Posted tagged ‘மும்பை குண்டு வெடிப்பு’

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டு நான்கு மாநிலங்களில் வெடித்தது (3)

ஏப்ரல் 14, 2017

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டு நான்கு மாநிலங்களில் வெடித்தது (3)

Nallapuram pressure cooker blast 2016

ஞாயிற்றுக் கிழமை (09-04-2017) அன்று மதுரையில் கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை (10-04-2017) அன்று மஞ்சேரியில் ஆஜரப்படுத்தப்பட்டனர்: கேரள நீதிமன்ற வளாகத்தில் நடந்த பிரஸர்-குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, மதுரையில் இரண்டு பேரை, –

  1. எமன். அபூபக்கர் (40), சிவகாமி தெரு, மதுரை.
  2. அப்துர் ரஹ்மான் (27), காயதே மில்லத் நகர், மதுரை,

09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர்[1]. கடந்த ஆண்டு நவம்பர்.1ம் தேதி 2016 கேரள மாநிலம் மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் நின்று இருந்த காரில், சக்தி குறைந்த குண்டு வெடித்தது[2]. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை[3]. “பேஸ் மூவ்மென்ட்” [‘Base Movement’] என்ற வார்த்தைகள் ஒரு அட்டைப்பெட்டி, ஒஸாமா பின் லேடன் போட்டோ, இந்தியா மேப் முதலியன குண்டுவெடித்த இடத்திலிருந்து கண்டெடுக்கப் பட்டன[4]. 2015ல் அபூபக்கர், இந்த “பேஸ் மூவ்மென்ட்” என்ற தீவிரவாத இயக்கத்தை, அல்-கொய்தா தாக்கத்தில் உருவாக்கினான். அல்-முத்தாகீன் என்ற தீவிரவாத இயக்கத்தை 2014ல், அல்-உம்மாவின் தலைவன் இமாம் அலியைக் கொன்றவர்களை பழிவாங்க உருவாக்கினான்[5].  இதனால், பெங்களூரு, மதுரை, கோயம்புத்தூர், கேரளா இணைப்புகள் தெரியவந்தன. இதனால், ஜிஹாதி தீவிரவாதத்தையும் மறைக்க முடியாது. ஞாயிற்றுக் கிழமை (09-04-2017) அன்று மதுரையில் கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை (10-04-2017) அன்று மஞ்சேரியில் ஆஜரப்படுத்தப்பட்டனர். “அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம்”, என்று தமாஷாகக் கூட கேட்க முடியாது, ஏனெனில் சம்பந்தம் இப்படியெல்லாம் இருக்கிறது.

Madurai blasts - misinterpreted by so-called Human rightists

மனித உரிமைகள் போர்வையில் தீவிரவாதிகளை ஆதரிப்பது, குண்டுவெடிப்பில் செத்தவர்களை மறந்து விடுவது, கொச்சைப் படுத்துவது: “குண்டுவெடித்தது, ஆனால் காயம் ஏற்படவில்லை” என்ற இத்தகைய செய்திகள் உள்ளநிலையில், குண்டுகள் வெடித்து, நூற்றுக்கணக்கானவர் கொடும் சாவு, ஆயிரக்கணக்கானோர் படுகாயம், கால்-கை துண்டிப்பு போன்ற கொடூரங்களும் இருக்கின்றன. ஆகவே, குண்டுகளை தமாஷுக்கு வெடித்தார்கள் என்றெல்லாம் திரிபுவாதம் கொடுக்க முடியாது[6]. இன்றைக்கு மனித உரிமைகள் போர்வையில், சாதாரண அப்பாவி குடிமகன்கள் குண்டுவெடிப்புகளில் சாகும் போது, அவர்களது உரிமைகள், அவர்களது குடும்பத்தாரின் உரிமைகள் முதலியவற்றை மறந்து, புள்ளியல் விவரங்களை அங்கும்-இங்குமாக எடுத்துக் கொண்டு, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வேசுவது, விவாதிப்பது என்று சில அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். போதாகுறைக்கு மனிதநேயம் என்றெல்லாம் வேறு சொல்லிக் கொண்டு, குரூரங்களை, பயங்கரவாதத்தை, ரத்தக்காட்டேரிகளை ஆதரித்து வருகிறார்கள். இதனால், லாபமடைவது, தீவிரவாத இயக்கங்களே. இப்பொழுதெல்லாம், என்.ஐ.ஏ கைதான விவரங்கள், குற்றப்பத்திரிக்கை, மற்ற விவரங்களை உடனுக்குடன், தனது இணைதளத்தில் வெளியிட்டு விடுக்கிறது. இருப்பினும், தீவிரவாதிகளை ஆதரிக்கும் சித்தாந்திகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்நிலையில், ஒரு வேளை அவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று விசாரணை செய்ய வேண்டியிருக்கும்.

Nallapuram pressure cooker blast - base movement-2016

பழைய இயக்கங்கள் புதிய பெயர்களோடு உருவாகுவது, மறைவது, மறுபடியும் தோன்றுவது: இவ்வாறு பழைய இயக்கங்களை புதிய பெயர்களோடு, இடங்களை மாற்றி இயக்க ஆரம்பித்தனர். வங்கிகணக்குகள் முடக்கப்பட்டபோது, புதிய பெயர்களில், தனிநபர் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டன. அந்நிய-கரன்சி மாற்றம், விசா-பாஸ்போர்ட், வண்டிகள்-தங்க ஓட்டல்கள் ஏற்பாடு செய்தல் என்ற வேலைகளையும் இவர்களே பார்த்துக் கொள்வதால், பலநேரங்களில் பணம் வெவ்வேறு முறையில் மாற்ரப்படுதல், பெறப்படுதல், முதலியவை நடந்து விடுகின்றன. இவர்களது சொகுசு பேரூந்துகளே, இவர்களை வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. அவற்றில், இவர்களது உண்மையான பெயர்கள் உபயோகப்படுத்துவதில்லை. பல நேரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பேரூந்துகளில் பயணித்தது போல, இரண்டு ஊர்களில் இருந்தது போல அலிபியையும் உண்டாக்குகின்றனர். பண்டமாற்று முறை கூட பின்பற்றப்படுவதால், பணபரிமாற்றம் இல்லாமல், விவரங்கள் மறைக்கப் படுகின்றன. சில குறிப்பிட்ட தொழில்கள், தொழிற்சாலைகளில் உள்ளவர், தொழிலதிபர்கள் முதலியோர், அவர்களுக்கு மறைவாக இருக்க இடம் கொடுப்பதுடன், ஆவண மற்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மூலம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் பரவியிருக்கும் இக்கூட்டத்தின் நடவடிக்கைக்ள் தெரிய வந்தன. கள்ளநோட்டு பரப்புதல், ஹவாலா விநியோகம், வரியேய்ப்பு போன்ற விவகாரங்களில், குடும்பங்களோடு ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

Nallapuram blast- - base movement-2016

பிரஸர்குக்கர் வெடிகுண்டு, ரசாயனப் பொருட்கள் முதலியன காட்டிக் கொடுத்தன:  இதேபோல், கேரளாவின் கொல்லம், ஆந்திராவின் சித்தூரில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன[7]. இதில் குறிப்பிட்ட மாதிரி, செயல்முறை, அமைப்பு முதகியவை இருப்பதைக் கண்டுபிடித்து சோதனையிட்டபோது விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன[8]. ஒரே மாதிரியான ரசாயனப் பொருட்கைளின் உபயோகம், அவை குறிப்பிட்ட நபர்களுக்கு மூலம் அனுப்பப்பட்டு-பெறப்பட்ட முறை, பிரஸர்-குக்கரில் வெடிகுண்டு தயாரித்தது, முதலியவை மதுரையைச் சுட்டிக் காட்டியது. மதுரையை சுற்றி பட்டாசு தொழிற்சாலைகள் இருப்பது, சீனப்பட்டாசுகள் கிடைப்பது, கல்குவாரிகளுக்காக வெடிமருந்துகள் வாங்குவது முத்லியவற்றையும் கவனிக்க வேண்டும். மீனாக்ஷி பஜாரில் பாத்திரக்கடையிலிருந்து வந்ததும் தெரியவந்தது. அக்கடை அபூபக்கருக்கு சொந்தமானது. மதுரையில், வெடிகுண்டு ரகசியமாக தயாரிக்கப் படுவது, பலமுறை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், இதில் சில ஆட்களை வேலைக்கு வைத்து, திசைத் திருப்பும் வேலைகளையும் செய்துள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி, கடந்த ஆண்டு நவம்பரிலேயே, மதுரையில் ஐந்து பேரை கைது செய்தனர்[9]. விசாரணையில் மதுரை –

  1. இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),
  2. கரீம் ராஜா (23),
  3. சாப்ட்வேர் இன்ஜினியரான தாவூத் சுலைமான்சேக் (23),
  4. சம்சுதீன் (26),
  5. ஆந்திராவைச் சேர்ந்த முகமது அயூப் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்[10].

மதுரை பேஸ் மூவ்மென்ட் அமைப்பின் தலைவர் அபுபக்கர், அவரது உதவியாளர் அப்துல் ரகுமான் ஆகியோரும் இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அல்கொய்தா ஆதரவு அமைப்பான ‘அடிப்படை இயக்கத்தை’ சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம், மதுரையில், அபுபக்கர், அப்துர் ரக்மான் ஆகியோரை 09-04-2017 அன்று இரவு கைது செய்தனர். இவர்களுக்கும் அல் கொய்தா அமைப்பினருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடந்து வருகிறது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் 10-04-2017 திங்கட்கிழமை, மஞ்சேரியில், மாஜிஸ்ட்ரேட்டுன் முன்பு ஆஜராக்கப் பட்டு, எட்டு நாட்கள் கஸ்டெடியில் எடுத்தனர்[11].

