சூஃபியா, சோஃபியா, ஜிஹாதி பெண்தீவிரவாதிகள்
ஆண்டவனின் மகிமையினால் உலகில் அமைதியும் சாந்தமும் நிலவுவதாக! |
பெண்களைத் தீவிரவாதிகளாக மாற்ற முடியுமா? இயற்கையில் பெண் மென்மையானவள், மிருதுவானவள் என்றெல்லாம் கருதப்படும்போது, இல்லை அவள் ஆணுக்கு நிகர் என்று எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்கும்போது மகிழ்ச்சியாகத் தான் உள்ளது. ஆனால், தீவிரவாத சித்தாந்தத்தை அவர்களின் மனத்தில் ஏற்றி , புகுத்தி அவர்களை தீவிரவாதத்திலும் சிறப்பாக ஈடுபடுத்தலாம், அதிலும் தற்கொலை தீவிரவாதிகளாக, மனித குண்டுகளாகக் கூட மாற்றலாம் என்பது பிரபலமான இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் நடவடிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மனோதத்துவ ரீதியில் இதன் பின்னணி பயங்கரமாக இருக்கிறது.
இங்கு ஏதோ இஸ்லாமியத் தீவிரவாதத்தை மட்டும் குறைச் சொல்வதாக நினைக்கவேண்டாம். ஆனால் நிகழ்வுகள் அதைத்தான் காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீரத்தைப் பொறுத்தவரையிலும், சரித்திர ரீதியில் இடைக்காலத்திலிருந்து 1947 வரை பார்க்கும்போது, இந்துக்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர். காஷ்மீரத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை அடியோடு ஒழித்து, கோவில்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், சின்னங்கள் எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு, இஸ்லாம் அங்கு திணிக்கப்பட்டது. “இஸ்லாம்-மயமாக்கல்” என்ற செயல்பாட்டில், லட்சக் கணக்கான இந்துக்கள் கொடுமைப்படுத்தப் பட்டனர். அவர்கள் தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களைக் கூட விட்டு-விட்டு துரத்தி அடிக்கப்பட்டனர். தினமும் அவர்களைத் துன்புறுத்துதல், பெண்களை கற்ப்பழித்தல், மதம்-மாறச்சொல்லி அறிவித்தல்…………..என்ற ரீதியில் செயல்பட்டபோது, அவர்கள் தங்கள் பிரதேசத்தைவிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை. தலைநகர் தில்லியில் விடரட்டியடிக்கப் பட்ட இந்துக்கள் – காஷ்மீரிகள் தங்களது சொந்த நாட்டில் அகதிகளாக கூடாரங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது. இந்திய அரசியல்வாதிகளோ ஓட்டுவங்கி மற்றும் செக்யூகரிஸம் (மற்ற மறைமுக லாபங்கள் கிடைக்கும்) என்ற போர்வையில் மௌனம் காத்து, அத்தகைய தீவிரவதத்தை வளர்க்க உதவி செய்தனர். விளைவை இன்று எல்லோரும் அனுபவிக்கின்றனர்.
ஆகவே, சரித்திர ரீதியில் மிகவும் கொடுமைப் படுத்தப்படவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், நொறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அடிக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள், …………….என்றெல்லாம் பார்த்தால், இந்துக்கள்தாம் தீவிரவாதிகளாக உலகத்தில் அதிக அளவில் வந்திருக்கவேண்டும்.
அதிலும் இந்து பெண்மணிகள் தாம் தீவிரவதிகளாக மாறியிருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு பயிற்ச்சிக் கூட வேண்டாம். ஒத்தக் கருத்து, மாற்றுக் கருத்து மற்ற நாகரிகக் கருத்து என்று எந்த ரீதியில் பார்த்தாலும் இந்திய பெண்கள், குறிப்பாக இந்துப் பெண்கள்தாம் குறைக்கூறப்படுகிறார்கள், விமர்சனம் செய்யப் படுகிறர்கள், கேவலமாகச் சித்தரிக்கப் படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்……………….ஊடகங்களிலெயோ, திரைப்படங்களிலேயோ…………கேட்கவே வேண்டாம்…….எனவே அந்நிலையில் ஒவ்வொரு இந்துப் பெண்ணும் தனியாக உட்கார்ந்து சிந்தித்தால், அவள் தானாகவே ஒரு தீவிரவாதி ஆகிவிடமுடியும்! அவளுக்கு எந்த மூளை சலவையும், படிப்பும், பயிற்ச்சியும்………………தேவையில்லை.
ஆனால், மாறாக இஸ்லாமிய பெண்கள் அதிலும் குறிப்பாக, இளம் பெண்கள் எப்படி ஜிஹாதி-தீவிரவாதிகளாக உருவாகுகிறார்கள், உருவாக்கப்படுகிறாற்கள் என்பதைப் பார்க்கவேண்டும். ஒரு ஆணைப்போல அவளுக்கும் அத்தகைய “ஷஹீத்” எண்ணத்தை உருவாக்கவேண்டும். அம்மாதிரி நடந்தால்தான் அவர்கள் மாறமுடியும், உருவாக, உருவாக்க முடியும்.
