக செய்யப் பட்டது என்று செக்யூலரிஸ வகையறாக்கள் திரிபு விளக்கம் அளித்தன. முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவில் யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத் (மார்க்சிஸ்ட் கம்யூ.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சிவா (தி.மு.க.) உள்ளிட்ட கட்சித்தலைவர்களும், பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்கா, மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களும் கையெழுத்து இட்டனர்[5].

Tejas, 1993 victim-Mehta family pays tribute every year
257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்!: கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்பாவி 257 மனிதர்களின் உயிர்களைப் பற்றி இந்த மனிதர்கள் கவலைப் பட்டனரா என்று தெரியவில்லை. காயமடைந்த700க்கும் மேற்பட்ட மனிதர்களைப் பற்றியும் இரக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகள் இரக்கத்துடனா குண்டுகளை வைத்து வெடிக்க வைத்தனர்? கருணையுடனா அத்தனை அப்பாவி மக்களைக் கொன்றனர். கை-கால் பிய்ந்து, ரத்தம் பீய்ச்சி அடித்து, உடல்கள் சிதறிய போது, இரக்கம், கருணை, மனிதாபமானம் முதலிய குணாதரியங்களைப் பற்றி இவர்கள் சிந்தித்துப் பார்த்தார்களா? எந்த உயிரையும் எடுக்க மனிதனுக்கு உரிமையில்லை என்றால், இவ்வுயிர்களை எப்படி தீவிரவாதிகள் எடுத்தார்கள்?

1993 victim-pays tribute every year
பலிக்கடாக்களுக்கு நீதி தாமதப்படுத்துவது ஏன்?: பலிக்கடாக்களின் உறவினர்களுக்கு நீதி நேரம் தாழ்த்தித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. வினாயக் தெவ்ருக்கர் தனது 19 வயதான சகோதரி சசிகலா மற்றும் 11 வயது சகோதரன் வசந்த் முதலியோரை சென்சுரி பஜார், வோர்லியில் பிணமாக ரத்தம் மற்றும் உடல் பாகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. ஐந்து-மணி தேடலுக்குப் பிறகு மருத்துவ மனையில் அவர்களது உடல்களைக் கண்டு பிடித்தனர்[6]. 36 வயதாகும் தெவ்ருக்கர் மனப்பிராந்தியுடன் வாழ்ந்து வருகிறார். “எங்கள் பெற்றோர் அதிலிருந்து மீளவில்லை…..கொலையாளி சீக்கிரம் தண்டனை பெற்றால் தான், ஓரளவிற்கு பாதிக்கப்பட்டவருக்கு மனநிம்மதி கிடைக்கும்.. 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தண்டனை பெற்றால்…..இதெல்லாம் அரசியலாகி விட்டது. நாளைக்கே ஒரு குண்டு வெடிக்கலாம், நான் அத்தகைய நிகழ்சியுடன் சேர்ந்து வாழ வேண்டியதுதான். நான் எனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியதுதான். பலசாலிகளிடம் தான் நீதியுள்ளது. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோகத்தோடு கூறினார்[7].

