மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.ஐ.ஏ சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி தேவையா? (2)

அக்டோபர் 2021ல் அப்துல்லா மீது குற்றப் பத்திரிக்கைத் தாக்கல்: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது[1]. இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்[2]. அப்துல்லா, அப்துல்லாவாகத்தான் செயல்படுகிறான், சரவணன் என்பதால், இந்தியாவை ஆதரிக்கவில்லை. மற்ற இந்துபெயர்கள் கொண்டவர்களும், தமிழகத்தில், இந்தியவிரோதிகளாகத் தான், பேசியும், எழுதியும் வருகின்றனர். பிறகு, இவ்விரு கூட்டங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தூண்டும் துண்டு பிரசுரங்கள்: சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர். காரில் மடிக்கணினி, ‘பவர் பாங்க், வீடியோ பேனா’ உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இத்தனையும் தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் நடக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் என்றதால், கண்டுகொள்ளாமல் இருக்கப் படுகிறதா?

கிலாபத் இயக்கம் நடத்தும் அடிப்படைவாத முஸ்லிம்கள்: ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் மூன்று பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 12-02-2022 அன்று சோதனை நடத்தினர்[3]. கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்[4]. இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள –
- தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல்காதர் (49),
- அதே பகுதியை சேர்ந்த முகமதுயா சின் (30),
- காவேரி நகரைச் சேர்ந்த அகமது (37)
இதனை தொடர்ந்து, தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர்.

என்.ஐ.ஏ சோதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த முஸ்லிம்கள்: இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது. அப்போது, மூன்று பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் மூன்று பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[5]. ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[6]. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

போலீஸாரை மிரட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது எது, யார்?: இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது யார்? என்,ஐ,ஏ.வையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்வது, கேள்விகள் கேட்பது எல்லாம் எந்த அளவுக்கு மோசமானது, ஏன் ஆபத்தானது என்பதனை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும், மறைமுகமாக வேறு பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் செயல் படலாம். ஆனால், அவையெல்லாம் தேசவிரோதமாகத்தான் முடியும். இவ்வாறு, முஸ்லிம்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே, ஊக்கம் கொடுப்பதற்கு சமம் ஆகும். மேலும் “தொப்புள் கொடி உறவுகள்” என்றெல்லாம் பேசும் போது, எங்களை ஒன்றும் செய முடியாது, அரசே ஆதரவாக உள்ளது என்ற தொரணையும் வரும். அதுதான், மயிலாடுதுறை போலீஸாரைப் பார்த்து அந்த முஸ்லிம்கள் திமிருடன் கேட்டது.

போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ சோதனை: முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர். இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் 12-02-2022 அன்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர்.

14-03-2022 அன்று, கீழ்கண்டவர்கள் மீது வழக்குத்தொடரப் பட்டது[7].
- பாவா பஹ்ருத்தீன் என்கின்ற மன்னார் பாவா, சம்சுதீன் மகன், வயது 41, மன்னார்குடி, தஞ்சாவூர் ( Bava Bahrudeen @ Mannai Bava s/o Samsudeen,aged 41 yrs, r/o Mannargudi, Tiruvarur District, Tamil Nad) மற்றும்
- ஜியாவுத்தீன் ஜாகுபார் மகன், வயது 40, கும்பகோணம், தஞ்சாவூர் ( Ziyavudeen Baqavi, s/o Jagubar, aged 40 yrs, r/o Kumbakonam, Thanjavur Dt),
இசமா சாதிக் எனப்படுகின்ற சாதிக் பாட்சா இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகளுடன், மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினருமாகவும் உள்ளார். அது இப்பொழுது போப்புலர் பிரென்ட் ஆப் இன்டியரேன்றழைக்கப் படுகிறது. எப்.ஐ.ஆர்,ன் படி இந்த ஐந்து நபர்களும், இஐசிஸ் சித்தாந்தத்தைப் பரப்பி, தேசவிரோதத்தை வளர்த்து வருகின்றனர். இந்தியாப் பகுதிகளைத் துண்டாடி அவற்றை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் அல்லது “பிரச்சினை உள்ள பகுதி” என்று அறிவிக்கப் படும் வகையில் தீவிரவாதத்தை உண்டாக்கவேண்டும் என்று, “இந்திய கிலாபா கட்சி (Khilafah Party of India),” “இந்திய கிலாபா முன்னணி (Khilafa Front of India),” “இந்திய அறிவிஜீவி மாணவர் (Intellectual Students of India),” “இந்திய மாணவர் கட்சி (Student Party of India),” என்றெல்லாம் உருவாக்கி, செயல்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
© வேதபிரகாஷ்
11-05-2022

[1] தினகரன், ஐஎஸ்ஐஎஸ் ஆதவாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை, 2021-10-07@ 01:03:24.
[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=710564
[3] தமிழ்.இந்து, 3 பேருக்கு ஐ.எஸ் உடன் தொடர்பு? – தஞ்சையில் என்ஐஏ சோதனை: முஸ்லிம்கள் போராட்டத்தால் பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 13 Feb 2022 11:22 AM; Last Updated : 13 Feb 2022 11:22 AM
[4] https://www.hindutamil.in/news/tamilnadu/767041-nia-raid-in-tanjore-1.html
[5] மாலைமலர், தஞ்சையில் 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை, பதிவு: பிப்ரவரி 12, 2022 13:02 IST..
[6] https://www.maalaimalar.com/news/district/2022/02/12130227/3480787/Tamil-News-NIA-raid-three-houses-in-Tanjore.vpf
[7] NIA Files Charge Sheet against Two Operatives of Hizb-ut-Tahrir in Madurai Iqbal HuT case (RC-08/2021/NIA/DLI) dated 14-03-2022.
அண்மைய பின்னூட்டங்கள்