Posted tagged ‘முதல்வர்’

மீலாதுநபி: முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து!

பிப்ரவரி 27, 2010

மீலாதுநபி: முதல்வர் வாழ்த்து!

கருணாநிதி வாழ்த்து: நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தின் பல்வேறு சிறப்புகள்: இது தொடர்பாக அவர் இன்று (பிப்.26) விடுத்துள்ள செய்தியில், நபிகள் நாயகத்தின் பல்வேறு சிறப்புக்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.  மீலாது நபி திருநாளை இஸ்லாமிய சகோதரர்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த நாளை அரசு விடுமுறை நாளாக தாம் அறிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய அறநெறிப்படி வாழ!: தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்துவரும் அரசின் சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவரும் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய அறநெறிப்படி வாழ்ந்து வளமும்-நலமும் பெற தமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கருணாநிதி அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.