A woman pays homage to victims of the 1993 Mumbai serial blasts, at one of the blast sites in Mumbai
பலிக்கடாக்களின் சோகக்கதையும், மனநிலையும்[8]: பாதிக்கப்பட்ட 1,600 குடும்பத்தினர் யாகுப் தூக்கிலப்படுவதில் உறுதியாக இருக்கின்றனர். தாய், தந்தை, மகள், மகன், சகோதரன், சகோதரன், மாமா, மாமி என்றெல்லாம் இழந்தவர்கள் இதில் மாற்றுக் கருத்து எதையும் கொள்ளாவில்லை-சொல்லவில்லை. உண்மையில் கருணை மனுவை அவன் கொடுத்தது, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது தான் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. துஸார் தேஷ்முக், “பலரது உடல்கள் கிடைக்கவில்லை. சிலருக்கு உடல் பகுதிகள் தான் கிடைத்தன. கிடைத்ததைக் கொண்டு இறுதி சடங்குகளை முடித்த குடும்பங்கள் ஏராளம். இந்நிலையில் ஒரு கொலைகாரனின் கருணை மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. கருணையே இல்லாத அவன் எப்படி கருணை மனு போடுகின்றான் என்றே தெரியவில்லை. அம்மனு விசாரணைக்குள்ளது என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாங்கள் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்று சோகக் கதையினை விளக்கினார். 1993 குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைவரும், யாகூப் துக்கிலிடப்படவேண்டும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுதுதான், இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கொஞ்சமாவது சாந்தி கிடைக்கும் என்கிறார்கள்[9]. பாதிக்கப்பட்ட 1,600 குடும்பத்தினர், முதலமைச்சருக்கு அவன் தூக்கிலிடப்படவேண்டும் என்று மனு கொடுத்தனர்[10]. மஹாராஷ்ட்ர அசெம்பிளிக்கு வெளியே கூடி தங்களது கோர்க்கையினை வெளிப்படுத்தினர்[11].
© வேதபிரகாஷ்
02-08-2015
[1]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/article7481183.ece
[2] All India Majlis-e-Ittehadul Muslimeen leader and Hyderabad parliamentarian Asaduddin Owaisi said the government should ensure death sentence in all similar cases. “Death sentence should also be given to Babu Bajrangi, Maya Kodnani, Col. Purohit and Swami Aseemanand,” he said.
http://timesofindia.indiatimes.com/india/Political-war-of-words-erupts-over-Yakub-Memons-execution-Owaisi-says-Kodnani-and-others-should-also-get-death/articleshow/48281117.cms
[3] தி இந்து, இணையதள செய்திப் பிரிவு, அரசியல் விவாத மேடைக்கு வித்திட்ட யாகூப் தூக்கு மேடை, Published: July 31, 2015 10:06 ISTUpdated: July 31, 2015 10:08 IST
[4] http://www.ndtv.com/blog/lessons-from-the-yakub-memon-execution-1202101
[5] http://www.dailythanthi.com/News/India/2015/07/27021144/Yaqub-Memon–death-penaltyTo-cancel-Petition-to-the.vpf
[6] http://www.hindustantimes.com/india-news/yakub-memon-hanging-justice-comes-too-late-for-1993-mumbai-blasts-victims-kin/article1-1371806.aspx
[7] Badri Chatterjee, Justice comes too late for 1993 Mumbai blasts victims’ kin, Hindustan Times, Mumbai, Updated: Jul 22, 2015 11:14 IST
[8] Family members of some of the victims of 1993 Mumbai blasts on Wednesday demanded that Yakub Memon to be hanged and submitted a mass petition to Chief Minister Devendra Fanavis in this regard
http://www.ibnlive.com/videos/india/families-of-1993-mumbai-blasts-victims-demand-yakub-to-be-hanged-1027379.html
[9] http://www.dnaindia.com/mumbai/report-1993-blasts-death-to-yakub-memon-will-give-solace-to-victims-says-bjp-mp-kirit-somaiya-2106875
[10] Family members of the victims of 1993 Mumbai blasts on Wednesday 29-07-2015 demanded that Yakub Memon to be hanged and submitted a mass petition to Chief Minister Devendra Fanavis in this regard. “Yakub should be hanged,” Tushar Deshmukh, who lost his mother in the blasts, said in a memorandum to Fadnavis at Vidhan Bhawan here. “The families have suffered. We demand that the death sentence be carried out,” Deshmukh said. He said the memorandum was signed by of 1600 family members of the victims.on Tuesday 28-07-2015, the Supreme Court set up a three-judge bench to decide Yakub’s fate after a two-judge bench was split on his plea seeking stay of his execution scheduled for tomorrow (30-07-2015). On March 12, 1993, 12 coordinated blasts had rocked Bombay, as the city was then known, leaving 257 dead and over 700 injured.