இந்தியாவில் நடந்த, நடக்கும், நடக்கின்ற நிகழ்வுகள் அத்தகையப் போக்கைக் காட்டுகின்றன. அதில்தான் இந்த சோஃபியா முதல் சூஃபியா வரை சில உதாரணங்கள் வருகின்றன.
காவலர்கள் கைது: ஜூலை 2009: தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி, ஆயிஸா, நீலோஃபர் என்ற இரு பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் காஷ்மீரில் பெரும் கலவரத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டங்களினால், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 4 காவலர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உடனே கைது செய்யுமாறு ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு மரபணு சோதனை நடத்தவும், உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டது. பரிசோதனைக்குப் பிறகு அத்தகைய பலாத்காரம் எதுவும் காணப்பட்டதாகத் தெரியவில்லை என்று அறிக்கை வந்தது. ஆனால் கொல்லப்பட்ட ஆஸியா, நிலோஃபர் ஆகியவரின் உடலிலிருந்து எடுத்த மாதிரிகளை அனுப்பாமல் வேறொன்றை அதிகாரிகள் ஃபாரன்சிக் சோதனைக்கூடத்திற்கு அனுப்பியதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. கொல்லப்பட்ட பெண்களின் மர்ம உறுப்புகளிலிருந்து எடுக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட திரவம் / செமன் அவர்களின் இரத்த சாம்பிள்களுடன் / மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என்று சோதனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால்தான் அனுப்பட்ட மாதிரிகள் கொல்லப்பட்ட பெண்களுடையதல்ல என்ற முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுபற்றிய விளக்கம் வரவில்லை. எடுக்கப்பட்டதாக இருக்கலாம். இப்பிரச்சினையால் சி.பி.ஐ. விசாரணை வந்தது.
ஷோபியான்கொலைவழக்கு: செப்டம்பர் 2009: ஷோபியான் கொலை வழக்கில் இறந்தவர்களின் உடலை தோண்டியெடுத்து மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற அனுமதியுடன் இறந்தவர்களின் உடல்களை இன்று தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்மூலம் தடயங்கள் கிடைத்தலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.
டிசம்பர் 2009 சி,பி.ஐ அறிக்கைத் தாக்கல்: காஷ்மீரத்தில் எது கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு பிரச்சினை செய்வது, கலாட்டா செயவது, அதன்மூலமாக பிரபலம் தேடுவது என்ற ரிதியில் முஸ்லீம்கள் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு செயல்படுகின்றனர். ஷோஃபியா பகுதியைச் சேர்ந்த ஆயிஸா, நீலோஃபர் என்ற இரு பெண்கள் கற்ப்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக குற்றாஞ்சாட்டி கலாட்டா செய்து வருகின்றனர். அந்நிலையில் சி,பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பிறகு இந்த மாதம் 14ம் தேதி 66-பக்க அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அவ்விரு பெண்களும் நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது அதாவது இந்திய-விரோத சக்திகளின் குற்றாச்சாட்டின் படி அவர்கள் கற்ப்பழிக்கப்படவும் இல்லை, கொலைசெய்யப்படவும் இல்லை.
காஷ்மீரில் பெண்கள் சாவது: காஷ்மீரத்தில் பெண்கள் சாவது என்பது சகஜம். முன்பெல்லாம், இந்து பெண்கள் கற்ப்பழிக்கப் பட்டு கொலைசெய்யப் படுவர், அவகளது பிணங்கள் கிடைக்கும். ஆனால், ஊடகங்கள் அதைப் பற்றி என்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.
பிப்ரவரி 2009: பெண் தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைவதாக தகவல்:பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த சதியை அறிந்த இந்திய உளவு நிறுவனம் மத்திய அரசை உஷார்படுத்தியது[1]. இதையடுத்து மத்திய அரசு நாடெங்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.இதனால் தீவிரவாதிகளால் கடந்த 3-மாதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலவில்லை. இதன் காரணமாக வெறுப்படைந்த தீவிரவாதிகள், பெண்-தீவிரவாதிகளை பயன்படுத்த முடிவு செய்தனர்[2]. அல்-கொய்தா இயக்கத்தில் பெண்-மனித-வெடிகுண்டு தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். இவர்கள் மூலம் மிகப் பெரிய தாக்குதலை நடத்த தீர்மானித்துள்ளனர். பெண் மனித வெடி குண்டுகளில் சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் போர்வையில் அவர்கள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பதுங்கி உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் மும்பையில் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளுடன் பெண் தீவிவாதிகள் சிலரும் சேர்ந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் குஜராத் மாநிலத்துக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஜிஹாதி-தற்கொலை-பெண்-குண்டுகள்: மார்ச் 2009: இதற்கிடையே மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முன்பாகவே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பெண் மனித வெடிகுண்டுகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை உயர் அதிகாரிகள் கருதுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா,குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, உள்பட சில தலைவர்களை பெண் மனித வெடிகுண்டுகள் குறி வைத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி.தலைவர்கள் அருகில் வரும்,அறிமுகம் இல்லாத பெண்களிடம் மிக,மிக உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண் தற்கொலை தீவிரவாதிகள் தவிர,விஷவாயு மற்றும் வேறு சில புதிய பாணிகளிலும் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள் என்று தெரியவந்துள்ளது.இது குறித்து டெல்லியில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
சமீபத்தில் ஜிஹாதி-பெண்கள்: ஏப்ரல் 2009: சென்ற வருடம் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுடன் மோதியபோது, சில பெண்தீவிரவாதிகள் அச்செயல்களில் ஈடுபட்டது ஆச்சரியமாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவிய மூன்று தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீசார் சுட்டு கொன்றனர். நவம்பர் 26ம் தேதி 2008 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மும்பை மீது தாக்குதல் நடத்தினர். அவர்களில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் இது போன்ற வெறி தாக்குதலை தீவிரவாதிகள் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மீண்டும் அரங்கேற்றலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீருக்குள் சமீபத்தில் 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இதுவரை நடந்த சண்டையில் சுமார் 30 தீவிரவாதிகளும், 10 ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளனர்.