© வேதபிரகாஷ்

14-04-2017

Abu Bakkar and another arrested in Madurai on 09-04-2017

[1] The special investigation team probing the case, which occurred on November 1, 2016, nabbed N Abubacker, (40), of Shivakami street, and seventh accused Abdu Rahman, (27), native of Quidemillath Nagar, Madurai.

[2] தினத்தந்தி, மலப்புரம் குண்டுவெடிப்பு வழக்கு: மதுரையில் மேலும் இருவர் கைது, ஏப்ரல் 10, 09:31 PM

[3] http://www.dailythanthi.com/News/India/2017/04/10213107/malappuram-bomb-blast-two-more-arrested.vpf

[4] A small cardboard box with the words ‘Base Movement’ and a map of India with a photo of Osama Bin laden were recovered from the site.

Times of India, Two accused in Malappuram blast case arrested from TN, TNN | Updated: Apr 11, 2017, 07.11 AM IST.

[5] The sixth accused, Abubacker is the founder of the Base Movement, an Al-Qaeda inspired group formed in 2015. Police said Abubacker constituted a terror organization, Al-Muthaqeen Force (AMF), in 2014 to exact revenge for the encounter killing of Tamil Nadu based terror organisation Al Ummah’s leader Imam Ali.

http://timesofindia.indiatimes.com/city/kozhikode/two-accused-in-malappuram-blast-case-arrested-from-tn/articleshow/58116486.cms

[6] http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA/

[7] தினமலர், கேரள குண்டுவெடிப்பு: மதுரையில் 2 பேர் கைது, பதிவு செய்த நாள். ஏப்ரல்.10, 2017.14.18.

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1748842

[9] தினகரன், மலப்புரம் குண்டு வெடிப்பு வழக்கு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது, 2017-04-11@ 01:07:2

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=293866

[11] Mathru.bhoomi.com, Malappuram Collectorate Blast: 2 more arrested, Published: Apr 10, 2017, 10:39 AM IST.

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!

gold-bars-seized-and-four-arrrested-from-ap-05_02_2017_013_006

தெலிங்கானாசென்னை .எஸ் தொடர்புகள்: ஜல்லிக்கட்டு-சசிகலா விவகாரங்கள் ஐ.எஸ்.தொடர்புள்ளவர்கள் கைதான விவரங்கள், சென்னையில் சதி-திட்டம் தொஈட்டியது முதலிய விவாகரங்களை பின் தள்ளிவிட்டடு அல்லது சென்னைவாசிகள் ஜாலியாக சசிகலா மோகத்தில் மூழ்கி விட்டனர் என்றே தெரிகிறாது. தெலிங்கானாவில் முஸ்லிம் மக்கட்தொகை கனிசமாக இருக்கும் நிலையில் அங்கு பிரிவினைவாதம், தீவிரவாத நடவடிக்கைகள், பிரச்சாரங்கள் முதலியவையும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ்.சில் சேருவது, அதற்கான ஆட்சேர்ப்பு நடத்துவது, நிதியுதவி செய்வது என்பதெல்லாம் ஒரு பின்னப்பட்ட வலை போல வேலைகள் நடந்து வருகின்றன. தங்கம், போதை மருந்து, போலி ரூபாய் புழக்கம் என்ற ரீதியில் அவர்கள் நன்றாகவே வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்ஸில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் செயல்படும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு (02-02-2017) ரகசிய தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து, மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்பி அருண்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, 03-02-2017 அன்று அதிகாலை 3 மணி முதல் அருண்குமார் மற்றும் பொன்னேரி டிஎஸ்பி மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீஸார், இரு குழுக்களாக கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா- தமிழக எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

isis-linked-11-arrested-in-mp-11_02_2017_001_005

03-02-2017 அன்று தங்கத்துடன் பிடிபட்ட முகமது இக்பால்: இந்த வாகன சோதனையின் போது, காலை 6 மணி அளவில், ஆந்திர பகுதியிலிருந்து, சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்றை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, தெலங்கானா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த அந்த தனியார் சொகுசு பஸ்ஸில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்[2]. இளைஞர்களின் பைகளை முழுமையாக சோதனை செய்தனர். இதில், துணிகள் மற்றும் காய்கறிகளின் அடியில் தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது[3]. இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். அந்த விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு: சென்னை – மயிலாப் பூரை சேர்ந்த-

  1. காஜா நஜிமுதீன் (42),
  2. சகாபுதீன் (38),
  3. ஜமாலுதீன் (30),
  4. முகமது இக்பால் (35)

ஆகிய அந்த 4 பேரும் கூலிக்காக தங்க கட்டிகளை தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு கடத்தியது தெரியவந்தது[4]. இதனைதொடர்ந்து, தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த எடை 3 கிலோ 360 கிராம் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சாதாரண ஆட்களிடம் எப்படி இப்படி ஒரு கோடி மதிப்பில் தங்கக் கட்டிகள் இருக்க முடியும், அவற்றை சென்னைக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பதையும் யோசிக்கத் தக்கது.

gold-bars-seized-comimg-from-telingana-05_02_2017_004_007

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் .எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி / “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] அளித்துள்ளான்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவனிடம், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு, எஸ்.பி., விகாஸ் குமார், ஜெய்ப்பூரில் 05-02-2017 அன்று நிருபர்களிடம் கூறியதாவது[5]: “முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான, .எஸ்.,சுக்கு, இந்தியாவில் ஆதரவு திரட்டிய பயங்கரவாதி, ஜமீல் அஹமது, கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடந்த விசாரணையில், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பாலுக்கு, 35, .எஸ்., அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ளது தெரிய வந்தது. இக்பாலிடம் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவன் மீது, டி.ஆர்.., எனப்படும் வருவாய் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இக்பாலை, ஜெய்ப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்த, பயங்கரவாத தடுப்புப் பிரிவு திட்டமிட்டு உள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[6]. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் ஐ.எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி அளித்துள்ளான்[7]. இதுவரை மும்முறை நிதியுதவி செய்தது தெரிய வந்துள்ளதால், அவற்றின் விவரங்கள், ஆதாரங்கள் முதலியவற்றை கைப்பற்ற ராஜஸ்தானிலிருந்து துப்பறியும் போலீஸார் வந்தனர்[8]. இந்நிலையில் தான் இக்பால் தங்கத்துடன் பிடிபட்டுள்ளான். ஆக, ஐ.எஸ்,சுக்கு பணம் பட்டுவாடா / நிதியுதவி செய்து வந்த திருவள்ளூர் முகமது இக்பால் தான் இப்பொழுது பிடிபட்டுள்ளான். இதை “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] என்றேயாகிறது. நவம்பரில் கைதானவர்களின் தொடர்பும் இதில் பினைந்துள்ளது. சுபஹனி ஹாஜா மொஹிதீன் கதை இதில் உள்ளது.

isis-terror-links-with-chennai-dccan-chronicle-chn_2017-02-08_maip3_6

ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: சென்னைக்கும், தமிழகத்திற்கும் தீவிரவாதத்திற்கும் உள்ள தொடர்புகளும் திகைக்க வைக்கின்றனர். ஏற்கெனவே திருவான்மியூர், கொட்டிவாக்கம் முதலிய பகுதிகளில் சென்ற நவம்பர் 2016ல் சிலர் கைது செய்யப்பட்டனர். சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது.  வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை. நவம்பரில் கைதானவர்களில் இன்னொருவன் – சுவாலிக் முகமது.

swalih-mohammed-working-in-club-mahindra-isis-link-arrested

சென்னை கொட்டிவாக்கத்தில் சுவாலிக் முகமது கைது (அக்டோபர் 2016): சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் 03-10-2016 திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது: “12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாக்கத்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார். ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் (மஹிந்த்ரா கிளப்[9]) 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார். வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

swalih-mohammed-isis-link-arrested

கத்தாருக்கு செல்ல திட்டம் போட்ட சுவாலிக் முகமது: பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார். இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

© வேதபிரகாஷ்

12-02-2017

habeus-corpus-petition-dismissed-madurai-terror-dm-01_12_2016_003_008

[1] தினத்தந்தி, ஆந்திராவில் இருந்து சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் சிக்கின, பிப்ரவரி 05, 01:16 AM.

[2]  http://www.dailythanthi.com/News/State/2017/02/05011622/Luxury-bus-from-Andhra-Pradesh-and-Rs-1-crore-smuggled.vpf

[3] தமிழ்.இந்து, தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 3 கிலோ தங்கம் கடத்திய 4 பேர் கைது, Published: February 5, 2017 09:32 ISTUpdated: February 5, 2017 09:32 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9522479.ece

[5] தினமலர், .எஸ்., அமைப்புடன் தொடர்பு : தமிழக இளைஞன் சிக்கினான், பதிவு செய்த நாள். பிப்ரவரி.6, 2017. 23.50.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1705753

[7] A 40-year-old man from Chennai who was arrested along with three others while trying to smuggle Rs 1 crore worth gold bars from Rajamundhry on Saturday (03-02-2017) morning at Arambakkam near Chennai was picked up for questioning by central agencies for his suspected links with ISIS. Mohamed Iqbal has been picked up after he was found donating generously to ISIS. He had made three donations to ISIS and a team of IB officials from Rajasthan had come to trace him based on evidence of his transactions. A team of Intelligence Bureau officials on Saturday (03-02-2017) nabbed four people with 3.3  kg of 20 gold bars worth Rs 1 crore, in an omnibus coming from Rajahmundry to Chennai at Arambakkam near Gumudipoondi in neighboruing Thiruvallur district. All the four were later handed over to DRI for further action with regard to smuggling while Mohamed Iqbal was taken for further questioning him on money donation to ISIS.

Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link,  Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.

[8] Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link,  Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.

http://www.deccanchronicle.com/nation/in-other-news/080217/chennai-gold-smuggler-picked-up-for-isis-link.html

[9] Club Mahindra, Westcott Rd, Express Estate, Royapettah, Chennai, Tamil Nadu 600002.

Mahindra Holidays & Resorts India Limited, Mahindra Towers, 2nd Floor, 17/18, Patullos Road, Mount Road, Chennai – 600 002. Tamilnadu, India.Tel : +91 (044) 3988- 1000; Fax : +91 (044) 3027- 7778.

 

அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

ஓகஸ்ட் 18, 2013

அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

Abdul Karim Tunda - hand amputated

கடினமானஉழைப்பிற்குப்பிறகுதுண்டாவைப்பிடித்தது: இந்திய புலன்விசாரணைக் குழுக்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான், இவனைப் பிடித்திருக்கிறார்கள்[1]. இன்டர்போலில் விவரங்களைக் கொடுத்து, தொடர்ந்து எல்லை போக்குவரத்து, நேபாளத்தில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கண்காணிப்பது, ஆப்கானிய தீவிரவாதிகளின் ஊடுருவல் முதலியவற்றை பின்பற்றித்தான் இவனைப் பிடிக்க முடிந்தது. பாபரி மஸ்ஜித் பிரச்சினையை வைத்துக் கொண்டு ஜிஹாதி தீவிரவாதத்தை, இந்தியாவிற்கு எதிராக, ஒரு மாற்றுப் போராக உருவாக்கியது, இந்த துண்டா, தாவூத் இப்ராஹிம் மற்ற பயங்கரவாதிகள் தாம். லஸ்கர்-இ-தொய்பாவின் சித்தாந்தியாக செயல்பட்டவன் பிடிபட்டதில் பல உண்மைகள் தெரியவருகின்றன[2]. இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதி செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போய்விடும். அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன.

Tunda brother - he should be punished

அப்துல்கரீம்துண்டாவின்குடும்பத்தாரின்நிலை: அப்துல் மாலிக் என்ற அவனுடைய சகோதரர், அவன் பிடிபட்டது பற்றி கூறும் போது, “அவன் மரவேலை செய்து கொண்டிருந்தான் என்றுதான் எனக்குத் தெரியும். 1991க்குப் பிறகு அவனைப் பார்க்கவில்லை. அவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒருவேளை பார்த்தால், செய்துள்ள இக்காரியங்களால்நீ செய்த சாதித்தாய்?”, என்று கேட்பேன்[3]. அவனுடைய மைத்துனி தஹிரா கூறும் போது, “அவனுக்குரிய தண்டனை கிடைக்கவேண்டும். அவனால்தான் எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடித்ததோ அப்பொழுதெல்லாம் போலீஸார் எங்களிடம் வந்து விசாரிப்பார்கள்”,  என்றார்[4]. தொடர்ந்து, “துண்டாவின் இரு மனைவிகள்ஜரினா மற்றும் மும்தாஜ் மற்றும் ஆறு குழந்தைகள் 1993ல் ஒரு இரவில் எங்கோ சென்றுவிட்டனர். துண்டா மறைந்த பிறகு அதற்குப் பிறகு அவர்கள் எங்குசென்றனர் என்று தெரியவில்லை”, என்றும் சொன்னார்[5]. போலீஸார், துண்டாவிடம் அவனுடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபோது, தானும் தன்னுடைய குடும்பத்தை சந்திக்க விரும்பவில்லை என்றான்[6]. ஒருவன் தீவிரவாதியாக மாறும் போது, குடும்பம் எப்படி கஷ்டப்படுகிறது என்றும் தெரிகிறது.

Dawood-with-Chota-shakeel

தாவூத்இப்ராஹிமைப்பற்றிபத்துநாட்களில்செய்திகள்வந்துக்கொண்டிருக்கின்றன: பத்து நாட்களுக்கு முன்னால் தான், ஷார்யார் கான் என்ற பாகிஸ்தானின் சிறப்பு தூதர் “தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்தான். ஆனால், அவன் பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்டான். அப்படி அவன் இருந்தால், பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவேண்ட்டும். அவன் அமீரகத்தில் [United Arab Emirates] இருக்கக்கூடும்”, என்றார்[7]. வளைகுடா நாடுகள் ஜிஹாதிகளுக்கு சொர்க்க பூமி போல உள்ளதும் தெரிய வருகிறது. துபாயில் எப்படி யார் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்றால், சவுதியில், வேண்டிய உதவி, பயிற்சி முதலியவற்றைப் பெறலாம் என்றுள்ளது. ஹாவிஸ் சையது இங்கு வந்து படித்துச் சென்றதை கவனிக்க வேண்டும். துண்டாவின் நெருங்கிய நண்பர்தான் ஹாவிஸ் சையது. அதற்கு முன்னால் 14-08-2013 அன்று லண்டனில் தாவூதின் வலதுகை போன்றிருந்து வேலை செய்து வந்த இக்பால் மிர்சி (63) என்பவன் ஹார்ட்ட் அட்டாக்கினால் இறந்து போனான் என்ற செய்தி வந்தது[8]. 1994ல் இந்தியா இன்டர்போல் மூலம் சிவப்பு அறிக்கை கொடுத்திருந்தது. ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸாரால் 1995ல் பிடிக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அனுப்ப உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் மறுத்து விட்டார்[9]. அதுமட்டுமல்லது இங்கிலாந்தில் தங்கிக் கொள்ள அனுமதியும் கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஹாவிஸ் சையதிடம் தாவூத் இப்ராஹிமை தான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று துண்டா ஒப்புக் கொண்டுள்ளான்[10]. அதுமட்டுமல்லாது ஐ.எஸ்.ஐ, சீக்கிய தீவிரவாத இயக்கமான பப்பர் கல்ஸாவிற்கும் உதவி செய்து கொண்டிருந்தது என்பதையும் உறுதி செய்தான்[11] என்ற விவரங்கள் வருகின்றன. மொத்தமாக, பாகிஸ்தான் எப்படி இந்திய விரோதத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று தெரிகிறது.

Kaskar-group-Dawood

டெல்லிகாமன்வெல்த்போட்டியில்குண்டுவைக்கதிட்டமிட்டான்: துண்டாவிடம்நடந்தவிசாரணையில்தகவல்:[12] டெல்லியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அப்துல் கரீம் துண்டாவிடம் சிறப்புப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த முதல் நாள் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. லஷ்கர்–இ– தொய்பாவின் முக்கிய தலைவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள்? இந்தியாவில் எங்கெங்கு ரகசிய ஆதரவாளர்கள் உள்ளனர்? எங்கெல்லாம் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது? அவை எப்படி நடத்தப்பட்டன என்பன போன்று பல கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அப்துல் கரீம் துண்டா 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி மிகப்பெரும் நாசவேலைக்கு திட்டமிட்டதாக கூறினான். ஆனால் குண்டு வெடிப்பை நடத்த இருந்த 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதால் தனது தாக்குதல் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினான். 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தான் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தான். 1980ம் ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்து இவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்பின்னர் வங்க தேசம் சென்ற இவர் லஷ்கர் இயக்கத்தின்  தலைவர் ஷகிவுர் லக்வியின்  நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது[13]. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தீவிரவாதிகள் அடுத்து எத்தகைய தாக்குதல் திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று போலீசார் துண்டாவிடம் விசாரித்து வருகிறார்கள்.

Indian flag burned

பாகிஸ்தானின்ஜிஹாதிப்போரைஇந்தியாஎதிர்கொள்ளவேண்டும்: இந்தியாவில் பிறந்தும், முஸ்லிம் அடிப்படைவாதம், மதவாதம் என்ற சித்தாந்திங்களால், முஸ்லிம்கள் எளிதில் ஜிஹாதி வெறியினால், தீவிரவாதத்தில் இறங்குகிறார்கள் என்று தெரிகிறது. பாகிஸ்தானின் ஊக்குவிக்கும் போக்கையும் கவனிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள், ஒரு பக்கம் நட்பு, பேச்சு வார்த்தை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மறுபக்கத்தில் தொடர்ந்து, தீவிரவாததை இந்தியாவின் மீது ஜிஹாதாக – புனிதப் போராக நடத்தி வருகிறது. அதாவது, மதரீதியில் போரை நிகழ்த்தி வருகிறது. 1965, 1972, 2003 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரிடையான போர்களைத் தவிர்த்து, இத்தகைய தீவிரவாதிகளின் தாக்குதல்களை போராக நடத்தி வருகின்றது. அதே நேரத்தில், எல்லைகளிலும், “தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை – நாடற்ற மக்களின் வேலை” என்று சாக்கு சொல்லிக் கொண்டு, எல்லைமீறல் தீவிரவாதத்திலும் ஈடுபட்டுள்ளது. எப்பொழுதெல்லாம், பேச்சு வார்த்தைகள் நடக்கின்றனவோ அல்லது நடக்கப் போகின்றதோ, அந்நேரத்தில் இப்படி, அழுத்தத்தை ஏற்பட எல்லைகளில் சுடுதல், ஊடுருவல், எல்லைகளில் வாழும் மக்களைத் தாகுதல், பீதி கிளப்புதல் முதலிய வேலைகளில் ஈடுபடுவதையும் காணலாம். ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் தொடைநடுங்கிப் பேர்வழிகளாக இருப்பதனால், பாகிஸ்தான் அத்தகைய செக்யூலரிஸ நிலையை சாதகாமாக ஆக்கிக் கொள்கிறது.