http://www.ibnlive.com/news/india/hang-yakub-demand-kin-of-blast-victims-1027262.html
[11] http://www.odishanewsinsight.com/breakingnews/1993-mumbai-blast-victims-demonstrate-outside-maha-assembly/
பிரிவுகள்: அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம், மும்பை, மேமன், யாகுப் மேமன், யாகூப், யாகூப் மேமன்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், கயிறு, கருணை மனு, கர்ணை, காபிர், குண்டு வெடிப்பு, டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம், திருமா வளவன், தூகு தண்டனை, தூக்கு, தூக்குக் கயிறு, மனு, மரண தண்டனை, மரணம், மும்பை, முஸ்லிம் லீக், மேமன், யாகுப் மேமன், யாகூப் மேமன், ராம்தாஸ்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 2, 2015
யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

1993 Mumbai blast- who pay for the victims.1
மார்ச். 2013 – சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு, மார்ச் 12–ந்தேதி அன்று தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. 12 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு கடந்த 2006–ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது. மொத்தம் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தீர்ப்பில் யாகுப் மேமனின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. யாகுப் மேமன், குண்டு வெடிப்பில் முக்கிய சதிகாரனான தேடப்படும் குற்றவாளி டைகர் மேமனின் சகோதரர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை பெற்ற 10 பேர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.2
பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது – சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் மூலம் அறிவித்தது (மார்ச்.2013): மேலும், குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குண்டு தயாரிக்கவும் மிகவும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கையாளுவதற்கும் அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.க்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகுப் மேமன் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், அயூப் மேமன் ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு அம்பு எய்தவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்கள் அம்புகளாக இருந்துள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.3
போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் (மார்ச்.2013): போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது[1]. குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் வைத்து தாவூத் இப்ராகிம் மற்றும் பலரால் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆயுத சட்டத்தின் கீழ் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடுமையான தடா சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருந்த கிரிமினல் சதி குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சஞ்சய் தத்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். தற்போது கோர்ட் சஞ்சய் தத்தின் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது. இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டுதான், இப்பொழுதைய தீர்ப்பைப் படித்தறிய வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால், செக்யூலரிஸ போர்வையில், காங்கிரஸ்காரர்கள் தங்களது வாய்களைத் திறந்து உளாறியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

1993 Mumbai blast- who pay for the victims.4
காங்கிரஸ் தலைவர்கள் யாகுப்பின் தூக்கிற்கு வருத்தப் பட்டது (ஜூலை.2015): யாகுப் மேனன் 30-07-2015 அன்று காலை தூக்கிலிடப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், “அரசு இதே போல, மற்ற எல்லா தீவிரவாத வழக்குகளிலும் ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்”, என்று டுவிட்டரில், தனது கருத்தை வெளியிட்டார்[2]. பல நேரங்களில் விசித்திரமாக பேசி வரும் இவர், இதே வேகத்தை மற்ற வழக்குகளிலும் காட்ட வேண்டும் என்று கமென்ட் அடித்தார்[3]. சசி தரூர், “அரசு ஒரு மனிதனை தூக்கிலிட்டது குறித்து வருத்தமடைகிறேன். அரசு மூலம் நடக்கும் கொலைகள் நம்மையும் கொலைகாரர்களாக்கி விடும். கொடும் செயல் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அதற்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த தண்டனை காரணமாக அத்தகைய செயல் தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. மாறாக, மேலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கவே அது வகை செய்கிறது. தீவிரவாதத்தை படைகளைக் கொண்டுதான் ஒடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் அல்ல”, என்றெல்லாம் கமென்ட் அடித்தார்[4]. ஒருவேளை தனது மனைவி மர்ம மரணத்தில் / கொலை என்று சந்தேகிக்கப்படும் வழக்கில் தான் சம்பந்தப் பட்டிருப்பதால், அவ்வாறு பேசினாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel
