Posted tagged ‘மார்ட்டின் பிரேம்ராஜ்’

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (1)

ஜூலை 2, 2015

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (1)

Ambur riot - body brought to Ambur

Ambur riot – body brought to Ambur

ஷமில் அகமது போலீஸாரால் விசாரிக்கப்பட்டது, ஜூன்.26 அன்று இறந்தது: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. பள்ளிகொண்டாவில் தோல் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் 24–ந் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக பழனி பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அதில் ஆம்பூரை சேர்ந்த ஷாமில் அகமது மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். ஈரோடில் ஒரு நகைக்கடையில் ஷமில் அகமது சூபர்வைசராக வேலை செய்து வந்தார். அதே நகைக்கடையில் பவித்ராவும் வேலை பார்த்ததால், அவர்களது நெருக்கம் பற்றிய விவரங்கள், ஒருவேளை செல்போன் விவரங்களிலிருந்தும் அறியலாம் என்று சொல்லப்படுகிறது[1]. இது தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஷமில் அகமது (வயது 26) என்பவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடந்த 15–ந் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றார். போலீஸ் நிலையத்தில் ஷமில் அகமதுவை, இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீசார் அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது[2]. படுகாயம் அடைந்த ஷமில் அகமதுவை சிகிச்சைக்காக ஜூன்.19 அன்று ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஜூன்.23 அன்று வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜூன் 26 அன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு இறந்தார். “வெளிப்படையாக உடலில் எந்தவித காயங்களும் தெரியவில்லை. ஆனால், உள்ளுக்குள் பலவித பாதிப்புகள் ஏற்பட்டன. மூளையிலிருந்து கைகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டதால், மாரடைப்பு ஏற்பட்டது”, என்றுமருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்[3].

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

ஜூன் 26 மற்றும் 27 பதட்டமான நிலவரம்: இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு 500–க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஷமில் அகமதுவை தாக்கிய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்[4]. இந்த நிலையில் ஷமில்அகமதுவின் உறவினர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சபாரத்தினம், போலீஸ்காரர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 176 (1) பிரிவின்கீழ் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். இதனிடையே ஷமில்அகமது இறந்த சம்பவத்தையடுத்து ஆம்பூரில் நேற்று 2–வது நாளாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி ஆகியோர் ஆம்பூரில் முகாமிட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேசன், விஜயகுமார் உள்ளிட்ட 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி படைவீரர்களும் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் நிலையம் முன்பு முஸ்லிம்கள் குவிதல்

போலீஸ் நிலையம் முன்பு முஸ்லிம்கள் குவிதல்

ஜூன் 27 கலவரம் துவக்கம்: இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை பெங்களூர் மெயின் ரோட்டில் 500–க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தெரிவித்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். நேரம் செல்லச்செல்ல பதற்றம் அதிகரித்தது, கூட்டமும் அதிகரித்தது. 1000–க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஷமில் அகமது சாவுக்கு காரணமான ‘‘போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தது போதாது. அவர்களை உடனடியாக கைது செய்து சஸ்பெண்டு செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், லாரி, கார்கள் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்கினர். இதில் அந்த வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. பஸ்சில் இருந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதன்பின்னர் லாரிகளை நிறுத்தி அதில் இருந்த டிரைவர்களை தாக்கினர். போராட்டம் கலவரமாக மாறியதால் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைக்க உத்தரவிடப்பட்டது.

