நாளை 27-02-2010: மதுக்கடைகள் மூட உத்தரவு!
இஸ்லாம், முகமது நபி, மது குடித்தல், மீலாடி நபி: முகமதியர் மது குடிப்பதில்லை என்பதில்லை. சாதாரணமாக பல இடங்களில் அவர்கள் மது குடிப்பதைப் பார்க்கலாம். பாகிஸ்தானிலேயே, மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. இந்தியாவிலும், தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் முகமதுவின் பிறந்த நாளன்று மதுக்கடைகள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாடு தடை இல்லை. அந்நிலையில், தமிழகத்தில், நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாடி நபியையொட்டி பிப்ரவரி 27ம் தேதியன்று மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது[1]. பிப்ரவரி 27ம் தேதி மிலாடி நபி எனப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 27ஆம் தேதியன்று மதுக்கடைகள், ஹோட்டல்கள், மற்றும் கிளப்புகளில் உள்ள பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[3].
முகமதுவின் பிறந்த நாள் கொண்டாடலாமா, கூடாதா?: முகமதுவின் பிறந்த நாள் பற்றிய கணக்கீட்டிலும் சில வேறுபாடு இருப்பதால், மீலாடி நபி கொண்டாட வேண்டாம் என்ற கருத்தும், சில ஆசார முஸ்லிம்களிடம் கருத்துள்ளது. கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர். நபி பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்.
வழக்கமாக ஒவ்வொரு வருடமும், ஒரு அறிக்கை வெளியிடப் படுகிறது: இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற ……… அன்று நபிகள் நாயகம் பிறந்த தினத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12-ன்படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவைகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் தவறினால், மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும்[4]: இன்று மதுக்கடைகள் பெருகியுள்ளது. இஸ்லாமுக்கு அதில் அறவே விருப்பமில்லை. நபிகள் நாயகம், மது அருந்துதலின் தீமையைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார். மதுப்பழக்கம் வாழும் காலத்தில் மட்டுமல்ல, வாழ்க்கைக்குப் பிறகும் கடும் துயரங்களை நமக்குத் தரும். ஒருமுறை, நபிகள் நாயகத்திடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார். “இறை தூதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,” என்றார். அவரிடம் நாயகம், “”அந்த மதுவில் போதை இருக்கிறதா?” என்றார். “ஆம்’ என பதிலளித்த தோழரிடம், “அப்படியானால், நீங்கள் அதனைக் குடிக்கக்கூடாது,”என்றார் நாயகம். “சரி…நான் குடிக்கவில்லை. ஆனால், மக்கள் கேட்க மாட்டார்களே,” என்று தோழர் சொன்னதற்கு, “அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்,” என்றார் நாயகம். குடிப்பவர்களுடன் சண்டை போட்டாவது அவர்களைத் திருத்த வேண்டும் என்பது நபிகளாரின் கொள்கை. மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்துபவன் தொழுகையை விட்டுவிடுவான்[5].
மது அருந்துவோருக்கு இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் கடும் தண்டனை கிடைக்கும்[6]: ஒருமுறை மது அருந்திய ஒருவரை நபிகள் நாயகத்தின் முன் கொண்டு வந்தார்கள். நாயகம் அவர்களிடம், “இவரை அடியுங்கள்,” என்றார். சிலர் அவரை கையால் அடித்தனர். சிலர் துணியை முறுக்கி அடித்தனர். சிலர் செருப்பால் அடித்தனர். மது அருந்துவோருக்கு இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் கடும் தண்டனை கிடைக்கும் என்கிறார் நாயகம். “மது அருந்திய நிலையில் ஒருவனது உயிர் பிரியுமானால், இறைவன் அவனுக்கு கவுத்தா என்னும் நதியில் இருந்து நீரைப் புகட்டுவான். “கவுத்தா’ என்றால், விலைமாதின் மர்ம ஸ்தானத்தில் இருந்து வெளிப்படும் நீர்,” என்று அவர் சொல்கிறார். அது மட்டுமல்ல! “மது அருந்துபவன் இறந்தால், அவனுக்கு மறுமையில், நரகவாசியின் சீழ், வியர்வை ஆகியவற்றை அல்லாஹ் அருந்தச் செய்வான்’ என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது[7]. மது தயாரிப்பவர், தயாரிக்கக் கூறுபவர், அருந்துபவர், அருந்தத் தருபவர், மதுவை எடுத்துக்கொண்டு போகிறவர், எடுத்துச் செல்லக் கூறுபவர், விற்பவர், மதுவை வாங்கிச் செல்பவர், மதுவை அன்பளிப்பாக தருபவர், மது விற்ற பணத்தில் உணவு உண்பவர் ஆகிய 10 பேரும் சபிக்கப்பட்டவர்கள் தான் என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்.
© வேதபிரகாஷ்
26-02-2010
07-12-2017 அன்று மாற்றப்பட்டது.
[1] தமிழ்.ஒன்,இந்தியா, மிலாடி நபி – 27ம் தேதி மதுக் கடைகளை மூட உத்தரவு, Published: Thursday, February 25, 2010, 13:22 [IST]
[2] https://tamil.oneindia.com/news/2010/02/25/liquor-shops-be-closed-miladi-nabi.html
[3] நக்கீரன், நாளை 27-02-2010: மதுக்கடைகள் மூட உத்தரவு!, 26-02-2010. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27641
[4] தினமலர், மது அருந்துபவர்களுடன் யுத்தம் செய்யுங்கள்! , ஆகஸ்ட் 11,2015,12:52 IST
[5] http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=9320
[6] விவேகம் நியூஸ், “மது குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்” – நபிகள் நாயகம், குமார் 18/08/2015
அண்மைய பின்னூட்டங்கள்