Susanna-geelaani-2010

Susanna-geelaani-2010

மனிதஉரிமைஆட்கள்இந்தஉண்மையினைஅறிந்துசெயல்படவேண்டும்: அருந்ததி ராய், தாரிக் அலி, ஷப்னம் ஹஸ்மி, போன்றோர் மனித உரிமைகள் என்ற சாக்கை வைத்துக் கொண்டு, பிரிவினைவாதிகளுடன் ஜோடி சேர்ந்து கொண்டு உபன்யாசம் செய்து வந்துள்ளனர். ஆனால், இத்தகைய நேரத்தில் அவர்கள் எல்லோரும் காணாமல் போய்விடுவர். நட்சத்திர ஹோட்டல்கள், பாதுகாப்பாக உள்ள ஏசி அரங்குகள் முதலியவற்றில் தான் இவர்களது சொற்பொழிவுகள் இருக்கும். பொது நிகழ்சிகளில் அவ்வாறு பேச மாட்டார்கள். இருப்பினும் “தி ஹிந்து” போன்ற பிரபல நாளிதழ் முதல் “பாம்பேட் கம்யூனலிஸம்” போன்ற வடித்தெடுத்த மதவெறி பிரச்சார ஏடுகள் வரை இவற்றைப் பற்றி விவரங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும். ஆனால், இவ்வாறான தீவிரவாதிகள் பிடிபடும் போது, குண்டுகள் வெடிக்கும் போது காணாமல் போய்விடுவர். செய்திகள் வாசிக்கப்படும் அல்லது அச்சடிக்கப் படும், தலையங்கத்தில், நடுபக்கத்தில் அவர்களை எதிர்த்து எதுவும் எழுதப்பட மாட்டாது. மனித உரிமை ஆட்கள் தங்களது போலித்தனத்தை மாற்றிக் கொண்டு, உருப்படியான பேச்சுகளை பேச வேண்டும்.

Arundhati-Roy-SAR.Jilani-2010

Arundhati-Roy-SAR.Jilani-2010

செக்யூலரிஸசித்தாந்தத்தைவைத்துக்கொண்டுபாகிஸ்தானைஎதிர்கொள்ளமுடியாது: இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதிகள் செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற தாஜா செய்யும் வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போகின்றன. அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன. இங்கு இந்திய அரசியல்வாதிகள், செக்யூலரிஸ போர்வையில் இந்த தீவிவாதிகளுக்கு, தங்களது கொள்கைகளினால், மெத்தனமான போக்குகளால்,  மறைமுக ஆதரவினால் உதவி வருகிறார்கள். இதனால் தான். “உள்ளூர் தீவிரவாதம்” என்பதனை கண்டு கொள்ளாமல், முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர், ஓட்டு கிடைக்காமல் போகுமே என்று கணக்கு போடுகின்றனர்.

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

இந்தியமுஸ்லிம்கள்தீவிரவாதத்தைக்கண்டறிந்துஅதனைஇஸ்லாத்திலிருந்துபிரித்துப்பார்க்கவேண்டும்: இந்திய முஸ்லிம்கள் இப்பொழுதுவது, இத்தகைய இந்திய விரோத செயல்களை அவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், முஸ்லிம்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பாகிஸ்தானிலேயே, இஸ்லாம் பெயரில் முஸ்லிம்கள் அடித்துக் கொள்கின்றனர், குண்டுவெடிப்பு நடத்துகின்றனர், மசூதிகளில் கூட முஸ்லிம்களை கொலை செய்கின்றனர் என்பதனையெல்லாம் அறிந்து புரிந்து கொள்ளும். இஸ்லாம் தான் தீர்வு என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு இருக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

18-08-2013


[3] On the possibility of him now meeting Tunda after his arrest, Mr. Malik said: “The fact that he is in police custody rules out a meeting anytime soon and I myself am not very keen on meeting him. But if we ever meet, I will ask him what he achieved by doing all this. His family is not with him and we don’t want to have any relations with him.”

http://www.thehindu.com/news/national/i-never-knew-what-he-was-up-to/article5033051.ece?ref=relatedNews

[7] For the first time, Pakistan has admitted to the presence of one of India’s most wanted terrorists Dawood Ibrahim but said he has been “chased out” and could be in the United Arab Emirates. “Dawood [Ibrahim] was in Pakistan but I believe he was chased out of Pakistan. If he is in Pakistan, he should be hounded and arrested. We cannot allow such gangsters to operate from the country,” said Shahryar Khan, Pakistan Prime Minister Nawaz Sharif’s special envoy for improving relations with India.

http://www.thehindu.com/news/national/dawood-chased-out-of-pakistan-shahryar-khan/article5008042.ece?ref=relatedNews

[9] Underworld don Dawood Ibrahim’s close aide Iqbal Mirchi, an accused in the 1993 Mumbai serial blasts case, died of a heart attack in London on Wednesday night. Mirchi, 63, the right-hand man of India’s topmost terrorist, was also facing drug smuggling charges in India. He had been living in a large six-bedroom home in an exclusive part of Hornchurch, a town in Essex, north-east of London. Ranked among the world’s top 50 drug barons, Muhammed Iqbal Memon or Iqbal Mirchi had been issued an Interpol Red Corner Notice in 1994 on Central Bureau of Investigation’s request. In April 1995, officers from Scotland Yard had raided Mirchi’s home and arrested him on drugs and terrorism charges in connection with the blasts in Mumbai. However, an extradition request by India was turned down by magistrates here. Scotland Yard’s investigation of Mirchi, which ended in 1999, found no evidence of criminal activity and in 2001 the UK Home Office granted him indefinite leave to remain in the U.K. India’s most-wanted criminal Dawood Ibrahim is on FBI’s list of top terrorists in the world.

[10] Abdul Karim Tunda alias Abdul Quddooss has confirmed that he was in touch with the Pakistani terror links and also said that he was the one who introduced Dawood Ibrahim to the Lashkar founder Hafiz Saeed.

http://news.oneindia.in/2013/08/18/syed-karim-tunda-confessed-that-he-introduced-dawood-to-hafiz-1285870.html

[11] He also revealed that LeT (Lashkar-e-Taiba) and the Pakistan’s premeire intelligence service ISI aided Khalistani militant organization “Babbar Khalsa” also known as Babbar Khalsa International (BKI). Read more at: http://news.oneindia.in/2013/08/18/syed-karim-tunda-confessed-that-he-introduced-dawood-to-hafiz-1285870.html

இஸ்லாமிய நாடு உருவாக்கியதும் இந்தியா மீது படையெடுக்க முடிவு – 2

ஜூன் 5, 2010

இஸ்லாமிய நாடு உருவாக்கியதும் இந்தியா மீது படையெடுக்க முடிவு – 2

முஸ்லீம்களுக்கு வேண்டுகோள்: ஜிஹாதி தீவிரவாதம், இந்தியாவின் மீது பல உருவங்களில் தாக்குதல் நடத்துகிறது. இதை இந்திய முஸ்லீம்கள், மத ரீதியிலாகப் பார்க்காமல், நாட்டுப் பற்றுடன் பார்க்கவேண்டும். மேலும் இந்திய முஸ்லீம்கள் பெர்ம்பாலும் முந்தைய இந்துக்கள்தாம், இந்தியர்கள் தாம். இன்று, இஸ்லாமிய நாடுகளில் கூட, இத்தகைய ஜிஹாதி தீவிரவாதம் செயல்படுத்தப் படுகிறது என்பதனை முஸ்லீம்கள் உணர வேண்டும். ஆகவேம் ஜிஹாத் / மதம் பெயரால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப் படுவதைத் தடுக்க முயலவேண்டும்.

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பே, தினமலரில் இப்படியொரு நுணுக்கமாக ஆராய்ந்து, ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், நிருபர் பல விஷயங்களை ஆராய்ந்திருப்பது தெரிகிறது.

இப்பொழுது தான், இந்தியன் முஜாஹித்தீன் தடை செய்யப் படுகிறது.

ஆனால், அப்பொழுதே அந்த விவரங்கள் அலசப்பட்டு உள்ளன.

நிச்சயமாக காங்கிரஸ், மற்ற உ.பி கட்சிகள் முஸ்லிம் ஓட்டுகள் போய் விடுமே என்று, பெரிய துரோகத்தைச் செய்துள்ளனர்.

மும்பை 26/11 குண்டு வெடிப்புகளுக்குப் பிறகுக் கூட, பொய் பிரச்சாரங்கள் தாராளமாகவே நடந்து வருகின்றன.