ஜூலை 30.2015 காலை தூக்கிலிடப்பட்ட நாள்: உச்ச நீதிமன்ற அமர்வு அந்த நேரத்தில் கூடி, மரண தண்டனையை நிறுத்தக் கோரும் குற்றவாளியின் மனுவை ஆய்வு செய்தது. ஆனால் “மிகுதியான அளவு காலஅவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டே மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது” எனக் கூறிய நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனால் காலை 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். யாகூபின் அண்ணன் சுலைமான் உடலைப் பெற்றுக்கொண்டு விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் சென்றார். மாஹிமில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிகையாக, மும்பை முழுவதும் சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய மும்பை பகுதியான மாஹிம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை இஸ்லாமிய முறைப்பட்டி யாகூபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மும்பையில் இவர்களது குண்டுவெடிப்பில் பலியான 257 ஆத்மாக்களும் சாந்தியடைந்தன என்று அவர்களது உறவினர்கள் கூறிக்கொண்டார்கள். இதை ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை, மனித உருமைகள் பேசுபவர்களையும் கண்டுகொள்ளவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்[5] கூறும்போது, “யாகூப் மேமன் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் சரண் அடைந்தார் என உளவுத் துறை (ரா) முன்னாள் அதிகாரி பி.ராமன் தான் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். மேலும் முக்கியக் குற்றவாளி அல்லாத மேமனுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரை தூக்கிலிட்டிருப்பது சரியல்ல” என்றார். [இதை ஏற்கெனவே அதிகாரிகள் மறுத்துள்ளனர், ஏனெனில் அதிகாரிகளுக்கு அத்தகைய பேரம் பேசவும், எந்தவித தண்டனை குறைப்பு உத்திரவாதம் கொடுக்கவும் சட்டப்படி உரியையும், அதிகாரமும் இல்லை. எனவே, வழக்கம் போல கம்யூனிஸ்டுகள், இறந்தவரின் கருத்தைக் குறிப்பிட்டு குழப்ப முயற்சி செய்கின்றனர்]
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி யாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். [இவரது கருத்தும் அர்த்தமில்லாதது, பல ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு, முறைப்படி கருணை மனு, அது மறுக்கப்பட்டது, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனு என்று எல்லாவற்றையும் விசாரித்து தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டரில் தெரிவிக்கப்படும் கருத்துகளை வைத்து எந்த தீர்மானமும் எடுக்க முடியாது].
© வேதபிரகாஷ்
02-08-2015
[1] இதனை செக்யூலரிஸவாதிகள், யாகுப்-ஆதாரவாளர்கள் கண்டு கொள்வவதில்லை.
[2] Congress general secretary Digvijaya Singh fired the first salvo, saying that the BJP- led government should show “similar commitment” in all cases of terror as it showed in the case of Yakub Memon. “I hope similar commitment of the government and the judiciary would be shown in all cases of terror, irrespective of their caste, creed and religion,” he said in a tweet following Memon’s execution in the Nagpur central jail on Thursday morning (30-07-2015).
[3] http://indianexpress.com/article/india/india-others/show-same-urgency-in-other-terror-cases-digvijaya-singh-on-yakub-memons-hanging/
[4] Party colleague and former union minister Shashi Tharoor said he was “saddened” by Memon’s execution.”Saddened by news that our government has hanged a human being. State-sponsored killing diminishes us all by reducing us to murderers too,” Tharoor tweeted. “There is no evidence that death penalty serves as a deterrent, to the contrary in fact. All it does is exact retribution, unworthy of a government,” the Thiruvananthapuram parliamentarian said.
[5] http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/article7484832.ece
பிரிவுகள்: 1993, அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இப்ராஹிம், உயிர், உரிமை, கருணை, கருணை மனு, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, தாவூத் இப்ராஹிம், மனித உயிர், மும்பை, மும்பை குண்டு, மும்பை குண்டுவெடிப்பு, மேமன், யாகுப் மேமன், யாகூப் மேமன்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இப்ராஹிம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உயிரை எடுப்பது, உயிர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, கைது, கொலை, கொலை செய்வது, கொலைவெறி, செக்யூலரிஸம், ஜிஹாத், டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம், தூகுத் தண்டனை, தூக்கு, மதவெறி, மரண தண்டனை, மரணம், மும்பை, மும்பை குண்டுவெடிப்பு, மேமன், யாகுப் மேமன், யாகூப் மேமன்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 22, 2012
ரூ.2 கோடி பரிசு – அசாமில் பங்களாதேசியைக் கண்டு பித்தால் – சவால் விட்டுள்ளார் – அபு அசிம் ஆஸ்மி!
