Posted tagged ‘முகமது அசாருதீன்’

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)

24-10-2022 (திங்கட் கிழமை): ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தீவிரவாத தொடர்புகளால் ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பில் ஜமேசா உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த –

  1. முகமது தல்கா (25),
  2. முகமது அசாருதீன் (23),
  3. முகமது ரியாஸ் (27),
  4. ஃபிரோஸ் இஸ்மாயில் (27),
  5. முகமது நவாஸ் இஸ்மாயில் (26)

ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.

ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை[1].  இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர்[2], “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம். இதனால் பலரும் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், ஒருவரது உடலை அடக்கம் செய்ய வேண்டுமானால், ஏதாவது ஒரு ஜமாத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும், அவர் உறுப்பினராக இல்லை என்பதால், அவரை அடக்கம் செய்ய அனுமதி கடிதம் கொடுக்கப்படவில்லை,” என கூறினார்[3]. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில், லங்கர்கானா அடக்கஸ்தலத்தில்  ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது[4].

அமைதியை விரும்பினால், இளஞர்கள் திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: இதிலிருக்கும் மதநம்பிக்கையை விடுத்து, “குண்டு வெடிப்பு” கோணத்தில் அலசினால், மனைவி ஏன் கடிதம் கொடுக்கவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. “பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது,” எனும் பொழுது, அவர்கள் நிச்சயமாக, பொறுப்பேற்று கடிதம் கொடுத்திருக்கலாம்.  கொரோனா காலத்திலேயே, முஸ்லிம் உடல்கள் எப்படியெல்லாம் புதைக்கப் படவேண்டும் போன்ற வாத-விவாதங்கள் வெளியாகியுள்ளன. அதே போல, கடந்த காலங்களிலும், தீவிரவாதிகள் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. ஆதவே இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை. “நாங்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பிகிறோம், “ என்றால், அவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸ் போன்ற அமைப்புகளுடம் இணையாமல் இருக்க, பெற்றோர்-மற்றோர் கவனிக்கலாம், தடுக்கலாம், அறிவுரை கூறலாம். ஆனால், தொடர்ந்து நடக்கின்றன என்பதால், இதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை.

முகமது தல்கா (25): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார்.  நவாப்கான் 1988 கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர்[5]. நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது[6]. தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.

முகமது அசாருதீன் (23): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

முகமது ரியாஸ் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

ஃபிரோஸ் இஸ்மாயில் (27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

முகமது நவாஸ் இஸ்மாயில் (26): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்;  ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.

25-10-2022 (செவ்வாய் கிழமை): இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் – ரசாயனங்கள் கண்டெடுக்கப் பட்டன. கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், ” முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்[7]. வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது[8]. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும்[9], முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்[10]

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தமிழ்.இந்து, ஜமேஷா முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத், செய்திப்பிரிவு Published : 26 Oct 2022 06:11 AM; Last Updated : 26 Oct 2022 06:11 AM.

[2]  https://www.hindutamil.in/news/tamilnadu/887654-jamesha-mubins-body.html

[3] News.18.Tamil, ஜமோஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வராத ஜமாத் நிர்வாகங்கள்.. கோவையில் பரபரப்பு..!, Published by:Anupriyam K, First published: October 26, 2022, 08:52 IST; LAST UPDATED : OCTOBER 26, 2022, 08:52 IST.

[4] https://tamil.news18.com/news/coimbatore/jamaat-authorities-did-not-come-forward-to-bury-jamoza-mubeens-body-in-coimbatore-824997.html

[5] தினத்தந்தி, 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவரின் மகன் கார் வெடித்த சம்பவத்தில் கைது, By தந்தி டிவி 27 அக்டோபர் 2022 12:27 PM.

[6] https://www.thanthitv.com/latest-news/1998-coimbatore-blast-case-inmates-son-arrested-in-car-blast-incident-144934

[7] காமதேனு, வெடிபொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து வாங்கிய ஜமேஷா முபின்: காவல் துறை அதிர்ச்சி தகவல்!, Updated on : 27 Oct, 2022, 11:24 am.

[8] https://kamadenu.hindutamil.in/national/jamesha-mubin-bought-the-explosives-by-ordering-them-from-amazon-and-flipkart-police-department-shocked

[9] மக்கள் குரல், வெடிப்பொருள் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான், ப்ளிப்கார்ட் மூலம் வாங்கிய ஜமேஷா முபின், Posted on October 27, 2022

[10]https://makkalkural.net/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1/