Posted tagged ‘மீர்வாயிஸ் உமர் பரூக்’

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

ஜூலை 30, 2017

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

பணபறிமாற்றத்தில் பாகிஸ்தான் தூதரகம் சம்பந்தப்பட்டது (மே. 2017): 28-07-2017 அன்று பாகிஸ்தானின் பிரதமர் ஊழல் விசயமாக பதவி விலகிய போது, பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் பதவியும் பறிபோனது. ஆனால், இந்த ஆள் தான், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளை, தில்லியில் உள்ள தூதரகத்திற்கு வரவழைத்து, சதிதிட்டங்களைத் தீட்டி, காஷ்மீரத்தில் எப்பொழுதும் அமைதி குலைக்க அவர்களுக்கு பணம் கொடுத்தது மே 2017ல் தெரிய வந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5].

SYurriat meeting Abdul Basit - August .2014

இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் மெத்தனமாக இருக்கிறதா?: ஒரு புறம் யாதவை உளவாளி என்று அறிவித்து, பாகிஸ்தான் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, அனைத்துலக ரீதியில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இவ்வளவு உள்ளூர் விசயங்களில் தலையீடு செய்து, கலவரங்களை உண்டாக்கி வந்தாலும், அதுபோன்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வருகின்றன.

Kashmir separatist leaders aiding and abeting terror

காஷ்மீர தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாதிகளின் இரட்டை வேடங்கள், துரோகங்கள், தேசவிரோதச் செயல்கள்: சையது அலி ஷா கிலானி, மீர்வ்யிஸ் பரூக், முதலியோர் அரசின் செலவில் பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். ஶ்ரீநகர் போன்ற முக்கிய இடங்களில் வர்த்தக வளாகங்களின் சொந்தக்காரர்களாக இருந்து கொண்டு கோடிகளில் வாடகை, குத்தகை போன்றவற்றில் வருமானம் பெற்று வருகிறார்கள், சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பையன்கள், பேரன்கள் தில்லி மற்றும் மற்ற இந்திய மற்றும் அயல்நாடுகளில் உள்ள சிறந்த பள்ளிகள்-கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள பள்ளிகள்-கல்லூரிகள் நடத்த விடாமல் கலாட்டா செய்து வருகிறார்கள். மாணவ-மாணவியர் பள்ளிகள்-கல்லூரிகளுக்குச் சென்று படிக்காமல், பணம் கொடுத்து, திசைத் திருப்பி, கல்லடி-ஜிஹாதிகளாக செயம்பட வைக்கின்றனர். ஷபிர் ஷா தொடர்புகள் நயீன் கான் மூலம் தெரிய வந்ததால், அவனை சையது அலி ஷா கிலானி கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். ஆனால்

NIA press release 19-05-2017

19-05-2017 அன்று ஆரம்ப விசாரணை நடவடிக்கை பதிவு செய்தது[7]: “இந்தியா டிவி” தொலைக்காட்சியில் வெளியான, நிருபர் மற்றும் ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர்களின் உரையாடகளில் தீவிரவாத பணபரிவர்த்தனைப் பற்றிய விசயங்களை கண்டு கொண்டது.

  1. பொதுசொத்துக்களுக்கு நாசம் விளைவித்தது,
  2. பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து கலவரம் புரிந்தது,
  3. பள்ளிகளை எரித்தது,
  4. அரசாங்க அலுலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு நாசம் விளைவித்தது

போன்ற சட்டவிரோத காரியங்களை மேற்கொள்ள கீழ் கண்ட ஹுரியத் தலைவர்களுக்கு, பாகிஸ்தானிய தீவிரவாதியான, ஹாவிஸ் மொஹம்மது சையது மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மூலம் பணம் பெற்ற விவகாரங்களில் ஆதாரம் இருப்பதால், அவர்களிடம் விசாரிக்க, ஆரம்ப விசாரணை துவங்கப்பட்டது:

  1. சையது அலி ஷா கிலானி [Syed Ali Shah Geelani],
  2. நயீம் கான் [Naeem Khan],
  3. பரூக் அஹமது தார் [Farooq Ahmed Dar],
  4. காஜி ஜேவத் பாபா [Gazi Javed Baba],
  5. மற்றும் பலர் [and others]

இதில் விசயம் என்னவென்றால், இவர்கள் எல்லோருமே, இந்தியாவில், இந்திய குடிமகன்களாக இருந்து கொண்டு, சொத்துகள் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து லட்சக்கணக்கில் வருவாய் பெற்றுக் கொண்டு, இவ்வாறு செய்து வருகின்றனர். தங்களது மகன், மகள், பேரன், பேத்தியர் முதலியவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல படிப்பு படிக்க வைத்து, உள்ளூர் மக்கள் படிக்கவிடாத படி, பள்ளிகளை எரித்து வருகின்றனர்.

