Posted tagged ‘மனித உரிமை மீறல்கள்’

காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்: சென்னையில் த.மு.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜூலை 17, 2010

காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்: சென்னையில் த.மு.மு.., கண்டன ஆர்ப்பாட்டம்!

காஷ்மீரில் எந்த மனித உரிமை மீறல்கள்: காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, த.மு.மு.க.,வினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்[1]. காஷ்மீரில் “மனிதர்கள்” என்றால் முஸ்லீம்கள்தான் என்ற ரீதியில், அவர்கள் பேசியது, கோஷமிட்டது, முதலியன ஜிஹாதிகளை விஞ்சியதாக இருந்தது. கோடிக்கணக்கான இந்துக்களும் அங்கிருந்தனர், என்று மறந்து, மறைத்துப் பேசியது வேடிக்கைதான்!

ஹுரியத்தை மிஞ்சிய தீவிரவாதம் தான் வெளிப்பட்டது: கோடிக்கணக்கான இந்துக்கள் கொலைசெய்யப் பட்டது, பெண்கள் கற்பழிக்கப்பட்டது, சித்திரவதை செய்யப்பட்டது, சிறுவர்களைக்கூட கொன்றது, வீடுகளைவிட்டு துரத்தப் பட்டது, இந்தியாவிலேயே அகதிகளாகா வாழ்வது………………என்ற பல உண்மைகளை மறைத்து “காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து”, த.மு.மு.க.,வினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் கேவலமாக இருந்தது எனலாம், மனிதத்தன்மையே இல்லாதிருந்தது. ஏனெனில் மனசாட்சி இருந்திருந்தால் அவ்வாறு பேசியிருக்க மாட்டார்கள். ஹுரியத்கூட “இந்துக்கள் காஷ்மீரத்திரத்திற்கு திரும்ப வரவேண்டும்” என்று பேசிவருகிறது!

நாட்டுப்பற்று கொஞ்சம்கூட இல்லாமல் பொய்ப்பிரச்சார ரீதியில் கத்தியது: ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மத்திய அரசுக்கு எதிராகவும், ராணுவம் அத்துமீறி செயல்படுவதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இது அவ்வழியாக சென்றவர்களுக்கு வியப்பக இருந்தது. சிலர், “ஏன இது இம்மாதிரி கத்திக் கொண்டிருக்கிறார்களே. இவர்கள் எல்லோரும் பேப்பர் படிக்க மாட்டார்களா, டிவி பார்க்க மாட்டார்களா?”, என்று முணுமுணுத்தது மற்றவர்களின் காதில் விழத்தான் செய்தது.

தமுமுக.காஷ்மீர்.போராட்டம்.சென்னையில்

தமுமுக.காஷ்மீர்.போராட்டம்.சென்னையில்

“பாதுகாப்பு படையினரின் அக்கிரமம் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது” ஹாஃபிஸ் சையது மாதிரி பேசும் முஸ்லீம்கள்: ஜவாஹிருல்லா பேசியதாவது: “காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. பாதுகாப்பு படையினரின் அக்கிரமம் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் காரணமாக, மனித உரிமைகளை கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது.பத்திரிகைகள் நான்கு நாட்களாக வெளிவரமுடியாத நிலை உள்ளது. “காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க புதுமையானத் தீர்வுகளை நாம் காண வேண்டும்என்று நம் பிரதமர், காஷ்மீர் பயணத்தின்போது கூறினார். அது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கக்கூடாது. காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும். அங்கு குவிக்கப்பட்டுள்ள மித மிஞ்சிய அரசுப் படைகளை வாபஸ் பெற வேண்டும். ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’, .இவ்வாறு ஜவாஹிருல்லா பேசினார்.

தமுமுக.காஷ்மீர்.போராட்டம்.ஜவாஹிருல்லா

தமுமுக.காஷ்மீர்.போராட்டம்.ஜவாஹிருல்லா

முஸ்லீம்கள் இப்படி கிணற்றுத் தவலைகள் போன்று இருப்பது நடிப்பா, சாமர்த்தியமா? ஆர்ப்பாட்டத்தில், ரஹமதுல்லா, ஜுனைது, ஜெயினுலாபுதீன், யாசீன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மற்ற விஷயங்கள் ஒன்றுமே தெரியாதது மாதிரி, முஸ்லீம்கள் பேசியது, கத்தியது, கொடி பிடித்தது அவர்களுக்கு உண்மையிலேயே காஷ்லீரத்தைப் பற்றித் தெரியாதா அல்லது தெரிந்தும் அவ்வாறு நடிக்கிறார்களா என்று வியப்பாக இருக்கிறது.


[1] தினமலர், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்: .மு.மு.., கண்டன ஆர்ப்பாட்டம், ஜூலை 16, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40968