Azmi challenges Raj to find Bangladeshis; offersRs. 2 crore
Press Trust of India | Updated: August 22, 2012 17:08 IST
Mumbai: Samajwadi Party leader Abu Asim Azmi on Wednesday offered Rs. two crore to MNS chief Raj Thackeray if he substantiates his allegation about Bangladeshi voters in the Assembly constituency from where he won the poll.
“Raj Thackeray says there are lakhs of Bangladeshis in my constituency. I will give Rs. 2 crore if he shows even one lakh Bangladeshis and Pakistanis in Bhiwandi,” Mr Azmi said at a press conference in Mumbai.
Mr Azmi even displayed the Rs. two crore cheque on the occasion.
“I will quit politics if his charge is proved. If he fails, he will have to quit,” Mr Azmi said, accusing the MNS
chief of playing politics by fooling Marathi people.
“Raj has abused me. Even I can hurl abuse, but my tehzeeb doesn’t allow it,” Mr Azmi said. The MNS morcha was taken out in Mumbai on Tuesday without permission and police should act against the organisers, he said.
Mr Azmi congratulated Mumbai police commissioner Arup Patnaik for displaying “restraint” while tackling the August 11 violence at Azad Maidan.
“The drug mafia was behind that violence. The culprits joined the protest morcha later,” he said.
On Raj Thackeray displaying a purported Bangladeshi passport at the rally on Tuesday, Mr Azmi said: “The throwing of passport should be inquired into. It is a serious offence.”
“Raj Thackeray is against Dalits and Muslims. His Hindutva face has come to the fore,” Mr Azmi said.
பிரிவுகள்: அசாதுதீன், அசாம், அச்சம், அடையாளம், அமைதி என்றால் இஸ்லாமா, அரசாங்கத்தை மிரட்டல், அஸ்ஸாம், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்கள், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளே நுழைவது, எஸ்.எம்.எஸ், ஓட்டு, ஓட்டுவங்கி, கல்லூரி தகர்ப்பு, கல்லெரிந்து கலவரம், கல்வீச்சு, கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காங்கிரசுக்கு எச்சரிக்கை, சிட்டகாங், சைபர்வெளி ராணுவம், ஜமாத்-உத்-தாவா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தடை, தேச கொடி, தேச விரோதம், தேசியக் கொடி, தேர்தல், பழமைவாதம், பிஜேபி, முஸ்லீம்தனம், வதந்தி, வந்தே மாதரம், வன்முறை
Tags: அசாம், ஆஜாத் மைதானம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலாட்டா, காஷ்மீரம், கோக்ரஜார், சிறுபான்மையினர், சிவசேனா, செக்யூலரிஸம், பரவும் தீவிரவாதம், போடோ, போலீஸ், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், மும்பை, முஸ்லிம்கள், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜ் தாக்கரே
Comments: 1 பின்னூட்டம்
ஓகஸ்ட் 15, 2012
இந்திய சுதந்திரப் போரில் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்தை சூரையாடிய
வெறிக்கொண்ட முஸ்லீம் இளைஞர்கள்!

முஸ்லீம் இளைஞர்கள் வெறியுடன் அமர்ஜோதி ஜவான் நினைவகத்தை சேதப்படுத்தியது: மும்பையில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சிறிதும் உண்மையினை உணராமல், இந்நாட்டின் தியாகிகளின் மகத்துவத்தை நினையாமல், வெறியுடன், வெறுப்புடன், காழ்ப்புடன் அமர் ஜோதி ஜவான் நினைவகத்தை கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்து சேதப்படுத்தினர்[1]. உடையாத “பைபர் கிளாஸ்” கண்ணடி பெட்டியையும் உடைத்து சூரையாடியுள்ளனர்[2]. அது மட்டுமல்லாது, அங்கு வைக்கப்பட்டிருந்த தலைகவசம் மற்றும் துப்பாக்கி முதலியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்[3]. மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் இன்றைக்குள் அதனை சீர் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள், ஆனால் முடியவில்லை[4].