Ambur riot - lorry attacked

Ambur riot – lorry attacked

ஜூன் 27  போலீசார் கலவரக்காரர்களை தாக்கியது, ஆனால், தாக்குப்பிடிக்காமல் போலீசார் ஓடியது: இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது கலைந்து சென்றவர்கள் மீண்டும் கற்களை எடுத்து போலீசாரை நோக்கி சரமாரியாக வீசினர். ஒரு கல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரியின் தலையில் விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனே போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கலவரக்காரர்கள் தொடர்ந்து போலீசாரை குறிவைத்து கற்களால் வீசி தாக்கினர். கட்டடங்களின் மாடியில் நின்று கற்களை வீசினர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டிச்சென்றனர். அவர்கள் தெருக்களுக்குள் ஓடினர். போலீசார் அவர்களை விடாமல் துரத்திச்சென்று விரட்டி அடித்தனர். அப்போது போலீசாரை சிலர் கத்தியாலும் பிளேடாலும் வெட்டினர். இதில் மேலும் பல போலீசார் காயம் அடைந்தனர். 15 பெண் போலீஸ் உள்பட 54 போலீசார் படுகாயமடைந்தனர். அவர் கள் அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். ஆம்பூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டாலும் அவர்களை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்கி கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Ambur riot - vehicle burnt

Ambur riot – vehicle burnt

ஜூன் 27 – கலவரக்காரர்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டது: இந்த சம்பவங்களை தொடர்ந்து வேலூரிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் சேலம், ஓசூர், பெங்களூரு, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து வேலூர் வழியாக வரும் பஸ்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் நடுவழியில் தவித்தனர். ஆம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து ஓ.ஏ.ஆர். தியேட்டர் வரை சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு ரோட்டில் வந்த வாகனங்கள் அனைத்தும் கலவரக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. 30–க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை பகுதி போர்க்களமாக மாறியது. குறைந்த அளவு போலீசாரே இருந்ததால் அவர்கள் ஒரு கட்டத்தில் பின்வாங்க நேர்ந்தது. அப்போது ஆம்பூர் நேதாஜி சாலையில் புகுந்த வன்முறையாளர்கள் ஆம்பூர் தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுலகம் ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், வன்முறையாளர்கள் போலீஸ் நிலையத்துக்குள் செல்லாதவாறு தாலுகா அலுவலகம் அருகில் மணல் கடத்தல் மாட்டு வண்டிகளை குறுக்கே போட்டு போலீசார் தடை ஏற்படுத்தினர். அதில் ஒரு மாட்டு வண்டியை தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் தாலுகா போலீஸ் நிலைய பகுதிக்குள் நுழைந்தது. அப்போது போலீஸ் நிலையம் முன்பு விபத்தில் சிக்கிய மினி பஸ் ஒன்றை வழக்கு தொடர்பாக போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த மினி பஸ்சுக்கும் வன்முறைக் கும்பல் தீவைத்தனர். இதில் அந்த வேன் தீயில் எரிந்து நாசமானது.

அலுவலகம் தீ வைப்பு

அலுவலகம் தீ வைப்பு

ஜூன் 27 இரவு – ஜூன் 28 காலை – போலீஸ் ஜீப்புகளுகள், கடைகள் எரியூட்டல்: இதற்கிடையே ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 போலீஸ் ஜீப்களுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தனர். இதில் அந்த போலீஸ் ஜீப்கள் கொழுந்து விட்டு எரிந்தன. அது முற்றிலும் எரிந்து நாசமானது. அதுதவிர ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மோட்டார் சைக்கிள்களையும் வன்முறை கும்பல் தீவைத்து கொளுத்தியது. அத்துடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் அதனை சுற்றி இருந்த பெட்டிக்கடைகளுக்கும் வன்முறைக்கும்பல் தீவைத்தது. இதனால் அங்கிருந்த 10–க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்தன. ‘இந்த கலவரத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். எனினும் நள்ளிரவை தாண்டி ஆம்பூரில் கலவரம் நீடித்தது. இதனையடுத்து ஐ.ஜி.மஞ்சுநாதா, டி.ஐ.ஜி.க்கள் தமிழ்சந்திரன் (வேலூர்), சத்தியமூர்த்தி (காஞ்சீபுரம்) தலைமையில் 6 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் கலவரக்காரர்களை அடித்து விரட்டினர். நள்ளிரவு 1 மணிக்கு பின் கலவரம் கட்டுக்குள் வந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் 1 மணிவரை நீடித்ததால் 5 மணி நேரம் ஆம்பூர் போர்களமாக மாறியது. கலவரப்பகுதியில் பல இடங்களில் கற்களும், வாகனங்களில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளும் சிதறிக்கிடந்தன. போலீசார் விரட்டியதால் தப்பி ஓடியவர்கள் காலணிகளையும் விட்டுச்சென்றதால் எங்கும் காலணிகளாக காட்சி அளித்தது.