Curfew in rajouri

Curfew in rajouri

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குகல்லெறிஜிஹாதிகளுக்கு நிதியுதவி: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு [The National Investigation Agency (NIA)], பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்துள்ளது[8]. ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சமீபத்தில், ரம்ஜான் பண்டிகை முடிந்ததும், பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்[9]. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.  குறிப்பாக கல்லெறி-ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து, தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுத்தப் படுவதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதில், சுமார் 100 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

30-07-2017

Burhan Wani - praised by Urudu PAK media

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3]  Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36.

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] NIA has also taken cognizance of the news item related to the recording of conversations between the reporter and leaders of the separatist groups operating in Kashmir valley, by India Today TV, on 16.05.2017 in this regard. National Investigation Agency has registered a PE (Preliminary Enquiry) into the funding of Hurriyat leaders namely Syed Ali Shah Geelani, Naeem Khan, Farooq Ahmed Dar, Gazi Javed Baba and others in J&K by Hafiz Muhammed Saeed and other Pakistan based terrorists and agencies to carry out subversive activities in Kashmir and for damaging public property, stone pelting on the security forces, burning of schools and other Government establishments.

http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/413_1_PressRelease19052017.pdf

[8] தினமலர், கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்..., அதிரடி, பதிவு செய்த நாள்.ஜூலை 24.2017, 22:01.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1818923

அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?

ஒக்ரோபர் 14, 2013

அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?

ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் [Jamiat-e-Ahle Hadith (JeH)] என்ற இயக்கத்திலன் தலைவர் மௌலானா சௌகத் ஷா [Moualana Shoukat Shah] தீவிரவாதிகளால் 08-04-2011 அன்று கொலை செய்யப்பட்டார்[1]. இவரும் பிரிவினையை ஆதரித்து வந்தவர்களுள் ஒருவர்[2]. லஸ்கர்-இ-தொய்பா தாங்கள் தாம் அவரைக் கொன்றது என்று ஒப்புக் கொண்டது[3]. அதன் தளபதி, ஜாவித் முன்சி பில்லா பாபா மற்றும் நிஸார் கான் முதலியோரை தான் தான் படையில் சேர்த்துக் கொண்டான் என்றும் ஒப்புக் கொண்டான். 2010ல் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, வெடிமருந்துகளை எடுத்துச் சென்றதாகவும் விவரித்தான். பிரிவினைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றை சேர்த்து இஸ்லாமிய இறையியலோடு இணைத்து, ஜிஹாத் என்ற கொள்கைகளில் நியாயப் படுத்தி, மக்களைக் கொன்று வரும் போது, அவர்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை நன்றாகவே அறிய முடிகின்றது[4].

கொலையாளிகளைக்கண்டுபிடிக்கஉருவாகப்பட்டகுழு: வேடிக்கை என்னவென்றால், அக்குழுவில் இடம் பெற்றவர்களே பிரிவினைவாதிகள் தாம்[5]:

  1. மீர்வாயிஸ் உமர் பரூக் [Mirwaiz Umar Farooq],
  2. சையது அலி ஷா ஜிலானி [Syed Ali Shah Geelani],
  3. யாசின் மாலிக் [Yasin Malik],
  4. செயிக் மொஹம்மது ஹஸன் [Shiekh Mohammad Hassan – Jamaat-e-Islami chief],
  5. குலாம் ரசூல் மாலிக் [Ghulam Rasool Malik acting president of the Jamiat Ahle Hadith],
  6. மௌல்வி அப்பாஸ் அன்சாரி [Moulvi Abbas Ansari Shia leader}
  7. ஆகா சைது ஹஸான் [Agha Syed Hassan, Shia leader].

ஆகவே, இவர்களே, ஒருவரை ஒருவர் கொன்று கொள்வர், அடையாளம் கண்டு கொள்வர் அல்லது காட்டிக் கொள்வர்-கொல்வர். மறுபடியும் ஜிஹாத் என்று கிளம்பி விடுவர். இவர்களால் எப்படி அமைதி வரும்?

