Posted tagged ‘முதுவலி’

முதுகுவலி சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் சில்மிஷம்: காமக்கலை குரேஷி கைது!

ஓகஸ்ட் 8, 2010

முதுகுவலி சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் சில்மிஷம்: காமக்கலை குரேஷி கைது!

குரேஷியின் கிளினிக்கிற்கு வந்த பெண்மணி: ஸபீத் அலி குரெஷி (34) ஒரு யுனானி[1] மருத்துவர், டிப்கோ அருகில், மலாட் (கிழக்கு), மும்பை என்ற இடத்தில் ஒரு கிளினிக் வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை 06-08-2010 அன்று காலை 11 மணியளவில் இவரிடம் “பிங்கி” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெண்மணி முதுவலி என்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்[2].

காமலீலை-குரேஷியின்-கிளினிக்

காமலீலை-குரேஷியின்-கிளினிக்

முதுகுவலி சிகிச்சை வேறு மாதிரி போனது: குரேஷி முதுகு மற்றும் பின்பக்கம் பார்க்க வேண்டு,ம் என்பதால்  அப்பெண் தயங்கினார். டாக்டர், உடனே, பேன்டை அவிழ்ந்து படுத்துக் கொள்ளுமாறு கூற, அப்பெண்ணும் தயங்கியபடி, அவ்வாறே செய்தார். ஆனால், சோதனை செய்கிறேன் என்ற போர்வையில், தொட்டுத் தடவ ஆரம்பித்ததும் அப்பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட்டது. எழுந்துகொள்ளுவதற்கு முயன்றபோது, வலுக்கட்டாயமாக அமுக்கி, ஆபாசமான வார்த்தைகளையும் கூற ஆரம்பித்தவுடன்[3], அந்த ஆளின் கெட்ட போக்கை அறிந்து கொண்டு, சடாலென்று பேன்டை மாட்டிகொண்டு வெளியேறிவிட்டார்.

கணவனிடம் சொன்னார்: இரவு வேலையிலிருந்து திரும்பி வந்த கணவனிடம் விஷயத்தைச் சொல்லியுள்ளார். பிறகு தமது சகோதரரிடம் சொல்லவே, அவர்கள் இருவரும் சனிக்கிழமை காலை, குரேஷியிடம் வந்து கேட்டுள்ளனர். அதற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குரேஷி, குரேஷியின் மைத்துனர் அப்துல் மற்றும் குரேஷியின் ஆட்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை அடித்துள்ளனர்[4]. இதனால், அவர்கள் போலீஸாரிடம் புகார் செய்தனர்.

புகார்-கொடுத்த-கணவனையும்-அடித்த-குரேஷி

புகார்-கொடுத்த-கணவனையும்-அடித்த-குரேஷி

போலீஸார் குரேஷியை கைது செய்தனர்: முதலில் வழக்கைப் பதிவு செய்ய மறுத்த போலீஸார், உள்ளூர் மக்கள் கூடி ஆர்பாட்ட்டத்தில் இடுபட்டவுடன், பிறகு பதிவு செய்தனர். எஸ்.ஜே. குரேஷி கைது செய்யப்படுள்ளர், ஆனால், அப்துல் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது[5].


[1] மாற்று மருத்துவ சிகிச்சைகளில் / முறைகளில் யுனானியும் ஒன்று, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் இம்முறையில் சிகிச்சையளிப்பர். ஆயுர்வேத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த யுனானி வைத்திய முறை இந்திய மாற்று வைத்திய முறையாக நிலைப்பற்று காணப்பட்டது. யுனானி வைத்தியர்கள் இந்தியாவில் சட்டப்படி வைத்திய பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால், ஆயுர்வேத மருத்துவகளுக்கு அந்நிலை கொடுக்கப்படவில்லை.

[2] http://www.dnaindia.com/india/report_malad-doctor-arrested-for-molesting-39-year-old-patient_1420329

[3] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Unani-doctor-arrested-for-molestation/articleshow/6272602.cms

[4] http://www.mid-day.com/news/2010/aug/080810-doctor-molests-patient-arrested-khot-dongri.htm

[5] http://www.hindustantimes.com/Malad-unani-doctor-held-for-molesting-woman/Article1-583746.aspx