Posted tagged ‘மன நோயாளி’

2001 தீவிபத்து, 2019  கற்ப்பழிப்பு,  ஏர்வாடியில் நடப்பதுஎன்ன? போதிய பாதுகாப்பு இல்லையா?

நவம்பர் 9, 2019

2001 தீவிபத்து, 2019  கற்ப்பழிப்பு,  ஏர்வாடியில் நடப்பது என்ன? போதிய பாதுகாப்பு இல்லையா?

Erwadi 2001 fire accident

தீ விபத்திற்குப் பிறகு, கூட்டு கற்பழிப்பு: உலகம் முழுவதும் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்குப் பின் போதை முக்கியகாரணமாக இருக்கிறது[1]. சிறுவயதிலேயே போதைக்கு அடிமையானதன் விளைவாக ஏர்வாடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது[2]. 2001ம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்து நாட்டையே உலுக்கியது. அது தான் ஏர்வாடியைப் பொறுத்தமட்டில் பெரிய விஷயமாக இருந்தது. அதன் பிறகு இந்த விவகாரம். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ளது சுல்தான் சையது இப்ராஹிம் சையது ஒலியுல்லா தர்கா. இந்த தர்காவிற்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவதுண்டு. அதிலும், இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாகமே மாறிவிட்டது ஏர்வாடி தர்கா. இந்த தர்ஹாவிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது காட்டுப் பள்ளிவாசல்.

Erwadi mental asylum - chained patients.4

2001ல் நடந்த தீ விபத்தில் பலர் மாண்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன நலக் காப்பகங்கள் உள்ளன. இங்கு மன நலம்பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு இந்தக் காப்பகத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. 06-08-2001 அன்று, தீ குபுகுபுவென காப்பகம் முழுவதும் பரவியது. சிறிய இல்லமாக அந்தக் காப்பகம் இருந்ததால் தப்பி வரவும் வழியில்லை. மேலும், மன நோயாளிகளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்பதால் 25-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கருகி இறந்தனர். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சில பிணங்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கருகின. இறந்தவர்களில் 11 பேர் பெண்கள். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

Erwadi mental asylum-786

2001ல் நடந்த தீ விபத்திற்கு, 2007ல் தண்டனை அளிக்கப் பட்டது: இங்கு செயல்பட்டுவந்த மனநலக் காப்பகங்களை அனைத்தும் 2001 ஆகத்து 13 அன்று மூடப்பட்டு, அங்கு இருந்த 500 மன நோயாளிகள் அரசாங்க பராமரிப்பில் கொண்டுவரப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, என். ராமதாஸ் தலைமையிலான ஒரு ஆணையம் இந்த மரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. ஆணையமானது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கவனிப்பானது மேம்படுத்தப்பட வேண்டும், மனநலக் காப்பகத்தை அமைக்க விரும்புபவர்கள் அனைத்து கைதிகளும் கொண்டதாக காப்பகத்தை அமைக்க வேண்டும், அதற்கு உரிய உரிமத்தைக் கட்டாயம் பெறவேண்டும் என்று பரிந்துரைத்தது. 2007 ஆம் ஆண்டு, தீவிபத்து நேர்ந்த மொகைதீன் பாதுசா மனநலக் காப்பக உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு உறவினர்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

Erwadi mental asylum - NAKKEERAN

19 வயது பெண் ஏழு பேரால் கற்பழிக்கப் பட்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் முகமதிய மதத்தின் படி, நம்பிக்கையின் ஆதாரமாக நடைப் பெற்று வருகிறது. இருப்பினும், இங்கு வருகிறவர்களுக்கு மனநலம் சரியாகுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்குவது வழக்கம். இருப்பினும் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[3]. கேரளாவைச் சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், ஏர்வாடி தர்காவையொட்டியுள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்[4].  இங்கு பல மனகாப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று மேலே எடுத்துக் காட்டப் பட்டது. கடந்த சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள், தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

Erwadi mental asylum - chained patients.dinakaran

வழக்கம் போல ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை வெளியிடுவது: இதனிடையே சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் வெளியே பானு வந்திருக்கிறார்[5].  அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழுபேர், பானுவை அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர்[6]. அங்கு வைத்து 7 பேரும் பானுவை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்தனர்[7]. இதில் வலியால் துடித்து பானு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்[8]. ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நக்கீரன்[9], “அதிகாலை வேளையில் மகளின் இயற்கை உபாதைக்காக அங்கிருக்கும் கழிவறைக்கு அழைத்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த 16 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தந்தை பேகத்தை தாக்கி தள்ளிவிட்டு, அவரின் கண் எதிரிலேயே வாயை பொத்தி தூக்கிச் சென்று அருகில் இருந்த கருவேலங்காட்டுக்குள் வைத்து ஒன்றுமறியாத ஷானிதாவினை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்,” என்கிறது[10].