ஆம்பூர் கலவரம் - 29_06_2015_004_011

ஆம்பூர் கலவரம் – 29_06_2015_004_011

ஜூன்.28 போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், ஜமில் அகமதுவின் ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம்: வாகனங்கள் உடைப்பு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூன்.28 அன்று காலை 200 பேரை கைது செய்து செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவங்களால் ஆம்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்பூரில் நடந்த கலவரம் தொடர்பான விவகாரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்[5]. போலீஸ் விசாரணைக்கு சென்ற, ஆம்பூரைச் சேர்ந்த ஜமில் அகமது, மர்மமாக இறந்ததால், ஆம்பூரில் கலவரம் வெடித்தது. கலவரத்திற்கு காரணமான, இதற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆம்பூரில் நேற்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது, கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சேதமடைந்தன. போலீசார் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 101 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6]. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[7]. 200க்கும் மேற்பட்டோரை, ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, ஜமில் அகமதுவின் ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம், வாணியம்பாடி அடுத்த உம்மராபாத்தில், மதியம், 2 மணிக்கு நடந்தது. இதற்கிடையே, “தன் மனைவி பவித்திராவை கண்டுபிடித்து தர வேண்டும்’ என, ஆம்பூர் அடுத்த, துத்திப்பாளையத்தைச் சேர்ந்த பழனி, கலவரத்தை பார்வையிட ஆம்பூர் வந்த ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தார். கலவர விவகாரத்தில், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜை, வேலூர் சரக டி.ஜி.பி., அசோக்குமார், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக, வேலூர் மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்[8].

வேதபிரகாஷ்

01-07-2015

[1] The police identified the deceased as Shameel Basha, a resident of Ambur, who was working as a supervisor in a jewellery shop in Erode.One of his female colleagues, Pavithra, a married woman and resident of Pallikonda went missing in the second week of June after which the police picked up the victim for questioning.“Both were working together at Erode and police believed that Shameel knew about her as they thought both were very close after going through Pavithra’s mobile records,” sources said.

http://www.deccanchronicle.com/150628/nation-current-affairs/article/youth-dies-after-police-detention

[2]  http://www.maalaimalar.com/2015/06/28120019/Youth-kills-in-police-custody.html

[3] Basha was taken to the Ambur GH and admitted for treatment at 3 pm on June 19. He was shifted to the Government Vellore Medical College Hospital, Adukkamparai on June 23. He was moved to the RGGGH on June 26 and around 5.40 pm the same day, he passed away, Shah Jahan claimed. Doctors at the RGGGH said, “Though there were no visible injuries, he suffered polytrauma (multiple traumatic injuries).” The brachial plexus, a nerve which is under the shoulder joint and carries signals from the brain to the muscles that move the arms, was injured. He suffered ‘cardiac arrest’ and died, the doctors said.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece

[4]  மாலைமலர், போலீஸ் காவலில் வாலிபர் சாவுஆம்பூரில் கலவரம்: பஸ் எரிப்புசூப்பிரண்டு உள்பட 54 போலீசார் காயம், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 12:00 PM IST

[5]  தினமலர், ஆம்பூர் கலவரம் விவகாரம் :இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், 28-06-2015.22.33.

[6]  தினமலர், ஆம்பூர் வன்முறை குறித்து 101 பேர் மீது வழக்குப்பதிவு,28-06-2015.19.12

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1284833

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1284988