அத்தகைய வெறிக்குக் காரணம் என்ன – யார் அப்படி அவர்களை வெறி கொள்ள செய்தனர்?: அடுல் காம்ப்ளே என்ற “மிட்-டே” என்ற நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் எடுத்த புகைப்படங்களில், அந்த வெறிகொண்ட முஸ்லீம் இளைஞர்கள் பதிவாகியுள்ளார்கள். அவர்கள் செயல்படும் விதத்திலிருந்தே, அவர்கள் எந்த அளவிற்கு வெறிகொண்டுள்ளார்கள் என்பதனையறியலாம். அஜ்மல் கசாப் போன்று ஆக்ரோஷமாக உள்ளான் என்று பார்த்தவர்களே கூறுகிறார்கள்[5]. அந்த அளவிற்கு முஸ்லீம் இளைஞர்களை வெறிகொள்ளச் செய்வது யார்? நாட்டின் மேன்மையை, வீரர்கள் சுதந்திரத்திற்காகத் தியாகம் புரிந்தத்தையும் அறியாமல் அப்படி கால்களால் உதைத்து, கொம்புகளால் / கம்பிகளால் அடித்து, உடைத்துள்ளார்கள் என்றால் அந்நிலை மாறவேண்டும். அவர்கள் திருந்த வேண்டும், தம்முடைய நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும்.

அமர்ஜோதி ஜவான் நினைவகம் உருவாகிய வரலாறு: அமர் ஜோதி ஜவான் மெமோரியல் – அமர் ஜோதி ஜவான் நினைவகம் ட்ரில் ஹவல்தார் சய்யது ஹுஸைன் (Drill Havaldar Sayyed Hussein) மற்றும் சிப்பாய் மங்கள் சாதியா (Sepoy Mangal Cadiya) என்ற இரு இந்திய வீரர்களின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டதாகும். இவ்விரு வீரர்களும் ஆங்லிலேயரை எதிர்த்து போராடி, 1857ல் நடந்த சிப்பாய் கலகத்தில் ஈடுபட்டவர்கள். 150 ஆண்டு நினைவு விழாவின் போது, 2009ல் ஆஜாத் மைதானத்தில் நிறுவப்பட்டது. அக்டோபர் 15, 1857 – தீபாவளி நாளன்று சார்லஸ் போர்ஜெட் (Charles Forjett, the then Superintendent of Police, Bombay Region) எனேஅ அப்பொழுதய கிழக்கிந்திய கம்பெனியின் போலீஸ் சூப்பிரென்டென்டின் உத்தரவு படி, கிரெக்கெட் கிளப் அருகில் உள்ள மைதானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால்தான், அந்த இடம் “ஆஜாத் மைதான்” சுதந்திர மைதானம் என்று அழைக்கப்பட்டது. ரவீந்தர வைகர் (Ravindra Waikar) என்பவர்தாம், அந்த நினைவிடம் அமைக்கக் காரணமாக இருந்தவர். அப்பொழுதைய கமிட்டியின் தலைவராக இருந்து, நினைவகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அந்நினைவிடம் சேதப்படுத்தப் பட்டதைக் குறித்து, அவர் மிகவும் வருத்தமடைந்தார். “அச்செயல் மிகவும் அசிங்கமானது, வெட்கப்படவேண்டியது, கண்டிக்க வேண்டியது”, என்று தனது கருத்தை வெளியிட்டார்.

சேதப் படுத்தியவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம்:
Mumbai Crime Branch and local police are racing against each other to nab these hoodlums, knowing whoever makes these crucial arrests will reap rich professional rewards.“Of all the miscreants, these men are the most wanted. They have hurt the sentiments of the entire nation. They must be arrested on priority,” said a senior Crime Branch official, on condition of anonymity.