சையதுஅலிஷாஜிலானியின்இரட்டைவேடங்கள், இரட்டைநாக்குகள், முரண்பட்டபேச்சுகள்முதலியன:  இந்திய அரசாங்கம், இப்பொழுது தேவையில்லாமல் இந்த பிரிவினைவாதியை ஆதரித்து வருகிறது. அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வருகின்றது. ஆனால், இவர் தீவிரவாதிகளையும் ஊக்குவித்து வருகிறார். மௌலானா சௌகத் ஷா (1956-2011) கொலையுண்ட பொழுது ஜிலானி ஷா, காலிப்புகளைப் போல கொலை செய்யப்பட்டிருகிறார் என்று பெருமையாகச் சொல்லி, தேற்றியிருக்கிறார். இந்நிலையில் பிடிபட்டுள்ள ஜாவித் முன்சி பில்லா பாபா [Javed Munshi Billa Papa] மற்றும் நிஸார் கான் [Nisar Khan] என்ற கொலையாளிகளை பக்ரீத் போது (15-10-2013) விடிவிக்குமாறு இஸ்லாமிய இயக்கங்கள் வெளிப்படையாக, அதிரடியாக கேட்டு வருகின்றன[6]. இதில் பிரிவினைவாதி மற்றும் தீவிரவாதிகளின் ஆதரவாளர், சையது அலி ஷா ஜிலானியும் [Syed Ali Shah Geelani] அடங்குவார். ஜிலானி தனது மகனின் கொலைகாரர்களை “முஜாஹித்தீன்” என்று வர்ணித்திருப்பதை ஆட்சேபித்துள்ளார். இதனால், ஆச்சரியமடைந்த, அமீனா பேகம் என்கின்ற மௌலானா சௌகத் ஷாவின் தாயார், ஜிலானி எப்படி இவ்வாறு கேட்க முடியும் என்று குமுறியுள்ளார்.

முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள்என்றெல்லாம்யார்யார்என்றுஅடையாளம் காண் வேண்டும்: கொலைகாரகளுக்கும், முஜாஹித்தீன்களுக்கும் வித்தியாசம் கண்டுகொள்ள வேண்டும். அன்றொரு மாதிரி, இப்பொழுது ஒரு மாதிரி பேசுவதை விடவேண்டும், செய்துள்ள பாவத்தை யாரும் மறக்க முடியாது, அல்லாவை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்[7] என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்[8]. ஒமர் அப்துல்லா அரசாங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. இஸ்லாம் பெயரில் இன்று யார்-யார் எல்லாம் “ஜிஹாத்” என்று கிளம்பி விட் உகிறார்கள். முஸ்லிம்களையே, முஸ்லிம்கள் கொன்று கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், கொலைகாரர்கள், ஜீஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன?

© வேதபிரகாஷ்

14-10-2013


[5] Tehreek-ul-Mujahideen presented its report to the Investigation Committee established by the separatist groups to probe Shah’s murder. The committee has among its members Mirwaiz Umar Farooq, Syed Ali Shah Geelani, Yasin Malik, Jamaat-e-Islami chief Shiekh Mohammad Hassan, acting president of the Jamiat Ahle Hadith Ghulam Rasool Malik and Shia leaders Moulvi Abbas Ansari and Agha Syed Hassan.

http://archive.tehelka.com/story_main50.asp?filename=Ws290811Kashmir.asp

[6] Mother of slain Jamiat leader flays Geelani – PTI –  Srinagar, Oct 13 (PTI) The mother of slain Jamiat-e-Ahle Hadith (JeH) leader Moualana Shoukat Shah today criticised hardline Hurriyat Conference leader Syed Ali Shah Geelani for reportedly demanding release of her son’s alleged killers. Shah’s mother, Ameena, expressed astonishment over the press statements by some outfits including that of Geelani, “who are time and again issuing statements in favour of the killers” of her son.

மிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்!

மார்ச் 11, 2013

மிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்!

