Posted tagged ‘முஜிபுர் ரஹ்மான்’

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

மார்ச் 3, 2013

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

Attacks on Hindus is similar to 1971

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றது. தலைநகர் டாக்காவில் கலவரம் செய்தால் அது எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால், நவகாளி, சிட்டாகாங் பகுதிகளில் வாழும் இந்துக்களைத் தாக்கினால், அதற்கு என்ன அர்த்தம்? “இஸ்லாம்” என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான் போலும்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளணர். இப்பொழுதுதான் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1].

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்தியாவில் இதைப் பற்றி மூச்சு-பேச்சு இல்லை: ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார். முலாயம் மறுபடியும் “முல்லவாகி” முஸ்லீம்களுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்[5]. ராஹுல் காந்தி பொது காரியதரிசிகளைக் கூட்டி கூட்டம் போடுகிறார்[6].

Hindu woman wails after her house looted and torched

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்:  டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[7] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[8]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[9]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

Bangladesh protesters against Capital punishment

அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் போன்றோர் இப்பொழுது ஏன் வாயைத் திறக்கவில்லை?: முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்த அறிவு ஜீவிகள் இப்பொழுது ஏன் இருக்கின்ற இடம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்? பீஜேபி கூட மகிழ்ச்சியாக கூட்டம் கூடுகிறதே தவிர, இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையே? ஆனால், இலங்களை தமிழர்களுக்கு ஆதரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், பீஜேபியும் அதே வழியில் செல்கிறாதா? சல்மான் குர்ஷித் முன்பு முஸ்லீம் போல கத்தினார், ஆனால், இப்பொழுதோ, அது அவர்களது “தொட்டுவிடும்” உள்நாட்டு விஷயம் என்கிறார்[10]. அப்படி என்னத்தைத் தொடுகிறது என்று சொல்லவில்லை[11]. கம்யூனிஸ்ட் யசூரி கலவரத்தைக் கண்டித்தோது சரி[12]. பிரனாப் முகர்ஜி இத்தனை கலவரங்கள், கொலைகள், எரியூட்டுகள் நடந்து கொண்டிருந்தாலும், தமது மாமா-மச்சான்களைப் பார்க்க, தனது அங்கிருக்கும் சொந்த ஊருக்கு வருகிறாராம்!

Mulayam again poses as Mulla - hobnobbing with Muslims 2013

1971 மற்றும் 2013 – இந்துக்கள் தாக்கப்படுவது: பங்களாதேசம் உருவாக இந்திய உதவியது. அதாவது, முக்திவாஹ்னியுடன் போரிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்த இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியர்கள் அப்பொழுது அவ்வாறு நினைத்ததில்லை. ஆனால், 1071லேயே, பாகிஸ்தானி ஆதரவாளர்கள், ஜமத்-இ-இஸ்லாமி, போன்ற வெறிபிடித்த முஸ்லீம்களை இந்துக்களைத் தாக்கினர், பெண்களைக் கற்பழித்தனர், வீடுகளை சூரையாடினர், கோவில்களை தரை மட்டமாக்கினர். அதேதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

Taliban wanting Jihadi Bangla Muslims

‘Amra Sobai Hobo Taliban Bangla Hobe Afghanistan’ – பங்களாதேசம் ஆப்கானிஸ்தான் ஆனால் தான், எங்களுக்கு சோபை வரும் என்று வெளிப்படையாக தீவிரவாதத்தை வளர்க்கும் வங்காள ஜிஹாதிகள்! இப்படி இந்தியாவைச் சுற்றி ஜிஹாதிகள் இருந்தால், இந்தியா என்னவாகும்?

© வேதபிரகாஷ்

03-03-2013


 


[1] Police also reported attacks on several Hindu homes and temples in the southern Noakhali and Chittagong districts.

http://thepeninsulaqatar.com/qatar/227373-bangla-death-verdict-sparks-riots-34-die-.html

[6] Party vice-president Rahul Gandhi has convened a meeting of all general secretaries and central leaders in charge of states on March 6, leading to wide anticipation in the party quarters that some of them may get new assignments.http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Rahul-Gandhi-calls-general-secys-meeting/Article1-1020202.aspx

[10] Terming the riots in Bangladesh over a war crimes verdict as an internal matter of that country, External Affairs Minister Salman Khurshid on Friday said the government sitting in Dhaka is fully capable of handling this situation and that the law will take its own course. Khurshid said it is a very touchy political issue for some sections of the Bangladesh polity. http://www.indianexpress.com/videos/international/21/bangladesh-capable-of-handling-riots-over-war-crimes-verdict-khurshid—/15760

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

மார்ச் 1, 2013

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

Bangladesh - India

பங்களாதேசத்தில்இஸ்லாமியத்தலைவருக்குத்தூக்குத்தண்டனை: பங்களாதேசத்தில் 1971ல் யுத்தம் நடந்தபோது, இந்தியப் படை, முக்தி வாஹினி என்ற பாகிஸ்தானிற்கு எதிராகப் போராடிய படைக்கு ஆதரவாக இருந்து, சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை ஆதரித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பொழுது, போர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, பற்பல அட்டூழியங்களைச் செய்துள்ளனர். பங்களாதேசம், இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றானர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர்களை தேசவிரோதிகளாகவே கருதுகின்றனர். இதனால், அத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்க, ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. அதன்படி, டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[1] விதிக்கப்பட்டுள்ளது!