An officer from Azad Maidan police station said, “In such a scenario, it is better if these men surrender before the police reach them. By giving themselves up, they would be able to avoid the wrath of the police as well as the public.”
“These photographs have been circulated among our informers. We are in constant touch with them for leads. Every policeman is on the lookout for them at present. If we manage to arrest them before Independence Day, it will be our tribute to the freedom fighters,” he added.
The photographs caused a furore in social media networks. Readers across the nation condemned the act, some even comparing the vandals to 26/11 militant Ajmal Qasab.
Confirming the report, joint commissioner of police (crime) Himanshu Roy said, “This man (top-right) has insulted the national monument of India, and arresting him is our priority. Several Muslim leaders have also condemned the act.”
மும்பை கலவரக்காரர்களிலேயே, இவ்விருவரும் தான் இந்த நாட்டின் மதிப்பையே அவமதித்துள்ளார்கள்.அவர்களை கைது செய்ய வேண்டியதுதான் எங்களது தலையாயக் கடமையாக உள்ளது, என்று மும்பை போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு போலீஸாரிடமும் இப்படங்கள் உள்ளதால், அவர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று நம்புகிறோம்.
மேலும் அவர்களாகவே வந்து சரண்டர் ஆகிவிட்டாலும் நல்லதுதான்.
சுதந்திரத்தினத்கிற்கு முன்பாகவாது, அவனைப் பிடித்துவிட வேண்டும். அப்படி செய்தால், அது அந்த தியாக-வீரர்களுக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.
இப்படங்களைப் பார்த்தவர்களும் கொதித்துப் போயுள்ளார்கள். அக்மல் கசாப்புடன் ஒப்பிட்டி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.


இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே போரிட்டது: இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்தே சத்தியாகிரகம், அஹிம்சை முறைகளில் போரிட்டார்கள். ஜின்னா போன்றவர்கள், பாகிஸ்தான் கேட்கும் வரை அவர்கள் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டார்கள். அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக நினைவு சின்னங்களை, இப்படி வன்முறை, வெறி, காழ்ப்பு போன்ற உணர்வுகளுடன் சூரையாடுவதே அத்தகைய அஹிம்சை, சத்தியாகிரக, தியாக – முறைகளை நிந்திப்பதாகும், அவமதிப்பதாகும், தேசவிரோதமாகும். ஆகவே, இக்கால இந்திய முஸ்லீம்கள் தங்களது பிள்ளைகளுக்கு உண்மையான சுதந்திர உணர்வுகளை ஊட்டி வளர்க்க வேண்டும். அதைவிடுத்து, “நாங்கள் முஸ்லீம்கள், நாங்கள் இந்தியர்களிடமிருந்து மாறுபட்டவர்கள், நாங்கள் பாகிஸ்தானிற்காகத்தான் ………………………………….., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திக் கொண்டு இந்தியாவிலேயே போராடுவோம்……………………………………………..”, என்று வளர்த்து வந்தால், இத்தகைய வெறிதான் வரும், வளரும், பாதிக்கும்.
வேதபிரகாஷ்
15-08-2012
பிரிவுகள்: அழுக்கு, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எரிப்பு, ஓட்டு, ஓட்டுவங்கி, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கார்டூன், காஷ்மீர், கிலாபத், குஜராத், சிறுபான்மையினர், சுன்னி-ஷியா, ஜமாத், ஜிஹாத், துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தேச கொடி, தேச விரோதம், தேசியக் கொடி, தேர்தல், நெருப்பு, மதகலவரம், மதவாதம், மதவெறி, மறைப்பு, மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம்கள், முஸ்லீம்தனம், வங்காள தேசம், வங்காள மொழி, வங்காளப் பிரிவினை, ஷியா-சுன்னி
Tags: ஃபத்வா, அமர் ஜோதி, அமர் ஜோதி ஜவான், அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதான், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், சிப்பாய் கலகம், சிறுபான்மையினர், சுதந்திரம், ஜவான், தியாகி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், மும்பை, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம்கள், வெறி
Comments: 3 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்