மிகக்கொடுமையான, மோசமான ஆயுத போராட்டத்தை காண வேண்டியிருக்கும்: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் மிகவும் கொடுமையான ஆயுத போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டியுள்ளான். 1990களில் ஏற்பட்ட குரூரப் போராட்டத்தைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளான்[1].  1987ல் காஷ்மீர் பிரச்சினைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தில்லியில் உள்ளவர்கள் நடித்தார்கள், ஆனால், விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறு சொல்லமுடியாது. வருங்கால இளைஞர்கள் பொறுக்கமாட்டார்கள். அதனால் நாம் மிகக்கொடுமையான, மோசமான ஆயுதபோராட்டத்தை காணவேண்டியிருக்கும்[2].

உண்மையைப் புரட்டும் எத்தன்: உண்மையில் 1980களில் தான் இந்துக்கள் ஒட்டு மொத்தமாக மிரட்டப்பட்டு, காஷ்மீரத்திலிருந்து விரட்டப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், மதம் மாற்றப்பட்டார்கள், ஆண்கள் மதம் மாறாவிட்டால், கொல்வோம் என்று மிரட்டி, தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களையும் விட்டுவிட்டு விரட்டப் பட்டார்கள். ஆனால், இவ்வுண்மைகளை மறைத்து, இக்கொடியவன் பொய்களை சொல்லி, மக்களை ஏமாற்றப்பார்க்கிறான். சோனியா, ராஹுல் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

யாசின் மாலிக் பாகிஸ்தான் சென்று வரும் போதெல்லாம் ஜிஹாதி தீவிரவாதம் பெருகும் என்றால், அது ஏன் தடுக்கப்படுவதில்லை?: 2005ல் யாசின் மாலிக் சென்றிருந்தபோது, எப்படி பாகிஸ்தான் ஜிஹாதிகளை ஊக்குவிக்கிறது, கூலிப்படைகள் உருவாக்கப்படுகின்றன, பாகிஸ்தான் உதவுகிறது என்று அவனே விளக்கியதை பாகிஸ்தான் ஊடகங்கள்[3] பெருமையாக வெளியிட்டன[4]. இதோ அவன் சொன்னதை பாருங்களேன்[5]: “காஷ்மீரத்தில் ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, செய்க் ரஷீத் அஹமது, பாகிஸ்தானிய செய்தித்துறை அமைச்சர், ஒரு படையை ஏற்படுத்தி அதில் 3,500 ஜிஹாதிகளுக்கு கொரில்லா போர் முறைகளில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார்…………முன்னின்று போராடும் ஜிஹாதிகளுக்கு பலவழிகளில் உதவியுள்ளார். அவரது மகத்தான பங்களிப்பு சிலருக்குத்தான் தெரியும்”.

இந்தியப் பிரிவினைவாதிகளின் பாகிஸ்தான் விஜயம்[6]: இப்பொழுது கூட 26/11 தீவிரவாதி, பயங்கரவாதி ஹாபித் சையதுடன் உட்கார்ந்து, தண்டிக்கப்பட்ட தீவிரவாதியை ஆதரித்துக்கொண்டு, சுமார் 70 நாட்கள் பாகிஸ்தானில் இருந்துவிட்டு வந்திருக்கும் இவன் தான் இப்படி மிரட்டுகிறான்[7]. பிரிவினைவாதிகளை ஊக்குவிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி வெளிப்படயாகவே குற்றஞ்சாட்டியது[8]. முன்னர் ஏழு பேர் அடங்கிய ஹுரியத் கட்சியினர், டிசம்பர் 15 முதல் 28 வரை பாகிஸ்தானில் இருந்து பல பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துள்ளனர்[9].

  1. மீர்வாயிஸ் உமர் பரூக் Hurriyat chairman, Mirwaiz Umar Farooq,
  2. கனிபட் professor Gani Bhat
  3. பிலால் கனி லோன் Bilal Gani Lone
  4. மௌலானா அப்பாஸ் அன்ஸாரி Moulana Abbas Ansari
  5. ஆக சையது அல்-ஹஸன் Aga Syed Al-Hasan
  6. முஸாதிக் அடில் Musadiq Adil
  7. முக்தார் அஹ்மது வாஸா Mukhtar Ahmad Waza

இந்த ஹுரியத்தின் பயங்கரவாத இணைப்புப் பற்றி ஏற்கெனவே பல விஷயங்கள் வெளிவந்துள்ளன[10]. வளைகுடா நாடுகளினின்று வரும் பணத்தை காஷ்மீர தீவிரவாதிகளுக்கு அனுப்ப பலவிதங்களில் வேலை செய்து வருகின்றனர். 2003ல் பாகிஸ்தானிய தூதரே மேற்குறிப்பிடப்பட்ட அப்துல் கனி பட்டிற்கு பணம் கொடுத்தபோது, நாடு கடத்தப்பட்டார், அவர்களது கூட்டாளி சபீர் அஹமது தார் என்பவன் கைது செய்யப்பட்டான்[11]. இப்படி வர்ம் பணம் ஹவாலா மற்றும் போதை மருந்து விற்பனை மூலம் இந்த ஜிஹாதிகளுக்குக் கொடுக்கப்படுகிறது[12].