Bangladesh protesters against Capital punishment

ஜமாத்இஸ்லாமிதலைவர்செய்தகுற்றங்கள்: இவர் கீழ்கண்ட குற்றங்களுக்காக விசாரணைச் செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[2].

  • மனிதகுலத்திற்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்தது
  • பல கிராமங்களை கொள்ளையடித்தது
  • பலகிராமங்களை தீயிட்டுக் கொளுத்தியது
  • அப்பவி மக்களைக் கொன்றது
  • பெண்களைக் கற்பழித்தது
  • இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது
  • அவர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது.

போர் மற்றும் போர்க்குற்றங்களில் 30,00,000 மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்[3]. அதாவது,ளாப்பொழுது கிழக்கு வங்காளம் அல்லது கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சுதந்திரம் நாடி போராடியபோது, பாகிஸ்தான் படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் விடுதலைப் படைக்கு எதிராக போராடினர், மக்களைக் கொன்றனர்.

The peoples verdict -Giant hoardings demand the hanging of war criminals

கடந்த அநீதிக்குத் தீர்வு வேண்டும் என்றால், நீதி காக்கப்படவேண்டும்: நீதிபதி ஏ.டி.எம். பஸலே கபீர் தமது எழுத்து மூலம் அளித்தத் திப்பில் அறிவித்ததாவது[4], “நீதிபதிகளாகிய நாங்கள் இந்த தண்டனை அளிக்காவிட்டால், கடந்தகால அநீதி நேர்ததற்கான பிராயச்சித்ததை நீதியாக அடையமுடியாது என்ற தத்துவத்தில் மிகவும் ஆழமான நம்பிக்கைக் கொள்கிறோம் மற்றும் கொண்டிருக்கிறோம்”. நீதி எனும்போது, நீதிபதிகள் நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும், குற்றாவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

Supporters at Shabag square Bangladesh 2013

தீவிவாத அமைப்புகளுடன் தொடர்பு: இந்த இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானிய மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு வேலை செடய்து வந்துள்ளது. இந்த இச்ளம்ய ஜமாத் கட்சி, முந்தைய பிரதம மந்திரியின் கட்சியான தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாட்சியிலும் பங்குக் கொண்டுள்ளது. இருப்பினும், தீவிரவாத இயக்கத் தொடர்புகளினால், பொது மக்கள் அதனை வெறுத்தொதிக்கினர்[5]. அதுமட்டுமல்லாது, அக்கட்சியின் எல்லா தலைவர்களுமே, பற்பல குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்கள்[6].

Bangladeshi- absconding Terrorists

தொடர்ந்து நடந்த கலவரங்களில் 35 பேர் சாவு: இத்தீர்ப்பை ஆதரித்து, எதிர்த்தும் பங்களாதேசத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது. பலர் ஆதரித்து பொதுநிகழ்ச்சியில் பேசவும் செய்தனர். தலைநகர் டாக்காவில், சபாக் சதுக்கத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் என்று பலர் கூடி தீர்ப்பை ஆதரித்து முழக்கமிட்டனர். “தேசவிரோத பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், பாகிஸ்தானிற்கு போங்கள்ளென்று ஆர்பரித்தனர்[7]. இதனால், எதிர்க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டத்தனர் ஆர்பாட்டத்தில், ரகளையில் ஈடுபட்டனர்[8]. இதனால் அரசு பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர்[9]. இறந்தவர்களில் 4 போலீஸாரும் அடங்குவர், அதில் இருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்[10]. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

My jihad is bomb your country

இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்களா?: இங்கு, இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு, சென்னையிலேயே எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம், அவனது உடலைப் பெறுவது, அடக்கம் செய்வது என்ற விஷயங்களில் இரு கட்சிகளும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆளும் கட்சியினர், ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாடு எனும்போது, தமது நாட்டை ஆதரிக்க முஸ்லீம்கள் ஏன் மாறுபட்டு நடக்க வேண்டும்?

© வேதபிரகாஷ்

28-02-2013


[2] Prosecutors accused him of involvement in looting and burning villages, raping women and forcing members of religious minorities to convert to Islam during the war.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[4] “As judges of this tribunal, we firmly hold and believe in the doctrine that ‘justice in the future cannot be achieved unless injustice of the past is addressed,’ ” Justice A. T. M. Fazle Kabir commented in a written summary of the judgment.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[5] One of the largest Islamist parties in South Asia, Jamaat was the leading coalition partner of former Premier Khaleda Zia’s Bangaldesh Nationalist Party. It bred many terror groups but is now becoming an outcast in Bangladesh, with almost its entire top leadership behind bars on war crimes charges.

[7] Just adjacent to the Bangbandhu medical college, and not far away from the Prime Minister’s residence, it has become home to thousands of students, doctors, artists, government officials and landless workers who have made it their abode amid chants of “phaansi” to traitors and “traitors go to Pakistan”.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2286185/Shahbag-Square-cheers-change-Dhakas-young-protesters-demand-ban-extremism-death-war-criminals.html?ito=feeds-newsxml

[9] Violent clashes between protesters and security forces erupted across Bangladesh on Thursday, leaving at least 35 people dead.