அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?
ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் [Jamiat-e-Ahle Hadith (JeH)] என்ற இயக்கத்திலன் தலைவர் மௌலானா சௌகத் ஷா [Moualana Shoukat Shah] தீவிரவாதிகளால் 08-04-2011 அன்று கொலை செய்யப்பட்டார்[1]. இவரும் பிரிவினையை ஆதரித்து வந்தவர்களுள் ஒருவர்[2]. லஸ்கர்-இ-தொய்பா தாங்கள் தாம் அவரைக் கொன்றது என்று ஒப்புக் கொண்டது[3]. அதன் தளபதி, ஜாவித் முன்சி பில்லா பாபா மற்றும் நிஸார் கான் முதலியோரை தான் தான் படையில் சேர்த்துக் கொண்டான் என்றும் ஒப்புக் கொண்டான். 2010ல் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, வெடிமருந்துகளை எடுத்துச் சென்றதாகவும் விவரித்தான். பிரிவினைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றை சேர்த்து இஸ்லாமிய இறையியலோடு இணைத்து, ஜிஹாத் என்ற கொள்கைகளில் நியாயப் படுத்தி, மக்களைக் கொன்று வரும் போது, அவர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை நன்றாகவே அறிய முடிகின்றது[4].
கொலையாளிகளைக்கண்டுபிடிக்கஉருவாகப்பட்டகுழு: வேடிக்கை என்னவென்றால், அக்குழுவில் இடம் பெற்றவர்களே பிரிவினைவாதிகள் தாம்[5]:
- மீர்வாயிஸ் உமர் பரூக் [Mirwaiz Umar Farooq],
- சையது அலி ஷா ஜிலானி [Syed Ali Shah Geelani],
- யாசின் மாலிக் [Yasin Malik],
- செயிக் மொஹம்மது ஹஸன் [Shiekh Mohammad Hassan – Jamaat-e-Islami chief],
- குலாம் ரசூல் மாலிக் [Ghulam Rasool Malik acting president of the Jamiat Ahle Hadith],
- மௌல்வி அப்பாஸ் அன்சாரி [Moulvi Abbas Ansari Shia leader}
- ஆகா சைது ஹஸான் [Agha Syed Hassan, Shia leader].
ஆகவே, இவர்களே, ஒருவரை ஒருவர் கொன்று கொள்வர், அடையாளம் கண்டு கொள்வர் அல்லது காட்டிக் கொள்வர்-கொல்வர். மறுபடியும் ஜிஹாத் என்று கிளம்பி விடுவர். இவர்களால் எப்படி அமைதி வரும்?
சையதுஅலிஷாஜிலானியின்இரட்டைவேடங்கள், இரட்டைநாக்குகள், முரண்பட்டபேச்சுகள்முதலியன: இந்திய அரசாங்கம், இப்பொழுது தேவையில்லாமல் இந்த பிரிவினைவாதியை ஆதரித்து வருகிறது. அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வருகின்றது. ஆனால், இவர் தீவிரவாதிகளையும் ஊக்குவித்து வருகிறார். மௌலானா சௌகத் ஷா (1956-2011) கொலையுண்ட பொழுது ஜிலானி ஷா, காலிப்புகளைப் போல கொலை செய்யப்பட்டிருகிறார் என்று பெருமையாகச் சொல்லி, தேற்றியிருக்கிறார். இந்நிலையில் பிடிபட்டுள்ள ஜாவித் முன்சி பில்லா பாபா [Javed Munshi Billa Papa] மற்றும் நிஸார் கான் [Nisar Khan] என்ற கொலையாளிகளை பக்ரீத் போது (15-10-2013) விடிவிக்குமாறு இஸ்லாமிய இயக்கங்கள் வெளிப்படையாக, அதிரடியாக கேட்டு வருகின்றன[6]. இதில் பிரிவினைவாதி மற்றும் தீவிரவாதிகளின் ஆதரவாளர், சையது அலி ஷா ஜிலானியும் [Syed Ali Shah Geelani] அடங்குவார். ஜிலானி தனது மகனின் கொலைகாரர்களை “முஜாஹித்தீன்” என்று வர்ணித்திருப்பதை ஆட்சேபித்துள்ளார். இதனால், ஆச்சரியமடைந்த, அமீனா பேகம் என்கின்ற மௌலானா சௌகத் ஷாவின் தாயார், ஜிலானி எப்படி இவ்வாறு கேட்க முடியும் என்று குமுறியுள்ளார்.
முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள்என்றெல்லாம்யார்– யார்என்றுஅடையாளம் காண் வேண்டும்: கொலைகாரகளுக்கும், முஜாஹித்தீன்களுக்கும் வித்தியாசம் கண்டுகொள்ள வேண்டும். அன்றொரு மாதிரி, இப்பொழுது ஒரு மாதிரி பேசுவதை விடவேண்டும், செய்துள்ள பாவத்தை யாரும் மறக்க முடியாது, அல்லாவை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்[7] என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்[8]. ஒமர் அப்துல்லா அரசாங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. இஸ்லாம் பெயரில் இன்று யார்-யார் எல்லாம் “ஜிஹாத்” என்று கிளம்பி விட் உகிறார்கள். முஸ்லிம்களையே, முஸ்லிம்கள் கொன்று கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?
© வேதபிரகாஷ்
14-10-2013
[2] http://www.kashmirdispatch.com/headlines/08042698-life-and-times-of-maulana-showkat-1956-2011.htm
[3] http://www.dnaindia.com/india/1579809/report-let-admits-killing-separatist-leader-moulana-showkat-ahmad-shah
[5] Tehreek-ul-Mujahideen presented its report to the Investigation Committee established by the separatist groups to probe Shah’s murder. The committee has among its members Mirwaiz Umar Farooq, Syed Ali Shah Geelani, Yasin Malik, Jamaat-e-Islami chief Shiekh Mohammad Hassan, acting president of the Jamiat Ahle Hadith Ghulam Rasool Malik and Shia leaders Moulvi Abbas Ansari and Agha Syed Hassan.
http://archive.tehelka.com/story_main50.asp?filename=Ws290811Kashmir.asp
[6] Mother of slain Jamiat leader flays Geelani – PTI – Srinagar, Oct 13 (PTI) The mother of slain Jamiat-e-Ahle Hadith (JeH) leader Moualana Shoukat Shah today criticised hardline Hurriyat Conference leader Syed Ali Shah Geelani for reportedly demanding release of her son’s alleged killers. Shah’s mother, Ameena, expressed astonishment over the press statements by some outfits including that of Geelani, “who are time and again issuing statements in favour of the killers” of her son.
அண்மைய பின்னூட்டங்கள்