நாட்டை சின்னாபின்னமாக்க துடிக்கும் ‘சிமி’: தடை செய்யப்பட்ட பின்னும், வேகமாக, பல கிளைகளுடன் வளர்ச்சி கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகள், புலனாய்வு அமைப்புகள்
ஜூலை 30,2008,00:00  IST

Important incidents and happenings in and around the world

பெங்களூரு மற்றும் ஆமதாபாத் தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான “இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்’ என்ற “சிமி’ அமைப்பே காரணமாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட அந்த அமைப்பு, தீவிரமாக செயல்படவில்லை என, போலீசார் கூறி வந்தாலும், அது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நன்றாக வேரூன்றி இருப்பதும், பல கிளைகளைக் கொண்டிருப்பதும் சமீபத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அல்-குவைதா, லஷ்கர்-இ-தொய்பா உட்பட பல சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் தூண்டுதலின் பேரிலேயே, இந்த அமைப்பினர் சதி வேலைகளை அரங் கேற்றி வருகின்றனர்.

கடந்த 1977ம் ஆண் டில், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் துவக்கப் பட்ட அமைப்பு, “இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்’ என்ற “சிமி’ அமைப்பு. மேலை நாட்டு கலாசாரத்தில் இருந்து, இந்தியாவை விடுவிப்பது மற்றும் ஒரு இஸ்லாமிய சமுதாயமாக இந்தியாவை மாற்றுவது என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவன தலைவர் முகமது அகமதுல்லா சித்திக். இவர் தற்போது, அமெரிக்காவின் வெஸ்டர்ன் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ளார்.

“ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்’ என்ற அமைப்பின் மாணவர் அமைப்பாகவே, “சிமி’ முதலில் உருவானது. ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் கவரப்பட்ட இந்த அமைப்பினர், இந்தியாவிலும், அதேபோன்ற மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், வன்முறைகளில் ஈடுபடத் துவங்கினர். புனிதப் போர் என அழைக்கப் படும், பயங்கரவாத செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டினார். இதனால், “சிமி’ அமைப்பினர் அணுகுமுறை, “ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்’திற்கு பிடிக்கவில்லை. முரண்பாடுகள், மோதல்கள் அதிகரித்ததால், அந்த அமைப்புடனான கூட்டணியை “சிமி’ முறித்துக் கொண்டது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், இந்தியா வந்த போது, இந்த அமைப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். டில்லியில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டமும் நடத்தினர். யாசர் அராபத்தை மேற்கத்திய நாட் டினரின் ஊது குழல் எனவும் வர்ணித்தனர். 1981ம் ஆண்டு முதல், இந்த அமைப்பு பயங்கரவாத பாதையை பின்பற்றும் ஒரு அமைப்பாகவே செயல்படத் துவங்கியது. உண்மையான முஜாகிதீன், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனே எனவும் கூறி வருகிறது.

கடந்த 1980ம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு இந்த அமைப்பே காரணமாக இருந்தது. 1992ம் ஆண்டு மும்பையில் நடந்த வன்முறையின் போதும், அதன்பின் மாலேகானில் நடந்த வன்முறையின் போதும், “சிமி’ அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தினர் மற்றும் போலீசாருடன் மோதினர். இந்து மக்களையும், ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்து அமைப்புகளையும், தங்களின் எதிரிகளாகக் கருதி, இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னர், பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. நாடு முழுவதும் வன்முறைகள் நடப்பதற்கும் காரணமாக அமைந்தது.

அதன்பின், நாட்டில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு இந்த அமைப்பே காரணம் என, போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டினர். 2001ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மைய கட்டடங்கள் தகர்க்கப் பட்ட பின்னர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் “சிமி’ அமைப்புக்கு இருந்த தொடர்பு உறுதி செய்யப்பட்டதால். அந்த ஆண்டு, இந்த அமைப் புக்கு தடை விதிக்கப்பட்டது. நகோரி என்பவரின் தலைமையில் தற்போது திரைமறைவில் இந்த இயக்கம் செயல்பட்டுவருகிறது. வகாபிகளுடன் இந்த அமைப்புக்கு தொடர்பு உண்டு.

வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்டாலும், அதன் பின்னர் தான் இந்த அமைப்பு இந்தியாவிற்கு எதிராக செயல் படும் மற்ற பயங்கரவாத இயக்கங்களுடன் கை கோர்த்து செயல்படத் துவங்கியது. குறிப்பாக, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யின் தொடர்பும் அதற்கு ஏற்பட்டது. 2006ம் ஆண்டு ஜூலையில் மும்பையில் புறநகர் ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பின் போது, 300க்கும் மேற்பட்டவர்களை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களில் பலர் “சிமி’ அமைப்பினர் என்பதும், அந்த அமைப்பினருக்கும் குண்டு வெடிப் புக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2003ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப் பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும், முலாயம் சிங், மாயாவதி போன்ற அரசியல்வாதிகள், ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இந்த அமைப்பு விஷயத்தில் கருணை காட் டினர். அதை, பயங்கரவாத அமைப்பு இல்லை என வர்ணித்தனர். இருந்தாலும், தடை செய்யப்பட்ட, “சிமி’ அமைப்பினர், “இந்தியன் முஜாகிதீன்,’ “டெக்பாஸ்-இ-பாஸ்சி’ அல் லது “டெபி’ என்ற பெயரில் தற்போது செயல்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

மத்திய அரசு தடை விதித்தாலும், மாற்றுப் பெயரில் செயல்படும் இந்த அமைப்பினர், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினருடன் நெருங்கிய கூட்டு வைத்துள்ளனர். மேலும், தடைக்குப் பின், இந்த அமைப்பு சிறிதளவும் நசுங்கவில்லை. அதற்கு மாறாக பெருமளவு வளர்ந்து, பல கிளைகளைக் கொண்டுள்ளது. பெயர் தெரியாத பல சிறிய மத அமைப்புகளுடன், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, தங்களின் சதி வேலைகளை அரங்கேற்றி வருகிறது. ஏதோ ஒரு வழியில் அவர்களால் புனிதப் போர் என அழைக்கப்படும், பயங்கரவாத செயல்களை நாட்டிற்கு எதிராக நடத்தி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், “சிமி’ அமைப்பில் 600க்கும் மேற்பட்ட வர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கும். மேலும், 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த அமைப்புக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றனர். நிதி உதவி தருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வந்தாலும், எந்த பலனும் இல்லை. இந்த ஆண்டின் முற்பகுதியில் ஜெய்ப்பூரிலும், சமீபத்தில் ஆமதாபாத் மற்றும் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் “சிமி’ அமைப்பே காரணம் என, போலீசாரும் உளவுத்துறையினரும் நம்புகின்றனர். “சிமி’ அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், பெங்களூரில் சமீபத்தில் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த அமைப்பின் செயல்பாடுகள் நாட்டின் பல நகரங்களுக்கு விரிவடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

புதுப்பிக்க காரணம் யார்: பெங்களூரில் சமீபத்தில் கைதான முகமது சுபாஷ் குரேசியே, தடை செய்யப் பட்ட இந்த அமைப்பை புதுப்பிக்க காரணமாக இருந்துள்ளான். இவன், 2006-07ம் ஆண்டில், தங்கள் அமைப் புக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்காக, தென்மாநிலங்களில் 12க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம் களை நடத்தியுள்ளான். ஒரு கால கட்டத்தில் மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்த இவன், அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிப்பதில் கைதேர்ந்தவன். 2003ம் ஆண்டு, கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்புக்கு இவனும் காரணம்.

அதேபோல், இந்த அமைப்பை புதுப்பிக்க காரணமாக இருந்த மற்றொருவன் கேம் பஷீர். போலி பாஸ் போர்ட்டில் சவுதி அரேபியா சென்று, தற்போது அங்கு தங்கியுள்ள அவன், அங்கிருந்து இந்த அமைப்பிற்கு நிதி உதவி அளிப்பதாகவும், புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஏர்-இந்தியா நிறுவனத்தில், இன்ஜினியராக இருந்த இவன், “சிமி’ அமைப்பில் முழு நேர ஊழியராக பணியாற்றுவதற்காக, அந்த வேலையை கைவிட் டான். 2003ம் ஆண்டில், மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கு இவன் நிதி உதவி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்; 150க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம், “சிமி’ அமைப் பைச் சேர்ந்த 13 பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். அவர் களில் சப்தர் நகோரி, அவரின் சகோதரர் கமருதீன் நகோரி, அப்துல் பெடிக் கல் ஷிப்லி மற்றும் ஹபீஸ் அட்னன் உசேன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் உஜ்ஜயினியில் இவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில், இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளனர். அந்தக் கூட்டத்தில், முகமது சுபாஷ் குரேசியும் பங்கேற்றுள்ளான்.

அப்போது, தலிபான்களிடம் இருந்து தங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், பாகிஸ்தான் மற் றும் ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் உதவிகளைப் பெறவும், குரேசியே மத்தியஸ்தராக, மீடியேட்டராக செயல்பட வேண்டும் என்றும் கேட் டுக் கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில், சப்தர் நகோரியை அனைவரும் முன்மாதிரியான நபர் எனவும் வர்ணித்துள்ளனர்.

