Posted tagged ‘முத்துப்பேட்டை’

முத்துப்பேட்டை அம்மா தர்கா தாக்குதல், கலவரம், திராவிடத் தலைவர்கள் இந்துத்வவாதிகளின் மீது கண்டனம்– என்று செக்யூலரிஸ செய்திகள் வெளியீடு!

ஜனவரி 4, 2015

முத்துப்பேட்டை அம்மா தர்கா தாக்குதல், கலவரம், திராவிடத் தலைவர்கள் இந்துத்வவாதிகளின் மீது கண்டனம்– என்று செக்யூலரிஸ செய்திகள் வெளியீடு!

உடைக்கப்பட்ட அம்மா தர்கா மதில்சுவர்.

உடைக்கப்பட்ட அம்மா தர்கா மதில்சுவர்.

புத்தாண்டு கொண்டாடிய கும்பல், தாக்கிய கும்பல், திரும்பிவந்த கும்பல்இவையெல்லாம் ஒரே கும்பலா, வெவ்வேறானவையா?: புத்தாண்டு கொண்டாடிய கும்பல் நடத்திய வன்முறையால் முத்துப் பேட்டை ஜாம்புவானோடை அம்மா தர்கா 31-12-2014 / 01-01-2915 அன்று சூறையாடப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையில் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 50-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் [தா்காவில் ஏறிய மர்ம நபர்கள் தர்கா சுவர்களையும், சுற்றுசுவர்,அருகில் இருந்த 3 வீடுகளையும் உடைத்து சூறையாடிவிட்டனர்[1]] மோட்டார் சைக்கிள்களில் கூச்சலிட்டபடி வீதிவீதியாக வலம் வந்தது. அப்போது, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜாம்புவானோடை தர்கா வாசலில் நின்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கும்பலில் வந்த வர்கள் தர்கா முன்பு நின்றவர்கள் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பள்ளிவாசல் இமாம் முகமது (45), கலீலுர் ரகுமான் (26) மற்றும் பாதுகாப்புப் பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் பலத்த காய மடைந்தனர். அங்கிருந்து சென்ற கும்பல், மீண்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருடன் திரும்பிவந்து, அங்குள்ள அம்மா தர்காவுக்குள் புகுந்து விளக்குகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, தர்காவின் சுற் றுச்சுவரை சுமார் 100 அடி நீளத் துக்கு கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு இடித்து தரை மட்டமாக்கியது. பின்னர், அருகிலிருந்த வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியதுடன், கூரை களையும் பிரித்து வீசியது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது[2].

kalavaram-நக்கீரன்.1

kalavaram-நக்கீரன்.1

மற்றொரு கும்பல்என்று குறிப்பிடப்பட்டது எந்த கும்பல், புகார்கள் ஏன் இரண்டு, மூன்று என்றுள்ளது?: இந்நிலையில், முத்துப் பேட்டையை அடுத்த செம்படவன் காட்டில் மற்றொரு கும்பல் தாக்கிய தில் பாலமுருகன் என்பவரின் பட்டறையில் நின்ற 3 கார்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரம் நடந்தபோது, “அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் குறைந்த அளவிலான போலீஸாரே பணியில் இருந்ததாகவும்” தர்கா நிர்வாகி கள் குற்றம் சாட்டுகின்றனர். காயமடைந்த கலீலுர் ரகுமான் மற்றும் தர்கா முதன்மை அறங் காவலர் பாக்கர் அலி சாகிப் ஆகியோர், “அம்மா தர்காவை இடிக்கும் நோக்கத்துடன் வந்த கும்பல் மதில் சுவரை இடித்து, அருகில் இருந்த வீடுகளை சூறை யாடியது. தர்காவில் தங்கியிருந்த ஊழியர்கள், பக்தர்கள் மீது அரிவாள், கடப்பாரை போன்ற ஆயுதங் களுடன் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகார் அளித்தனர். அதன்படி, முத்துப்பேட்டை போலீஸார் 65-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மற்றொரு புகாரின் பேரில், 3 கார்களை உடைத்த கும்பலைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

kalavaram-நக்கீரன்.4

kalavaram-நக்கீரன்.4

வைகோ கண்ட அறிக்கையை பலவாறு வெளியியட்டது ஏன்?: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தர்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை (03-01-2015) அவர் வெளியிட்ட அறிக்கை[3]: “மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் முத்துப்பேட்டை அம்மாபள்ளி தர்கா மீது புத்தாண்டு நள்ளிரவில் [“சங் பரிவார்[4] அமைப்பைச் சேர்ந்த 150 பேர் உருட்டைக்கட்டைகளோடும், கற்களோடும் சென்று தாக்கியுள்ளனர்” என்று தி ஹிந்து குறிப்பிடுகின்றது[5]]  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தர்காவுக்கு தினமும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வருகின்றனர். பலர் இரவு வேளைகளில் அந்த தர்காவின் தாழ்வாரங்களில் படுத்து உறங்குகின்றனர்[6]. இதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். [இதைச் சகிக்காத பாரதிய ஜனதா கட்சியினரும், மத வெறியர்களும் 150க்கு மேற்பட்டவர்கள் புத்தாண்டு அன்று நடுநிசியில் தர்கா வளாகத்துக்குள் நுழைந்து தாக்க ஆரம்பித்தவுடன், பயந்துபோன யாத்திரிகர்கள் தர்காவுக்குள் ஓடிச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டனர். இல்லையேல், பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்[7]] தர்காவின் உள்ளே நுழைய முடியாதவர்கள் சுற்றுச் சுவரை உடைத்துள்ளனர். இதை அறிந்து பொதுமக்கள் – மத வித்தியாசம் இன்றி, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் அனைவரும் தர்காவை பாதுகாக்க விரைந்து வந்தவுடன்,  தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஒருவரின் ஆதரவாளர்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்[8]. இந்த விவகாரத்தில் முத்துப்பேட்டை காவல் துறை கண்காணிப்பளரின் செயல் இந்த வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இருந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தர்கா மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