இப்பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்துப் பேசியது என்ன?: இப்படி இவர்கள் வெளிப்படையாக பாகிஸ்தானிற்குச் சென்று பல நாட்கள் இருந்து கொண்டு, பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வருகிறார்கள் என்றால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ற விவரங்களை ஏன் இந்திய அரசாங்கம் தெரியப்படுத்துவதில்லை. இந்திய மக்களை ஏன் இருட்டில் வைத்திருக்க விரும்புகிறது? ராணுவ வீரர்களைக் கொல்கிறது, தலைகளை வெட்டி, முண்டங்களை அனுப்புகிறது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால், இம்முண்டங்களுக்கு என்ன விளங்கும்?

ஷபீர்ஷாவை ஊக்குவித்தது போல சோனியா காங்கிரஸ், யாசின்மாலிக்கை ஊக்குவிக்கிறதா?: காங்கிரஸைப் பொறுத்தவரைக்கும் நாட்டுநலன் என்பது கிடையாது, எப்படி ராஜிவ் காந்தி இந்தியர்களை ஏமாற்றினாரோ, அதைவிட அதிகமாக, வெளிப்படையாகவே, சோனியா இந்தியாவை தாரைவார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். முஸ்தபா கமல் என்கின்ற, தேசிய மாநாட்டுக் கட்சி செயலாளர், முன்பு பிரிவினைவாதி ஷபீர் ஷாவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் ஆக்கலாம் என்று திட்டமிட்டிருந்தது. அதேபோல, இப்பொழுது ஊக்குவித்தது போல, யாசின் மாலிக்கை ஊக்குவிக்கிறதா?, என்று கேட்டிருக்கிறார்[13]. சோனியா காங்கிரஸ் எதையும் செய்யலாம் என்று தெரிகிறது.

ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்கவேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை: இந்துக்களைக் கொன்றுள்ள ஜிஹாதி மற்றும் முஸ்லீம் பிரிவினை, தீவிர பயங்கரவாதிகளை மன்னித்து, அரசியலில் சேர்த்துக் கொண்டால், அந்த கொல்லப்பட்ட இந்துக்களின் குடும்பங்களின் கதி என்ன? தில்லியில் கொட்டாய்களில், குடிசைகளில், தகர டப்பா வீடுகளில் வாழ்ந்து வரும் அந்த இந்து அகதிகளின் கதி என்ன? மறுபடியும் ஆயுதம் எடுப்போம் என்று மிரட்டினால், அரசு ஏன் மௌனமாக இருக்கிறது?  ஆயுதம் எடுத்தால், ராணுவத்தினால் அடக்க வேண்டியதுதானே அரசாங்கத்தின் கடமை?

சட்டங்களை மதிப்பதில்லை, நடவடிக்கை இல்லை[14].

மற்ற மதங்களைப் பழித்து கூத்தடிக்கின்றனர், கவலையில்லை[15].

பாகிஸ்தானியர்கள் என்ன செய்தாலும் நன்றாக கவனித்து அனுப்பப்படுவார்கள்[16].

ராணுவ வீரர்களைக் கொன்றவர்களை, முண்டங்களை அனுப்பியவர்களைக் கொண்டாடுவார்கள்[17].

பக்கத்தில் பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டாலும் கவலையில்லை[18].

அங்கு இந்துக்கள் மீது எந்த கொடுமைகள் நடத்தப்பட்டாலும் கவலையில்லை[19].

இந்திய முஸ்லீம்களும் கவலைப்படுவதில்லை, ஒருவேளை மகிழ்சியாக இருப்பார்கள் போலும்[20].

காஷ்மீர் சட்டசபையிலேயே பிரிவினைவாதம் பேசப்பட்டாலும் கவலையில்லை[21].