இக்கூட்டத்தில், முடிவுகள் எடுத்தபடி, தலிபான்கள் மற்றும் பாக்., கில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவை அவர்கள் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், 2002ம் ஆண்டில், குஜராத்தில் நடந்த வன்முறைகளுக்குப் பின், அந்த மாநிலத்தின் மீது, “சிமி’ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் கவனம் திரும்பியுள்ளது. தங்கள் அமைப்பைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் குஜராத் போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சில பகுதிகளில் பலருக்கு பயிற்சியும் தரப்பட்டுள்ளது. இருந்தாலும், முதல்வர் மோடி மேற் கொண்ட உஷாரான நடவடிக்கை, பயங்கரவாதத்தை கையாள் வதில் காட்டும் கடுமை போன்றவற்றால், அங்கு பெரிய அளவில் இதுவரை சதித் திட்டத்தை அரங்கேற்ற முடியவில் லை. தற்போது அதைச் செய்துள்ளனர். இதன் மூலம் ஒரு பீதியை உண்டாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

புதிய வடிவில் பழைய பயங்கரவாதம்! சமீபத்தில் இந்தியாவை உலுக்கி வரும் தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களின் விவரம்: இந்தியன் முஜாகிதீன்கள்: பயங்கரவாத இயக்கங்கள் தடைசெய்யப்படும் போதெல்லாம், அவை இன்னொரு பெயருடன் புதிய வடிவில் முளைப் பது வாடிக்கை. 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னரும், 2002 செப் டம்பரில் அக்ஷர்தாம் கோவில் தாக்குதலுக்குப் பின்னரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உத்தரவின் படி பயங்கரவாத இயக்கங்கள் பெரும்பாலானவை வேறு பெயர் களில் செயல்பட்டு வருகின்றன.

தடை செய்யப்பட்டுள்ள சிமி இயக் கத்தினரில் பெரும்பாலான இளைஞர்களைக் கொண்டு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு உருவாக்கப்பட் டுள்ளது. வங்கதேசத்தில் செயல்படும் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான வங்கதேச ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (ஹூஜி) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய அமைப்புகளும் இந்திய முஜாகிதீன் அமைப்பு உருவாக உதவியிருக்கின்றன. இந்த அமைப்பு கடந்த ஆண்டு உ.பி.,யில் தனது முதல் தாக்குதலை நடத்தியது.

கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த வன்முறையை அடுத்து, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அமைதியை சீர்குலைப் பதே இந்த அமைப்பின் தற்போதைய முக்கிய நோக்கம்.  இந்த அமைப் புக்கு நிதி உதவி மற்றும் பயங்கரவாதிகளை சேர்க் கும் முயற்சியில் இஸ்லாமிய வகாபி அடிப்படைவாதியினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சவுதி அரேபியாவில் இருந்து இவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. தங்கள் வழிக்கு பிற இஸ் லாமியர்களை இழுக்கும் விதமாக, புனித வழிக்கு திரும்புங்கள் என்று பிரசாரம் செய்கின்றனர். இஸ்லாமியருக்கு எதிராக நடக்கும் வன்செயல்களுக்கு தண்டனை அளிக்கும் பொறுப்பு, தங்களுக்கு உள்ளதாகக் கூறிக்கொள்ளும் வகாபி அமைப்பினர், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இதனால், இந்தியன் முஜாகிதீன்களுக்கு எளிதாக உதவி வருகின்றனர்.

ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (ஹூஜி): வங்கதேசத்தில் கிளையை துவக்கி செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தான் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி(ஹூஜி) அமைப்பு. இஸ்லாமியர்களின் பாதுகாப்புக்கான இரண்டாம் வழி என்று தங்களை கூறிக் கொள்ளும் ஹூஜி அமைப்பினர், ஐதராபாத்தில் கடந்த ஆண்டு குண்டு வெடிப்பை நடத்தினர். ராஜஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை வெளியேற்றும் திட்டத்தை எதிர்த்து ஜெய்ப்பூரில் குண்டுவைக்க இந்தியன் முஜாகிதீன்களுக்கு உதவினர்.

கர்நாடகா மற்றும் குஜராத்தில் பா.ஜ., ஆட்சி நடைபெறுவதால், அங்கு அமைதியை குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியன் முஜாகிதீன்களுக்கு உதவியாக பெங்களூரு மற்றும் ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்புக்கு உதவி செய்தனர். இந்த அமைப்புக்கு பஷீர் அகமது மிர் என்பவர் கமாண்டர் இன் சீப் ஆக உள்ளார். இளைஞர்களின் மனதை மாற்றி பயங்கரவாதத்தை கற்றுக் கொடுப்பதை விட, குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பது சுலபம் என்று கருதி, மேற்கு வங்கத்தில், வங்கதேச எல்லைப்பகுதியில் குழந்தைகளை பயங்கரவாதத்துக்காக இந்த அமைப்பு கடத்தி வருகிறது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ள ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு பணத்தாசை காட்டி இந்த முயற்சிக்கு மாற்றி வருகின்றனர்.

ரஷ்ய- ஆப்கானிஸ்தான் போரின் போது, இந்த அமைப்பு துவக்கப் பட்டது. 2001க்குப் பின் அமெரிக்கா, ஆப்கனில் தாக்குதல் நடத்திவருவதால் இந்த அமைப்பினர் தற்போது இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். இன்றும் ஒசாமா பின்லாடனின் அல்-குவைதா அமைப்புடன் இந்த அமைப்புக்கு தொடர்பு உண்டு.

“சிமி’யின் மறுவடிவமான இந்தியன் முஜாகிதீன்: ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, பைசாபாத் மற்றும் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு தானே முன்வந்து பொறுப்பேற்ற அமைப்பு இது. இந்த பயங்கரவாத அமைப்பு உள்நாட்டில் உருவானது என்று கூறப்பட்டாலும், அப்படிப்பட்ட ஒரு அமைப்பே இல்லை என, உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஹூஜி, சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இந்த மூன்று அமைப்புகளில் ஒன்றே, இந்தப் போலி பெயரில் செயல்படலாம். குறிப்பாக தடை செய்யப்பட்ட “சிமி’ அமைப்பு இந்தப் பெயரில் செயல்படலாம் என, உளவு நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

லக்னோ, பைசாபாத் மற்றும் வாரணாசியில், 2007 நவம்பர் 23ம் தேதி குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன்னர், இந்த அமைப்பின் பெயரில் இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. ஜெய்ப்பூரில் கடந்த மே மாதம் நடந்த குண்டு வெடிப்பிற்குப் பின், இரண்டு நாட்கள் கழித்து இதே அமைப்பின் பெயரில் இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அப்போது தான், இந்த அமைப்பின் பெயர் வெளியே தெரிந்தது.

ஐதராபாத் மெக்கா மசூதி, மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் குண்டு வெடிப்பு மற்றும் சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்புகளுக்கு, “சிமி’ அல்லது “ஹூஜி’ அமைப்பு காரணமாக இருக்கலாம் என உளவுத் துறையினர் கூறுகின்றனர். ஆனாலும், இந்த குண்டு வெடிப்புகளில் சில, மசூதிகள் மீது நடத்தப்பட்டுள்ளதால், இந்த அமைப்புகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என, வேறு சில தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலூன்ற அரங்கேற்றப்பட்ட சதி வழக்குகளுக்காக லட்சக்கணக்கில் நிதி உதவி:

லக்னோ: தடை செய்யப்பட்ட “சிமி’ அமைப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, தங்கள் மாநிலத்தில் தீவிரமாக செயல்படவில்லை என, உத்தர பிரதேச மாநில போலீசார் சமீபத்தில் அறிவித்திருந்தனர். அது தற்போது பொய்யாகியுள்ளது. அந்த மாநிலத்தில் மட்டுமின்றி, வேறு பல மாநிலங்களிலும், “சிமி’ அமைப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருவது உறுதியாகியுள்ளது.

“சிமி’ அமைப்பின் உ.பி., மாநில முன்னாள் தலைவர் ஹுமாயூன் அகமது சமீபத்தில் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு: ஹுஊமாயூன் அகமது, “சிமி’ அமைப்பின் நிதியை நிர்வகிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததோடு, அதன் சட்ட ஆலோசகராகவும் செயல் பட்டு வந்துள்ளார். தமிழகம், கேரளா, அசாமில் அமைப்பின் செயல்பாடுகள் விரிவடைய காரணமாக இருந் துள்ளார். அதற்கான நிதி உதவிகள் மற்றும் ஆட்களை சேர்ப்பது போன்ற பணிகளையும் செய்துள்ளார்.

தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட “சிமி’ அமைப்பினர் தொடர்பான வழக்குகளை கையாளவும் லட்சக் கணக்கில் நிதி கொடுத்துள்ளார். மேலும், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மதரசாக்கள் மற்றும் சில முன்னணி மத அமைப்புகள் மூலம், “சிமி’ வளர்ச்சி அடைய தேவையான உதவிகளை செய்ததோடு, பலரிடம் நிதியும் திரட்டியுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபற்றிய எந்த விவரங்களையும் உ.பி., மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், விசாரணை மூலம் கிடைத்த தகவல்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை மத்திய, மாநில அரசுகளுக்கும், புலனாய்வு நிறுவனங்களுக்கும் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

குண்டு வெடிப்புகளை தடுக்க செய்ய வேண்டியது என்ன?: நடப்பு 2008ம் ஆண்டில், மூன்று பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்ந் துள்ளன. கடந்த ஆண்டில் ஐந்து சம்பவங்கள் நடந்துள்ளன. இவைகள் மட்டுமின்றி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் அனைத் தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்துள்ளது. அனைத்து சம்பவங்களிலும் சைக்கிள்கள், டிபன் பாக்ஸ்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த பயங்கர சதி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளில் எல்லாம், அம்மோனியம் நைட்ரேட், டைமர், ஆணிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

மேலும், குண்டு வெடிப்புகள் எல் லாம் பொது இடங்களில் தான் நடத்தப் பட்டுள்ளன. மசூதிகள், கோர்ட்டுகள், மருத்துவமனைகள் கூட விட்டு வைக் கப்படவில்லை. இவையெல்லாம், போலீசார் தங்களின் விசாரணைக்கு பயன்படுத்துவதற்கு தேவையான நல்ல தகவல்கள் என்றாலும், உளவுத் துறையினர் முழு அளவில் பயன் படுத்திக் கொள்ளவில்லை. சதி வேலைக்கு காரணமான அமைப்பை கண்டறியவில்லை.