Erwadi mental asylum - chained patients

இதைப் பற்றி இன்னொரு செய்தி: இந்த நிலையில் அங்கிருந்து கடந்த 4 ஆம் தேதி இரவு மாயமான இளம்பெண், தர்காவுக்கு அருகில் மயங்கிய நிலையில் அதிகாலை அவ்வழியே சென்றவர்களால் மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது[11]. இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை போலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர்[12]. இதை தொடர்ந்து இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தினர்[13]. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 முதல் 18 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள், கஞ்சா போதையில் இளம்பெண்ணை காப்பகத்தில் இருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[14]. இந்த நிலையில் அந்த சிறுவர்களை பிடித்து, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ML plea about the issue

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் அறிக்கை: ‘ஏர்வாடியில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட, ஏழு பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை, மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்’ என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்[15]. அவரது அறிக்கை: “ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் தங்கி, மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த பெண்ணை, 17 வயதிற்கு உட்பட்ட, ஏழு சிறுவர்கள், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணிற்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யாமல், மீண்டும் இரும்பு சங்கிலியால், மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.தர்காவில், 2001ல் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, யாரையும் இரும்பு சங்கிலி போட்டு கட்டக்கூடாது என, அரசு அறிவித்தது. அரசு உத்தரவு, காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.ஏர்வாடி தர்காவில், மீண்டும் தலைதுாக்கியுள்ள இந்த செயலை, உடனடியாக, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த பெண்ணை மன நல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்,”  இவ்வாறு, அவர் கூறியுள்ளார்[16].

Erwadi டdargah-mental asylum-786

உண்மை நிலை என்ன?: விகடன் எடுத்துக் காட்டுவது, “மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள், தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸார் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர்[17]. மேலும், ஏர்வாடி தர்ஹாவில் உள்ள மனநல மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது, கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன[18]. இதைத் தடுப்பதிலும் போலீஸார் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது”. தமிழ் திரைப்படங்கள், டெலி சீரியல்கள், இத்தகைய தர்கா / மசூதி பேயோட்டுக் காட்சிகளை “பாசிடிவாகக்” காட்டி வருகின்றனர். வெறும் நீர், மயில்தோகை வைத்து, பேயோட்டுவது போன்ற காட்சிகளைக் காட்டுகிறார்கள். அடக்க முடியாத, மனநோயாளிகள் கட்டிப் போட்டு வைப்பது தெரிகிறது. அனுமதி பெறாத மனகாப்பகங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது[19].

© வேதபிரகாஷ்

08-11-2019

Erwadi டdargah-mental asylum-666

[1] தமிழ்.சமயம், ஏர்வாடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள்!, Samayam Tamil | Updated:Nov 6, 2019, 04:03PM IST

[2] https://tamil.samayam.com/latest-news/crime/mentally-challenged-girl-raped-by-7-boys-in-ervadi-ramanathapuram-district/articleshow/71938227.cms

[3] பாலிமர் செய்தி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களிடம் விசாரணை, Nov 06, 2019.

[4] https://www.polimernews.com/amp/news-article.php?id=87682&cid=10

[5] நியூஸ்.7.டிவி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ஏர்வாடியில் 7 சிறுவர்கள் கைது…!, November 08, 20191 viewPosted By : Nandhakumar

[6] https://ns7.tv/ta/bst3fy

[7] தமிழ்.ஏசியா.நியூஸ், காட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..! மனநலம் பாதித்த பெண்ணை கூட்டாக கற்பழித்த காமவெறி சிறுவர்கள்…, By Manikandan S R SRamanathapuram, First Published 8, Nov 2019, 12:09 PM IST…

[8] https://tamil.asianetnews.com/crime/women-was-raped-by-7-boys-q0n15b

[9] நக்கீரன், அவளுக்கு ஒன்னும் தெரியாதுடா… விட்டுடுடா..! அப்பாவின் கண்முன்னே சிதைக்கப்பட்ட மன நோயாளி பெண்..!!!, Published on 06/11/2019 (17:08) | Edited on 06/11/2019 (17:39)

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/she-knows-nothing-deformed-mentally-ill-woman

[11] தமிழ்.வெப்.துனியா, ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் – பலாத்கார வழக்கில் 7 பேர் கைது !, Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (10:14 IST)

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mentally-disabled-woman-raped-by-7-youths-119110700017_1.html

[13] News18 Tamil,  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!, November 7, 2019, 12:55 PM IST

[14] https://tamil.news18.com/photogallery/tamil-nadu/police-arrested-7-boys-for-sexually-abused-mentally-ill-woman-vin-223575.html

[15] தினமலர், ஏர்வாடி விவகாரம் முஸ்லிம் லீக் கோரிக்கை, Added : நவ 07, 2019 23:19

[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2406395

[17] விகடன், `மகளை குணமாக்க வந்தவருக்கு இப்படியொரு துயரம்!’-அத்துமீறியவர்களை விரட்டிப்பிடித்த ஏர்வாடி மக்கள், இரா.மோகன், உ.பாண்டி, Published:06 Nov 2019 5 PM; Updated:06 Nov 2019 5 PM

[18] https://www.vikatan.com/news/crime/7-booked-for-sexual-harassment-complaint-in-ervadi

[19] Ranganathan, Shubha. Does Community Mental Health Really Engage the Community?.” Power to Label: The Social Construction of Madness (2015): 17.