kalavaram-நக்கீரன்.6

kalavaram-நக்கீரன்.6

சமதர்மத்தைக் கடைப்பிடிக்காமல், செக்யூலரிஸ ரீதியில் வைகோ அறிக்கை விட்டது ஏன்?: வைகோவின் அறிக்கையை தமிழக ஊடகங்கள், பலவாறு கீழ்கண்டவிதத்தில் வெளியிட்டுள்ளன:

  1. மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் முத்துப்பேட்டை அம்மாபள்ளி தர்கா
  2. [“சங் பரிவார்[9] அமைப்பைச் சேர்ந்த 150 பேர் உருட்டைக்கட்டைகளோடும், கற்களோடும் சென்று தாக்கியுள்ளனர்”
  3. இந்தத் தர்காவுக்கு தினமும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வருகின்றனர்.
  4. இதைச் சகிக்காத பாரதிய ஜனதா கட்சியினரும், மத வெறியர்களும் 150க்கு மேற்பட்டவர்கள் புத்தாண்டு அன்று நடுநிசியில்……………………………..
  5. மத வித்தியாசம் இன்றி, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் அனைவரும் தர்காவை பாதுகாக்க விரைந்து வந்தவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
  6. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஒருவரின் ஆதரவாளர்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்[10].
  7. இந்த விவகாரத்தில் முத்துப்பேட்டை காவல் துறை கண்காணிப்பளரின் செயல் இந்த வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இருந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

இவற்றைப் படிக்கும் போது, சாதாரண வாசகர் கூட, எத்தனை பாரபட்சமாக உள்ளது என்பதனை அறிந்து கொள்வார். குறிப்பாக இந்து இயக்கங்களை விமர்சிப்பதாக உள்ள நோக்கம் என்ன? வைகோ ஏன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இவ்வாறு அறிக்கையினை விட வேண்டும்?

முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம்-முத்துப்பேட்டை

முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம்-முத்துப்பேட்டை

சமதர்மசெக்யூலரிஸ ஊடக செய்திகள் ஏன் இப்படி இருக்கவேண்டும்?: இந்த செய்திகளை உன்னிப்பாக படிக்கும் போது, பல கேள்விகள் எழுகின்றன:

  1. முத்துப்பேட்டையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?
  2. “தி ஹிந்து” என்று பெயரை வைத்துக் கொண்டு, முரண்பாடுகளுடன் ஏன் செய்திகளை வெளியிட வேண்டும்.
  3. “கும்பல்” எனும்போது, அதன் அடையாளத்தைக் குறிப்பிட்டுக் காட்டுவது தானே? “புத்தாண்டு கொண்டாடிய கும்பல்” என்றால் எது?
  4. “மர்ம நபர்கள்” என்று “நக்கீரனால்” குறிப்பிடப்பட்டவர்கள் யார்?
  5. புகார் கொடுக்கப்பட்ட, 65 பேர்களின் பெயர்களை, அடையாளங்களை வெளியிடுவது தானா?
  6. “புத்தாண்டை” எதிப்பது இந்துக்களா, முஸ்லிம்களா?
  7. தர்கா வழிப்பாட்டை எதிப்பது இந்துக்களா, முஸ்லிம்களா?
  8. உருவவழிபாட்டை குறைகூறுபவர்கள் யார்?
  9. உருவவழிபாட்டை அவதூறு பேசி, தர்கா வழிபாட்டை அதரிப்பது ஏன்?
  10. இதில் கிருத்துவர்கள் எப்படி வந்தனர்?
  11. இப்படி அடையாளங்களை மறைத்து செய்திகளை வெளியிடும் அவசியம் என்ன?

இவற்றிற்கு பதில் சொல்வதற்கு தயாரா?

© வேதபிரகாஷ்

03-01-2015

[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=135342

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-65%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6747824.ece

[3] தினமணி, முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல்: வைகோ கண்டனம், By dn, சென்னை, First Published : 04 January 2015 05:01 AM IST.

[4] “இந்துத்வ கும்பல்” என்று நக்கீரனில் உள்ளது – http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=135424

[5]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6751141.ece

[6] தி ஹிந்து, முத்துப்பேட்டை தர்கா தாக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம், Published: January 3, 2015 10:58 IST; Updated: January 3, 2015 10:58 IST

[7] தி ஹிந்து, முத்துப்பேட்டை தர்கா தாக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம், Published: January 3, 2015 10:58 IST; Updated: January 3, 2015 10:58 IST

[8]http://www.dinamani.com/tamilnadu/2015/01/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/article2602955.ece

[9] “இந்துத்வ கும்பல்” என்று நக்கீரனில் உள்ளது – http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=135424

[10]http://www.dinamani.com/tamilnadu/2015/01/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/article2602955.ece