முதன் முதலில் ஜிஹாதி-பெண் தீவிரவாதி: ஏப்ரல் 2009: இந்நிலையில் நேற்று இந்திய ராணுவத்துக்கு ஜம்முவில் இருந்து வட கிழக்கே சுமார் 180 கிமீ., தூரத்தில் உள்ள தோடா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் உள்ளூர் போலீசாருடன் கிளம்பி அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இதில் அந்த வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண் தீவிரவாதி உட்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிப்லாவ் நாத் கூறுகையில், நேற்று காலை 9.00 18-04-2009 மணிக்கு துவங்கிய என்கவுன்டர் பிற்பகல் வரை நீடித்தது. இதில் 1 பெண் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். தீவிரவாதிகள் கூட்டத்தை சேர்ந்த பெண் தீவிரவாதி சுட்டு கொல்லப்படுவது இதுவே முதல் முறை என்றார்[3]. இதையடுத்து காஷ்மீர் பகுதியில் ஆண் தீவிரவாதிகளை தொடர்ந்து சில பெண் தீவிரவாதிகளும் ஊடுருவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியான அந்த பெண் தீவிரவாதியின் பெயர் ஷகிதா பானு என தெரிகிறது. மற்ற இரண்டு ஆண் தீவிரவாதிகளின் பெயர்கள் நிசார் அகமது, ரபீக் குஜ்ஜார். இவர்கள் மூன்று பேருமே லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கேரளாவில் லவ் ஜிஹாத்: நவம்பர் 2009: காஷ்மீரத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண் தீவிரவாதி கேரளாவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டது. பிறகு கேரளவிலிருந்து, மும்பை பெண்ணுடன் குஜராத்திற்கு சென்றவரும் பிரச்சினையில் சிக்கினர், கொல்லப்பட்டனர். கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டக்கல் என்ற இடத்திலிருந்து முன்பு சிமி இளைஞர்கள்-பெண்கள் இச்செயல்களில் ஈடுபடுவது தெரிகிறது. முன்பு ராம்சேனா பிரச்சினையில், இதுமாதிரி ஒரு முஸ்லிம் பெண் தன் காதலனுடன் பஸ்ஸில் சிக்கினார், ஆனால், கேரள அரசியல்வாதியின் மகள் என்பதும் விஷயம் அப்படியே அமுக்கப்பட்டது.
சூஃபியாவின் பின்னணி: டிசம்பர் 2009: கேரளாவில் செயல்படும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானியின் மனைவி சூஃபியா கலமசேரியில் 2005ல் தமிழகப் பேருந்து எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தன்னை விடுவிக்கக் கோரி அலுவலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சூஃபியா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி.எஸ். ஜோசப் முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. இதில், சூஃபியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூஃபியா ஜனவரி 1ம் தேதி, 2010 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சூபியா மதானிக்கு தொடர்பு இருப்பது, சமீபத்தில் தெரியவந்தது. வங்கதேச ரைபிள் படையினரால் கைது செய்யப்பட்டு, இந்திய பாதுகாப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி நசீர் என்பவனிடம் கேரள போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தது.அவரது கணவர் மதானி கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெண் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற கட்டுரையை 30-04-2009 அன்று கீழ்கண்ட தளத்தில் வெளியிட்டேன்:
http://vedaprakash.indiainteracts.in/2009/04/30/woman-islamic-terrorist-in-india/
The revelation of a Pakistani woman, Asiya Bibi (23), who is in J&K police’s custody, that ISI is training about 100 women for terror assignments in the state has sent the security establishment into a tizzy.
வேதபிரகாஷ்
19-12-2009 ©
[1] http://economictimes.indiatimes.com/News/Politics/Nation/Now-ISI-training-women-for-jihad-in-JK/articleshow/3995939.cms
[2] http://www.jihadwatch.org/2009/01/pakistans-isi-training-women-in-the-arts-of-jihad-and-terrorism.html
[3] http://thatstamil.oneindia.in/news/2009/04/19/india-three-militants-inlcuding-1-women-killed.html
அண்மைய பின்னூட்டங்கள்