போர்க்குற்றங்களைப் பற்றி பிரமாதமாக பேசி வரும் போது, இப்போர்குற்றங்கள், தூக்குத் தண்டனைகள் பற்றி மூச்சு-பேச்சு இல்லை[22].

யார் மிரட்டப்பட்டாலும், தமாஷ் தான்[23].

சோனியாவின் கொள்கையே இப்படித்தான் இருக்கிறது, பாவம் காங்கிரஸ்காரர்கள்[24].

கத்தி போய் குண்டு வந்தால் நமக்கென்ன, ஓட்டு வருகிறதா என்று பார்க்கும் சோனியா[25].

குண்டு வெடித்தால் என்ன, சில நாட்கள் செய்திகளைப் போட்டு சும்மா இருந்து விடுவார்கள்[26].

யாசின் மாலிக் முஸ்லீம், அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாரும் ஒன்றும் கேட்க முடியாது[27].

நாங்கள் அப்படித்தான் இருபோம், பேசுவோம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது[28].

வேதபிரகாஷ்

11-03-2013


[1] Jammu and Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik Sunday warned that denial of political space to people of Kashmir, especially youth, can lead to eruption of “more ferocious armed rebellion” than the one witnessed early during 90’s. He said Kashmiri youth are being persecuted today more atrociously that what was done in 90’s.

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[2] “In 1987, New Delhi had claimed that they were unaware of Kashmir situation. But this time around, Government of India is fully aware of the happenings and the sentiment. If the treatment meted out to the youth continues, I am afraid, the generation next won’t listen to anybody and we may witness a worst and more dangerous armed resistance.”

http://www.greaterkashmir.com/news/2013/Mar/11/yasin-malik-warns-of-fresh-armed-rebellion–40.asp

[3] “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience. The JKLF leader praised Rashid for his contribution to the armed struggle, but the minister refused to comment when journalists approached him. http://www.dailytimes.com.pk/default.asp?page=story_14-6-2005_pg1_4

[4] The Yasin Malik event was predictably reported in the Pakistani media and the Daily Times – one of Pakistan’s most professional and credible newspapers had the following news report on June 14 with an Islamabad dateline. ‘When the armed struggle in held Kashmir was at its zenith, Information Minister Sheikh Rashid Ahmed set up a camp where around 3,500 Jihadis were trained in guerrilla warfare, revealed Yasin Malik, the Jammu & Kashmir Liberation Front (JKLF) chairman, at an exhibition of 1.5 million signatures by Kashmiris demanding their involvement in the dialogue process. “Sheikh Rashid has played a great role for Kashmir’s liberation. He used to support the frontline Jihadis, but very few people know about his contributions,” the JKLF chief informed the audience.’

http://acorn.nationalinterest.in/2005/06/14/pakistani-cabinet-minister-ran-jihadi-camps/

[7] Even as the images of separatist leader Yasin Malik sharing the dais with LeT chief and 26/11 mastermind Hafiz Saeed has caused widespread outrage, Malik denies the report claiming that Saeed just happened to be at the venue where he was holding a meet. Enraged political leaders have demanded the government to stop pampering people with terrorist links and initiate stern action against Malik.

http://www.istream.com/news/watch/287259/Yasin-Maliks-terror-nexus-exposed

[11] Pakistan’s Charge d’Affaires, Jalil Abbas Jilani was asked to leave India on February 8, 2003 after the Delhi Police formally filed documents charging him with passing on Rs. 370,000 to Anjum Zamruda Habib, a key member of the far-right women’s organisation, the Khawateen Markaz. The money, police investigators say, was to be passed on to Abdul Gani Bhat, the head of the principal anti-India political coalition in Kashmir, the All-Parties Hurriyat Conference (APHC). The APHC’s representative in New Delhi, Sabir Ahmad Dar, was also arrested along with Habib.

http://www.outlookindia.com/article.aspx?219021

[13] Dr Mustafa Kamal, additional secretary of NC accused New Delhi of grooming separatists for taking over in J&K. “I remember former governor Jagmohan in his book, My Frozen Turbulence, has stated that he wanted to groom separatist Shabir Shah to be the chief minister of Jammu and Kashmir. Is New Delhi grooming separatists to take over charge of Jammu and Kashmir”. Source: http://www.defence.pk/forums/central-south-asia/234543-yasin-malik-shares-dias-alleged-let-chief-hafiz-saeed-pakistan-4.html#ixzz2N8V3M6oN