வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதி சவிகுர் ரஹ்மான் பர்க்!
ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார் சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[2]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[3].
சபாநாயகர் மீரா குமாரி கோபம்[4]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன்.யாவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.
மதநம்பிக்கைபெரிய்துஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[5]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[6].
முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்;இம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[7]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[8].
“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[9]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!
வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: எமுஸôபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[10]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[11]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.
© வேதபிரகாஷ்
10-05-2013
[1] http://www.punjabkesari.in/news/%E0%A4%AC%E0%A4%B8%E0%A4%AA%E0%A4%BE-%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%82%E0%A4%B8%E0%A4%A6-%E0%A4%A8%E0%A5%87-%E0%A4%95%E0%A4%B9%E0%A4%BE,-%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%8D%E0%A4%9F%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%97%E0%A5%80%E0%A4%A4-%E0%A4%95%E0%A5%87-%E0%A4%95%E0%A5%81%E0%A4%9B-%E0%A4%B6%E0%A4%AC%E0%A5%8D%E0%A4%A6–133554
[4] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.
[5] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.
[6] http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Row-over-Vande-Mataram-walkout/Article1-1057777.aspx
[7] http://secularsim.wordpress.com/2010/09/01/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8/
[9] http://www.dnaindia.com/india/report_baba-ravdev-criticises-chidambaram-s-saffron-remark_1434800
அண்மைய பின்னூட்டங்கள்