அத்துடன், குண்டு வெடிப்புக்கு சில நாட்களுக்கு முன்னரே, மொபைல் போன்களை பயன்படுத்துவதையும் பயங்கரவாதிகள் தவிர்த்து விடுகின்றனர். அப்பாவி சிலரின் இ-மெயில் முகவரிகளை பயன்படுத்தி, குண்டு வெடிப்பு தொடர்பான இ-மெயில் களை, பத்திரிகை நிறுவனங்களுக்கும், அரசுக்கும் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், பயங்கரவாதிகள் தங்களுக்குள் இ-மெயில் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் லை. அப்படி பரிமாறிக் கொண்டால், அதை மற்றவர்கள் படித்துப் பார்க்கலாம் என நினைத்து தந்திரமாக செயல் படுகின்றனர். அத்துடன், குண்டு வெடிப்புகளை பயங்கரவாத அமைப் பின் உறுப்பினர்களே நடத்துவதில்லை. அவற்றை வெளிப்படையாக தெரியாத சில அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பதை போலீசார் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக, வேறு ஏதோ ஒரு அமைப்பின் பெயரில், குண்டு வெடிப் புக்கு பொறுப்பேற்று தகவல்கள் அனுப்புவதும் தொடர்கிறது. ஆமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்புகள், நமது மாநிலங்களில் பெரும்பாலானவை, பயங்கரவாதத்தை சுயமாகக் கையாள திறமையற்றதாக உள்ளன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டன. மாநிலங்கள் மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும், இதுபோன்ற குண்டு வெடிப்புகளை தடுக்க வேண்டும் என்ற அக்கறை அரசியல்வாதிகளிடம் இல்லாததாலும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நகரங்கள் எளிதில் இலக்காகி விடுகின்றன. எனவே, இந்தக் குறைபாடுகளை எல்லாம் சீர்படுத்தி, குண்டு வெடிப்புகள் தொடர்ந்து நிகழாமல் தடுக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ற நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும். உளவுத் துறையினரும் பொறுப்போடு, மிகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும்.

ஜிஹாத் பொருளாதார ரீதியிலும் வேலைசெய்யும், எப்படி காதலில், விபச்சாரத்தில், திருமணத்தில், திருமணமுறிவில்…………………………என வேலைசெய்கிறதோ, அதுபோல:
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கள்ளநோட்டு அபாயம்
ஆகஸ்ட் 24,2008,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=1609

Front page news and headlines today

இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது புலனாய்வுத் துறை. மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களில், நான்கில் ஒன்று கள்ள நோட்டு.

புலனாய்வுக் குழு (ஐ.பி.,) திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில், புழக்கத்தில் உள்ள பணத்தில் ரூ. 1.7 லட்சம் கோடி பணம், கள்ளநோட்டுக்கள். 2008, ஜூலை 18ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் மக்கள் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி. புலனாய்வுக் குழு வெளியிட்ட தகவலை ஒப்பிட்டால், புழக்கத்தில் உள்ள ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாயில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள். ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருக்கும் வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் போன்றவற்றின் மதிப்புக்கு இணையாக, ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் காலம் இப்போது கிடையாது. ஆனால், கள்ளநோட்டுக்களும் பெருமளவு சேர்வதால், ரூபாயின் மதிப்பு படுபாதாளத்துக்கு போவதுடன், பணவீக்கம் பெரிதும் அதிகரித்து, விலைவாசி கடுமையாக உயருமே தவிர குறையாது. அதேசமயம் கள்ள நோட்டு நடமாட்டத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே சிதைந்து போகும் அபாயம் காத்திருக்கிறது. கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு, வங்கி அதிகாரிகளே துணை போகும் அவலமும் இந்தியாவில் உள்ளது. சமீபத்தில் உ.பி.,யில் அரசு வங்கியான ஸ்டேட்பாங்க் மற்றும் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜிஹாதிகள் தொழிற்நுட்பத்துடன் அச்சடித்து கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது: ஸ்டேட் பாங்க் காசாளர் வீட்டில் நடத்திய சோதனையில், 7.21 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப் பட்டது. இதில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள், கள்ள ரூபாய் நோட்டுக்கள். புலனாய்வு குழு வெளியிட்ட தகவலை ரிசர்வ் வங்கி மறுத்த போதும், இந்த அளவு கள்ளநோட்டுகள் எப்படிப் புழங்குகின்றன என்பதற்கு சரியான ஆதாரம் மற்றும் புள்ளிவிவரம் இல்லை. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மூத்த போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் டில்லியில் நடந்த போது, வங்கித் துறையே கள்ள நோட்டு புழக்கத்துக்கு காரணமாக இருப்பதை, உ.பி., மாநில அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். இதை தடுப்பதற்குரிய வழிவகை இல்லாததும் சுட்டிக் காட்டப்பட்டது. கள்ள நோட்டுகள் பிடிபட்ட சம்பவங்களில் வங்கியின் சில அதிகாரிகளே உதவியதாகக் கூறப்படுவது போலீசாருக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது. ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும் ரூபாய் நோட்டுக்கள், இந்தியா முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 422 கருவூலங்கள் மூலம் வினியோகிக்கப் படுகின்றன. இந்த கருவூலங்களிலேயே கள்ளநோட்டுக்கள் ஊடுருவும் அபாயமும் உள்ளது. புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள், சாதாரணமாக ஒரு வங்கியின் காசாளரால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு நவீனத் தொழில் நுட்பத்துடன் துல்லியமாக அச்சிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளால், வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்., இயந்திரங்களில், கள்ளநோட்டுக்கள் கலந்து உள்ளன. இதனால், அதைப் பயன்படுத்தி பணம் எடுப்போர், எடுக்கப்படும் ரூபாய் நோட்டு, தற்செயலாக கள்ள நோட்டாக இருப்பதை அறிந்தால், அவர்கள் மாட்டிக் கொள்வார்களே தவிர, அதற்கு ஈடாக நல்ல நோட்டு பெற முடியாது. ஆகவே, ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணபட்டுவாடா நிலையத்தில் கள்ள நோட்டு ஊடுருவும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டதால், இன்று இப்பிரச்னையின் பூதாகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.,யின் பிரத்யேக அச்சகம் கள்ளநோட்டுகளை அடிக்கிறது: அதேநேரம் ரியல் எஸ்டேட்களில் பெருமளவு முதலீடு செய்யும் பெரும்பணக்காரர்கள், அதில் ஒரு பகுதியை, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பயன்படுத்துகின்றனர். இந்த கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி கள்ள நோட்டுக்களாக உள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் தான் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்துக்கு கொண்டுவரப்படுகின்றன என்பதும் அதிர்ச்சி தரும் தகவல். கள்ள நோட்டுக்களுடன் சிக்குவோரிடமும், சந்தேகத்துக்கு இடமானோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய கரன்சி நோட்டுக்களை அச்சிடுவதற்கென்றே பாகிஸ்தானில், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் கண்காணிப்பின் பிரத்யேக அச்சகம் அனைத்து உள்கட்டமைப்புகளுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. அதேபோல, ஐரோப்பாவில் செயல்படும் பாகிஸ்தான் நிறுவனங்களும் இந்திய கரன்சியை அச்சிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாகிஸ்தான் நிறுவனங்கள் வாங்கும் கரன்சி நோட்டு அச்சிட பயன்படுத்தும் காகிதம், அதன் தேவைக்கு மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கள்ளநோட்டுக்கள் அச்சிடப்படுவதால், அவற்றை கண்டுபிடிப் பது முடியாத காரியமாக உள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை தடுப் பதற்கு, வங்கித்துறையில் உரிய கட்டுப் பாடுகளும், கறுப்புப் பண புழக்கத்தை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட வேண்டியது அவசியமாகி உள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலிலும் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனை, நிலம் விலை கடுமையாக உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் கள்ள நோட்டு புழக்கம். இவற்றில் முதலீடு செய்வோர், அதன் மதிப்பில், 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கறுப்புப் பணத்தையே முதலீடு செய்கின்றனர். இதனால், கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம், வெள்ளைப் பணமாக மாறிவிடுகிறது. கறுப்புப் பணம், ரொக்கமாகவே கைமாறும். அப்படிப்பட்ட நிலையில், கறுப்புப் பணத்தில் கள்ள நோட்டுகளும் புழக்கத்துக்கு வருகின்றன. வங்கி காசாளரே கண்டுபிடிக்க முடியாத கள்ளநோட்டுக்களை ரியல் எஸ்டேட் துறையினர் கண்டுபிடிக்க முடியவே முடியாது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் பிடிபட்ட கள்ள நோட்டு புழக்கத்தில் ஈடுபட்டு இருக்கும் பெரிய நிறுவனங்கள், தாங்கள் அதிகளவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதை ஒப்புக் கொண்டுள்ளன.

மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளின் பங்கு: கள்ள நோட்டுக்கள் எளிதில் கிடைப்பதாலும், கறுப்புப் பணத்தின் புழக்கத்தாலும் நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் பெருமளவு ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர். இதற்கு அவர்கள் ஏராளமான கள்ள நோட்டுக்களை பயன்படுத்தி உள்ளனர். கள்ள நோட்டுகள், இந்திய பொருளாதாரத்துக்குள் நுழைவதை தடுப்பதற்கு உள்ள ஓட்டைகளை அடைப்பது பெரிதும் சிரமம். சட்ட அமலாக்கத் துறையினர், நிதி பரிமாற்றங்களை வெளிப்படையாக்குவதன் மூலமே இதை தடுக்க முடியும். இதற்கு ரியல் எஸ்டேட் துறையை சீரமைப்பது அவசியம்.

அப்பாவிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து: டில்லியில் சமீபத்தில் ராகேஷ் சிங் என்பவர், வணிக வளாகத்துக்கு சென்றிருந்தார். தனக்கு பிடித்தமான நான்கு சட்டைகளை தேர்வு செய்து வாங்கினார். அவர் கொடுத்த பணத்தில், நான்கு 500 ரூபாய் நோட்டுக்கள், கள்ள நோட்டுக்களாக இருப்பதை கடையின் காசாளர் கண்டுபிடித்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் போனது. போலீசார் விசாரித்ததில், ஏ.டி.எம்., இயந்திரத்தில் அந்த பணத்தை ராகேஷ் சிங் எடுத்தது தெரியவந்தது. நல்ல வேளையாக அவர் சிறைக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், அவர் இழந்த இரண்டாயிரம் ரூபாய், போனது போனது தான்.

புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டு, உங்கள் கைகளுக்கு வந்துவிட்டால், அவை பயனற்று போவதுடன், சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும். சட்டப்படி, கள்ள நோட்டு வைத்திருக்கும் ஒருவர், அது யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண் டும். அதை நிரூபிக்காவிட்டால், கைது செய்யப்படுவர். கள்ள நோட்டு புழக்கத்தை தடுப்பதற்கு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. ஆனால், ஒவ்வொருவருக்கும் இதை கற்றுக் கொடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. வங்கி காசாளரே கண்டுபிடிக்க முடியாத கள்ள நோட்டுக்களை, சாதாரண பொதுமக்களால் அடையாளம் காண முடியாது. கள்ள நோட்டுக்களை அடையாளம் காணும் ஒருவர், அது குறித்து போலீசாருக்கு தெரிவித்தால், முதலில் அவரையே போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தாலும், தமிழகம், குஜராத், உ.பி., மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தான் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திய ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளும், வங்கிக் கிளைகளும், அல்ட்ரா வயலட் விளக்குகளை நிறுவுவதை கட்டாயமாக்கி உள்ளது. ஆனால், ஒவ்வொரு ரூபாய் நோட்டையும், அல்ட்ரா வயலட் விளக்கில் பரிசோதிப்பது நடக்காத காரியம். வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும், ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் அல்ட்ரா வயலட் விளக்கில் சோதித்து பார்த்து உறுதி செய்ய வேண்டுமானால், ஒரு வாடிக்கையாளருக்கும் மணிக் கணக்கில் நேரம் தேவைப்படும். இதனால், மாற்று வழி காண வேண்டிய அவசியத்தில் உள்ளது ரிசர்வ் வங்கி. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, “யுவர் கைடு டு மணி மேட்டர்ஸ்’ என்ற விதிமுறைகளை, தீதீதீ.ணூஞடி.ணிணூஞ்.டிண என்ற இணையதளத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ஒரு கோடியை மாற்றினால் ரூ.40 லட்சம் கமிஷன்: இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்கு இந்தியாவின் பணத்தையே பயன்படுத்தும் தந்திரத்தை ஐ.எஸ்.ஐ., கையாண்டு வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும், ஹுஜி, சிமி போன்ற பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு, ஆண்டுதோறும் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்து வருவதாக, புலனாய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த பணம் அனைத்தும் கள்ள நோட்டுக்களாகவே இந்தியாவுக்குள் திணிக்கப்படுகின்றன.

இதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பது ஒரு புறம் இருக்க, பயங்கரவாதிகள் மூலம் ரத்த வெள்ளத்தையும் ஐ.எஸ்.ஐ., ஏற்படுத்துகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் மூலம் தயார் செய்யப்படும் கள்ளநோட்டுக்கள், விமான மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகிறது. பெருமளவு கள்ளநோட்டுக்கள், துபாய், காத்மாண்டு, பாங்காக், கராச்சி, கோல்கட்டாவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. சிறிய அளவிலான கள்ள நோட்டுக்கள், எல்லைப் பகுதிகள் வாயிலாக தரை மார்க்கமாக கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, வங்கதேசத்தவர்களால், கண்காணிப்பு இல்லாத இந்திய எல்லைப்பகுதிகள் வழியாக கடத்தி வரப்படுகின்றன. இந்த கள்ள நோட்டுக்கள் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன.

இவற்றை இந்திய ரூபாய் நோட்டுக்களாக பயங்கரவாதிகள் மாற்றுகின்றனர். இதற்காக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அவர்கள் தள்ளுபடி தருகின்றனர். உதாரணமாக ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டை இந்திய நோட்டாக மாற்றித் தந்தால், 30 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் கமிஷன். அவ்வாறு மாற்றப்படும் இந்திய ரூபாய் நோட்டுக்களை பயங்கரவாத சதித் திட்டத்துக்கு பயன்படுத்துகின்றனர். பயங்கரவாத அமைப்பில் செயல்படுவோருக்கு சம்பளமாகவும், பயங்கரவாத அமைப்பை விரிவுபடுத்துவதற்கும் இது பயன்படுகிறது.

மகாராஷ்டிராவில் இவ்வாண்டில் மட்டும் ஆறு முறை, 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 13 பேர் வங்கதேசத்தவர்கள். கடந்த மார்ச் 11ம் தேதி, வங்கதேசத்தை சேர்ந்த இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களும், இரண்டு கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்தும், ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள் அனைத்தும், ஆயிரம் ரூபாய் மதிப்பிலானவை.

கராச்சியில் பதுங்கியுள்ள அப்டாப் பட்கி என்பவன், மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிமின் கூட்டாளி. இவனைத் தான் கள்ள நோட்டு புழக்கத்துக்கு, ஐ.எஸ்.ஐ., பிரதானமாக பயன்படுத்துகிறது. இவன் மூலம் தான் பெரும்பாலான இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்கள், இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், ஐ.எஸ்.ஐ.,க்கு ஏற்படும் செலவு, நோட்டுக் களை அச்சிடுவதற்கு ஏற்படும் செலவு மட்டுமே.

கள்ளநோட்டு கடத்த உதவும் அமைதி ரயில்: இந்தியா – பாகிஸ்தான் இடையே நட்புறவு ஏற்படுத்துவதற்காக துவக்கப்பட்டுள்ள, “அமைதி ரயில்’ போக்குவரத்து தான், கள்ள நோட்டுக் கடத்தலுக்கு பெரிதும் வழி செய்வதாக அமைந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம், பர்மெரில் உள்ள முனாபாவிலிருந்து, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கோக்ராபருக்கு சென்று வரும் அமைதி ரயிலில், இந்திய கள்ள நோட்டுக்கள் கடத்தப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் முதல் ஓராண்டில் மட்டும், ஏழு முறை கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன. இவை அனைத்தும், ரூ.500, ரூ ஆயிரம் மதிப்பிலானவை. பிடிபடாமல் இந்தியாவுக்குள் ஊடுருவிய கள்ள நோட்டுக்கள் எவ்வளவோ?

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய பயணியிடம் 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம், தார் எக்ஸ்பிரஸ் ரயிலில், 19.54 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்களுடன் இரண்டு பயணிகள் பிடிபட்டனர். புலந்சரை சேர்ந்த இவர்கள், நான்கு பெரிய பைகளில் காலணிகளுக்கு அடியில் கள்ளநோட்டுக் களை மறைத்து எடுத்து வந்தனர். கடந்த மார்ச் 29ம் தேதி, முனாபாவில், 1.85 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களுடன் வயதான தம்பதி கைது செய்யப்பட்டனர்.

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு*பயங்கரவாதி கைது?
மே 23,2008,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=2064&ncat=IN&archive=1&showfrom=5/23/2008

Important incidents and happenings in and around the world

புதுடில்லி:ராஜஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், தொடர்பு டையதாக கருதப்படும் அப்துல் ரகு மானை( 30 )போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 10க்கும் மேற் பட்ட இடங்களில் தொடர்ச்சியாக வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், 83 பேர் பலியாயினர். இந்த நிலையில், நேற்று டில்லி போலீசார், செம்ஸ்போர்டு சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வாலிபரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவரிடம், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஆர்டி எக்ஸ் வெடி மருந்து 3 கிலோ, ஐந்து டெட்டனேட்டர்கள், டைமர் ஆகியவை இருந்தன.

விசாரணையில் அந்த வாலிபர் பெயர் அப்துல்ரகுமான் என்பது தெரிந் தது.இவர், தடை செய்யப்பட்ட ஹுஜி பயங்காவாத அமைப்பை சேர்ந்தவர் என்ற ஆதாரங்கள் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. நாட்டில் சதி செயல்களை அரங்கேற்ற பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியது குறித்த தகவல்களைத் திரட்டும் வகையில் விசாரணையை போலீசார் தொடங்கி யுள்ளனர். ஜெய்ப்பூரைப் போலவே பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க செய்ய சதி நடந்ததாக, முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.